எஸ்.வீ சேகர் கஜினி பற்றி என்ன சொன்னார்?

எஸ்.வீ சேகர் கஜினி பற்றி என்ன சொன்னார் என்பது நமக்கு தெரியாது

சோமநாதபுர ஆலயத்தை காக்க செய்திருக்க வேண்டியது கைபர் , போலன் கணவாயில் ஒரு பெருஞ்சுவர், சீனா அளவிற்கு எல்லாம் அல்ல, 50அடி நீளத்தில் கட்டினாலே முடிந்திருக்கும் விஷயம்

அதனை செய்யாமல் கஜினி வந்தான்,கோரி வந்தான் என ஒப்பாரி வைப்பது எல்லாம் சும்மா

அதுவும் ஒருமுறை வந்தாலும் பரவாயில்லை, அவன் 18 முறை வந்தபொழுதும் அவன் வரும் வழியினை தடுக்க ஒரு யோசனையுமில்லை

இன்று சோமநாதபுரத்தை கஜினி அழித்தான் என சொல்லிகொண்டே இருக்க வேண்டியது

அந்த வரலாறுகளை தோண்டினால், இவ்வளவு அறிவுகெட்டா இந்தியா இருந்தது என்றெல்லாம் விஷயம் வரும், கஜினியின் 18 முறை படையெடுப்பினை விடுங்கள்

சோமநாதபுரி ஆலயத்தில் அந்தரத்தில் மிதக்கும் லிங்கம் இருந்தது காந்த கற்களின் நடுவே மிதக்கவிடபட்ட இரும்பு லிங்கம் அது, அக்கால விஞ்ஞானம்

ஆனால் அதில் சிவனே மிதப்பதாக சொல்லி கூட்டம் சேர்க்கபட்டது, சோமநாதபுரியின் பெரும் செல்வத்திற்கு காரணமே அந்த லிங்கம் தான்

எல்லோரும் அஞ்சி நிற்க , கஜினி தன் கடைசி படையெடுப்பில் அந்த காந்த கல்லை அகற்ற லிங்கம் விழுந்தது, அத்தோடு ஆலயத்திற்கு வரும் கூட்டமும் நின்றது, அதன் பின் கஜினியும் அப்பக்கம் வரவில்லை

ஆலயமும் நெடுங்காலம் இடிந்தே கிடந்தது

ஆக காந்த கல்லை கொண்டு செய்யபட்ட மிதக்கும் லிங்கம் எனும் மோசடி, கைபர் போலனில் 50 அடி சுவர் கட்ட முடியாத கையாலாகா தனம், இப்படி பல விஷயங்கள் வெளிப்படும்

எஸ்.வீ சேகர் வாய் பேசாமல் இருப்பது பண்டைய இந்தியாவின் சில மறைக்க வேண்டிய பக்கங்களுக்கு நல்லது


அணுவுலை ஏற்காத மாநிலங்களுக்கு மின்சாரமில்லை : மத்திய அமைச்சர்

சரிங்க எசமான், இந்த அணுகழிவினை கூட ஏற்கமாட்டோம் என சொல்லும் மாநிலங்களின் பியூஸ் கட்டையினை எப்பொழுது பிடுங்க போறேள்…..


Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s