தடய‌வியல் நிபுணர் சந்திரசேகரன் காலமானார்

Image may contain: 1 person, smiling, sittingதடய‌வியல் நிபுணர் சந்திரசேகரன் காலமானார்

இந்நாட்டின் மிக பெரும் தடவியல் மேதை அவர், இந்நாட்டிற்கு தன் பணியால் பெரும் தொண்டு செய்தவர்

உலகமே இதில் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது என சொல்லபட்ட ராஜிவ் கொலை வழக்கின் தடயவியல் சோதனையினை இவர்தான் செய்தார்

அவர் ஒரு தமிழர், நாகபட்டினத்துக்காரர். ராஜிவின் கொலையினை செய்தது வெளிநாட்டு தமிழ் தீவிரவாதிகளாக இருந்தாலும் மிக நுட்பமாய் விசார்த்து உண்மையினை கொண்டுவந்தது கார்த்திகேயம், சந்திரசேகர் போன்ற இந்திய தமிழர்கள்

Jebamani Mohanraj போன்ற காவல்துறை தமிழர்கள் உயிரை பணயம் வைத்து போராடியதையும் மறக்க முடியாது

இவர்கள் எல்லாம் நாட்டுபற்று மிக்க இந்தியர்கள், இவர்களால் தமிழகம் பெருமையடைகின்றது

ஒவ்வொரு தடயமாக இவர் சேகரித்து மனித வெடிகுண்டு எப்படி வெடித்தது என விளக்கியபொழுது உலகமே அதிர்ந்தது,

அவர் இடத்தில் இன்னொருவர் இருந்து அவருக்கு கொஞ்சம் விஷய ஞானம் குறைந்தாலும் ராஜிவ் கொலைவழக்கு இன்றும் மர்மமாகவே இருக்கும், புலிகளின் சூட்சுமம் அப்படி இருந்தது

ராஜிவ் கொலைவிசாரணையின் மர்ம முடிச்சுக்களை அவிழ்த்துகொடுத்தவர் அவர்தான், இலங்கை வன்னிகாட்டில் தீட்டபட்ட கொலைசதியினை கண்டுபிடிக்கும் ஆற்றல் இந்தியருக்கு உண்டு என நிரூபித்தவர்

மிகபெரும் தடவியல் சோதனைகளில் எல்லாம் புதுவடிவத்தை சோதித்து வெற்றிகண்டவர், உலகளவில் அவருக்கு பெரும் மரியாதை இருந்தது

புது புது விஞ்ஞான முன்னேற்ற தடயவியல் விஷயங்களை எல்லாம் இந்தியாவிற்கு தருவித்தவர்.

அன்னாருக்கு இந்த தேசம் தன் வீரவணக்கத்தை செலுத்துகின்றது

கவிஞர் நா.முத்துகுமார் பிறந்துகொண்டே இருப்பார்..

Image may contain: 1 person, sitting and beardகாஞ்சியிலிருந்து வந்து அண்ணாவிற்கு பின் தமிழை வசப்படுத்திய அந்த கவிஞன் இனி இல்லை.

1990களில் அறிமுகம் ஆனவர் எனினும் , கடந்த 12 ஆண்டுகளாக அவர் உச்சத்தில் இருந்தார். காதல்கொண்டேன் படத்தில் ஆரம்பித்த அவரின் உச்ச நேரம், அவரின் இறுதி நொடி வரை தொடர்ந்தது.

அவரின் பாடல்களில் வார்த்தைகள் வசப்பட்டிருக்கும், அருமையான சொற் உருவகங்கள் கண்ணதாசன் போலவே விளையாடியிருக்கும், உதாரணம் ஆனந்தயாழ் போன்றவை

12 ஆண்டுகளாக தமிழ்துறை பாடல்களில் தனக்கென ஒரு இடம் பிடித்து சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். அவன் கொட்டிய கவிமழை கொஞ்சமல்ல. காதலும், தாலாட்டும், சில தத்துவங்களும் அவன் பாடல்களில் கலந்திருந்தன‌

இன்னும் உச்சம் பெறுவார், நிச்சயம் அற்புதமான பாடல்களை கொடுப்பார், ஒரு உயரம் சென்றுவிட்ட அவர், இன்னொரு உயரம் கொடுப்பார் எனும்பொழுதுதான் இந்த பெரும் துயரம் நடந்துவிட்டது.

பொதுவாக கவிஞர்கள் அற்புதமான எழுத்தாற்றல் கொண்டிருப்பார்கள். எழுத்துதான் அவர்கள் திறமை, அதுதான் பாடலாக, அழகான சொற்களோடு வரும்.

அப்படி கவிஞர்கள் எல்லாம் எழுத்தாளராகவும் மிளிர்வார்கள், எல்லா கவிஞர்களும் பின்னாளில் எழுதுவார்கள், விதியினை அறிந்தாரோ முத்துகுமார் தெரியாது, சில புத்தகங்களையும் எழுதியிருந்தார். காலம் வழிவிட்டிருந்தால் முத்திரை புத்தகங்கள் பின்னாளில் கிடைத்திருக்கலாம். விதி அது அல்ல.

பாடல் எழுதுவது மகா சிரமமானது, ஒரிரு ஹிட் பாடலை எழுதிவிட்டு கவிஞர்கள் காணாமல் போகும் திரையுலகது, 12 ஆண்டுகளாக தொடர்ந்து உச்சத்தில் நிற்பது பெரும் சாதனை, மனதில் பெரும் ரசனை இருந்தால் ஒழிய அது சாத்தியமில்லை, அந்த ரசனையே உருகி உருகி கவி ஆறாய் கொட்டும்

அந்த மலையினையே காலம் தகர்த்து எறிந்துவிட்டது.

தமிழ் பாடல் உலகிற்கு அது ஒரு சாபம். அற்புதமான கவிஞர்கள் பலர் நீண்ட காலம் உயிரோடு வாழ்வதில்லை

பாரதி அப்படி 36 வயதிலே செத்தான்.

பெரும் கவிஞன் என கொண்டாடபட்ட பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் 28 வயதில் உலகைவிட்டு மறைந்தார்.

கவியரசர் கண்ணதாசன் 52 வயதில் காலமானார்.

அதே கொடும்விதி நா.முத்துகுமாருக்கு 41 வயதில் இருந்திருக்கின்றது.

ஆனந்தயாழை மீட்டுகிறாய், ஆரிரோ இது ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு என சொன்ன அந்த கவிஞன் பிள்ளைகளிடம் எப்படி இருந்திருப்பான்.

அதனை நினைத்தாலே நெஞ்சு கலங்குகின்றது.

எல்லா கலைஞனுக்கும் ஒரு ஆசை இருக்கும், அதனை வித்தை கர்வம் அல்லது தொழில்பற்று என்றே சொல்லலாம்

பதவியில் இருக்கும்போதே மரணம் அடைய நினைப்பான் அரசியல்வாதி, பிரார்த்தனையின் போதே உயிர்பிரிய வேண்டும் என்பான் பக்தன். கேமரா முன் நடித்துகொண்டிருக்கும் பொதே செத்துவிட வேண்டும் என்பான் நல்ல நடிகன்.

அதாவது புகழின் உச்சத்தில் இருக்கும்போதே இறந்துவிட வேண்டும் என்பது அவர்கள் எண்ணம்.

தமிழகத்து புகழ்மிக்க கவிஞர்கள் சிலருக்கு வாய்த்த அது முத்துகுமாருக்கு வாய்த்தது, கொடிகட்டி பறந்த காலத்திலே அவர் இறந்திருக்கின்றார்.

பாடல் ரசனை மிகுந்த தமிழுலகம் இன்று கதறி துடிக்கின்றது. இப்படி பெரும் திறமைசாலி விரைவில் போய்விடுவான் என்றுதானோ காலம் அவனுக்கு கடைசிநாட்களில் இப்படி உச்சத்தில் வைத்து பார்த்திருக்கின்றது

ஒன்றா இரண்டா நினைவுகள்?

கண்ணதாசனின் இடத்தினை வாலியும், வைரமுத்துவும் நிரம்ப்பினார்கள். வாலியின் இடத்தினை ஒருவன் நிரப்பிகொண்டிருந்தான் என்றால் சந்தேகமே இன்றி சொல்லலாம் அது முத்துகுமார். அந்த இடத்தினை நிரப்புவது சாதாரண விஷயம் அல்ல.

வைரங்கள் மின்னிய இடத்தில் இன்னொரு வைரம்தான் மின்ன முடியும், அவர் மின்னினார்.

அந்தோ பரிதாபம் இனி அவர் பாடல் வானில் மின்னும் நட்சத்திரமாக நினைவுகளில் மின்னிகொண்டிருப்பார்.

நல்லதோர் வீணை செய்தே..அதை நலங்கெட தீயில் எரிப்பதுண்டோ…

ஆனால் எரிந்துவிட்டது காலம். அந்த கொடும்காலத்தால் முடிந்தது அதுதான், மற்றபடி அதே காலத்தில் அவன் முத்திரையும் பதித்துவிட்டான்.

நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன‌

2009 வாக்கில் வெயில்மிகுந்த தமிழக‌ கிராமத்தில் பிறந்து வளர்ந்து, பின் மழை மட்டும் பார்க்கும் நாட்டில் வாழ்ந்த மனிதரை சந்திக்கும்பொழுது, “வெயிலோடு விளையாடி..” பாடல் ஒலித்துகொண்டிருந்தது

அம்மனிதர் அப்பாடலை கவனித்துகொண்டே இருந்தார், “வெயிலை தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்” என அப்பாடல் முடியும் பொழுது அவர் கண்கள் கலங்கி இருந்தன.

வெயில் மிகுந்த கிராமத்து சிறுவர்களின் வாழ்க்கையினை அதனை தவிர வேறு வார்தைகளில் சொல்லிவிட முடியாது.

கண்களை துடைத்துகொண்டே கேட்டார், “எழுதியது யாரய்யா? வைரமுத்தா?”

இல்லை இது நா.முத்துகுமார் எனும் புதிய இளைஞர்

“பிரமாதமாய் எழுதியிருக்கான்யா, மனச தொட்டுபார்க்கிற சக்தி அவன் பாட்டுல இருக்கு, நம்ம ஊர் வாழ்க்கைய்யா, வெயில தவிர என்ன இருந்து, அசால்ட்டா சொல்லிட்டான் பாருய்யா, இருந்து பாரு, இன்னும் பெரிசா வருவான்.”

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பார்கள்.

அப்படியே பிரகாசமாய் வந்தார் முத்துகுமார், பிரகாசம் என்றால் பெரும் பிரகாசம்.

ஆனால் அது விளக்கு அணையும் முன் வந்த‌ பிரகாசம் என நினைக்கும்பொழுது நெஞ்சு உடைந்து மறுபடியும் அழ தோன்றுகின்றது.

இன்று அவனுக்கு அவனில்லாத‌ முதல் பிறந்தநாளாம்

பெண்குழந்தையின் சிரிப்பினை தந்தை காணும் பொழுதெல்லாம் ” கோயில்கள் எதற்கு , தீபங்கள் எதற்கு, உந்த‌ன் புன்னகை போதுமடி” என்ற வரிகள் நினைவுக்கு வராமல் போகாது

அதுபோன்ற வரிகளிலில் எல்லாம் முத்துகுமார் பிறந்துகொண்டே இருப்பார்..

 
 

தமிழகம் மிக விழிப்பாய் கவனிக்கபட வேண்டிய காலமிது

எல்லோரும் அமர்ந்தாத் தாக்குதலையே கவனித்துகொண்டிருக்கின்றோம், கண்டிக்கின்றோம்

அது நிச்சயம் மகா கொடூரமானதும், கொஞ்சமேனும் மனிதாபிமானமில்லாத, அருவருக்கதக்க கோழைதனமான செயல் என்பதில் மாற்று கருத்தே இல்லை, கொலையாளிகள் மனித ஜென்மமே இல்லை

அந்த கண்டனத்தில் ஒன்றை மறந்துவிடுகின்றோம்

சென்னையில் ஐஎஸ் இயக்க ஆதரவாளன் கைது செய்யபட்டிருக்கின்றான், ஐஎஸ் இயக்கம் தொடங்கபட்ட காலத்தில் தமிழகத்தில் கூட சிலர் ஐஎஸ் இயக்க டிசர்ட் அணிந்து கொண்டு செல்பி எடுத்து ஆதரவு தெரிவித்த காட்சிகள் எல்லாம் முன்பு கண்டது

தமிழகம் ஒன்றும் 100% தீவிரவாத நடவடிக்கையற்ற மாநிலம் அல்ல‌

ராஜிவ் கொல்லபட்டதும் இங்குதான், அத்வாணி மயிரிழையில் உயிர்தப்பியதும் இங்குதான்

சிவராசன், இமாம் அலி போன்ற கொடூர தீவிரவாதிகள் எல்லாம் உலாவந்ததும் இதே தமிழகத்தில்தான்

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பு, மணிரத்னம் வீட்டின் குண்டுவீச்சு, கோவை கலவரமும் அதனை தொடர்ந்த குண்டுவெடிப்பு, சில மதுரை சர்ச்சைகள் எல்லாம் சாதாரணம் அல்ல‌

எத்தனையோ கொடூர தீவிரவாத‌ தாக்குதல்கள் தெய்வாதீனமாய் இங்கு தடுக்கபட்ட வரலாறுகள் உண்டு.

புனிதமும் பெரும் வரலாறுமான மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்திற்கே மிரட்டல்கள் உண்டு

ஆக எங்கோ தாக்கிவிட்டார்கள் என நாம் கண்டனமும் அஞ்சலியும் செலுத்துகொண்டு நம் காலடியில் இருக்கும் அபாயத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லதல்ல‌

தமிழகம் மிக விழிப்பாய் கவனிக்கபட வேண்டிய காலமிது

காலை மலர்கள் …

 
Image may contain: 1 person, selfie and close-up

இதனை விட‌ ஒரு பெண் எப்படி அழகாக இருக்க முடியும்?


 பிக்பாஸ் நிகழ்ச்சி சமூக சீர்கேடானது, இதனால் தமிழக அமைதி கெடும் இந்த நிகழ்ச்சியினை தடை செய்து கமலஹாசனையும் கைது செய்யவேண்டும் : இந்து மக்கள் கட்சி கமிஷனர் அலுவலகத்தில் புகார்

“கமிஷணரய்யா நல்லாயிருப்பிய, 

கமலஹாசனால பிரச்சினை இல்ல அவர விட்டுட்டு பிக் பாஸ் வீட்டில் இருக்கும் எல்லோரையும் பிடிச்சிட்டு போங்க‌

அப்படியே இந்த எச்.ராசா , அர்ஜூன் சம்பத் போன்றவர்களையும் தடை செஞ்சு பிடிச்சு உள்ளே போட்டா இன்னும் தமிழகம் அமைதியாக இருக்கும்

இந்த பிராது கொடுக்க வந்தவனுகளையும் பிடிச்சு போடுங்க‌”

 


பன்னீர்செல்வம் ஒரு கிணற்றினை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக வைத்திருக்கின்றாராம் பெரும் பிரச்சினை வெடிக்கின்றது

எத்தனைஆயிரம் கோடி இந்த பன்னீர்செல்வம் சம்பாதித்தாகிவிட்டது, அந்த கிணற்றினை அம்மக்களுக்கு கொடுத்தால்தான் என்ன?

சொந்த ஊர் மக்களின் தாகத்திற்கு தன் சொந்த கிணற்று தண்ணீரை கொடுக்க சம்மதிக்காத இவர்தான் தமிழகத்தின் பொதுவாழ்க்கைக்கு வந்து பொது பிரச்சினைகளை தீர்ப்பாராம்

இவர் என்ன தர்மயுத்தம் நடத்துவது, அவருடனே அந்த பாவபட்ட மக்கள் “தர்மயுத்தம்” நடத்தி கொண்டிருக்கின்றார்கள்


பத்மினி உயிரோடு இருந்திருந்தால் பவர் ஸ்டாரின் பரதநாட்டியத்தை கண்டபின் கடன் வாங்கியாவது விஷம் வாங்கி குடித்து செத்திருப்பார்

அப்படி இந்த மனுஷ்ய புத்திரன், ஜெயமோகனின் பக்த கோடிகளின் கவிதை எல்லாம் கண்டு மனம் நொந்தாரோ என்னமோ நா.முத்துகுமார் குடித்தே செத்துவிட்டார்

இந்த இம்சை கவிஞர்களின் கவிதையால் இன்னும் பலர் சாக வாய்பிருக்கின்றது


”ஜெயலலிதா சபதத்தை நிறைவேற்றும் வகையில், கச்சத்தீவை மீட்டே தீருவோம்,” : அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்

மிஸ்டர் ஜெயகுமார் முதலில் நீங்கள் போயஸ் கார்டனை மீட்க முடியுமா?

அதனை முதலில் மீட்டு காட்டுங்கள், கச்சதீவினை பின்னர் பார்க்கலாம்

என்ன கட்சியோ ஆளாளுக்கு சபதமெடுக்கின்றார்கள், ஒன்று சபதமெடுத்து சிறைக்கே சென்றுவிட்டது


ஜி.எஸ்.டி. வரி குறித்து தவறான கருத்துக்களை யாரும் பரப்பக்கூடாது: தமிழிசை சவுந்திரராஜன்

உண்மையான கருத்தை அவர்களும் சொல்லமாட்டார்கள், பொய்யான கருத்தை வேறு யாரும் சொல்லவும் கூடாது

இருவருமே கம்மென்று இருக்க வேண்டும் என்கின்றார் அம்மணி

 


இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி: பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகிர் கான் நியமனம்

இதில் பெரும் காமெடி என்னவென்றால் ரவிசாஸ்திரியே ஒரு ஆல்ரவுண்டர் என்பது

விரைவில் டாஸ் போடும் பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், விக்கெட் கீப்பர் பயிற்சியாளர் பதவிகள் நியமிக்கபடலாம்


ரூ.10- க்கு 225 மி.லி. ஆவின் பால் பாக்கெட் அறிமுகம்

முன்பெல்லாம் நெய்தான் இப்படி பாக்கெட்களில் வரும், இப்பொழுது பாலே வருகின்றது

இனி நெய் குங்குமப்பூ, புணுகு குப்பி போன்ற மிக சிறிய பாக்கெட்களில் வரலாம்


கச்சத்தீவு விவகாரம்: திமுக- அதிமுக கடும் விவாதம்

அதாவது கச்சதீவு எப்படி கையினை விட்டு போனது என்பதற்கான வாதம் இது,” நீ கொடுத்தாய்” என இவர்களும், கொடுக்கும்போது “நீ சும்மா இருந்தாய்” என இவர்களும் சொல்லிகொள்கின்றார்கள்

சரி இருவருமே பல்லாண்டுகள் ஆண்டாயிற்றே, ஏன் மீட்கவில்லை என்றால் அது ஹிஹீஹி கொடுத்தது மத்திய அரசு என்பார்கள்

சரி நீங்கள் இருவருமே மத்திய அரசில் பங்காளிகளாக இருந்த காலம் உண்டல்லவா? அப்பொழுது ஏன் கேட்கவில்லை என்றால், இல்லை முடியாது கொடுத்தது கொடுத்ததுதான் இனி மீட்க முடியாது என்பார்கள்

பின் ஏன் இன்னும் அதனையே விவாதிக்கின்றீர்கள் என்றால் பதில் இருக்காது ஆனால் அடிக்கடி கச்சதீவு என விவாதித்துகொள்வார்கள்


 

பிக் பாஸ் : குறை குடம் கூத்தாடும் காயத்திரி

19905428_10209669222102456_5971977573414847609_n.jpg

பொது இடத்தில் பல்லாயிரம் பேர் பார்க்க ஒருவரை “சேரி பிஹேவியர்” என திட்டுவதுதான் பார்ப்பண பிஹேவியர்

இப்படி பகிரங்கமாக சொல்பவர் மீது இந்த தீண்டாமை, வன்கொடுமை சட்டம் எல்லாம் பாயாதா?

சில சர்ச்சைகுரிய வார்த்தைகளை மியூட் செய்வதுதான் மீடியாக்களின் வழமை, திரைப்படங்களில் கூட அப்படித்தான் சென்சார் போர்டு வழிகாட்டல்படி அமைதியாக்குவார்கள்

ஆனால் விஜயடிவி மிக பகிரங்கமாக இதனை அனுமதிக்கின்றது

சேரி என்பது நிச்சயம் தொடக்கத்தில் தாழ்த்தபட்ட‌ மக்களுக்கானது அல்லதான், சேர்ந்துவாழும் இடம் சேரி என்றானது, பின் குறிப்பிட்ட மக்களுக்கு என முத்திரையானது

அக்ரஹாரம் அவாளுக்கும், சேரி இம்மக்களுக்கும் என்று அவர்களாகவே சொல்லிகொண்டார்கள்

இன்று அந்த சாதிய வக்கிரம்தான் சேரி பிஹேவியர் என்ற மிக வன்மைமான சொல்லாக தொடுக்கபடுகின்றது

இது சர்வ நிச்சயமாக “அக்ரஹார பிஹேவியர்”தான், தீண்டாமை, வன்கொடுமை சட்ட பிரிவுகளில் வரும் குற்றம்தான்

ஆனால் என்ன செய்துவிடுவார்கள்? ஒன்றும் நடக்காது, விஜய்டிவி எனும் மீடியாவினை யார் எதிர்பார்கள்? இதெற்கெல்லாம் சாதிய போராளிகள் பொங்க மாட்டார்கள்

காயத்திரி என்பவர் செயல்பாடுகள் எல்லாம் குறை குடம் கூத்தாடும் என்பது போலே உள்ளது, அம்மணி பாஜகவில் வேறு ஏதோ பொறுப்பில் உள்ளார் என்பதும் இன்னொரு செய்தி

ஒரு நிகழ்ச்சியினை பிரபலபடுத்த பல வழிகள் உண்டு, அதனை எல்லாம் தாண்டி ஜாதியினை சீண்டி பிரபலபடுத்தபோகின்றோம் என்றால் அதன் விளைவுகள் பெரும் பாதிப்பாக இருக்கும்

விஜய்டிவி பிக்பாஸினை விடுங்கள், தமிழகம் எனும் பிக்பாஸ் இதனை எல்லாம் கவனித்துகொண்டுதான் இருக்கின்றது

சமூக அமைதியினை கெடுக்கும் எந்த விஷயத்தையும் ஏற்க முடியாது, அதனை ஒரு மீடியா அனுமதிப்பது என்பது கண்டிப்புக்கும் தண்டனைக்கும் உரியது