குழப்பத்தின் உச்சத்தில் இருக்கின்றார் கமல் …

Image may contain: 1 person, glasses and text

கமலஹாசனின் பேட்டி இப்பொழுதான் பார்த்தேன், மனிதர் குழப்பத்தின் உச்சத்தில் இருக்கின்றார், சில பதில்கள் உண்மையிலே உளறல்

நான் கருப்புசட்டைக்காரன் என்கின்றார், ஆனால் இந்தியில் பிக்பாஸ் வந்தபொழுது ஏன் இவர்கள் எதிர்க்கவில்லை இந்தி தெரியாதோ என ஒரு மாதிரி குத்துகின்றார், கருப்புசட்டைகாரனுக்கு ஏன் இந்தி?

இல்லை இவர் என்ன ஹாலிவுட், பாலிவுட் நடிகரா? தமிழ் நடிகர் அல்லவா?

சேரி பிஹேவியர் எனும் வார்த்தையினை விட மோசமான வார்த்தைகள் இந்த சமூகத்தில் பேசபடுகின்றது என்கின்றார், அது யாருக்கு தெரியாது?

உடலறவு கூடத்தான் சமூகத்தில் நடைபெறும், அதற்காக அதனை கேமரா முன்னால் காட்ட முடியுமா?

பொது இடத்தில் எதனை பேசவேண்டும் , எதனை பேசகூடாது என்ற வரைமுறை இருப்பது கூட இவருக்கு தெரியவில்லையா?

பொது இடத்தில் சாதிவன்மம் கூடாது என சட்டமே இருக்கும் பொழுது இவர் இப்படி சொல்வது நிச்சயம் கண்டிக்கதக்கது

அன்றே முத்தகாட்சியில் நடித்தவன் நான் , ஏன் அன்றே கைதுசெய்யவில்லை என பொங்குகின்றார், அன்று விட்டது மக்களின் தவறு என்பது போல் இருக்கின்றது

என்னவெல்லாமோ சொல்கின்றார், நாகேஷின் எதிர்நீச்சல் படம் போன்றதுதான் பிக்பாஸ் என்கின்றார்,

ஆக ஆளாளுக்கு இப்படி பிக்பாஸ் நடத்தினால் என்னாகும்? தமிழகத்தில் இல்லா சாதியா? கோஷ்டி தகரறாறா?

அப்படி நடத்தினால் தமிழகம் தாங்குமா என பத்திரிகையாளரும் கேட்கவில்லை

கமலஹாசன் மிகபெரும் அடையாளம், அவரை இச்சமூகம் நிச்சயம் கவனிக்கும், அவரிடம் கொஞ்சம் சமூக பொறுப்பினை எதிர்பார்பது தவறல்ல

எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை, நான் என்ன வசனமா எழுதினேன் என்றெல்லாம் குதிக்கின்றார், சரி ஒருவேளை நாளை ஒரு ஷகீலா படத்தில் கமலஹாசன் ஒரு காட்சியில் வருவாரா?

இது ஷகீலாவும் நடிகை, நானும் நடிகன் அவ்வளவுதான் என சொல்வாரா? இல்லை சன்னி லியோனுடன் அம்மாதிரி படத்தில் நடிப்பாரா?

அதில் எல்லாம் நடிக்கமாட்டார் அல்லவா? ஏன் இமேஜ் பாதிக்கும் இப்படி எல்லாமா என முகம் சுளிப்பார்கள் இன்னும் ஏராளம்

அப்படி இந்த பிக்பாஸும் சில சர்ச்சைகளை செய்யும்பொழுது, சில ஜாதிவெறி பரப்பும்பொழுது கமலஹாசன் அதற்கு வக்கலாத்து வாங்குவது ஏன்?

தமிழ்மொழிதாய் வாழ்த்து என சொன்னால், ஜனகணமன பெங்காலி மொழி, தமிழ் தெரியாதவற்கெல்லாம் தமிழ் சொல்லிகொடுக்கின்றோம் என்றேலாம் பேசுகின்றார்

ஒரு சிலை செய்யபடும்பொழுது கூட மூடி வைத்து செய்யும் தமிழகம் இது, அதாவது அரைகுறைகள் வெளிதெரியாமல் அது முழுமை பெற்றபின் உலகிற்கு சொல்வார்கள்

ஏன் இவரே முழுமேக்கப் முடிந்தபின்புதானே கேமரா முன் வருவார், அரைகுறை மேக்கபில் வந்தால் அசிங்கமாயிருக்காதா?

அப்படி இவர்களுக்கு தமிழ் சொல்லிகொடுப்பது யாருமற்ற இடத்தில், ஏன் கமலஹாசனின் பூட்டிய வீட்டிற்குள் சொல்லிகொடுத்தால் யாருக்கென்ன?

ஆனால் பொது இடத்தில் இப்படி எல்லாம் தமிழ்கொலை செய்வோம் என பகிரங்கமாக சொன்னால் எப்படி?

மனிதர் பதற்றத்தின் உச்சத்தில் இருக்கின்றாரா? இல்லை கொஞ்சம் கொஞ்சம் தன் இனத்துபக்கம் சாய்கின்றாரா? என்பது தெரியவில்லை

ஜிஎஸ்டி குறைத்ததற்கு நன்றியாக இருப்பேன் என அவர் சொல்வது வேறு திகிலை உண்டு பண்ணுகின்றது, அதனால்தான் இப்படி எல்லாம் நன்றிகடன் காட்டுகின்றாரோ?

சைவ உணவினை பற்றி என்னவெல்லாமோ சொல்கின்றார், சைவம் என்பது மதமாம் இன்னும் ஏராளம், இது யாருக்கு தெரியாது. அது கடன்வாங்க பட்டதாம்

அப்பட்டமான உளறல், இந்து மதம் என்பது பல பிரிவுகளை கொண்டது, அதன் ஒரு பிரிவு சைவம் அதில் தாவர உணவு மட்டுமே , புத்தமும் சமணமும் அதனைத்தான் பின்பற்றின‌

இந்துமதத்திலிருந்தே புத்தம் அதனை களவாடியதே தவிர, புத்தத்திலிருந்து இந்துமதம் சைவத்தை களவாடவில்லை

சைவம் உண்டால் சாந்தம் வருமாம், அன்னார் சொல்கின்றார்

ஹிட்லரும் சைவம் தான், காந்தியினை கொன்ற கோட்சேவும் சைவம் தான் என்பது இவருக்கு தெரியாதா?

கலைஞனுக்கு சமூக பொறுப்பு வேண்டும், டாஸ்மாக் விளம்பரத்திலோ, அல்லது புகை பழக்க விளம்பரத்திலோ, சன்னிலியோன் விளம்பரத்திலோ அவர் வந்தால் எப்படி கண்டிபபர்களோ அப்படித்தான் சமூக ஜாதி இம்சைகளுக்கும், சில அட்டகாசங்களுக்கும் அவர் கண்டும் காணாமல் பங்கெடுப்பதை கண்டிக்கின்றார்கள்

இதற்கு ஏன் இப்படி பொங்குகின்றார் கமல், காசு கொடுத்தால் நடிப்பாராம்

ஏன் காசுக்காக எந்த வேடமென்றாலும் நடிப்பீர்களா கமலஹாசன்

அவர் விதிவிலக்கான அறிவாளி , நாமெல்லாம் சரசரி. பொதுவாக பெரும் அறிவாளிகளுக்கும் சராசரிக்கும் பொருந்தாது

ஆனால் அந்த அறிவாளிகள் நல்வழி காட்டவேண்டும் இல்லாவிட்டால் அந்த அறிவால் ஒரு பயனும் இல்லை

பசுமாட்டிடம் பால் கட்டினால் மக்களுக்கு பயன், நாய்க்கும் பன்றிக்கும் பால் கட்டி யாருக்கு பயன்?

சீனா வரிந்து கட்டுகின்றது, தமிழகம் சடுகாடாகின்றது, இன்னும் ஏராள பிரச்சினை நடக்கும் நாட்டில் பிக்பாஸ்தான் பிரச்சினையா என அவர் கேட்டிருந்தால் கூட அவரின் சமூக பொறுப்பினை பாராட்டலாம்,

இதே கமிஷனர் அலுவலகம் குட்கா வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய செய்தி வந்ததே, அதனை கண்டித்து மனு கொடுக்காமல் என்னை கண்டித்து ஏன் மனுகொடுக்க வேண்டும் என கேட்டிருந்தால் கூட கைதட்டலாம்

அன்னார் அப்படி ம்ஹூம்

கமலஹாசன் பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி உண்டு, அவரால் முடியும், அதற்காக பிக்பாஸில் பணம் வாங்கிவிட்டேன் அங்கு நடக்கும் எல்லா அட்டகாசத்திற்கும் வக்கலாத்து வாங்குவேன் என சொல்வாரானால் அது நிச்சயம் சரி அல்ல‌

 
 

ராஜபக்சே ஸ்டைலில் பிக் பாஸ்

images.jpg

இது என்ன இந்த பிக்பாஸில் எல்லோரும் ராஜபக்சே ஸ்டைலில் வந்திருக்கின்றார்கள்

இந்த சீமான் உட்பட தமிழின உணர்வாளர்கள் பொங்கியிருக்க வேண்டாமா? இது தமிழின விரோதி ராஜபக்சேவினை நினைவுபடுத்து கெட்டப் என கமிஷனரிடம் சென்றிருக்க வேண்டாமா

எத்தனை ராஜபக்சேக்கள் வந்து நிற்கின்றார்கள்? ஒரு சத்தமுமில்லை

தமிழ மக்களிடம் தான் உணர்வில்லை என சொல்லும் தமிழின உணர்வாளர்களிடமும் இப்பொழுது உணர்வு இல்லை போலும்

இது என்ன இந்த பிக்பாஸில் எல்லோரும் ராஜபக்சே ஸ்டைலில் வந்திருக்கின்றார்கள்

இந்த சீமான் உட்பட தமிழின உணர்வாளர்கள் பொங்கியிருக்க வேண்டாமா? இது தமிழின விரோதி ராஜபக்சேவினை நினைவுபடுத்து கெட்டப் என கமிஷனரிடம் சென்றிருக்க வேண்டாமா

எத்தனை ராஜபக்சேக்கள் வந்து நிற்கின்றார்கள்? ஒரு சத்தமுமில்லை

தமிழ மக்களிடம் தான் உணர்வில்லை என சொல்லும் தமிழின உணர்வாளர்களிடமும் இப்பொழுது உணர்வு இல்லை போலும்

சைமன் சித்தர்

Image may contain: 1 personசில சித்தர்கள் சில பச்சையான வார்த்தைகளை பேசுவார்கள் என்பார்கள், அற்ப மானிடனே நீ என்ன பெரிய …டா?

பு .. மகனே,

….. வழியாக வந்த அற்ப உடல்தான் இது? உனக்கென்ன ஆணவம்? என சொல்வார்களாம்,

இதனை சில சித்தர் பாடல்களில் நிரம்ப படிக்கலாம் . சில இடங்களில் பட்டினத்தார் கூட சொல்லியிருப்பார்

அனுபவத்தால் நொந்து, மனம் வெறுத்து, வாழ்வினை வெறுத்தவர்கள் அப்படி சித்தர்களானார்கள், அப்படி தத்துவம் பேசினார்கள்

அப்படி தமிழகதில் வாழும் முன்னாள் சேகுவேரா தம்பியாகவும், பெரியார் பேரனாகவும், அதற்கு முன்பு பசும்பொன் தேவரின் சீடராகவும் இருந்து இந்நாள் பிரபாகரன் தம்பியாக இருக்கும் சைமனுக்கு , மனம் நொந்து, வெறுத்து ஞானம் வந்து விட்டது

அவர்தான் எத்தனை வேடம் போடுவார், எத்தனை விதமாக பேசுவார்? எத்தனை நாள்தான் பேசிவிட முடியும்? அவரும் பாவம், மனம் வெறுத்து சித்தராகிவிட்டார்

அவர் திட்டி தீர்க்க கலைஞரும், காங்கிரசும், ராஜபக்சேயும் ஆட்சியில் இல்லை. அவர்கள் திரும்ப வரும் வாய்ப்புமில்லை அது வேறு கடும் வெறுப்பு

மனம் வெறுத்த அங்கிள் சைமன், சித்தன் சைமனாகி விட்டார், இது தெரியாமல் யாரோ குமரி மாவட்டத்துக்கார போனில் சீமானை அழைத்திருக்கின்றார்,

கடும் தவத்தில் இருந்த சைமன் சித்தர், தவம் கலைந்த கோபத்தில் கோபபட்ட சைமன் சித்தர், போனை வையடா பு… மகனே என சொல்லிவிட்டார்

இதற்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்?, சித்தர் சைமன் அப்படித்தான் சொல்வார், அவர் சித்தராகிவிட்டார். சுடுகாட்டு சித்தரின் இயல்பு அப்படித்தான்,

ஏற்கனவே நாடு சுடுகாடாயிற்று என சொல்லிகொண்டுதான் இருந்தார், அப்பொழுது நமக்கெல்லாம் அவர் சுடுகாட்டு சித்தரான விஷயம் தெரியவில்லை, இப்பொழுது தெரிந்துவிட்டது

இனி படுபயங்கர வார்த்தைகள் அந்த சித்தனிடமிருந்து வரும்..

அப்படி சித்தர் என்ன சொல்லிவிட்டார் என தெரிந்துகொள்ள விரும்பினால் நீங்களும் போனில் அவரை அழைத்து பார்க்கலாம்

தாமரை பூவிற்கு இன்னொரு பெயர் உண்டு, சமஸ்கிருத பெயர் அது.

இனி தாமரை பூவை கையில் வைத்து கொண்டு இதனை பூ என சொல்லலாம், புய்பம் எனவும் சொல்லலாம் நான் போனில் சொன்னபடியும் சொல்லலாம் என சீமான் சித்தர் விரைவில் சொன்னாலும் சொல்வார்.

 
 

அற்புத கவிஞனுக்கு குஷ்பு சங்கத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Image may contain: 1 personகண்ணதாசன், வாலிக்கு பின் தமிழகம் கண்ட மிக அற்புத கவிஞர் வைரமுத்து, தமிழ் அவரின் நாவில்,பேனாவில் எல்லாம் அப்படி விளையாடும்

எல்லா வகை உணர்வுகளையும் பாடலில் வடிக்கும் வரம் அவரது, அதுவும் கிராமத்து பாடல்கள் என்றால் இன்னும் அட்டகாசம்

எத்தனையோ முறை தேசியவிருதினை வென்றிருக்கும் அற்புத கவிஞன், கற்பக கவிஞன்

அவருக்கு இன்று பிறந்தநாளாம், வாழ்த்துவோம். அதற்கு பெரும் காரணமும் இருக்கின்றது

அழியா பாடல்கள் , அற்புதமான கிராமத்து கதைகளை அவர் எழுதியதை விட நமக்கெல்லாம் பெரும் உதவி செய்திருக்கின்றார், மறக்க முடியாத உதவி

Image may contain: 1 person, smiling, close-upகுஷ்பூவிற்கு மிக பொருத்தமான பாடல்களை வைரமுத்து எழுதினார்

“எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று..” என அவர் குஷ்பூவிற்கு எழுதியபாடல் ரசனையின் உச்சம், மிகபெரும் குஷ்பூ ரசிகனாக இல்லாவிட்டால் அப்பாடல் சாத்தியமே இல்லை

“சிரிக்கும் போது கண்ணில் மின்னல் தெரித்து ஓடுதே அதுவா” என்ற வரிகளாகட்டும், முல்லை நிறத்து பற்களில் ஒன்று தள்ளி உள்ளதே அதுவா” என்ற வரிகளாகட்டும், குஷ்பூவிற்காய் எழுதபட்டது

இந்த வரிகளுக்காகவே வைரமுத்துவிற்கு வைரமாலை சாற்றலாம்.

கம்பன் தன் கதை நாயகியினை பாடியது போல அப்படி ஒரு உருவகம் தந்த இரண்டாம் கம்பன் அவர்.
நம்மை போலவே உருகி ரசித்து ஆனால் நம்மால் சுத்தமாக முடியாத, அற்புதபாடலை கொடுத்தவர் வைரமுத்து

அப்பாடலை எழுதியதற்காகவே அவரை கொண்டாடலாம், இப்பாடலை எழுதியற்காகவே இன்னொரு முறை தேசிய விருது கொடுக்கபட வேண்டிய கவிஞர் அவர்

அதனால் ஸ்பெஷல் வாழ்த்து

அந்த அற்புத கவிஞனுக்கு சங்கத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்,

இன்னொருமுறை அவர் குஷ்பூவிற்கு இன்னொரு அழியாபாடல் இயற்ற வாழ்த்துவோம்


 அந்த அழியாபாடலை கண்டு கேட்கவும்


 

ஜெயலலிதா சொத்து …. கமல் தடுமாற்றம்…. லஞ்சம் கொடுத்தாரா சசிகலா? ….

ஜெயலலிதாவின் 350 கோடி ரூபாய் சொத்து தொடர்பில் பூங்குன்றனிடம் டெல்லியில் விசாரணை

அவர்களாக பிடித்து சென்று விசாரிகின்றார்களா, இல்லை இவராக சென்று அமர்ந்துகொண்டாரா என்பதுதான் தெரியவில்லை

கொடநாடு கொலைகளை, மர்ம சாவுகளை கண்ட பூங்குன்றன் தானாகவே டெல்லிக்கு விமானம் ஏறியிருக்கும் வாய்ப்புகள் அதிகம்

மனிதருக்கு சாந்தம் பொத்துகொண்டு வந்துவிட்டது


கிரிக்கெட் எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தேவையான ஒன்று தான்: கமலஹாசன்

கிரிகெட்டில் டோனி எந்த அளவு சம்பாதிக்கின்றாரோ, அந்த அளவு பிக்பாஸில் இவர் சம்பாதிக்க இது நிச்சயம் தேவைதான்,

அந்த அர்தத்தில் சொல்கின்றார் கமலஹாசன்

என்ன ஆனதோ தெரியவில்லை, இப்பொழுதெல்லாம் நிறைய தடுமாறுகின்றார்.


சிறையில் சகல வசதிக்காக ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்தாரா சசிகலா? புதிய சர்ச்சை

இது உண்மையானால் கூட என்ன தண்டனை கொடுக்க முடியும்? உள்ளே தள்ளவேண்டும் என்றாலும் அவர் ஏற்கனவே உள்ளேதான் இருக்கின்றார்

சிறையில் ஏற்கனவே இருப்பவருக்கு எப்படி சிறை தண்டனை? சிறைக்குள் சிறையா?

இந்த சசிகலா கும்பலின் இந்த அழிச்சாட்டியத்தால் இந்திய சட்ட துறைக்கே பெரும் குழப்பம் வராலாம்..


 சீனா விவகாரம் தொடர்பாக நாளை அனைத்துக் கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை

இந்த அதிமுகவினர் உட்பட பலருக்கு அது என்ன விவகாரம் என்றே தெரியாது, அதிலும் சிலருக்கு சீனா எங்கிருக்கின்றது என்றே தெரியாது

இந்த சீரியசான கூட்டத்தில், ” உலகம் சுற்றும் வாலிபனில் எம்ஜிஆர் சண்டை போட்டாரே அந்த நாடா? இல்ல சரோஜா தேவி பின்னாலா அன்பே வா ண்ணு உருளுவாரே அந்த நாடா? அவருக்கு கூட இப்பொழுது நூற்றாண்டுவிழா” என ஏதும் சொல்லி தொலைப்பார்கள்.

காஷ்மீர் பிரச்சினைக்கே மேல்சபையில் எம்ஜிஆர் பாடல் பாடிய வரலாறு அவர்களுக்கு உண்டு.

அதனால் இந்த அதிமுக‌ கட்சியினை மட்டும் மத்திய அரசு கொஞ்சம் கவனித்து சேர்த்த்கொள்வது நல்லது


சிவசேனா பாஜகவினை கலாய்க்கின்றது

“அமர்ந்தாத்தில் தாக்கிய கொலையாளிகளை கொல்ல பசுபாதுகாவலர்களை அனுப்ப வேண்டும். பயங்கரவாதிகள் கையில் பசுமாட்டுகறி இருந்தால் அவர்களை இவர்கள் எப்பொழுதோ கொன்றிருப்பார்கள் ” : சிவசேனா

எப்பொழுதும் மிக சர்ச்சையான கருத்துக்களை சொல்லும் சிவசேனா, இப்பொழுதெல்லாம் மிக அழகான கருத்துக்களை சொல்ல தொடங்கிவிட்டது

பிஜேபிக்கும் அதற்கும் எங்கோ முட்டிகொண்டபின் சிவசேனா கொஞ்சம் மாறிவிட்டது

அவர்கள் சொல்லவரும் விஷயத்தில் நியாயம் இல்லமால் இல்லை

இந்தியாவில் கலவரத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் அமர்ந்தாத் தாக்குதல் நடத்தபட்டிருந்தாலும் அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை

நாளை அந்த தீவிரவாதிகள் 10 பசுமாட்டை சுட்டுவிட்டால் நிச்சயம் பெருங்கலவரம் வெடிக்கலாம், நாடு அப்படி ஆகிவிட்டது

நாடு முழுக்க பசுமாடுகள் வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும், இனி பாகிஸ்தானிய தீவிரவாதிகளின் இலக்கு இந்திய மக்கள் அல்ல,

மாறாக இந்திய பசுமாடுகள்

சிவசேனா அதனைத்தான் சொல்லி பாஜகவினை கலாய்க்கின்றது

அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

Image may contain: 1 person, close-upஇலங்கை தமிழர்களில் அவர்தான் மிக முக்கிய தலைவராக இருந்தார். ஈழத்துகாந்தி சாமுவேல் செல்வநாயகத்திற்கு பின் அவரைத்தான் ஈழதமிழர்களின் தலைவராக உலகம் கருதிற்று

பன்மொழி ஆற்றல், பெரும் ஜனநாயகவாதி, எல்லா நாட்டு மக்களாலும் மதிக்கபட்டவர் என அவருக்கு பெரும் மதிப்பு இருந்தது, இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக இருந்தவர்

அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

செல்வாவிற்கு பின் அவர்தான் ஈழபிரச்சினையினை முன்னெடுத்து சென்றார், கொழும்பு கலவரத்தை தொடர்ந்து ஈழதமிழர் மேல் உலகெல்லாம் ஒரு அனுதாபம் ஏற்பட அவர்தான் காரணம்

தமிழகத்திற்கு அவர் ஆதரவு தேடி வந்தார். அவரை வரவேற்பதில் எம்ஜிஆருக்கும், கலைஞருக்கும் போட்டியே இருந்தது, நாவலரே வருக என போஸ்டர் ஓட்டி அசத்தினார் கலைஞர்

நான் தான் முதல்வர், என் காரில்தான் நீங்கள் வரவேண்டும் என விமான நிலையத்திலிருந்து தன் காரில் அழைத்து சென்று கருணாநிதியினை பார்த்து கிக்கிக்க்க்கி என சிரித்தபடி சென்றார் எம்ஜிஆர்

சுருக்கமாக சொன்னால் ஈழபிரச்சினையினை தமிழகத்தில் கொண்டு வந்து பெரிய செய்தி ஆக்கியதே அமிர்தலிங்கம் தான்

இந்திராகாந்தியிடம் அவர்தான் முதலில் ஈழநிலையினை எடுத்துரைத்தார், அமிர்தலிங்கமும் தந்தை செல்வாவின் மகனுமான சந்திரஹாசனுமே இந்தியாவில் ஈழபோராளிகள் பயிற்சிபெற அனுமதிபெற்றனர்

Image may contain: 4 people, people standingஅமிர்தலிங்கத்தி அமைதியான அணுகுமுறையே இந்திரா ஈழபோராட்டத்தில் இறங்க வழிகோலியது, அமிர்தலிங்கம் இல்லையென்றால் ஈழபோராட்டம் இந்த அளவு வளர்ந்திருக்காது, புலிகள் என்றோ காலியாயிருப்பர்

1984 குடியரசு தின விழாவின் பொழுது அமிர்தலிங்கத்தை அழைத்து தன் அருகே சிறப்பு விருந்தினராக அமரவைத்தார் இந்திரா

அது வெளிநாட்டு அதிபருக்கே கொடுக்கபடும் கவுரவம், ஆனால் ஒரு நாட்டின் எதிர்கட்சி தலைவருக்கு எப்படி கொடுத்தார் என பெரும் பரபரப்பு எழும்பியது

அமைதியாக ஜெயவர்த்தனேவினை பார்த்து புன்னகைத்தார் இந்திரா, ஆம் அதன் அர்த்தம் ஜெயவர்த்தேனேவிற்கு மட்டும் புரிந்தது

ஈழம் அமைந்தால் அதற்கு அமிர்தலிங்கம்தான் அதிபர் என்ற பொருள் யாருக்கு புரியாது? அலறினார் ஜெயவர்த்தனே, சிங்கள இனமே அலறிற்று

இந்திரா காலத்திற்கு பின் ராஜிவ் வந்ததும், ராஜிவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் வந்தபொழுதும் அமிர்தலிங்கம் இந்தியா பக்கமே இருந்தார்

இந்தியா மூலமே இலங்கை தமிழர்கள் நன்மை பெறமுடியும் என்பதும், இன்னொரு நாடு ஒருகாலும் ஈழதமிருக்காய் வராது, இந்தியா மட்டுமே ஏதாவது நன்மை பயக்கும் நிலையில் இருக்கின்றது, நாளை சிக்கல் என்றாலும் இந்தியாதான் கொடுக்கும் என்பது அவரின் நம்பிக்கை

அது மகா உண்மையும் கூட‌

இது பிரேமதாசாவிற்கு பெரும் எரிச்சலை கொடுத்தது, புலிகளும் பிரேமதாசாவும் இந்திய படைகளுக்கு எதிராக கூட்டாஞ்சோறு பொங்கி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்ட காலங்கள் என்பதான் கொலபொறுப்பினை புலிகள் எடுத்தனர்

அவர்களுக்கென்ன தமிழர் தரப்பு பிரதிநிதி என எவர் வந்தாலும் கொல்ல வேண்டும்.

அமிர்தலிங்கம் புலிகளின் கடும் போக்கினை விமர்சித்தார், போராளிகள் என்பவர்கள் செய்யும் அட்டகாசங்கள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்றார், தமிழர்களை கொல்லும் அந்த கொடூரம் ஒரு காலமும் நன்மை பயக்காது என பொதுவாக சொல்லிகொண்டிருந்தார்

அவர்தான் ஈழதமிழர்களின் பிரதிநிதி என உலகம் பார்த்து கொண்டிருந்தபொழுதே புலிகளுக்கு சகிக்கவில்லை. அவர்களை பொறுத்தவரை தாங்கள் மட்டுமே ஈழ தமிழரின் பிரதிநிதி என சொல்லிகொண்டார்கள்

போட்டிக்கு வந்தவர்களை எல்லாம் தொலைத்த புலிகள், அமிர்தலிங்கத்தை விடுவார்களா?

நாங்கள் துப்பாக்கி தூக்கி போரிடும் பொழுது, அமிர்தலிங்கம் இலங்கை அரசோடு பேசுகின்றார் அதனால் அவர் துரோகி என அறிவித்தார்கள்

(ஆனால் இதே புலிகள் பின்பு பிரேமதாசாவோடு கொஞ்சியது வரலாறு,அவர்கள் செய்தால் ராஜ தந்திரம் மற்றவர் செய்தால் கொடூரம்)

புலிகளின் வாயில் ஒருவனை துரோகி என சொல்லிவிட்டால் அவன் சாகபோகின்றான் என பொருள்

பிரபாகரன் பற்றி தன் கருத்தை இப்படி பண்பட்ட மொழியில் சொன்னார் அமிர்தலிங்கம்

தம்பி பிரபாகரன் தமிழனித்திற்காக சிறுவயதில் இருந்தே போராடுவது வரவேற்கதக்கது, ஆனால் எதனை செய்யவேண்டும், எதனை செய்யகூடாது எனும் அறிவு அவரிடம் இல்லை, பக்குவம் இல்லை, முதிர்ச்சி இல்லை.

இவர் இப்படியே செய்துகொண்டிருந்தால் அது பெரும் அழிவில் முடியும், அவர் பின்னால் இளைஞர்கள் செல்வது நல்ல அறிகுறி அல்ல…”

துரோகி என புலிகள் குமுறிகொண்டிருந்தபொழுது, இந்த வார்த்தைகள் புலிகளை வெறியூட்டின‌

ஒரு பெரும் தலைவனே, தமிழர் தலைவனே இப்படி சொல்லிவிட்டபின் மக்கள் எப்படி பிரபாகரனை நம்புவர், விடுவார்களா?

3 புலிகளை அமிர்தலிங்கத்துடன் பேசவேண்டும் என அனுப்பினர், அவர்களும் சில நாட்கள் சென்று பேசினர், அப்பொழுதெல்லாம் ஆயுதம் இல்லை

அமிர்தலிங்கம் பெரும் பாதுகாப்பில் இருந்தவர், சிங்கள அரசு அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தது, காரணம் உலகம் மதிக்கும் ஒரு தமிழ் தலைவனுக்கு போராட்டம் நடக்கும் காலத்தில் ஏதும் நடந்து தொலைத்துவிட்டால் அது இலங்கை அரசுக்கு பெரும் சிக்கல்”

இஸ்ரேலியர் அராபத்தை விட்டு வைத்தார்கள் அல்லவா? அப்படி

இந்நிலையில் அந்த கொலைகார புலிகள் ஆயுதத்தோடு அவரை பார்க்க வந்தார்கள், வாசலில் நின்ற சிங்களன் தடுக்கின்றான், அனுமதிகவில்லை பெரும் சத்தம். அதனை கேட்டு மாடியிலிருந்து சொல்கின்றார் அமிர்தலிங்கம்

“அவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் அனுப்புங்கள், ஆயுதம் பற்றி கவலை இல்லை” என அனுமதி கொடுக்கின்றார் அமிர்தலிங்கம்

எப்படி நம்பியிருக்கின்றார் பார்த்தீர்களா?

அதன் பின் அமிர்தலிங்கத்துடன் பேசுகின்றார்கள் கொலைகாரர்கள், அவரோடு இன்னும் இருவர் இருந்தார்கள், யோகேஸ்வரன் போன்றவர்கள், அவர்களும் சிறந்த சிந்தனையாளர்கள்

அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையற்கரசி எல்லோருக்கும் தேநீர் கொண்டு வருகின்றார், கொலைகார புலிகள் குடிக்கின்றார்கள்

கொஞ்சமும் மனிதாபிமானம் உள்ளவர்கள் அதனை குடிப்பார்ளா? அல்லது அந்த மங்கல மகராசி கையால் தேநீர் குடித்தபின் அவள் தாலிபறிக்க நினைப்பார்களா?

புலிகளுக்கு ஏது நன்றி? ஏது மனது? எல்லாம் கொடூரம்

தேநீரை அருந்திவிட்டு அமிர்தலிங்கத்தை சுட்டார்கள், அதன் பின் அருகிலிருந்தவரை சுட்டுவிட்டார்கள். சத்தம் கேட்டு அமர்தலிங்க மனைவியும் அந்த சிங்கள காவல்காரனும் ஓடிவந்தான்

அவனை கண்டதும் அமிர்தலிங்கம் மனைவியினை சுடும் திட்டத்தை கைவிட்டு கொலைகாரர்கள் ஓடினர், ஆம் அவர்கள் அமிர்தலிங்கதினை சுட்டுவிட்டு தனிஈழம் பெற அவசரமாக ஓடினர்.

ஆனால் அந்த சிங்களன் பின்னால் விரட்டி சென்று சுட்டடான்

கொலையாளிகளை அவன் விரட்டி சுட்டு கொன்றான், ஒரு தமிழ் தலைவனை கொன்ற தமிழ்புலிகளை சுட்டு கொன்றவன் ஒரு விசுவாசமான சிங்களன்

அது மட்டுமல்ல அமிர்தலிங்கத்தின் பாதுகாவலரானா அந்த சிங்களன் அமிர்தலிங்கம் மனைவியிடம் அழுதான், என்னை மன்னியுங்கள், நான் அவர்களை தடுத்திருக்கவேண்டும், இவர் அழைத்தார் என்றுதான் விட்டுவிட்டேன் என் கடமையினை நான் சரியாக செய்யவில்லை

எப்படிபட்ட மிக உயர்ந்த சிங்களன் அவன்? , பிரபாகரனுக்கு பின்னும் இலங்கை அமைதியாக இருக்கின்றது என்றால் அது இதுபோன்ற நல்ல சிங்களர்களால்தான்

அமிர்தலிங்கத்தின் கொலை பெரும் பிரச்சினையாயிற்று, ஈழமக்கள் அழுதனர், வழக்கம் போல மறுத்தனர் புலிகள், பின் அமைதியாயினர்

புலிகள் கொலையினை மூன்று வகையாக எதிர்கொள்வர், ஒன்று கொன்றது நாங்கள்தான் என்பர், இரண்டாது ரகம் முணுமுணுப்பு, மூன்றாம் ரகம் மர்ம அமைதி

ராஜிவ் கொலை என்பது மூன்றாம் ரகம், அமிர்தலிங்கம் கொலை இரண்டாம் ரகம்

புலிதளபதி மாத்தையா அமிர்தலிங்கத்திற்கு கொடுக்கபட்டது மரண தண்டனை என பகிரங்கமாக சொன்னார்,

பிராபகரன் உத்தரவுபடி அந்த கொலையினை செய்தது நிச்சயம் மாத்தையாதான், பின் மாத்தையாவும் பிரபாகரனுக்கு துரோகி ஆனார், கொஞ்சநாளில் பிரபாகரனால் கொல்லபட்டார்.

பின் ராஜிவும் கொல்லபட்டு , புலிகளின் நன்றி கடனுக்காக பிரேமதாசாவும் கொல்லபட்டார்

எப்படிபட்ட நன்றிமிக்கவர் புலிகள், காப்பாற்றி சோறு போட்டவனை எல்லாம் மண்டையில் போட்டவர்கள்

வடமராட்சியில் தன்னை காத்த ராஜிவினை கொன்றார்கள், பின் அமைதிபடையிடமிருந்து காத்த பிரேமதாசாவினை கொன்றார்கள்

அப்படியே தாங்கள் பெரும் போராளிகளாக இடமளித்து பயிற்சிபெற‌ இந்தியாவிடம் வாதாடி வழிகொடுத்த அமிர்தலிங்கத்தையும் கொன்றார்கள்

புலிகள் செய்த மிக மிக தவறான அரசியல் கொலைகளில் அமிர்தலிங்கம் கொலையும் ஒன்று

இதே ஜூலை 13ம் நாளில்தான் அவர் புலிகளால் கொல்லபட்டார், இப்படி எல்லாம் சிரித்துகொண்டே கொலை செய்வது ஒருவகையான மனநோய், பிரபாகரனுக்கும் அவர் கும்பலுக்கும் அதுதான் இருந்திருக்கலாம்

இதன் பின் என்னவெல்லாமோ நடந்து புலிகள் 2009ல் பெரும் மக்கள் அழிவோடு அழிந்தும் போயினர்

இன்று யாருமில்லா அனாதைகளாக நிற்கின்றது ஈழ தமிழினம், மறுபடி அமிர்தலிங்கம் போன்றவர்கள் பிறந்து வந்து வழிகாட்டட்டும்

பிரபாகரன்கள் இனி பிறக்காமலே போகட்டும்

திருப்பெரும்புதூரில் காவலர் அனுசுயா தற்கொலை குண்டுதாரி அனுசுயாவினை தடுக்க, அவரை தடுக்காதீர்கள் மாலையிட அனுப்புங்கள் என சொல்லி தனுவினை தன் அருகே அழைத்தார் ராஜிவ்

அந்த சதிகாரியும் வந்து குனிந்து வணங்கி கொன்றாள்

இவர்கள் எனக்கு தெரிந்தவர்கள், அவர்களிடம் ஆயுதம் இருப்பது பிரச்சினையில்லை உள்ளே அனுப்புங்கள் என சொல்லி கொலையாளிகளை தன்னை கொல்ல அனுமதி கொடுத்தார் அமிர்தலிங்கம்

அவர்களும் வந்து வணங்கி தேநீர் குடித்துவிட்டே கொன்றனர்

புலிகளின் பயிற்சி இப்படித்தான் நம்ப வைத்து கழுத்தறுப்பதாக இருக்கின்றது

இதனைத்தான் பெரும் வீரகாவியமாக இந்த சீமானும் வைக்கோவும் பழநெடுமாறன் எனும் இந்த தேசத்தின் சாபங்கள் எல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றன‌

அமிர்தலிங்கத்தின் மரணம் ராஜிவிற்கு பெரும் எச்சரிக்கை, பத்மநாபாவின் கொலை அடுத்த எச்சரிக்கை இதனை எல்லாம் கொஞ்சமும் சிந்திக்காமல்தான் ராஜிவ் இறந்தார்

தன் உயிர்கொடுத்து இந்தியாவினையும், ஈழ மக்களையும் எச்சரித்த அந்த உன்னத தலைவன் அமிர்தலிங்கத்திற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.