திலீப் எனும் மலையாள தாவுத் இப்ராஹிம்

Image may contain: 1 person, beard

பாவனா விவகாரத்தில் திலீப் எனும் மலையாள தாவுத் இப்ராஹிம் கைது செய்யபட்டிருப்பது ஏராளமான கேள்விகளை எழுப்பிவிட்டது, இனி பிரணாயி விஜயன் கூட சிக்கலில் மாட்டலாம்

அதாகபட்டது கேரளாவில் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்களே தவிர, அரசியல்வாதிகள் துணையுடன் ரியல் எஸ்டேட் முதல் எல்லா தொழிலையும் செய்வார்கள், சமீபத்திய சரிதா நாயர் வரை ஏராள உதாரணம் உண்டு

அப்படி திலீப்பும் அவர் முன்னாள் மனைவி மஞ்சுவாரியார், பாவனா எல்லோரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் செய்து ஏதோ சர்ச்சை வந்திருக்கின்றது, இதில் மஞ்சுவாரியாரும் திலிப்பும் விவாகரத்து வரை சென்றிருக்கின்றார்கள்,

மஞ்சு வாரியார் அங்குள்ள குஷ்பூ, குஷ்பூ அளவு இல்லாவிட்டாலும் சொல்லிகொள்ளு அழகுதான்.

திலீப் ஒன்றும் ராமர் அல்ல, ஆனால் தன் பிரச்சினைகளுக்கும் தன் மனைவி பிரிந்ததற்கும் பாவனாதான் காரணம் என நினைத்திருக்கின்றார், சில சொத்துக்களுக்கு பாவனா கையெழுத்தும் வேண்டியிருந்ததால் சர்ச்சை தொடர்ந்திருகின்றது

இந்நிலையில் காவ்யா மாதவனை திருணம் செய்தாலும் திலீப்பிற்கு பாவனா மீதுள்ள கோபம் அடங்கவில்லை, பல்சர் சுனில் என்பவனை ஏவிவிட்டு அந்த கொடூரம் பாவனா மீது நிகழ்த்தபட்டுவிட்டது

அவர்கள் நோக்கம் அந்த சம்பவத்தை வைத்து பாவனா சம்பத்தபட்ட சொத்துக்களை மீட்பதும், அவரை ஆட்டிவைப்பதுமே

ஆனால் வரலாற்றில் புதுமை பெண்ணாக பாவனா இதனை வெளியில் சொல்வார் என்றோ, தன் வாழ்வு போனாலும் பரவாயில்லை, பழிவாங்காமல் விடமாட்டேன் என இந்தளவு சீறுவார் என்றோ நினைக்கவில்லை

இன்று திலீப் கைதுசெய்யபட்டுவிட்டார், விவகாரம் இப்பொழுதுதான் தீவிரமாகின்றது

அதாவது திலீப் தமிழ் திரையுலகில் ஒரு நடிகர் செய்யும் அட்டகாசம் போலவும், சில பைனான்சியர்கள் ஜி.வெங்கடேசனை சாகும் அளவு பாடாய் படுத்திய அளவுக்கு மலையாள திரை உலகை ஆட்டி வைத்தவர் என்றெல்லாம் செய்திகள் வெளிவருகின்றன‌

மலையாளிகள் கருப்பு பணத்தில் படமெடுக்கின்றார்கள் எனவும், ஹவாலா பணத்தினை பயன்படுத்தியே சினிமா எடுகின்றார்கள் எனவும் இதில் திலீப்பும் ஒருவர் இன்னும் ஏராளமானோர் உண்டு எனவும் செய்திகள் வருகின்றன‌

மலையாளிகள் எப்படி நகைகடையில் முன்னணியில் இருக்கின்றார்கள், எப்படி பெரும் சூப்பர் மார்க்கெட்டுகளை நடத்துகின்றார்கள்? எனும் சர்ச்சை பல காலமாக உண்டு, அவர்கள் சில மர்மங்களை கொண்டிருப்பது ஒன்றும் ரகசியமல்ல‌

அதே கேள்விகள் திலீப் மீதும் தொடுக்கபடுகின்றன, மலையாள திரையுலகம் மீதும் தொடுக்கபடுகின்றன‌

இது சாதாரண காலமாக இருந்தால் விட்டுவிடலாம், ஆனால் இப்பொழுது இதில் அடிபடுவது பிரணாயி விஜயன் பெயர்

உண்மையில் ஆரம்பத்தில் இருந்தே அவர் பாவனா விவகாரத்தில் ஆர்வம் காட்டவில்லை, திலீப்பின் பெயர் மறைமுகமாக அடிபட்டபொழுது அப்படி எல்லாம் இருக்க முடியாது என அவசரமாக மறுத்தவர்

அவரின் செயல்பாடெல்லாம் திலீப்பினை தற்காப்பதாகவே இருந்தது, இப்பொழுது அவர் மீதும் கேள்விகள் திரும்புகின்றன‌

இந்த அந்நிய செலாவணி மோசடியில் சிக்கும் மலையாள திரையுலகிற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?

இது பிரணாய் விஜயனுக்கும் மத்திய அரசுக்கும் பனிப்போர் காலம், அமித்ஷாவிற்கும் விஜயனுக்கும் சொற்போர் நடக்கும் காலம்

விடுமா டெல்லி?

அந்நிய செலாவணி என்பது தேசதுரோகம், தேசதுரோக பணத்தில் செழிக்கின்றதா மலையாள திரையுலகம்? இதற்கு மாநில முதல்வர் பிரணாய் விஜயன் துணையா?

சபரிமலையும், குருவாயூரும், சோட்டானிக்கரையும், சக்குளத்துகாவும் இருக்கும் இடத்தில் இப்படிபட்ட மோசடியா? “எண்ட பகவதி அம்மையே” வரிந்து கட்டுகின்றார்கள் மலையாள பக்தர்கள்,

இனி அவர்கள் தேசபக்தர்கள்

சும்மாவே சிறு சிறு மோதல்களில் பெரும் வாய்ப்புக்கு காத்திருந்த அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது

Image may contain: 1 person, smiling, close-upபிரணாய் விஜயன் பெரும் சிக்கலை சந்திப்பார் போல தெரிகின்றது

இது பார்பண சதியென்றோ, ஆரிய அட்டகாசம் என்றோ, மாட்டுகறிக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்திற்காய் விஜயன் பழிவாங்கபடுகின்றார் என்றோ சொல்லமுடியாது

திலீப்பினை காப்பாற்ற முயற்சித்து பெரும் சிக்கலில் சிக்கியிருக்கின்றார் விஜயன்

பாவனா விவகாரத்தில் அந்த திருட்டு மீனை பிடிக்க போய் பெரும் திமிங்கலங்கள் சிக்கி, பெரும் பிரளயமே வெடிக்கும் போலிருக்கின்றது.

ஒன்று கவனித்தீர்களா?

பாவனா விவகாரம் நடந்தவுடன் தமிழ் திரையுலகம் கொதித்தது, கண்டித்தது ஆர்ப்பரித்தது, விஷால் எல்லாம் “தீம்தரிகிட தோம்” ஆடிகொண்டிருந்தார்

இப்பொழுது திலீப் கைது செய்யபட்டிருக்கின்றார், இதனை வரவேற்று தமிழகத்தில் ஒரு நடிகர் அல்லது நடிகை பேசியிருப்பார்களா?

மிக தைரியமான பாவனாவின் போராட்டத்தினை எந்த நடிகையாவது பாராட்டியிருக்கின்றாரா? அவருக்கான நியாயம் கிடைத்ததில் மகிழ்ச்சி என யாராவது சொல்லியிருக்கின்றார்களா?

எந்த பெண் கலைஞராவது சொன்னாரா? பெண்களுக்காக பொங்கும் எந்த கலைஉலகத்தவராவது பேசினார்களா?

இல்லை, ஏன்?

இந்த திலீப்பினை போலவே இங்கும் பலர் இருப்பார்களோ? அல்லது அந்த திலீப்பிடமே சிக்கியிருப்பார்களோ, ஆண்டவனுக்கே வெளிச்சம்.

 
 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s