சர்ச்சைகள் எதற்கு மிஸ்டர் மனுஷ்?

Image may contain: 1 person, smiling, sunglasses and close-upஎல்லோரும் ஒருவரை நேருக்கு நேர் முகத்தை பார்க்கின்றார்கள் என்றால் அவர் பின்னால் இருந்து குனிந்து எதனையோ நோக்குவது மனுஷ்யபுத்திரன் பாணி

அதாவது அவர் எல்லாவற்றையும் வித்தியாசமாக நோக்குவாராம்..

அப்படி அமர்நாத் தாக்குதலுக்கு தன் வழக்கமான புலம்பலை தொடங்கிவிட்டார், அதே கூறியன கூறல் எனும் அழிச்சாட்டியம் , அதாகபட்டது இஸ்லாமியர் எல்லோரும் மோசமானவர்கள் அல்ல‌ என சொல்லிகொண்டே இருக்கின்றார்

அவர் முகத்தை பிடித்து சுவரில் உரசி இப்படி கேட்க வேண்டும்

“டேய் சமோசா வாயா, பிய்ந்து போன பர்ஸ் வாயா, இஸ்லாமியர் எல்லோரும் மோசமானவர் என எவன் உன்னிடம் சொன்னான்?..”

அப்துல்கபார்கான் முதல் அப்துல் கலாம் வரை எத்தனை இஸ்லாமிய பெருமக்கள் இந்நாட்டிற்காக உழைத்திருக்கின்றார்கள், எத்தனை இஸ்லாமியர் இங்கு இந்தியராக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

உலகில் இஸ்லாமிய மக்கள் வாழும் இரண்டாம் மிகபெரிய நாடு சாட்சாத் இந்த இந்தியாதான்

இங்கு அவர்கள் இந்தியராக உணர்கின்றார்கள், எல்லா இஸலாமியரும் மோசம் என யாரும் சொல்லமாட்டார்கள்

சில இடங்களில் சில சர்ச்சை இருக்கலாம், சில இடங்களில் கட்டுபாடுகள் இருக்கலாம், அது கிறிஸ்தவ இந்து என எல்லா மக்கள் வாழும் இடத்திலும் உண்டு,

144 தடை சட்டம் என்பது எல்லா மக்களுக்கும் பொருந்துமே அன்றி இஸ்லாமியருக்கு மட்டுமல்ல‌

ஒரு முஸ்லீம் டிரைவர் இதற பயணிகளை காப்பாற்றினார், அதனை ஏன் சொல்கின்றார்கள்? கொன்றவர்கள் அண்டை நாட்டு இஸ்லாமியர், காப்பாற்றியது இந்நாட்டு நாட்டுபற்றுள்ள இஸ்லாமியர், அதனைத்தான் சொன்னார்கள்

இதில் இவருக்கு என்ன சிக்கல்?

இறுதியாக தன் வாந்தியினை அதுதான் அந்த கவிதையினை இப்படி முடிக்கின்றாராம்

“இஸ்லாமியர்கள்
தங்களை எப்போதும்
நெருப்பின் முன் நின்றுகொண்டிருக்கும்
சீதைகளாக உணர்ந்துகொள்கிறார்கள்”

இவர் ராமாயணத்தை ஏற்றுகொண்டுவிட்டாரா? அது இந்நாட்டின் பெரும் இதிகாசம் என ஒப்புகொண்டாயிற்றா?

இல்லை

பின்னர் ஏன் இஸ்லாமியர் சீதைகள்? இவர்களை யார் கடத்திகொண்டு போனார்கள்? யார் இவர்கள் கூந்தலை பிடித்து இழுத்தார்கள்? இந்நாட்டில் அப்படி என்ன பெரும் மிரட்டல் இஸ்லாமியருக்கு வந்துவிட்டது? சில அரசியல் நாடகம் நடக்கலாமேயன்றி இஸ்லாமியருக்கு இது என்றும் பாதுகாப்பான தேசமே

இப்படிபட்ட சர்ச்சைகள் எதற்கு மிஸ்டர் மனுஷ்?

இஸ்லாமியர் அந்த புனிதமான‌ மார்க்கத்துடன் இஸ்லாமியராகவே இருக்கட்டும் அவர்கள் ஏன் சீதைகள் ஆகவேண்டும், அப்படி ஒன்றும் அவசியமில்லை

இந்நாட்டு குடிமக்கள் 7பேர் கொல்லபட்டிருகின்றார்கள் அதனை கண்டிக்காமல் இவர் என்னமோ சொல்லிகொண்டிருக்கின்றாராம், சுத்த அபத்தம்.

அது இருக்கட்டும் சமோசா சித்தர், அமர்நாத்தில் கொன்றவன் எல்லாம் அண்டை நாட்டு இஸ்லாமியன் அல்லவா? அல்லது அவன் ஆதரவு பெற்ற சில கோடாரி காம்பு இஸ்லாமியன் அல்லவா?

அவனை பற்றி ஏன் ஒரு வார்த்தையும் நீர் சொல்லவில்லை

ஒரு கள்ள தீவிரவாதி எப்படி இன்னொரு தீவிரவாதியினை கண்டிப்பான்? ம்ஹூம் கண்டிக்கவே மாட்டான்.

இவர் மனுஷ்யபுத்திரன் அல்ல, அவ்வளவு ஏன்? மனிதனே அல்ல‌

 
 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s