ரகுமான் பற்றிய பதிவில் நடந்தது இதுதான்

Image may contain: 1 person, smilingரகுமான் பற்றிய பதிவில் நடந்தது இதுதான், உள்ளூர் பத்திரிகைகள் பொங்கிய அடிப்படையில் எழுதினோம், பலர் பொங்கினார்கள், சரி லண்டன் நண்பர்களிடம் கேட்டுவிட்டு சீர்படுத்தலாம் என்றால் மணி இரவு 11 ஆகியிருந்தது, சரி சனியனை காலையில் பார்க்கலாம் என்றே எடுத்துவிட்டோம்

லண்டன்வாசிகள் சொன்னது இதுதான், இது வெள்ளையன் நகரம் , இந்தியர்களில் வட இந்தியர் எண்ணிக்கை அதிகம், தமிழரில் ஈழதமிழர் எண்ணிக்கை அதிகம், இந்திய தமிழர்கள் குறைவு

ரகுமானின் 25ம் ஆண்டுவிழா என்றுதான் முதலில் அறிவித்தார்கள், ரகுமான் இந்திய அடையாளமாக பார்க்கபடுபவர் மட்டுமன்றி உலகெல்லாம் அவருக்கு அபிமானம் உண்டு

தமிழர்கள் இந்திக்காரர்கள் மட்டுமல்ல, மலையாளி, சீக்கியன், தெலுங்கன், கன்ன்டன் என எல்லோரும் வந்திருந்தான்

நிகழ்ச்சி நடத்தினார்கள், இது முழுக்க தமிழர்களை அதுவும் ஈழதமிழர்களை குறிவைத்து நடத்தபட்ட நிகழ்ச்சி என்பது பின்னர்தான் தெரிந்த்து

அப்படி ரகுமான் தமிழ்பாடல்களை அதிகம் பாடியதும் , இந்திக்காரர் மட்டுமல்ல எல்லா மற்றமொழிக்காரர்களுக்கும் அதிருப்தியே, அவர்கள் மெஜாரிட்டி என்பதால் பிரச்சினை திசைமாறிற்று”

இப்படித்தான் தகவல்கள் வருகின்றன,

அதுவும் ஒரு வகையில் நோக்க வேண்டியது, ரகுமானின் வெளிவிழா என்றால் சென்னையிலே நடத்தலாம், லண்டனில் நடத்தவேண்டிய அவசியம் என்ன?

அவர் நடத்தியது வியாபாரம், வந்த வாடிக்கையாளனுக்கு திருப்தி இல்லை என்றால் அது வியாபார விஷயம்

அதற்கும் இந்திக்காரர்கள் தமிழை புறக்கணிக்கின்றார்கள் என்பதற்கும் என்ன சம்பந்தம்? நாம் கூட லதா மங்கேஷ்கர் இந்தியில் பாடினால் எழுந்து செல்லத்தான் செய்வோம்

இது அரசு விழாவோ , தமிழுக்கு எதிர்ப்பு என சொல்லபடும் விஷயமோ அல்ல, மாறாக விஷமம்

கூர்ந்து நோக்கினால் ரகுமான் திட்டமிட்டு அழைக்கபட்டிருக்கலாம், அது தமிழ் எதிர்ப்பு என திசைமாற்றபட்டிருக்கலாம்

ஈழ புலிகளின் அபிமானிகள், இந்த அங்கிள் சைமனின் கோஷ்டிகள் இதனை பெரும் பிம்பமாக்கலாம், நடப்பதை பார்த்தால் அதுதான் தெரிகின்றது

இவை எல்லாம் ரகுமான் என்பவரின் வியாபாரத்தை வைத்து இந்திய தேசியத்தில் குழப்பம் விளைவிக்கும் செயல்கள், சிலர் நான் தேசிய கீதம் பாடமாட்டேன் என கிளம்புவதெல்லாம் இப்படித்த்தான்

இந்த விஷயத்தை வெகு எளிதாக நகர்த்திவிட்டு போவதுதான் நல்லது, இசை கலைஞன் எல்லோருக்கும் பொதுவானவன்

அதே இந்தியில் ரங்கீலா முதல் சமீபகால படம் வரை ரகுமான் கொண்டாடபடுவதும், அவருக்கு இந்திபாடல் மூலமே ஆஸ்கர் கிடைத்தது மறக்க முடியாத விஷயங்கள்

ஆக தவறு ரகுமான் மீதும் இருக்கின்றது, அவரை திட்டமிட்டு அழைத்தவர் மேலும் இருக்கின்றது, சில இந்திக்கார சில்லுண்டிகள் மீதும் இருக்கின்றது

இதனை சாக்காக வைத்து இந்நாட்டில் குழப்பம் விளைவிப்பது கண்டிக்கதக்கது

இது இருக்கட்டும், ஒரு சிலர் வந்து நான் நடுநிலைவாதி அல்ல, யாருக்கோ அஞ்சி பதிவினை நீக்கிவிட்டேன் என சொல்லிகொண்டிருக்கின்றான்

இந்த உலகில் நடுநிலை என எதுவுமில்லை, புத்தனுக்கும் இல்லை, காந்திக்கும் இல்லை, காமராஜனுக்கும் இல்லை

அவனவன் எண்ணங்களை இச்சமூகம் ஏற்றுகொள்வதில் இருக்கின்றது விஷயம்

அதனால் சில சொட்டை தலையர் தலையில் சத்தியம் செய்து சொல்கின்றேன், நான் நடுநிலை எல்லாம் அல்ல, அதே நேரம் நீங்கள் நினைத்ததை எல்லாம் எழுத உங்கள் கைவிரல் பேனாவும் அல்ல‌

அதனால் என் எண்ணங்களை பதிவேன், பிடிக்காவிட்டால் நடையினை கட்டுங்கள், மாறாக வீன் அழிச்சாட்டியம் செய்தால் கருப்பு பட்டியல்தான்

நான் நடுநிலைவாதி என ஒரு விலங்கிட்டு கொண்டு, வீணாக ஒரு முகமூடி போட்டுகொண்டு, முள் இருக்கையில் இருக்க நான் தயாராக இல்லை,

என் சுதந்திரம் எனக்கு முக்கியம்

 
 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s