பெரியார் பொதுவாழ்விற்கு வரும் பெண்களை பற்றி….

பெரியார் பொதுவாழ்விற்கு வரும் பெண்களை பற்றி என்ன சொல்லியிருக்கின்றார் என வாசித்தால் இப்படி சொல்லியிருக்கின்றார்

“பெண்களுக்கு மதிப்பற்றுப் போனதற்கும், அவர்கள் வெறும் போகப்பொருள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கிய காரணமே பெண்கள் ஆபாசமாய் தங்களை சிங்காரித்துக் கொள்வதேயாகும்.

தங்களது முட்டாள் ஆசையும் மூடபக்தியுமே ஆகும். ஆண்களை விட விலை உயர்ந்த துணி மணிகள் அணிவதுமேயாகும். அலங்கரித்துக் கொள்ளப்பட்ட பெண் தெருவில் நடக்கும் போது, கூட்டத்தில் இருக்கும்போதும் பார்ப்பவர்கள் கண்களுக்கு எப்படித்தெரியும்?

மனதில் என்ன தோன்றும்? என்பதையும் அறிவு உலகத்தில், பொதுத்தொண்டு உலகத்தில் இவர் களுக்கு எவ்வளவு இடமிருக்கும் என்பதையும் சிந்தித்துப் பார்த்தால் அலங்கரித்துக் கொள்ளுவதின் இழிவு புலப்படாமல் போகாது.”

ஆக பெண்கள் அலங்காரம் செய்துகொண்டு வந்து நிற்பது அவர்களுக்கான இழிவு என்பதுபோல் சொல்லியிருக்கின்றார், அப்படி வந்தால் பெண்களுக்கான மரியாதை வராமல் அவர்கள் ஒரு பொருளாக பார்க்கபடுவார்கள் என்பது அவர் சிந்தனை

இந்த பெரியாரின் கொள்கைகளை பேசும் பல பெண்கள் இதனை பின்பற்றுகின்றார்களா என்றால் இல்லை

பெரியார் கொள்கையிலும் எதனை மறைக்கவேண்டுமோ அதனை மறைத்துவிட்டுத்தான் பெரியாரின் பெண்கள் விடுதலை என பேசி கொண்டிருக்கின்றார்கள்.

சிநேகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை

காயத்திரியினை பிடித்து 10 நாள் சேரியில் போடலாமா? அல்லது நெல்சன் மண்டேலா சிறையில் போடலமா? வைக்கமில் பெரியார் இருந்த சிறையினை கழுவ அனுப்பலாமா என்றேல்லாம் பல விவாதங்கள் அணல் பறக்கின்றன‌

அதே நேரம் இன்னொருபக்கம் மிக முக்கியமான ஆராய்ச்சி இரவு பகலாக நடக்கின்றது, இன்னும் முடிவு அறிவிக்கபடவிலை, ஆராய்ச்சி இதுதான்

அந்த ஜூலி என்ன சாதி??


பாகம்பிரியாளை அருகில் வைத்துகொண்டு குஷ்பூ படம் பார்ப்பது ஜூராசிக் பார்க்கில் இருக்கும் “திகில்” அனுபவத்தை கொடுக்கின்றது


இந்த சிநேகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது பலருக்கு அதிர்ச்சியாம், அந்த விடியா மூஞ்சிக்கு திருமணம் ஆகியிருந்தால்தான் அதிர்ச்சி


சோகங்களிலே பெரிது புத்திர சோகம்

சோகங்களிலே பெரிது புத்திர சோகம்

இந்த நாளில் அத்தனை மொட்டுக்கள் மலரும் முன்னே எரிக்கபட்ட கோர நிகழ்வு நடந்தநாள். இந்நாட்டின் கல்வி பணவெறிக்கு அப்பிஞ்சுகள் பலிகொடுக்கபட்ட நாள்

இந்த பாழ்பட்ட நாட்டில் எல்லா ஆபத்துக்களுக்கும் யாராவது ஒருவர் தன் உயிரை கொடுத்தே அந்த ஆபத்தை சுட்டிகாட்டு அடுத்தவரை எச்சரிப்பார்கள்

அப்படி எத்தனையோ குழந்தைகளை காக்க தன் உயிர்தந்த தியாக பிஞ்சுகள் அவை

இந்த நாளை நினைக்கும்பொழுதெல்லாம் அழக்கூட சரியாத தெரியாத அவற்றின் அலறலே நினைவுக்கு வரும்

அந்த தியாக‌ பிஞ்சுகளுக்கு அஞ்சலி,மீளமுடியாத‌ தசரத சோகத்தில் இருக்கும் அந்த பெற்றோருக்கு முடிந்த ஆறுதல்கள்

 
 
 

சினிமா விருதுகள் வழங்களில் பல மர்மங்கள்

இந்த சினிமா விருதுகள் அறிவிக்கபட்டதில் பல மர்மங்கள், ஏராளமான திட்டங்கள் இருக்கின்றன, 6 வருடம் வழங்காத இந்த விருதுகளை மொத்தமாக‌ திடீரென வழங்கியதில் அர்த்தம் இல்லாமல் இல்லை

விஷயம் இதுதான் சிம்பிளாக சொல்லிவிடலாம்

ஜெயலலிதாவிற்கு பின் இன்னொரு சினிமாகார முதல்வர் உருவாகிவிட கூடாது என்பதில் அரசுக்கு கடும் அக்கறை, முதல்வர் என்ன? எதிர்கட்சி தலைவர் கூட ஆகிவிட கூடாது

நன்றாக கவனியுங்கள், ஒரு மாதிரி அலையும் நடிகர்கள் யாருக்கும் விருதில்லை, அதே போல அரசியல்வாதிகளை குதறிய படமான “ஜோக்கர்” போன்ற படங்களுக்கும் விருதில்லை

அரசினை விமர்சிக்கும் யாரையும் கண்டுகொள்ளமாட்டோம், சினிமாகாரர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்போம் என இறங்கியிருக்கின்றது இந்த அரசு

உச்சமாக கமலஹாசனை ஒரு அமைச்சர் ஒருமையில் திட்டியதும், இன்னொரு அமைச்சர் கமலை கைதுசெய்யவேண்டும் என கொதிப்பதற்கும் இதுதான் காரணம்

ஜெயாவிற்கு பின் யாருக்கும் குனிந்து நிற்க தமிழ் திரையுலகமும் தயாராக இல்லை, சினிமாவிலிருந்தே உருவான கட்சியான அதிமுகவும் அவர்களை தெறிக்கவிடும் முடிவிலே இருக்கின்றது

கொஞ்ச காலமாக திமுகவிற்கும், அதிமுகவிற்கும் ஏற்பட்டிருக்கும் ரகசிய உடன்படிக்கையும் கவனிக்கதக்கது

இருகட்சியுமே இன்னொரு கட்சியினை வளரவிட கூடாது எனும் முடிவில் இருக்கின்றன, கலைஞரும் ஜெயாவும் இல்லா நிலையில் திரையுலகிலிருந்து அடுத்த அரசியல்வாதி
வந்துவிட கூடாது என்பதில் இருவருகுமே அலாதி பிரியம்

பாஜக போன்ற தேசிய கட்சிகளுக்கு இந்த சினிமா உலகில் இருந்து யாரும் சென்றுவிட கூடாது என்ற கவலையும் இருக்கின்றது

அதனால்தான் சினிமாதுறையினை இந்த ஆட்சி குறிவைத்து அடிக்கின்றது, திமுக ரகசியமாக சிரிக்கின்றது

திரைதுறையினை நெருக்குகின்றார்கள், கமலை வேண்டுமென்றே மிரட்டுகின்றார்கள் இப்படி எல்லாம் காட்சிகள் நன்றாக தெரிகின்றன‌

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த அதிமுக அரசு இனியொரு முறை அமைய வாய்ப்பே இல்லை, இந்நிலையில் ஏதோ தங்களால் முடிந்ததை செய்து அடுத்த எதிரி உருவாகாமல் பார்த்துகொண்டால் பின்னாளில் 10 இடமாவது எம்ஜிஆர் ஜெயா பெயரை சொல்லி வெல்லமுடியாதா என்ற தொலைநோக்கு திட்டத்தில் இருக்கின்றது

இந்த பனிப்போர் எதில் முடியும் என தெரியாது, வருங்காலம்தான் பதில் சொல்லும்

எப்படியோ சினிமாவால் பலமான‌ திராவிட கட்சிகள், அந்த சினிமாவினையே முடக்க நினைப்பதுதான் விசித்திரம்


விஷால் தலமையில் நடிகர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியினை சந்தித்தனர்

கமலஹாசன் மீது வருமானவரி சோதனை எனும் மிரட்டலை அரசாங்கம் ஏவியபின் எப்படி இவர்கள் விழுந்தடித்து ஓடிவந்து நிற்கின்றார்கள் பார்த்தீர்களா?

இதுவரை சந்திக்காத பழனிச்சாமியினை இப்பொழுது அலறி அடித்து சந்திக்கவேறு என்ன விஷயம் இருக்க முடியும்


 

இஸ்ரேல் ஒரு தந்திரக்கார நாடு

Image may contain: sky and outdoorஅணுகுண்டை விட ஆபத்தான காரியத்தில் இஸ்ரேல் இறங்கிவிட்டது, மிக மிக உணர்ச்சிகரமான அல் அக்சா விவகாரத்தில் கை வைத்துவிட்டது, உலகம் பொங்கிகொண்டிருக்கின்றது

இஸ்லாமிய நாடுகள் எல்லாம் ஓரணியில் திரண்டுகொண்டிருக்கின்றன‌

அதாகபட்டது சாலமோன் கட்டிய அந்த ஆலயம், ஆபிரகாம் அல்லது இப்ராஹிம் நபி தன் மகனை பலிகொடுக்க துணிந்த இடம் எல்லாம் இருக்கும் வளாகம் பைத்துல் முகஸ்துஸ்

இந்த வளாகத்தில்தான் டூம் ஆப் ராக் எனப்படும் மசூதி, யூத அழும் சுவர், அல் அக்சா எனப்படும் ஓலை மசூதி எல்லாம் உண்டு

இஸ்லாமியருக்கு மூன்றாம் புனித மசூதி அதுதான், யூதருக்கு ஒரே கோவில் இருந்த இடம் அதுதான், கிறிஸ்தவர்களுக்கும் அது முக்கியமான இடம், இதனை கைபற்றத்தான் சிலுவை போர்கள் எல்லாம் நடந்தன‌

இஸ்ரேலின் குறி இதுதான், ஆனால் எப்படி நெருங்கினார்கள்? முதலிலே இதனை கேட்டால் இஸ்ரேல் அமைந்திருக்காது, அதனால் தந்திரமாக அணுகினார்கள்.

மத அடையாளத்தை தாண்டி அது பெரும் பழமை வாய்ந்தது, யுனெஸ்கோ போன்ற அமைப்புகள் எல்லாம் அதனை அப்படி அங்கீகரித்திருக்கின்றன,

ஆலயம் கட்ட வேண்டுமானால் இஸரேல் எங்கும் கட்டலாம், அவர்களிடம் இல்லா பணமா அறிவா? இந்த மசூதியினை இடித்துவிட்டுத்தான் கட்டவேண்டுமா?

இந்த கேள்வி மிக நியாயமனாது, மிக பழமையான கட்டிடத்தை இடிப்பது ஏற்றுகொள்ளமுடியாதது, அது ஒரு இன அழிப்பு அல்லது பெரும் கொடூர கொலை, ஆனால் இஸ்ரேல் எதனை ஏற்கும்?

எங்கள் வாழ்வே இந்த மசூதியினை இடித்துவிட்டு ஆலயம் கட்டுவது என நிற்கும் கும்பலிடம் என்ன பேச முடியும்?

முதலில் பாலஸ்தீனத்தில் ஒரு பகுதி வேண்டும் என்றார்கள்,பின் ஜெருசலேமில் ஒரு தெரு வேண்டும் என்றார்கள், பின் பாதிவேண்டும் என்றார்கள் பின் அவர்களாக மொத்த ஜெருசலேமினை கைபற்றினார்கள்

ஆனால் அல் அக்சா மசூதியினை தொடவில்லை

பின் கொஞ்சம் கேரள பாணியில் இறங்கினார்கள், மசூதி பழுது என்றார்கள், பின் ராமர் கோவில் பாணியில் அகழ்வாராச்சி செய்தார்கள், ஏன் என்று கேட்டால் எங்காவது சாலமோன் ஆலய அடித்தளம் இருக்கிறதா என சோதிக்கின்றோம் மசூதிக்கு ஆபத்தில்லை என சொன்னார்கள்

அப்பொழுதே அராபத் இண்டிபாதா எல்லாம் நடத்தி உலகின் கவனத்தை எல்லாம் ஈர்த்தார், அவரையும் வீட்டுகாவலில் வைத்து பின் அவரும் இறந்தார்.

பின் மசூதிக்கு அடியிலே தோண்டினார்கள், சுவரில் கீறல்கள் விழுந்தன, உடனே பார்த்தீர்களா, இதில் பலமில்லை என அன்றே சொன்னோம் என்கின்றார்கள்

அகழ்வாராய்ச்சி என தோண்டியதும், மசூதியினை பாழ்படுத்தியதும் அவர்கள், இன்று அன்றே சொன்னோம் அல்லவா? தொழுகையில் இடிந்துவிழுந்தால் யார் பொறுப்பு? என அடைத்துவிட்டார்கள்

ஆம் அல் அக்சா மசூதி வெள்ளிகிழமை அடைக்கபட்டுவிட்டது, கேட்டால் பரமாரிப்பாம்

அன்று வெள்ளிகிழமை தொழுகை நடக்கவில்லை, வரலாற்றில் வெகு சில நாட்களில் நடைபெறாமல் போன கொடும் காலத்தில் கடந்த வெள்ளியும் இடம்பெற்றுவிட்டது

இன்னும் மசூதி திறக்கபடவில்லை. இஸ்லாம் உலகம் கொந்தளிக்கின்றது

இதனை இஸ்ரேல் எதிர்பார்க்கவில்லையா என்றால் நிச்சயம் எதிர்பார்த்தார்கள், உலகம் எப்படி ரியாக்ட் செய்கின்றது என சோதிக்கின்றார்கள்

உலக எதிர்ப்பு பலமாக இருந்தால் மசூதி தப்பும், பெரும் எதிர்ப்பு இல்லாவிட்டால் விரைவில் மசூதி தகர்க்கபட்டு மூன்றாம் தேவாலயம் அமைக்கபடும்

எப்படி எல்லாம் தந்திரமாக நகர்கின்றார்கள்? இப்படி ஒரு தந்திரக்கார நாடு எங்காவது உண்டா?

இன்று அவர்களை அரேபியால் எதிர்க்க ஆளுமில்லை, சவுதி ஏமனுடன் சண்டை, ஈராக் சிரியா ஐஎஸ்சுடன் சண்டை, இன்னும் சில அடிமைகள் அமெரிக்காவிற்கு சலாம் என காட்சிகள் மாறிகிடக்கின்றன‌

அணுகுண்டு செய்துவிட்டுத்தான் இஸ்ரேலை எதிர்க்கவேண்டும் என்ற வெறியில் ஈரான் எங்கோ முட்டிகொண்டு நிற்கின்றது

எப்படியாயிலும் இந்த புனிதமான மசூதியினை இஸ்லாமிய நாடுகள் விட்டுகொடுக்காது, கிழக்காசிய நாடுகள் முதல் அமெரிக்க முஸ்லீம்கள் வரை பொங்குகின்றன‌

நிச்சயமாக உலகில் இரண்டாம் பெரும் மக்கள் தொகையில் இஸ்லாமியர் வாழும் நாடு இந்தியா, பாகிஸ்தான் எல்லாம் அதற்கும் குறைவுதான்

இந்திய இஸ்லாமிய மக்களின் குரல் வேகமாக எழுவதும் முன்பு இஸ்ரேலுக்கு நல்லதாகபடவில்லை, ராஜிவ் காலம் வரை அப்படித்தான் இருந்தது

இன்றோ காட்சிகள் மாறிவிட்டன, மோடி சமீபத்தில்தான் கட்டிபிடி வைத்தியம் எல்லாம் செய்துவிட்டு வந்தார்

இவர்களோ இங்கு பாபர் மசூதியினை இடித்தவர்கள், இவர்களிடமிருந்து அல் அக்சா மசூதிக்கு எப்படி ஆதரவு குரல் எழும்பும?

தன் ராஜதந்திரத்தில் இந்தியாவினை வசமாக இவ்விவகாரத்தில் சிக்க வைத்துவிட்டது இஸ்ரேல்

இதோ உலக இஸ்லாமிய நாடுகள், இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள மற்ற நாடுகள் எல்லாம் இஸ்ரேலை இப்பொழுது கண்டிக்கும்பொழுது இந்தியா சத்தமே இல்லை

பெரும் கண்டன குரல்கள் இஸ்ரேல் மீது எழுகின்றன, இது போராக கூட எழலாம், ஹிஸ்புல்லா போன்ற இயக்கங்கள் இனி இஸ்ரேலை தாக்கலாம்

இஸ்ரேல் யுத்தத்திற்கு தயார் இல்லாமலா இக்காரியத்தில் இறங்கியிருக்கும்?? அவர்களும் தயார்.

மசூதி திறக்கபடாவிட்டால் அது பெரும் போரின் தொடக்கமாக இருக்கும் என்பது மட்டும் உண்மை, அதன் அழிவும் கடுமையாக இருக்கும்

யாருக்கும் ஆபத்தின்றி மசூதி திறக்கபடவேண்டும் என்பதுதான் எல்லோரின் படபடப்பும், பிரார்த்தனையும்

 
 

அடால்ப் ஈச்மென் Vs மொசாத் : 01

20032076_10209705692014181_5952488605801486002_n.jpg

கடந்த 500 வருடத்தில் உலகம் கண்ட பெரும் கொடூரன் என்பது ஹிட்லருக்கு இடபட்ட முத்திரை அடையாளம். இன்னும் 500 வருடத்திற்கு அவர்தான் உலக அயோக்கியன் எனும் அளவிற்கு அவன் யூத அழிப்பு வரலாறு ஆயிற்று

செங்கிஸ்கான், தைமூருக்கு பின் மிக பெரும் கொடூர மனிதனாக உலகம் அவனைத்தான் சொல்கின்றது

ஒரு சிறந்த ஓவியன் ஹிட்லர், உணவில் கூட சுத்த சைவம். ஆனால் மகா திறமைசாலி அதற்குமேல் நாட்டுபற்றாளன். முதல் உகலப்போரில் சாதாரண சிப்பாய், அதன் பின் நாட்டிற்கு நடக்கும் அநீதிகளை பார்க்கிறார் அதில் சில உண்மையும் இருந்தது.

ஆசியா,ஆபிரிக்கா,லத்தீன் அமெரிக்கா,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வரை பாருங்கள் ஜெர்மனியின் காலணி என ஒன்று காட்டமுடியுமா? நிச்சயம் முடியாது தானுண்டு தன் தேசமுண்டு என இருந்தநாடு.

ஆனால் அவர்களும் சில காலணிகளை அமைக்க முயற்சிக்கும் பொழுது மொத்த ஐரோப்பாவும் ஜெர்மனை கொத்தி எடுத்து, காலணி என்பது ஒன்றுமல்ல வியாபாரம் எனும் பெயரில் சுரண்டுவது

ஜெர்மனிக்கும் வியாபார ஆசை வந்தது, எந்திரம் முதல் சகலமும் விற்கலாம் என எண்ணினார்கள் , அன்றைய துருக்கியினை ஐரோப்பியரால் வீழ்த்தமுடியவில்லை, மிக பரந்த வலுவான சாம்ராஜ்யம் அது

ஜெர்மன் அவர்களோடு உறவாடி பெர்லின் பாக்தான் ரயில் விட முயற்சித்தது, அது வெற்றியாகியிருந்தால் ஜெர்மன் அன்றே வளர்ந்திருக்கும், துருக்கிக்கும் நல்ல பலன். விடுமா பிரிட்டனும் பிரான்சும்?, ஒரே சிக்கல் ரயில் சில நாடுகள் வழியே செல்லவேண்டும்

இந்த திட்டத்தை குழப்பத்தான் ஜெர்மன் கூட்டாளியான ஆஸ்திரிய இளவரசனை எவனோ சுட்டு கொன்ற்ய் சண்டை வெடித்து முதல் உலகப்போரானது

பிரிட்டனும், பிரான்சும் ஜெர்மனை தோற்கடித்தன , துருக்கிய சாம்ராஜ்யமே அழிக்கபட்டது, ஜெர்மனை குறிவைத்து அடித்தார்கள், இனி எழும்பவே கூடாது என திட்டமிட்டு அடித்தார்கள்.

இன்றைய சிரியா,ஆப்கன் அளவிற்கு ஜெர்மனை சீரழித்தன, அதன் வளமான பகுதிகளை மற்றநாடுகள் பறித்தன, அவ்வளவு ஏன் அதற்கு மேலும் ஏராளமான வட்டிபணம் ஜெர்மன் கட்டவேண்டி இருந்தது. (உலகை நாங்கள் ஆளலாம் ஜெர்மன் எப்படி ஆளலாம் என்பது அவர்கள் எண்ணம்)

உண்மையான குடிமகனுக்கு வரும் கோபம் ஹிட்லருக்கும் வந்தது, உற்று கவனித்தான் அந்நாட்டு யூதர்களுக்கு எந்த கவலையும் இல்லை. பணக்காரர்களாய் இருந்தனர் ஆனால் இஸ்ரேல் மற்றும் ஜெருசலேம் கனவிலேதான் உழைத்தனர், அவர்கள் அப்படித்தான்.

அதற்கு முன் எல்லா தேசத்திலும் அடிபட்ட இனம்தான் யூத இனம், மிக சரியாக 50 வருடத்திற்கொருமுறை எங்காவது வாங்கிகட்டுவார்கள், அல்லது கொல்லபடுவார்கள், அப்பொழுதுதான் ரஷ்யா அடித்து முடித்திருந்தது.

காரணம் அவர்கள் ஜீன்கள் அப்படி, தொழில்செய்வது அப்படி, சாதாரணமாக தொடங்குவார்கள் ஆனால் கடுமையாக சம்பாதிப்பார்கள், பின்னர் வட்டி, பின்னர் அடமானம் கொஞ்சநாளில் ஏரியாவை வளைப்பார்கள், ஆனால் கனவெல்லாம் ஜெருசல்மில்தான் இருக்கும், சம்பாதிக்கும் நாடு கண்ணுக்கு தெரியாது, அதோடு ஒட்டவும் மாட்டார்கள்.

இதோ கேரளாவில் கூட 2000 வருடமாக வாழ்ந்தார்கள், இஸ்ரேல் உருவாக்கபட்டவுடன் ஓடியே போய்விட்டார்கள், வளர்ந்த நன்றி, சோறுபோட்ட நன்றி எதுவுமே அவர்கள் இனத்திற்கு வராது, சொர்க்கத்தில் இருந்தாலும் எருசலேம் என சொன்னால் உடனே கிளம்புவார்கள்

புரியும்படி சொன்னால் முன்பு பர்மாவில் செட்டியார்கள் செய்ததை அவர்கள் ஐரோப்பாவில் செய்தார்கள், பின்னாளில் செட்டியார்கள் பர்மாவில் பட்டதை இவர்கள் அங்கு அடிக்கடி பட்டார்கள்.

நாடு நாசமாகிறது என ஹிட்லர் கவலையுற, யூதர்கள் பல வங்கிகளை நடத்தினார்கள் அனைத்து பணமும் எங்கு சென்றது என நினைக்கின்றீர்கள். நிலவங்கி என்றொரு புதிய வங்கி தொடங்கி பாலஸ்தீனை கொஞ்சம் கொஞ்சம் வாங்கிகொண்டிருந்தார்கள்.

ஆட்டோமன் துருக்கியர் வீழ்ந்த குழப்பமான பாலஸ்தீனம் அதற்கு வாய்ப்பளித்திருந்தது, ஓஹோ யூதர்கள் குறி இங்கிருக்கின்றதா? இந்த அரசு வீழத்தான் ஐரோப்பாவில் குழப்பமா? என அவனுக்கு பலத்த சிந்தனை வந்தது, அவன் யூதவெறுப்பு இங்குதான் தொடங்கிற்று

அவர்கள் ஜெர்மானியராக வாழ்ந்திருந்தால் ஹிட்லருக்குள் சாத்தான் வந்திருக்க வாய்ப்பே இல்லை, அவர்கள் யூதராகவே இருந்ததுதான் அவனுக்கு அவ்வளவு கோபம்

எங்கள் நாட்டில் சம்பாதித்துவிட்டு எங்கோ போய் கொட்டுகின்றார்கள் என்பது தான் ஹிட்லரின் கோபம், அது வெறுப்பாயிற்று. அதனையே மேடையில் முழங்கினான், மக்கள் அவனை தலைவனாக ஏற்றனர், ஹிட்லர் நாட்டின் தலைவருமானார்.

நிச்சயமாக அவனுக்கு அப்பொழுது யூதரை கொல்லும் திட்டமில்லை, நாடு முக்கியம் நாட்டை பாதுகாக்க ராணுவம் முக்கியம், அதற்கு யூதர்களின் சொத்துக்களை பிடுங்கினால் அது தேசிய சேவை என நினைத்தான்.

ஹிட்லர் எனும் பூதம் இன்றைய சிரியா நிலையிலிருந்த ஜெர்மனியை 7 ஆண்டுகளில் உலக வல்லரசாக்கிற்று. இனி எந்த அதிபரும் எந்த உலகிலும் செய்யமுடியாத சாதனை அது. மாபெரும் ராணுவம், தொழில்நுட்பம், பொருளாதாரம் என உலகின் நம்பர்1 நாடாக ஜெர்மனை மாற்றி காட்டினார் ஹிட்லர், ராட்சத சக்தியாக ஜெர்மனியை மாற்றி காட்டினார், ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்.

அதற்கு அவனின் பொருளாதார அமைச்சர் Horace Greeley பெரும் காரணம், அவர்தான் ஜெர்மனியினை தூக்கி நிறுத்தினான் ஹிட்லரின் தேர்வு அப்படி மிக சரியாக இருந்தது

வல்லரசானதும் தன் ஆட்டம் தொடங்கினார் ஹிட்லர். அதன் பின் இழந்த பகுதிகளை மீட்டார், திடீரென பலம்பெரும் இந்தியா (ஒருவேளை பெற்றால்) காஷ்மீர், கச்சதீவு, கயிலாயமலை என மீட்டால் எப்படி இருக்கும், பாகிஸ்தானை முடக்கி, சீனாவை ஓடவிட்டு, ராஜபக்ஸேயையும் அந்த புத்ததுறவிகளையும் புழல் சிறையில் போட்டால் எப்படி இருக்கும் நமக்கு?, அப்படித்தான் ஜெர்மானியரும் ஹிட்லரை கொண்டாடி கடவுளாக்கினர்.

அப்படியே ஹிட்லர் ஒரு கொசுகடியிலோ அல்லது விபத்திலோ அல்லது உணவு செரிக்கமலோ, பாத்ரூமில் தவறிவிழுந்தோ, ஈவாபிரானோடு காதல் தகறாறில் தற்கொலையோ செய்து செத்திருந்தால் இன்றுவரை அவன் தான் மாபெரும் உலக ஹீரோ, ஆனால் அவன் உள்ளே இருந்த ஜெர்மானிய உணர்வு அவனை ஆட்டுவித்தது.

பிரிட்டனும், பிரான்சும், ஸ்பெயினும், போர்ச்சுகல்லும் ஆளும் உலகை ஜெர்மனும் ஆண்டால் என்ன?

பிரிட்டனை பிடித்தால் இலவசமாக இந்தியா உள்பட 70 நாடுகள்,பிரான்சை பிடித்தால் கூட 40 நாடு இவ்வளவுதான் உலகம், அமெரிக்கா ஒரு கொசு என்று திட்டமிட்டு போலந்திலிருந்து கணக்கை தொடங்கினான்.

ஐரோப்பா உனக்கு, ஆப்ரிக்கா இத்தாலிக்கு , கிழக்காசியா மற்றும் அமெரிக்கா எனக்கு என கூட்டணி சேர்ந்தது ஜப்பான், போர் வெடித்தது

ஆடாமல் ஜெயித்தான் ஹிட்லர், மிரட்டலிலே நாடுகளை பிடித்தான், அவன் பலம் அப்படி இருந்தது

அவன் பிடிக்கும் நாடுகளில் எல்லாம் யூதர்கள் இருந்தனர், விரட்டினால் அடுத்த நாட்டிற்கு ஓடினர், அங்கும் பிடித்து அவர்களை விரட்டும் கடினவேலை ஹிட்லருக்கு. அவர்களின் முகத்தை அல்ல நிழலை கூட பார்க்க அவன் விரும்பவில்லை, அவர்கள் ஜெர்மானிய துரோகிகள்.

இந்த கடும் பிரச்சினையை பற்றி தளபதி ஹிம்லர் மற்றும் இன்னொரு அதிகாரியுடன் ஆலோசித்தான், அதாவது அவ்வப்போது ஐரோப்பியர் யூதர்கள் மேல் தீபாவளி கொண்டாடுவது வாடிக்கைதான், சகலரும் அடித்துவிட்டு ஆட்டோவில் போட்டு யூத இனத்தை ஹிட்லரிடன் அனுப்பியிருக்கின்றார்கள், பீரியாகத்தான் இருக்கிறார் ஹிட்லர் விடுவாரா? எப்படி அடிக்கலாம் என்றுதான் திட்டமிட்டார்

அவர்களை மொத்தமாக கொன்றுவிடலாம் என்றான் அந்த அதிகாரி, ஹிட்லரும் அந்த அளவு மக்களை வெறியேற்றி வைத்திருந்தார், தலையாடிய ஹிட்லர் உத்தரவிட்டார், பொறுப்பு உடனே அந்த இளம் அதிகாரிக்கு கொடுக்கபட்டது, உலகம் இனி நமது, அது யூதரில்லாத உலகமாக உங்கள் காலடியில் வைக்கிறேன் என்று சபதமும் செய்தார் அதிகாரி.

சிறந்த நிர்வாகியான ஹிட்லர் ஒரு லட்சம் யூதரை கொன்றால் உனக்கொரு மெடல் என அறிவித்துவிட்டு அதிகாரமும் கொடுத்தான்.

ஹிட்லர் வாழ்க எனும் மங்கள கீதத்துடன் ஜெர்மனியின் “யூத ஒழிப்புதுறை” செயல்பட ஆரம்பித்தது, சி.இ.ஓ நிச்சயமாக அந்த 35 வயது அதிகாரி.

செங்கிஸ்கான், தைமூர், செவ்விந்திரை அழித்தல் இம்மூன்றிற்கு பின் வரலாறு காணாத படுகொலையை நிகழ்த்தி காட்டினான் அந்த அதிகாரி, அவன் பெற்ற மெடல்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

40 மெடல்கள், அதாவது 40 லட்சம் யூதர்களை கொன்றதற்காக. உண்மை எண்ணிக்கை இன்னும் இருக்கலாம்.

எப்படி எல்லாம் கொல்லமுடியும் என அவன் மிக கொடூரமாக சிந்தித்தான், அந்த விஷயாவு கொட்டகை எல்லாம் இவன் சிந்தனையிலே உதித்ததுதான்.

அவன்தான் அடால்ப் ஈச்மென்.

ஒருவழியாக யுத்தம் முடிந்து ரஷ்யபடைகள் (இதுதான் ரஷ்யா என்றும் நேருக்கு நேர், அமெரிக்கா தொழில்நுட்பம் பின்னால் ஒளிந்துகொள்ளும் ) ஹிட்லரின் முக்கால்வாசி எரிந்த உடலையும்,ஹிம்லரின் முழு உடலையும் கைபற்றியபொழுது ஈச்மென்னை காணவில்லை, யுத்தத்தில் கொல்லபட்டிருக்கலாம் என விட்டுவிட்டார்கள்.

ஹிட்லரை விட ஈச்மேன் தான் பிரதான குற்றவாளி என்பதை ஐரொப்பா உணர்ந்திருந்தது

1948ல் இஸ்ரேல் உருவாக்கபட்டு, மொசாத்தும் தொடங்கபட்டது, முதல்வேலையாக ஈச்மெனை ரகசியமாக‌ தேடினார்கள், அவர்களுக்கு வலுத்த சந்தேகம் இருந்தது. ஹிட்லரும் தப்பித்தான் என்பதும் அவர்கள் வாதம்.

இஸ்ரேல் அறிவிக்கபட்ட மறுநாள் யுத்தம், ஓயாத யுத்தம் அந்த யுத்தம் நடுவிலும் அவர்கள் வெறி ஈச்மென் மேலேயே இருந்தது, குறி வைத்து தேடினார்கள் அவ்வளவு வன்மம்

உலகம் ஈச்மென் செத்துவிட்டதாக நம்பினாலும் யூத இனம் ஹிட்லரும், ஈச்மெனும் சாகவில்லை என்றே சொல்லிகொண்டிருந்தது, அவர்களுக்கு எங்கள் கையால்தான் சாவு என உறுமிகொண்டிருந்தது

உலகம் ஈச்மென் செத்துவிட்டதாக நம்பிகொண்டிருந்தபொழுது ஈச்மென் வளர்ந்த தாடியுடனும் குடும்பத்தாருடனும் இத்தாலி அகதிகள் முகாமில் தங்கி இருந்தான், யுத்த கைதியும் அல்ல அகதி.

அவனுக்கும் அவன் மனைவிக்கும் மட்டுமே அவன் ஈச்மென் என தெரியும், மற்றவர்களுக்கு ஒரு பிச்சைக்கார அகதி, கூலி வேலைக்காரன், இத்தாலியரின் தின கூலியில் வாழ்ந்துகொண்டிருந்தான்.

ஆனால் மொசாத அமைக்கபட்டவுடன் அவனது ராணுவ மூளை உஷாரானது, என்ன இருந்தாலும் ஜெர்மானியன் அல்லவா? யூத மூளை என்னவென்று நன்றாக உணர்ந்தவன், முடிவெடித்தான்

இனி ஐரோப்பா தனக்கு பாதுகாப்பான இடம் அல்ல, தப்ப வேண்டும்

தொடரும்…

 

எங்கே கலாச்சார காவலர்கள்?

Image may contain: 1 person, smiling, text

அதீத சுதந்திரமும் ஒரு சமுதாய சீர்கேடு , கலாச்சார காவலர்கள் எல்லாம் கமலஹாசனுக்கு மட்டுமே பொங்குவார்கள்.

பெண் சுதந்திரம் என்பது ஆண்களோடு செக்ஸ் பேசுவது என்ற அளவுக்கு சென்றுகொண்டிருக்கின்றது, இதுதான் பெண்விடுதலையா?

நிச்சயமாக இவரின் பிள்ளைகளை நினைக்க பரிதாபமாக இருக்கின்றது, நல்ல சமூக ஆர்வலர்கள் இருந்தால அந்த குழந்தைகளை மீட்டு அரசு பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பட்டும்.

இந்த பெண்ணின் கணவரும் இதனை ஒப்புகொள்கின்றாரா? இதனை ஒப்புகொண்டால் இந்த குடும்பம் தமிழகத்தின் பெரும் சமூக சீர்கேட்டு குடும்பம் ஆகாதா?

இந்த பெண் எழுதுவதும் ஒரு பொறுப்பான பத்திரிகையில் எழுத்தாக வருகின்றதாம்

இதனை எல்லாம் விடவா பிக்பாஸ் தமிழகத்தை சீரழித்திற்று??

எங்கே கலாச்சார காவலர்கள்?