அடால்ப் ஈச்மென் Vs மொசாத் : 01

20032076_10209705692014181_5952488605801486002_n.jpg

கடந்த 500 வருடத்தில் உலகம் கண்ட பெரும் கொடூரன் என்பது ஹிட்லருக்கு இடபட்ட முத்திரை அடையாளம். இன்னும் 500 வருடத்திற்கு அவர்தான் உலக அயோக்கியன் எனும் அளவிற்கு அவன் யூத அழிப்பு வரலாறு ஆயிற்று

செங்கிஸ்கான், தைமூருக்கு பின் மிக பெரும் கொடூர மனிதனாக உலகம் அவனைத்தான் சொல்கின்றது

ஒரு சிறந்த ஓவியன் ஹிட்லர், உணவில் கூட சுத்த சைவம். ஆனால் மகா திறமைசாலி அதற்குமேல் நாட்டுபற்றாளன். முதல் உகலப்போரில் சாதாரண சிப்பாய், அதன் பின் நாட்டிற்கு நடக்கும் அநீதிகளை பார்க்கிறார் அதில் சில உண்மையும் இருந்தது.

ஆசியா,ஆபிரிக்கா,லத்தீன் அமெரிக்கா,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வரை பாருங்கள் ஜெர்மனியின் காலணி என ஒன்று காட்டமுடியுமா? நிச்சயம் முடியாது தானுண்டு தன் தேசமுண்டு என இருந்தநாடு.

ஆனால் அவர்களும் சில காலணிகளை அமைக்க முயற்சிக்கும் பொழுது மொத்த ஐரோப்பாவும் ஜெர்மனை கொத்தி எடுத்து, காலணி என்பது ஒன்றுமல்ல வியாபாரம் எனும் பெயரில் சுரண்டுவது

ஜெர்மனிக்கும் வியாபார ஆசை வந்தது, எந்திரம் முதல் சகலமும் விற்கலாம் என எண்ணினார்கள் , அன்றைய துருக்கியினை ஐரோப்பியரால் வீழ்த்தமுடியவில்லை, மிக பரந்த வலுவான சாம்ராஜ்யம் அது

ஜெர்மன் அவர்களோடு உறவாடி பெர்லின் பாக்தான் ரயில் விட முயற்சித்தது, அது வெற்றியாகியிருந்தால் ஜெர்மன் அன்றே வளர்ந்திருக்கும், துருக்கிக்கும் நல்ல பலன். விடுமா பிரிட்டனும் பிரான்சும்?, ஒரே சிக்கல் ரயில் சில நாடுகள் வழியே செல்லவேண்டும்

இந்த திட்டத்தை குழப்பத்தான் ஜெர்மன் கூட்டாளியான ஆஸ்திரிய இளவரசனை எவனோ சுட்டு கொன்ற்ய் சண்டை வெடித்து முதல் உலகப்போரானது

பிரிட்டனும், பிரான்சும் ஜெர்மனை தோற்கடித்தன , துருக்கிய சாம்ராஜ்யமே அழிக்கபட்டது, ஜெர்மனை குறிவைத்து அடித்தார்கள், இனி எழும்பவே கூடாது என திட்டமிட்டு அடித்தார்கள்.

இன்றைய சிரியா,ஆப்கன் அளவிற்கு ஜெர்மனை சீரழித்தன, அதன் வளமான பகுதிகளை மற்றநாடுகள் பறித்தன, அவ்வளவு ஏன் அதற்கு மேலும் ஏராளமான வட்டிபணம் ஜெர்மன் கட்டவேண்டி இருந்தது. (உலகை நாங்கள் ஆளலாம் ஜெர்மன் எப்படி ஆளலாம் என்பது அவர்கள் எண்ணம்)

உண்மையான குடிமகனுக்கு வரும் கோபம் ஹிட்லருக்கும் வந்தது, உற்று கவனித்தான் அந்நாட்டு யூதர்களுக்கு எந்த கவலையும் இல்லை. பணக்காரர்களாய் இருந்தனர் ஆனால் இஸ்ரேல் மற்றும் ஜெருசலேம் கனவிலேதான் உழைத்தனர், அவர்கள் அப்படித்தான்.

அதற்கு முன் எல்லா தேசத்திலும் அடிபட்ட இனம்தான் யூத இனம், மிக சரியாக 50 வருடத்திற்கொருமுறை எங்காவது வாங்கிகட்டுவார்கள், அல்லது கொல்லபடுவார்கள், அப்பொழுதுதான் ரஷ்யா அடித்து முடித்திருந்தது.

காரணம் அவர்கள் ஜீன்கள் அப்படி, தொழில்செய்வது அப்படி, சாதாரணமாக தொடங்குவார்கள் ஆனால் கடுமையாக சம்பாதிப்பார்கள், பின்னர் வட்டி, பின்னர் அடமானம் கொஞ்சநாளில் ஏரியாவை வளைப்பார்கள், ஆனால் கனவெல்லாம் ஜெருசல்மில்தான் இருக்கும், சம்பாதிக்கும் நாடு கண்ணுக்கு தெரியாது, அதோடு ஒட்டவும் மாட்டார்கள்.

இதோ கேரளாவில் கூட 2000 வருடமாக வாழ்ந்தார்கள், இஸ்ரேல் உருவாக்கபட்டவுடன் ஓடியே போய்விட்டார்கள், வளர்ந்த நன்றி, சோறுபோட்ட நன்றி எதுவுமே அவர்கள் இனத்திற்கு வராது, சொர்க்கத்தில் இருந்தாலும் எருசலேம் என சொன்னால் உடனே கிளம்புவார்கள்

புரியும்படி சொன்னால் முன்பு பர்மாவில் செட்டியார்கள் செய்ததை அவர்கள் ஐரோப்பாவில் செய்தார்கள், பின்னாளில் செட்டியார்கள் பர்மாவில் பட்டதை இவர்கள் அங்கு அடிக்கடி பட்டார்கள்.

நாடு நாசமாகிறது என ஹிட்லர் கவலையுற, யூதர்கள் பல வங்கிகளை நடத்தினார்கள் அனைத்து பணமும் எங்கு சென்றது என நினைக்கின்றீர்கள். நிலவங்கி என்றொரு புதிய வங்கி தொடங்கி பாலஸ்தீனை கொஞ்சம் கொஞ்சம் வாங்கிகொண்டிருந்தார்கள்.

ஆட்டோமன் துருக்கியர் வீழ்ந்த குழப்பமான பாலஸ்தீனம் அதற்கு வாய்ப்பளித்திருந்தது, ஓஹோ யூதர்கள் குறி இங்கிருக்கின்றதா? இந்த அரசு வீழத்தான் ஐரோப்பாவில் குழப்பமா? என அவனுக்கு பலத்த சிந்தனை வந்தது, அவன் யூதவெறுப்பு இங்குதான் தொடங்கிற்று

அவர்கள் ஜெர்மானியராக வாழ்ந்திருந்தால் ஹிட்லருக்குள் சாத்தான் வந்திருக்க வாய்ப்பே இல்லை, அவர்கள் யூதராகவே இருந்ததுதான் அவனுக்கு அவ்வளவு கோபம்

எங்கள் நாட்டில் சம்பாதித்துவிட்டு எங்கோ போய் கொட்டுகின்றார்கள் என்பது தான் ஹிட்லரின் கோபம், அது வெறுப்பாயிற்று. அதனையே மேடையில் முழங்கினான், மக்கள் அவனை தலைவனாக ஏற்றனர், ஹிட்லர் நாட்டின் தலைவருமானார்.

நிச்சயமாக அவனுக்கு அப்பொழுது யூதரை கொல்லும் திட்டமில்லை, நாடு முக்கியம் நாட்டை பாதுகாக்க ராணுவம் முக்கியம், அதற்கு யூதர்களின் சொத்துக்களை பிடுங்கினால் அது தேசிய சேவை என நினைத்தான்.

ஹிட்லர் எனும் பூதம் இன்றைய சிரியா நிலையிலிருந்த ஜெர்மனியை 7 ஆண்டுகளில் உலக வல்லரசாக்கிற்று. இனி எந்த அதிபரும் எந்த உலகிலும் செய்யமுடியாத சாதனை அது. மாபெரும் ராணுவம், தொழில்நுட்பம், பொருளாதாரம் என உலகின் நம்பர்1 நாடாக ஜெர்மனை மாற்றி காட்டினார் ஹிட்லர், ராட்சத சக்தியாக ஜெர்மனியை மாற்றி காட்டினார், ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்.

அதற்கு அவனின் பொருளாதார அமைச்சர் Horace Greeley பெரும் காரணம், அவர்தான் ஜெர்மனியினை தூக்கி நிறுத்தினான் ஹிட்லரின் தேர்வு அப்படி மிக சரியாக இருந்தது

வல்லரசானதும் தன் ஆட்டம் தொடங்கினார் ஹிட்லர். அதன் பின் இழந்த பகுதிகளை மீட்டார், திடீரென பலம்பெரும் இந்தியா (ஒருவேளை பெற்றால்) காஷ்மீர், கச்சதீவு, கயிலாயமலை என மீட்டால் எப்படி இருக்கும், பாகிஸ்தானை முடக்கி, சீனாவை ஓடவிட்டு, ராஜபக்ஸேயையும் அந்த புத்ததுறவிகளையும் புழல் சிறையில் போட்டால் எப்படி இருக்கும் நமக்கு?, அப்படித்தான் ஜெர்மானியரும் ஹிட்லரை கொண்டாடி கடவுளாக்கினர்.

அப்படியே ஹிட்லர் ஒரு கொசுகடியிலோ அல்லது விபத்திலோ அல்லது உணவு செரிக்கமலோ, பாத்ரூமில் தவறிவிழுந்தோ, ஈவாபிரானோடு காதல் தகறாறில் தற்கொலையோ செய்து செத்திருந்தால் இன்றுவரை அவன் தான் மாபெரும் உலக ஹீரோ, ஆனால் அவன் உள்ளே இருந்த ஜெர்மானிய உணர்வு அவனை ஆட்டுவித்தது.

பிரிட்டனும், பிரான்சும், ஸ்பெயினும், போர்ச்சுகல்லும் ஆளும் உலகை ஜெர்மனும் ஆண்டால் என்ன?

பிரிட்டனை பிடித்தால் இலவசமாக இந்தியா உள்பட 70 நாடுகள்,பிரான்சை பிடித்தால் கூட 40 நாடு இவ்வளவுதான் உலகம், அமெரிக்கா ஒரு கொசு என்று திட்டமிட்டு போலந்திலிருந்து கணக்கை தொடங்கினான்.

ஐரோப்பா உனக்கு, ஆப்ரிக்கா இத்தாலிக்கு , கிழக்காசியா மற்றும் அமெரிக்கா எனக்கு என கூட்டணி சேர்ந்தது ஜப்பான், போர் வெடித்தது

ஆடாமல் ஜெயித்தான் ஹிட்லர், மிரட்டலிலே நாடுகளை பிடித்தான், அவன் பலம் அப்படி இருந்தது

அவன் பிடிக்கும் நாடுகளில் எல்லாம் யூதர்கள் இருந்தனர், விரட்டினால் அடுத்த நாட்டிற்கு ஓடினர், அங்கும் பிடித்து அவர்களை விரட்டும் கடினவேலை ஹிட்லருக்கு. அவர்களின் முகத்தை அல்ல நிழலை கூட பார்க்க அவன் விரும்பவில்லை, அவர்கள் ஜெர்மானிய துரோகிகள்.

இந்த கடும் பிரச்சினையை பற்றி தளபதி ஹிம்லர் மற்றும் இன்னொரு அதிகாரியுடன் ஆலோசித்தான், அதாவது அவ்வப்போது ஐரோப்பியர் யூதர்கள் மேல் தீபாவளி கொண்டாடுவது வாடிக்கைதான், சகலரும் அடித்துவிட்டு ஆட்டோவில் போட்டு யூத இனத்தை ஹிட்லரிடன் அனுப்பியிருக்கின்றார்கள், பீரியாகத்தான் இருக்கிறார் ஹிட்லர் விடுவாரா? எப்படி அடிக்கலாம் என்றுதான் திட்டமிட்டார்

அவர்களை மொத்தமாக கொன்றுவிடலாம் என்றான் அந்த அதிகாரி, ஹிட்லரும் அந்த அளவு மக்களை வெறியேற்றி வைத்திருந்தார், தலையாடிய ஹிட்லர் உத்தரவிட்டார், பொறுப்பு உடனே அந்த இளம் அதிகாரிக்கு கொடுக்கபட்டது, உலகம் இனி நமது, அது யூதரில்லாத உலகமாக உங்கள் காலடியில் வைக்கிறேன் என்று சபதமும் செய்தார் அதிகாரி.

சிறந்த நிர்வாகியான ஹிட்லர் ஒரு லட்சம் யூதரை கொன்றால் உனக்கொரு மெடல் என அறிவித்துவிட்டு அதிகாரமும் கொடுத்தான்.

ஹிட்லர் வாழ்க எனும் மங்கள கீதத்துடன் ஜெர்மனியின் “யூத ஒழிப்புதுறை” செயல்பட ஆரம்பித்தது, சி.இ.ஓ நிச்சயமாக அந்த 35 வயது அதிகாரி.

செங்கிஸ்கான், தைமூர், செவ்விந்திரை அழித்தல் இம்மூன்றிற்கு பின் வரலாறு காணாத படுகொலையை நிகழ்த்தி காட்டினான் அந்த அதிகாரி, அவன் பெற்ற மெடல்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

40 மெடல்கள், அதாவது 40 லட்சம் யூதர்களை கொன்றதற்காக. உண்மை எண்ணிக்கை இன்னும் இருக்கலாம்.

எப்படி எல்லாம் கொல்லமுடியும் என அவன் மிக கொடூரமாக சிந்தித்தான், அந்த விஷயாவு கொட்டகை எல்லாம் இவன் சிந்தனையிலே உதித்ததுதான்.

அவன்தான் அடால்ப் ஈச்மென்.

ஒருவழியாக யுத்தம் முடிந்து ரஷ்யபடைகள் (இதுதான் ரஷ்யா என்றும் நேருக்கு நேர், அமெரிக்கா தொழில்நுட்பம் பின்னால் ஒளிந்துகொள்ளும் ) ஹிட்லரின் முக்கால்வாசி எரிந்த உடலையும்,ஹிம்லரின் முழு உடலையும் கைபற்றியபொழுது ஈச்மென்னை காணவில்லை, யுத்தத்தில் கொல்லபட்டிருக்கலாம் என விட்டுவிட்டார்கள்.

ஹிட்லரை விட ஈச்மேன் தான் பிரதான குற்றவாளி என்பதை ஐரொப்பா உணர்ந்திருந்தது

1948ல் இஸ்ரேல் உருவாக்கபட்டு, மொசாத்தும் தொடங்கபட்டது, முதல்வேலையாக ஈச்மெனை ரகசியமாக‌ தேடினார்கள், அவர்களுக்கு வலுத்த சந்தேகம் இருந்தது. ஹிட்லரும் தப்பித்தான் என்பதும் அவர்கள் வாதம்.

இஸ்ரேல் அறிவிக்கபட்ட மறுநாள் யுத்தம், ஓயாத யுத்தம் அந்த யுத்தம் நடுவிலும் அவர்கள் வெறி ஈச்மென் மேலேயே இருந்தது, குறி வைத்து தேடினார்கள் அவ்வளவு வன்மம்

உலகம் ஈச்மென் செத்துவிட்டதாக நம்பினாலும் யூத இனம் ஹிட்லரும், ஈச்மெனும் சாகவில்லை என்றே சொல்லிகொண்டிருந்தது, அவர்களுக்கு எங்கள் கையால்தான் சாவு என உறுமிகொண்டிருந்தது

உலகம் ஈச்மென் செத்துவிட்டதாக நம்பிகொண்டிருந்தபொழுது ஈச்மென் வளர்ந்த தாடியுடனும் குடும்பத்தாருடனும் இத்தாலி அகதிகள் முகாமில் தங்கி இருந்தான், யுத்த கைதியும் அல்ல அகதி.

அவனுக்கும் அவன் மனைவிக்கும் மட்டுமே அவன் ஈச்மென் என தெரியும், மற்றவர்களுக்கு ஒரு பிச்சைக்கார அகதி, கூலி வேலைக்காரன், இத்தாலியரின் தின கூலியில் வாழ்ந்துகொண்டிருந்தான்.

ஆனால் மொசாத அமைக்கபட்டவுடன் அவனது ராணுவ மூளை உஷாரானது, என்ன இருந்தாலும் ஜெர்மானியன் அல்லவா? யூத மூளை என்னவென்று நன்றாக உணர்ந்தவன், முடிவெடித்தான்

இனி ஐரோப்பா தனக்கு பாதுகாப்பான இடம் அல்ல, தப்ப வேண்டும்

தொடரும்…

 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s