அடால்ப் ஈச்மென் Vs மொசாத் : 02

Image may contain: 1 person

ரிக்கார்டோ கிளமெண்ட் எனும் பெயரில் ஈச்மெனின் பாஸ்போர்ட்

நிச்சயமாக உலகத்தையே நாம் தான் ஆளப்போகின்றோம், அதில் யூதர்களை எந்த நாட்டிற்கு அனுப்புவது?

எல்லாமே நம்நாடு அதனால் அவர்களை உலகத்திலிருந்தே அப்புறபடுத்துவதுதான் சரி என்ற நம்பிக்கையில் கொலைவெறியாட்டம் ஆடிய ஈச்மென் இப்பொழுது அடங்கி கிடந்தார்.

இது அவர் எதிர்பார்க்காத தோல்வி, அதனைவிட எதிர்பாராதது இஸ்ரேல் அமைந்ததும் மொசாத் அமைக்கபட்டதும்

இனி இத்தாலியில் இருப்பது சரியானதல்ல என உணர்ந்த ஈச்மென் தப்பி செல்ல திட்டமிட்டார்.

ஜெனிவாவில் கூடிய நாடுகள்வேறு ஜெர்மன் அகதிகளுக்கு சில சலுகைகளை அறிவித்திருந்தன.

அடையாள ஆவணம் ஒன்றுமில்லாத மக்களுக்கு சம்பத்தபட்ட நாடுகள் அகதி அடையாள பாஸ்போர்ட் வழங்கலாம் என்பதும் ஒன்று.

உலகில் ஹிட்லருக்கு எதிரிகள் அதிகம், நண்பர்களான‌ ஜப்பானும் அணுகுண்டு வாங்கி மல்லாக்க படுத்துவிட்டது.

நேதாஜியின் மர்ம மரணம் உலகிற்கு சொன்னது ஒன்றுதான்.

நேதாஜி விமான விபத்தில் சாகவில்லை, அவரை ஏற்க ஜப்பான் மறுத்திருக்கலாம், நேதாஜி தற்கொலை செய்திருக்கலாம், அன்றைய உலகின் வலுவான வாதம் அது.

இதனால் ஜப்பான் செல்லும் திட்டம் சரி வராது என உணர்ந்தர் ஈச்மென், ஹிட்லரின் கூட்டாளியான முசோலினியும் தெருகம்பத்தில் பிணமாக தொங்கிவிட்டார்.

ஏதோ அகதி அடைக்கலத்தில் இவ்வளவு நாளும் இருந்ததே பெரும் அதிர்ஷ்டம், செல்ல வேண்டும் எங்காவது செல்லவேண்டும்.

அப்பொழுது அவர் மனதில் உதித்த நாடு அர்ஜெண்டினா.

பொதுவாக தென் அமெரிக்க லத்தீன் கிறிஸ்தவ அல்லது கத்தோலிக்க கிறிஸ்துவநாடுகளுக்கும் ஐரோப்பிய மேன்நிலை நாடுகளுக்கும் அதிகம் ஒத்துவராது.

இவை பெரும்பாலும் ஸ்பெயின் காலணிகள்,

பிரிவினை கிறிஸ்தவம், ஆண்டான் அடிமை , ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் மோதல் என பல பிரச்சினைகள் உண்டு.

அப்படியான நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவிற்கு பிரிட்டன், அமெரிக்கா நண்பர்கள் இல்லை.

இன்று வரை அர்ஜெண்டினா அருகிலிருக்கும் தீவிற்கு பிரிட்டன் உரிமை கொண்டாடி சண்டை எல்லாம் போட்டிருக்கின்றது. இன்றும் கூட பிரிட்டன் விட்டுகொடுக்காத தீவு அது.

வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் தெனஅமெரிக்கர்கள் ஐரோப்பாவை பழிவாங்குவார்கள், கால்பந்தில் அது அதிகம் தெரியும். இன்னும் போதைபொருளை விளைவித்து ஐரோப்பாவிற்கு அனுப்பி கடுமையாக பழிவாங்கும் முறையும் உண்டு.

Image may contain: 1 personஎளிதாக சொல்லவேண்டுமென்றால் பிரிட்டனை அடிக்கும் யாரும் அர்ஜெண்டினாவின் நண்பர்கள்.

ஹிட்லர் மீது அவர்களுக்கு அனுதாபம் இருந்தது.

பல நாசி படைவீரர்கள் அங்கு தப்பி சென்றனர் என்பது உண்மை.

ஹிட்லரே அங்கு நீர்மூழ்கியில் தப்பி சென்றார் என்றெல்லாம் கதைகள் உண்டு.

அந்த நாட்டை குறிவைத்தார் ஈச்மென். பரதேசி கோலத்தில் இத்தாலி குடியுரிமை இலாக்காவில் அகதி பாஸ்போர்ட் விண்ணப்பித்தார்.

நாசமாய் போன ஹிட்லரின் இறுதிபோரில் ரஷ்யபடைகள் வீட்டை கொளுத்தியதாகவும் தன்னையும், மனைவி மற்றும் 4 வயது மற்றும் 2 வயது மகன் தவிர சகலமும் எரிந்து விட்டதாக அழுது ஆர்பரித்தார்.

இத்தாலி அப்பொழுது சர்வ சிக்கலில் இருந்தது. முரடன் முசோலினி நாசமாக்கி வைத்திருந்தான்.

அகதிகளில் படித்தவர்கள் அறிவாளிகளை அமெரிக்கா அள்ளிகொண்டு சென்றது. ஆனால் பாமரர்களை இத்தாலியால் சமாளிக்கமுடியவில்லை.

அகதிக்கான பாஸ்போர்ட்டுகளை அள்ளிவிட்டார்கள். இக்காலம் போல தீவிரவாதிகள் அபாயம் இல்லை. எனவே சிக்கல் இல்லை.

ஈச்மெனை அழைத்தார்கள். உங்கள் பெயர் என்ன என கேட்டார்கள், தான் ஒரு இத்தாலி வம்சாவளி ஜெர்மானியன் என சொன்ன ஈச்மென் அட்டகாசமான லத்தீன் பெயரை தனக்கு சூட்டிகொண்டார்.

ஞானஸ்நானம் கொடுக்க அருட்தந்தை இல்லை அவ்வளவுதான். பாஸ்போர்ட் கொடுக்க இத்தாலி இருக்கின்றது போதும்.

அந்த பெயர் “ரிக்கார்டோ கிளமெண்ட்”.

அப்படியே தென் அமெரிக்க கால்பந்து ஆட்டக்காரர் பெயராக இருக்கின்றது அல்லவா?

அவ்வளவு தூரம் செல்லாவிட்டால் குளச்சல் டூ திருச்செந்தூர் கடற்கரை சுற்றி வாருங்கள்.

கத்தோலிக்க மீணவ கிராமங்களில் இந்த ஸ்டைல் பெயர் அத்துப்படி. எல்லாம் லத்தீன் செய்த மாயம்.

தாவரவியலும்,விலங்கியலும் படித்தவர்கள் மனதிற்குள் சபித்து சபித்து படித்த அந்த புரியாத பெயர்கள் எல்லாம் லத்தீன் மூலமே.

ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களின் சமஸ்கிருதம்.

“ஹிட்லர் ஒழிக இத்தாலி வாழ்க” என கோஷமிட்டு ஒரு வழியாக ரிக்கார்டோ கிளமெண்ட் எனும் பெயரில் பாஸ்போர்ட் எடுத்துவிட்டு அர்ஜெண்டினா தூதரகம் சென்றார்.

அங்கு ராகத்தை மாற்றிபாடினார். தான் ஜெர்மன் ராணுவத்தின் கடைநிலை ஊழியர் எனவும், ஹிட்லரை இருமுறை தூரத்தில் இருந்து பார்த்ததாகவும், தான் ஒரு ஜெர்மானியன் என்பதால் ஐரோப்பா தன்னை புறக்கணிப்பதாக அழுதார்.

“இதோ பார்த்தீர்களா வேலைதேடி இத்தாலியில் அலைந்தேன், பாஸ்போர்ட் கொடுத்து எங்காவது போய் தொலை என்கிறார்கள், நான் என்ன செய்வேன் மதர் மேரி சித்தம் இதுவானால் இனி சாவதை தவிர வழி இல்லை. இப்பொழுது கூட புனித பீட்டர் கல்லறையில் செபித்துவிட்டு சாக சென்றேன், வழியில் உங்கள் தூதரகம் தெரிந்தது, உதவுவீர்கள் என நம்புகிறேன்”

ஜெர்மானியன், அதுவும் படைவீரன் எல்லாவற்றிற்கும் மேல் கத்தோலிக்கன், இவருக்கு உதவாமல் நாம் சர்ச் சென்றால், பாவமன்னிப்பு கூட கொடுக்கமாட்டார்கள்.

அவ்வளவுதான் அகதி விசா கிடைத்தது,”ரிக்கார்டோ கிளமெண்ட்” எனும் ஈச்மென் அர்ஜெண்டினா தப்பினார்.

வடக்கு அர்ஜெண்டினாவில் டுகுமென் நகரின் ரோடு போடும் கூலியாக வேலை செய்து, பின்னர் ஒப்பந்தக்காரர் ஆனார்.

கொஞ்சம் பணம் சேர்ந்ததும் குடும்பத்தாரையும் அழைத்து குடும்பம் குட்டிகளோடு வாழ்ந்தார்.

அந்த ஊரின் நிலமை சரியில்லை, போதை, குடி,வம்பு வழக்குகள் அதிகான ஊர் அது.

சில இடங்களில் அவர் தாக்கவும் பட்டார், எப்படி இருந்திருக்கும் அந்த முன்னாள் ஜெனரலுக்கு?

ஆனால் பாஷா படத்தில் ஆனந்தராஜிடம் அடிவாங்கும் ரஜினி போல ரத்தத்தை துடைத்துகொண்டே சிரித்தார்.

“வன்முறை தவறு, சண்டை தப்பு நாமெல்லாம் கிறிஸ்தவர்கள்” என சகலருக்கும் போதித்துவிட்டு அர்ஜெண்டினா தலைநகர் “பியூனஸ் அர்ஸ்” வந்தார்.

ஒரு கார் கம்பெனிக்கு சென்று தொழிலாளியாக இணைந்தார்.

அது உலகின் புகழ்பெற்ற “பென்ஸ்” கார் தொழிற்சாலை, ஜெர்மனின் உலக அடையாளங்களின் ஒன்று. இன்று வரை நம்பர் 1.

ஹிட்லரின் ஆட்சியில் ஈச்மென் கைதட்டினால் ஆயிரம் பென்ஸ்கார்கள் ஓடி வந்து நின்றன.

ஏன் நாளுக்கொரு பென்ஸ் ஈச்மெனுக்கு கிடைத்த காலமும் இருந்தது. கம்பெனி அதிபர்களே ஈச்மென் முன்னால் கைகட்டி நின்றனர்.

அந்த கம்பெனியில்தான் சாதாரண தொழிலாளியாக ஸ்பேனரும் அழுக்கு உடையுமாக , தனது பெரும் பிண்ணனியை மறைத்தபடி வேலை செய்தார் ஈச்மென்.

பேருந்தில்தான் வேலைக்கு செல்வார், நடந்துதான் பஸ்நிலையம் வருவார், அப்படியே அகதி வாழ்க்கையை அற்புதமாக நடித்துகொண்டிருந்தார்கூ. ட இரு பிள்ளைகளும் பிறந்தனர்.

அர்ஜெண்டினா பாஷா பாயாக மிக சமத்தாக தன் அடையாளங்களை மாற்றி ஒரு அகதி தொழிலாளி எப்படி இருப்பானோ அப்படியே மாறிப்போனார் ஈச்மென்.

10 வருடத்தில் உலகம் மாறிற்று. இங்கிலாந்து தன் வல்லரசு முடியினை துறந்தது, அமெரிக்காவும் ரஷ்யாவும் கடும் மோதலில் இருந்தன.  இஸ்ரேல் பெரும் ரவுடியாக உருவெடுத்திருந்தது

இதனை எல்லாம் செய்திதாள்களில் படித்தபடி எல்லாம் மனதினால் சுமந்துகொண்டு வேலைக்கு சென்றுகொண்டிருந்தார் ஈச்மென்.

உலகையே மிரட்டிய ஒரு படையின் இரண்டாம் கட்ட தலைவன் இப்படி மாற முடியுமா?

கட்டளையிட்டே பழகியவன் பிரட்டுக்கும், உருளைகிழங்கிற்கும் பொழுதெல்லாம் உழைக்க முடியுமா?

ஈச்மெனும் எனும் பாஷாபாயினால் முடிந்தது, உலகம் அவனை மறந்தே போனது.

இந்த பரதேசி கோல ரொட்ரிகோதான் அந்த படுபயங்கர ஈச்மென் என அவனையும் அவன் மனைவியினையும் தவிர யாருக்கும் தெரியாது.

இங்கோ மொசாத் 10 வருடமாக ஈச்மென்னை உறங்காமல் தேடியது, பெரும் பணத்தோடு சுவிஸ், பாரீஸ் என தப்பியிருக்கலாம் என அங்கெல்லாம் புது பணக்காரர்களை உளவுபார்த்தது. ஒன்றும் பலனில்லை.

அடி அவர்களுக்கு புதிதல்ல எகிப்தியர், பாரசீகர், நெபுகாத்நேச்சர், அலெக்ஸாண்டர், ரோமர் பின்பு ஐரோப்பாவின் எல்லா நாடுகள் என எல்லா இடத்திலும் அடிபட்ட இனம் தான் யூத இனம்.

எல்லா வல்லரசுகளும் அவர்களை அப்படி போட்டு அடித்திருக்கின்றன, அலறி அடித்து ஓடியிருக்கின்றார்கள் யூதர்கள்

ஆனால் இம்முறை அவர்கள் வைராக்கியம் கூடியிருந்தது. உலகில் எங்கு அடித்தாலும் எருசலேம் நோக்கி ஓடுவோம்.

ஆனால் எருசலேம் வந்தபின் திருப்பி அடிப்போம் என்பதை உலகிற்கு காட்டவேண்டும் என்ற வெறியோடு அலைந்தார்கள்.

அந்த வெறிதான் பெரும் எரிமலைகளை சமாளித்து இன்றும் இஸ்ரேலை அங்கு நிலை நிறுத்தி வைத்திருக்கின்றது.

ஈச்மென் சம்பந்தப்ட்ட பைல் அவர்களிடம் உண்டு. மற்றபடி ஏதும் தெரியாத நிலை.

ஆனால் அவ்வப்போது அவர்களின் உலகாளாவிய ஹீப்ரு மொழி பத்திரிகையிலும், இன்னும் யூதபிண்ணனி கொண்ட பத்திரிகையிலும் ஈச்மென் படத்தை போட்டு “மர்மம்” எனும் செய்தியை வெளிச்சம்போட்டுகொண்டே இருந்தார்கள்.

இது ஓரளவு வேலை செய்தது. உலகின் எல்லா யூதர்களுக்கும் ஈச்மென்னை இஸ்ரேல் தேடுகிறது என்பது புரிந்தது. மற்றவர்களுக்கு அது ஒரு செய்தி அவ்வளவுதான்.

ஈச்மென்னும் மறக்காமல் அதனை படித்துவிட்டு, பேப்பரை மடித்து வைத்துவிட்டு வேலைக்கு செல்வார்.

பாவம் பிள்ளைகுட்டிக்காரர் என சமூகம் சொல்லிகொண்டிருந்தது.

கிட்டதட்ட 10 வருடம் கடந்தது, யாருக்கும் துளியும் சந்தேகமில்லை, மூத்தமகன் 16 வயதை கடந்தான் அவனுக்கு “குளாஸ்” என பெயரிட்டிருந்தார். நல்லபெயர், பொருத்தமான பெயர்.

16 வயதினிலே என்றால் கண்டிப்பாக காதலும் வரவேண்டும், அவனுக்கும் வந்தது, யார்மேல் தெரியுமா? “சில்வியா” எனும் பெண்மேல்.

சில்வியா குறிப்பிடதகுந்த அழகி, சின்னதம்பி குஷ்பூ அளவிற்கு வரமுடியாவிட்டாலும் நல்ல அழகி என்றுதான் குறிப்புகள் சொல்கின்றது

காரணம் அந்த இனமே கொஞ்சம் அழகான இனம் என்பது உலகம் ஒத்துகொண்ட உண்மை.

(என்ன செய்ய தமிழ்படத்தில் எல்லாம் நடிக்கவரமாட்டார்கள், குஷ்பூ இருக்கும்பொழுது அவர்கள் எதற்கு? வந்தால் அவர்கள் அழகு குறைவு என்றாகிவிடும்)

அவளிடம் மனதை மொத்தமாக பறிகொடுத்து ஆர்பாட்டம் செய்ய ஆரம்பித்தான் குளோஸ்.

கிட்டதட்ட “இதற்குத்தான் ஆசைபட்டாய் பாலகுமாரா” விஜய் சேதுபதி போல, சகலமும் சில்வியா.

யாராவது எடுத்து சொன்னால் “சிலிவியா ஹாப்பி அண்ணாச்சி” என்பதை “லத்தீன் ஸ்பானிஷ்” மொழியில் அடிக்கடி சொல்லிகொண்டான்,

சிலிவியா அற்புதமான‌ அழகி, ஆனால் அந்த தாழம்பூவில் ஒரு பூநாகம் ஒளிந்திருந்தது.

அவள் தந்தை ஒரு யூதர். ஒருநாள் குளோசின் தொல்லை தாங்காமல் தந்தையிடம் கண்ணை கசக்கினாள் சில்வியா.

ஆம் யூதர்கள் எல்லா தேசத்திலும் உண்டு, எந்த வேடத்தில் எப்படி இருப்பார்கள் என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் இருப்பார்கள்

அதுவும் கிட்டதட்ட 3 ஆயிரம் நாசிக்கள் அர்ஜெண்டினாவிற்கு தப்பினார்கள்.

அதில் ஹிட்லரும் இருக்கலாம் எனும் செய்திகள் அவர்களை உறங்கவிடவில்லை

அதனால் அர்ஜெண்டினா மீது கூடுதலாக ஒரு கண் வைத்த்தார்கள்.

இந்நிலையில்தான் ஒருவன் என்னை விடாமல் துரத்துகின்றான் என்றொரு யூதரிடம் வந்து நிற்கின்றாள் அவரின் மகளான சில்வியா.

“யாரடா அவன் என் மகளை விடாமல் துரத்துவது? யூதப்பெண்ணை யூதனுக்குத்தான் கொடுப்போம். உங்களுக்கும் எங்களுக்கும் பொருந்தாது.

இஸ்ரேல் வேறு அமைந்தாயிற்று, நாங்கள் அங்கு சென்றாலும் சென்றுவிடுவோம்

நீ வேறு அர்ஜெண்டினா அழகியினை தேடிகொள் என அவனுக்கு போதித்துவிட்டு வரலாம் என சிந்தித்தார் சில்வியாவின் தந்தை.

 

தொடரும்…

 
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s