கமலஹாசனுக்கு ஆதரவு பெருகுகின்றது

கமலஹாசன் அவர் சார்ந்த துறையினை முதலில் கவனிக்கட்டும் : தமிழிசை

ஏதோ தமிழிசையினை கமலஹாசனின் அடுத்தபடத்தில் ஹீரோயினாக நடிக்க அழைத்ததுபோல் அம்மணி அலுத்துகொள்கின்றார்.

ஏம்மா தமிழிசை, இந்த ரஜினி என்றால் மட்டும் வரவேற்போம் என்கின்றீர்கள், கமல் என்றால் மட்டும் அவர் வேலையினை பார்க்கட்டும் என்கின்றீர்கள். ஏன் இந்த பாகுபாடு?

ரஜினி பிரச்சினையில்லை, ஆனால் கமல் மோடியினை விட சிறப்பாக நடித்துவிடுவார் என்ற பயமா?


கமல் எதாவுது விளம்பரம் தேடுவதற்காக எங்களைப் பற்றி குறை சொல்லலாம்: செல்லூர் ராஜூ

விளம்பரம் தான் தேவையென்றால் அவர் தெர்மாக்கோலோடு அணை மூட செல்லமாட்டாரா? அல்லது மினரல்வாட்டர் கேன்களின் நீரை ஊற்றி செம்பரம்பாக்கம் ஏரியினை நிரப்ப செல்லமாட்டாரா?

அதாவது விளம்பரம் வேண்டுமென்றால் மேற்சொன்ன உங்கள் ஏரியாவில் புகுந்திருப்பார், அவர் அப்படி செய்யவில்லை என்பதால் அவருக்கு விளம்பர ஆசையில்லை என தமிழகம் முடிவுசெய்திருக்கின்றது


அவர்கள் எல்லாம் சேர்ந்துதான் ஜெயாவினை முதல்வர் என்று கவர்னரிடம் வாக்களித்தார்கள், ஜெயாவின் கதை முடிந்தது

பின் பன்னீர்செல்வம் முதல்வர் என ஆதரவளித்தார்கள், அன்னாரும் காலி

சசிகலாவிற்கு ஆதரவு என கூவத்தூர் ரிசார்ட்டில் சொன்னார்கள், சசிகலாவும் உள்ளே போனார், ரிசார்ட்டும் மூடபட்டது

அதன் பின் தினகரனுக்கு ஆதரவு என்றார்கள், அவர் திகாருக்கே சென்றார்

பின் எடப்பாடிக்கு கானம் பாடினார்கள், அதுவும் நிரந்தரமில்லை, தமிழிசை எல்லாம் எடப்பாடி ஆட்சியினை கலைக்கமாட்டோம் என்றேல்லாம் கலாய்க்கின்றது

இப்படிபட்ட கைராசி உள்ளவர்கள் இன்று குடியரசு தலைவர் பதவிக்கு ராம்நாத் கோவிந்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்களாம்

கோவிந்த் எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது, இவர்கள் ராசி அப்படி


கமலை மிரட்டும் அமைச்சர்களை முதல்வர் வேடிக்கை பார்ப்பது அடாவடி செயல்: மு.க.ஸ்டாலின்

கமலஹாசனுக்கு ஆதரவு பெருகுகின்றது, முக ஸ்டாலின் அவருக்கு ஆதரவாய் வந்திருப்பது நல்ல விஷயம்

தன் கட்சி தலைவி குற்றவாளி என்றும், பொது செயலாளர் சிறையில் இருக்கும்பொழுதும், அரசு மீது எண்ணற்ற புகார் குவியும் பொழுதும் , அதாவது முழுக்க நனைந்தபின்னும் முக்காடு போட துடிக்கும் அந்த அமைச்சர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.

இந்திய வரலாற்றிலே பணம் கொடுத்ததற்காக தேர்தல் நிறுத்தம் இவர்களால்தான் நடைபெற்றது, கண்டெய்னர் முழுக்க பணங்கள் இவர்கள் ஆட்சியில்தான் நடமாடியது, இதெல்லாம் யாருக்கு தெரியாது?

கமலஹாசன் பணத்திற்கு நிகழ்ச்சி நடத்துகின்றாராம், சொல்வது யார் தெரியுமா? பணத்திற்காக அரசே நடத்தும் அதிமுக அமைச்சர்கள்

சம்பளம் இல்லை, சலுகை இல்லை , அதிகாரமில்லை சம்பாதிக்க வழியே இல்லை எனும்பொழுது அதிமுகவில் ஒரு ஈ காக்கா இருக்கும்?

இலை கூட இருக்காது

ஆக சம்பாதிக்க அரசியல் இருந்துகொண்டு, கமலைபார்த்து நீ நிகழ்ச்சியில் சம்பாதிக்கின்றாய் என இந்த அமைச்சர்கள் சொல்வதுதான் இந்த நூற்றாண்டின் மிக பெரும் தமிழக காமெடி

முக ஸ்டாலினின் ஆதரவு குரல் வரவேற்க தக்கது, இப்படி செயல்படும் தலைவராக அவர் இருப்பது நன்றாகத்தான் இருக்கின்றது


ஜெயா இருந்தபொழுது கமல் எங்கே போனார் : தமிழிசை

அம்மணி, இந்திரா மிசா என எல்லோரையும் போட்டு சாத்தியபொழுது உங்கள் தந்தை எங்கிருந்தார் என கேட்டு சொல்கின்றீர்களா?

கமலை விடுங்கள், நீங்கள் அப்பொழுது எங்கிருந்தீர்கள் அம்மணி?

அவர் இருக்கும்பொழுது என்றாவது ஜெயா முன்னால் அமர்ந்து விரைவில் காவி கொடி கோட்டையில் பறக்கும், அதிமுக ஆட்சியினை கலைக்கமாட்டோம் என்றெல்லாம் சொன்னீர்களா?

 


 

 நடிகர் சரத்குமாரை வளைத்துப் போடுவதில் பாஜக படுமும்முரம் – செய்திஏற்கனவே ராதிகா வளைத்துபோட்டுவிட்டு படும்பாடு போதாதா?

முன்பு பாஜகவினர் சரத்தை ஒருமுறை வளைத்தார்கள், 10 நிமிடத்தில் ஜெயாகாலில் வந்து விழுந்தார், இப்பொழுது ஜெயா இல்லை அதனால் வளையாவிட்டால் ஒரேடியாக ஒடித்தே விடுவோம் என சொல்வார்களாக இருக்கலாம்


 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s