கமலுக்கு ஆதரவாக குஷ்பூவின் குரல்

Image may contain: 1 person, smiling, close-upகமலஹாசனை அரசு வம்புக்கு இழுக்கின்றது, எந்த நடிகனும் சத்தமே இல்லை, முன்னாள் எதிர்கட்சி தலைவரான விஜயகாந்தின் “சேரை தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க” “த்த்தூ” போன்ற முத்திரைகளையும் காணவில்லை

கமலுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் குரல் வரும் நிலையில் சினிமாக்காரர்கள் குரல் வரவில்லை, வரவும் வராது

ஆனால் ஒரே ஒரு குரல் மிக தைரியமாக ஒலிக்கும், விரைவில் ஒலிக்கும்

அது குஷ்பூவின் குரல் என்று சொல்ல தேவையில்லை, அவரை தவிர அவ்வளவு தைரியம் யாருக்கும் சாத்தியமில்லை

Iron Lady or Lion Lady Where Are You?, Come On Madam.

 

கமலஹாசனுக்கு அரசியலுக்கு வர தைரியமில்லை : ஜெயக்குமார்

ஜெயாவின் கால் செருப்பில் தூசி இருக்கின்றதா என தொட்டு பார்ப்பதும், ஜெயா கார் டயரின் பட்டம் சரியாக இருக்கின்றதா என குனிந்து கிடந்து சோதிப்பதும் தைரியமென்றால்

ஜெயா நடக்கும்பொழுது என் முதுகில் ஏன் மிதிக்காமல் போகின்றீர்கள் என கேட்பதும், அவர் குற்றவாளி என கோர்ட் சொன்னாலும் அந்த குற்றவாளிக்காக மண்சோறு உண்ணுதல், சாலையில் மண் அள்ளிபோட்டு அகதளம் செய்தல் என காட்டெருமை புத்தியோடு நடப்பதுதான் தைரியம் என்றால்…

ஜெயாவிற்கு அடுத்து இன்னொரு குற்றவாளியினை சின்னம்மா , தியாகமே என கூசாமல் குனிந்தி நிற்பது தைரியமென்றால், அந்த சின்னம்மாவின் அக்கா பெற்ற மகனுக்கும் அடிபணிந்து நிற்பது தைரியமென்றால்..

அட இந்த தைரியத்தையும் சோதிக்க டெல்லி முறைத்தவுடன் சின்னம்மா, சித்தப்பா என எல்லோரையும் விட்டுவிட்டு டெல்லி காலில் விழுந்து கிடப்பது தைரியமென்றால்…

அந்த தைரியம் கமலஹாசனுக்கு இல்லாமலே போகட்டும்

மிஸ்டர் ஜெயக்குமார், ஒருவேளை கமலஹாசன் அரசியலுக்கு வந்தால் நான் தான் கமலஹாசன் எனும் அடையாளம் அவருக்கு போதும்

உங்கள் நிலை என்ன?

100 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ராமசந்திரனையும், 60 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஜெயலலிதாவினையும் விட்டால் உங்கள் அடையாளமென்ன?

தைரியமாக அந்த அடையாளங்களை தூக்கி எறிந்துவிட்டு, நான் ஜெயக்குமார் என அரசியலுக்கு வர உங்களுக்கு தைரியம் உண்டா?

இந்த லட்சணத்தில் கமலுக்கு தைரியமில்லை என சொல்ல உங்களுக்கு எவ்வளவு தைரியம்???

எது எப்படியோ, சிரிக்காமல் சீரியசாக காமெடி செய்ய அதிமுகவினரை விட்டால் யாருமே இல்லை


Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s