டிவிட்டரில் இருந்து விலகினார் குஷ்பூ

Image may contain: 1 person, smiling, close-up

டிவிட்டரில் இருந்து விலகினார் குஷ்பூ

என்ன சொல்லிவிட்டு விடைபெற்றிருக்கின்றார் என்றால் , டிவிட்டர் அவரின் நேரத்தை விழுங்குகின்றதாம், அவர் வாசிப்பில் கவனம் செலுத்தபோகின்றாராம், இது தற்காலிகம் என சொல்லியிருக்கின்றார்

அவர் இப்படி சொல்லியிருந்தாலும் கடந்த இரு நாட்களாக சுருதிஹாசனை போட்டு காய்ச்சிகொண்டிருந்தார், சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய காரணத்தை தவறாக ஸ்ருதி சொல்லிகொண்டிருக்க, குஷ்பூவிற்கு கோபம் வந்துவிட்டது, விளாசிவிட்டார்

ஸ்ருதியும் என்னமோ சொல்லிகொண்டிருக்கின்றார்

பதிலுக்கு பதில் பேசவேண்டியிருக்கும் என்பதால் கொஞ்ச நாளைக்கு அமைதியாக இருக்க வெளியேறியிருக்கலாம் என ரசிக பெருமக்கள் யூகிக்கின்றோம்

அவர் ஏன் விலக வேண்டும் என்பதுதான் கேள்வி?,

கண்மணிகளே இந்த ஸ்ருதியினை கவனியுங்கள் என கண்ணசைவினை காட்டியிருந்தால் கட்டப்பா போல குஷ்பூ ரசிகபடை பாய்ந்திருக்கும், ஸ்ருதி பசிபிக் கடலுக்கு அப்பால் எறியபட்டிருப்பார்

குஷ்பூ பெருந்தன்மையாக அமைதியாவதால் பெரும் கலவரம் தடுக்கபட்டிருக்கின்றது, ஏற்கனவே பெரும் சிக்கலில் இருக்கும் கமலஹாசனுக்கு இன்னும் பிரச்சினையினை கொடுக்க குஷ்பூ விரும்பவில்லை என்பது தெரிகின்றது

மேன்மக்கள் என்றும் மேன்மக்கள் அல்லவா? குஷ்பூ அப்படித்தான்.

டிவிட்டரும் அவர் நேரத்தை விழுங்கலாம், வெட்டியாக அதில் சும்மா ஏதாவது சொல்லிகொண்டிருக்க அவர் என்ன மோடியா அல்லது டிரம்பா?

இனி நிறைய வாசிக்க போகின்றாராம் தலைவி, நல்லது அப்படியே அந்தணன் அவர்களின் இணைய பத்திரிகையினையும் வாசிக்கட்டும்.

எப்பொழுதாவது தேர் ஊர்வலம் வந்தால்தான் திருவிழா, குஷ்பூ அப்படி வருடத்திற்கு ஒருமுறை டிவிட்டர் வந்தால் போதாதா?

அவருக்கான ரசிகர் கூட்டம் எங்கு சென்றுவிட போகின்றது? அந்த பெருங்கூட்டம் அவருக்காக‌ காத்துகொண்டே தான் இருக்கும்.

நல்ல வேளையாக தமிழிசையுடன் டிவிட்டர் யுத்தம் நடக்கும் பொழுது குஷ்பூ இந்த முடிவினை எடுக்க முடியவிலை, அப்படி எடுத்திருந்தால் தமிழிசையின் தகிட தகிடவினை யாரால் தாங்கியிருக்க முடியும்?

அப்படி ஒரு வாய்ப்பினை கொடுக்காமல் இப்பொழுது தற்காலிகமாக விலகியிருப்பது நல்லது.

இனி டிவிட்டருக்குத்தான் சோதனையான காலம், பல லட்சம் பேர் குஷ்பூ இல்லாத டிவிட்டரை விட்டு வெளியேறுவார்கள்

 
 

இன்று கவிஞர் வாலியின் நினைவுநாள்

Image may contain: one or more people, people sitting and beard

வாலி தமிழக கவிஞர்களில் மறக்கமுடியாதவர், தவிர்க்க முடியாதவர்

ஓவியர், அறிவிப்பாளர் என அவருக்கு பல அவதாரம் இருந்தாலும் கவிஞர் வாலியாக அவர் ராமாயண வாலிபோலவே பலமாக இருந்தார்

திருவரங்கத்து இயல்பான அறிவு சுஜாதா போலவே இவருக்கும் அமைந்திருந்தது, சும்மா சொல்லகூடாது அபாரமான ஆற்றல் கொண்டவர்கள் எல்லாம் அங்கிருந்து உதித்திருக்கின்றார்கள், ரங்கராஜன் என்ற வாலியும் அந்த ரகம்

நல்ல தமிழறிவு, அபார சொல்வளைவு என இருந்த வாலி பல தொழில்களில் இருந்துவிட்டுத்தான் கவி எழுதவந்தார், அவர் வந்த காலம் போட்டிமிக்கது

உடுமலை நாராயணகவி, பெரும் கவிஞன் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம், கவியரசர் கண்ணதாசன் என பெரும் ஜாம்பவான்கள் இருந்தகாலத்தில் நுழையமுயன்றார்

அக்காலம் அவருக்கு கைகூடவில்லை, மெதுவாகத்தான் நுழைந்தார், 1958ல் அவர் நுழைந்திருந்தாலும் 1963ல்தான் அவருக்கான அடையாளம் கிடைத்தது, கற்பகம் படத்தில் அற்புதமாக எழுதியிருந்தார்

அதன் பின்னும் போராடினார், நிச்சயமாக வாலி அபார திறமைக்காரர், ஆனால் கண்ணதாசனில் செங்கோல் ஆட்சிமுன் அவரால் பெயரிட முடியவில்லை, கண்ணதாசனின் வீச்சு அப்படி இருந்தது

அவர் காலத்திலே ஓரமாக படகோட்டி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை நிலைபடுத்தியவர் வாலி, கண்ணதாசனோடு போட்டிபோட்டு வளர்வது சாதாரணம் அல்ல, வாலி அதனை செய்தார்

ஒரு கட்டத்தில் கண்ணதாசனுக்கு ஈடாக எழுதிவந்தார், எது வாலிபாடல் எது கண்ணதாசன் பாடல் என தெரியாத அளவிற்கு தமிழகம் திணறியது

அற்புதமான பாடல்களை கொடுத்த அவரை மறக்க முடியாது, கிட்டதட்ட 15 ஆயிரம் பாடல்களை எழுதினார், இனி எந்த கவிஞனும் தொடமுடியா உயரம் அது

கடவுள் முதல் கல்லறை வரை அத்தனையினையும் வித்தியாசமான அழகு தமிழில் மிக சுருக்கமாக எழுதியதுதான் அவரின் ஆற்றல்

கிட்டதட்ட 5 தலைமுறை நடிகர்களுக்கு எழுதினார் என்றால் எவ்வளவு நீண்ட ஓட்டம்? எம்ஜிஆர் காலம் முதல் சிவகார்த்திகேயன் காலம் வரை எழுதிகொண்டே இருப்பது என்பது எவ்வளவு பெரும் சாதனை?

கலைஞரை போன்ற நீண்டகால தமிழ் உலக சாதனையாளர் ஒருவர் உண்டென்றால் வாலியினை தவிர யாரையும் காட்டமுடியாது

கலைஞரின் ஆற்றல் எல்லா திசைகளிலும் பயணித்தது, அரசியலுக்கு சென்று பின் ராமசந்திரனால் பாதிக்கபட்டு அவரின் முழு ஆற்றலும் பயன்பட்டதாக சொல்லமுடியாது, கலைஞரிடம் நாம் கண்டது அவரின் ஆற்றலின் ஒரு பகுதி

மீதி எல்லாம் பலவகையான எதிர்ப்பிலே கழிந்தது

கண்ணதாசனுக்கு ஆயுளும் குறைவு, அவருக்கே உரித்தான குணங்களால் அவர் எழுதியதும் குறைவே, நா.முத்துகுமாருக்கும் அவருக்கும் தமிழ்திரையுலகில் ஒரே ராசி

பட்டுகோட்டைக்கு ஆயுள் இல்லை, மிக குறுகிய காலத்தில் உச்சம் தொட்டவர் அவர்

தமிழுலகம் இரு ஜாம்பவான்களை ஆயுள் முழுக்க பயன்படுத்தியது என்றால் போராட்ட வாழ்வில் பெரியாரும், தமிழ்பாடல் உலகில் வாலியும்

அந்த இரு தாடிகளுமே தங்கள் முழு உழைப்பினையும் சமூகத்திற்கு கொடுக்கும் வாய்ப்பினை பெற்றவர்கள்

வாலிபற்றி பேசினால் பேசிகொண்டே இருக்கலாம், அப்படிபட்ட கவிஞர் அவர். அவர் எழுதிய 13 புத்தகங்களும் அப்படி மிக மிக ரசனையானவை

பாடல்களில் எத்தனை தலைமுறைக்கு எழுதினாலும் ஒரு தலைமுறைக்கு எழுதிய பாதிப்பு அடுத்த தலைமுறைக்கு வராது

எம்ஜிஆர் காலத்தில் கடலோரம் வாங்கிய காற்று என்றும் உலகம் அழகு கலைகளின் சுரங்கம் என்றும், படகோட்டி படத்தில் தரைமேல் பிறக்க வைத்தான் என்றும் பாடிய வாலி பின்பு கடலுக்கு பிஷ் நெட்டு, காதலுக்கு இன்டர்நெட்டு எனவும் பாட தயங்கவில்லை

கண்ணதாசன் தன் காலத்தில் “பசுமை நிறைந்த நினைவுகளே” என கொடுத்தால் வாலியால் பிற்காலத்தில் முஸ்தபா முஸ்தபா கொடுக்க முடிந்தது.

எல்லா தலைமுறை ரசிபப்தை தானும் ரசித்தாலொழிய இவையெல்லாம் சாத்தியமில்லை, அதனால்தான் திருலோக சுந்தர் முதல் பாலசந்தர், ஷங்கர் வரை அவரால் ஒட்டமுடிந்தது

சமைஞ்சது எப்படி போன்ற பாடல்கள் சர்ச்சையாகும் பொழுது, மேடைகளி அருமையான கவிமழை பொழியும் நீங்கள் இப்படி எழுதலாமா என கேட்டபொழுது சொன்னார்

“அங்கு நான் தமிழை தாலாட்டும் தாய்
சினிமாவில் எலும்புக்கு வாலாட்டும் நாய்”

இதனை விட சினிமா கவிஞனின் வாழ்க்கையினை சொல்லமுடியாது.

கண்ணதாசனும் வாலியும், வாலியும் கலைஞரும் பங்குபெற்ற மேடைகள் எல்லாம் தமிழின் பொற்காலங்கள்.

வாலி பெரும் காவியம், எழுதி முடிக்க முடியாத புகழ் அவருடையது

இப்பொழுது வரும் ஏக்கம் ஒன்றுதான்

கண்ணனை பற்றி கண்ணதாசனின் பாடல்கள் அற்புதம் என்றால் வாலியின் முகுந்தா முகுந்தா போன்ற பாடல்கள் அழியா வரம் பெற்றவை.

கண்ணனுக்கு பாரதிக்கு பின் அற்புதமான பாடல்களை கொடுத்தவர் கண்ணதாசன், அதற்குபின் நிச்சயம் வாலி

இனியார் அந்த இடத்தை நிரப்புவார்களோ தெரியாது, கிருஷ்ணனே வழிகாட்டட்டும்

தன்னைபற்றி வாலிஎழுதவில்லை என்பார்கள், தசதவாரம் பாடலில் ஒருவரியில் மிக அழகாக சொல்வார், அதில் தன்னையும் சொல்வார்

“நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்”

அதே தான், கவிஞர்களின் அவர் ராஜகவிஞன், ராஜராஜ கவிஞன், சந்தேகமே இல்லை

இன்று அவரின் நினைவுநாள்

குஷ்பூ பற்றி எத்தனையோ பாடல்களை எழுதினார், அவற்றில் எல்லாம் குஷ்பூவினை வாழ்த்தியிருந்தார்,

“ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆனிமுத்தே” எனும் வரிகள் குஷ்பூவிற்கானது,

இது போல ஏராளமான வரிகளை குஷ்பூவிற்கு கொடுத்திருந்தார், உச்சமாக அவர் திமுகவில் இணையும் பொழுது சொல்லியிருந்ததில்தான் வாலி விளையாடியிருந்தார்

“பூ ஒன்று ‘ப்பூ’ இவ்வளவுதானா என்று
இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது. 
ஆரிய வெளிச்சம் அலர்த்தாத பூவுக்கு 
உதயசூரிய வெளிச்சம்
சோபிதம் தந்திருக்கிறது. 
அப்பூ… எப்பூ..குஷ்பூ “

என சொன்னவரிகளுக்காக என்றுமே அவர் நம் சங்கத்தால் நன்றியோடு நினைவு கூறபடுவார், குஷ்பூ திமுகவிலிருந்து சென்றிருக்க கூடாது என்பது வருத்தமான விஷயம்

கலைஞரை நிரம்ப நேசித்தவர் வாலி, ஒரு இடத்தில் சொன்னார், கலைஞரின் 60ம் ஆண்டுவிழாவிற்கு , வைரவிழாவிற்கு அன்றே வாலி சொன்ன வரிகள் இவை

“முதல் முதல்
தேர்தல் குளத்தில்
குளிக்க நீ தொடங்கிய ஊர்தான்
குளித்தலை

குளித்தலைக்கு பிறகு
இதுவரை .. ..
குனியா தலை
உன் தலை”

வாலியினை தவிர யார் இப்படி சொல்லமுடியும்?, இன்னும் சொன்னார்

“அய்யனே
நீ தமிழகத்தின் கிழக்கு !
உனக்கு என்றும் இல்லை மேற்கு.
நீ வடக்கு வழிபடும் தெற்கு”

‘மு.க,,மு.க’ என்று.
பிறகு தான் எனக்குப்
புரிந்தது-நீ
முத்தமிழர் மூச்சுவாங்கும்
மூக்காயிருக்கிறாய் என்று”

இந்த வாலியின் வரிகளோடு இப்பொழுது ஓய்வில் இருக்கும் கலைஞரை நோக்கினால் அதே வாலியின் குரல்கள் மறுபடியும் இப்படியாய் நினைவுக்கு வருகின்றன,

“ஞான ஞாயிறே!
உனக்குஉண்டு சுத்தமனம்;
உனக்குஉண்டு ஒத்தமனம்;
உனக்குஉண்டு யுத்தமனம்;
உனக்குஇல்லை அத்தமனம்”

இம்முறை கைதட்ட மனம் வரவில்லை, கண்ணீர்தான் வருகின்றது

வாலிக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.

 
 

ஈச்மென் மொசாத் :03

No automatic alt text available.சில்வியாவின் தந்தை லோதர் ஹெர்மன்.

அவரும் ஒரு ஐரோப்பிய யூதர். ஹிட்லர் சோம்பல் முறித்து எழும்பி யூதர்களை பார்த்து கண்களை உருட்டும்பொழுதே ஐரோப்பாவை விட்டு வெளியேறியவர்.

அதாவது ஒரு நாசி கும்பலால் தாக்கபட்டு பிழைத்தவர். மொத்த ஐரோப்பவும் ஹிட்லருக்கு என பலர் அஞ்சி வேறு கண்டக்களுக்கே தப்பிய காலம், பெரும்பான்மையனவர்கள் யூதர்கள்.

பொறுமையாக மகளிடம் விசாரித்தார், அவன் பெயர் என்ன? அவள் சொன்னாள் “குளோஸ் ஈச்மென்”.

சரி அந்த சனியனை பெற்ற பெரிய சனியன் பெயர் என்ன?

என்றதற்கு சில்வியாவின் பதில் “அவர் பெயர் ரிக்கார்டோ கிளமெண்ட்”.

ஹெர்மன் மூளையில் ஒரு கணம் மின்னல் வெட்டியது.

அப்பன் பெயர் “ரிக்கார்டோ கிளமெண்ட்” மகன் பெயர் “குளோஸ் ஈச்மென்”.

எங்கோ இடித்தது அவருக்கு, குடும்பபெயர் இப்படி இருக்காதே, ஒருவேளை தத்துபிள்ளையோ? என்றெல்லாம் யோசித்து சொன்னார்.

“சரி வீட்டுக்கு அழைத்து வா, விசாரிப்போம்”.

Image may contain: 1 personஇதுதான் ஈச்மென் செய்த பெரும் தவறு, மகன்களின் அடையாளத்தை மாற்ற தவறிவிட்டார்.

இங்குதான் அவர் தலைவிதி பல்லைகாட்டியது அல்லது செய்த மொத்தபாவத்தில் பாதி மகனாகவும் மீதி சில்வியாகவும் பிறந்திருந்தது.

பள்ளிக்கு சென்றுவிட்டு வந்துகொண்டிருந்த சில்வியா பின்னால் வழக்கம்போல மவுனராகம் கார்த்திக்காய் “ஏய்..என்னோடு கா..பி ஷாப்..ட வா..ரியா” என பின்னால் வந்த குளோசிடம் புன்னகை சிந்தினாள் சில்வியா.

அவ்வளவுதான் இருவருக்கும் முன்னால் காப்பி இருந்தது, அது யாருக்கு வேண்டும்?

உன்னை பற்றி சொல் என்றாள். காதலிக்கும் பெண் கேட்டால் டிராக்டர் ஓட்டுபவன் பென்ஸ்கார் என்பான், விமான நிலைய ஊழியர் பைலட் என்பான் அல்லவா? குளோசும் அள்ளிவிட்டான்

நாங்கள் ஜெர்மானியர், எனக்கு 2 வயதாக இருக்கும்பொழுது ஹிட்லர் எனக்கு நெற்றியில் ஸ்வாஸ்திக் அடையாளமிட்டு ஆசீர்வதித்தார்.

எங்கப்பா ஜெரிமனியை ஆட்டுவித்தார், நாங்கள் எல்லாம் பிரபு குடும்பம். ஏதோ யுத்த தோல்வியால் இப்படி ஆகிவிட்டோம் என அள்ளி வீசினான்.

ண்மையில் அவனுக்கு ஒரு புண்ணாக்கும் தெரியாது, கண்ணின் கடைவிழி காதலியர் காட்டிவிட்டால் பொங்கி வரும் ஆனந்தத்தில் அப்படி சொல்லிகொண்டிருந்தான்.Image may contain: 1 person, sitting and child

ஆனால் அந்த காதல்பேய் பிடித்து அவன் சொன்னதெல்லாம் உண்மை என்பது அவனுக்கும் தெரியாது, சில்வியாவிற்கும் தெரியாது.

பொறுமையாக கேட்ட சில்வியா ஒரு ரதி புன்னகையோடு சொன்னாள், நாளை என் வீட்டுக்கு வா, என் தந்தை உன்னை பார்க்கவேண்டுமாம்.

குளோஸ் அதோடு கனவில் விழுந்தான்.

“சில்வியா.சில்வியா..ஐ லவ் யூ சொல்வியா” என உலகம் சுற்றி அவளோடு டூயட்பாடினான்.

விடிந்தது .. பக்கா அலங்காரம் செய்து கொண்டு சில்வியா வீட்டை அடைந்தான்.

ஏற்கனவே காப்பிகோப்பையின் அளவு, விலை, குளோசின் உளரல் என சகலத்தையும் ஒப்பித்திருந்தாள் சில்வியா.

குளோசை வரவேற்ற ஹெர்மன் விசாரித்தார், தனக்கு மூன்று தம்பிகள் அவர்கள் எக்ஸ் ஈச்மென், ஒய் ஈச்மென், இசட் ஈச்மென் என ஒப்பித்தான் குளோஸ்.

ஹெர்மனின் சந்தேகம் வலுத்தது.

சரி நீ போ, நான் உன் தந்தை வீட்டுக்கு வந்து அவரிடம் பேசுகிறேன் என சொல்லி அனுப்பிவிட்டு, ஈச்மென் சம்பந்தபட்ட சகல பத்திரிகை செய்திகளையும் மறுபடியும் படித்தார்.

மறுநாள் ஈச்மென் வீட்டிற்கு சென்றார்.

சம்பந்தம் பேச வந்திருக்கிறார் என குளோஸ் மகிழ்வோடு கதவை திறந்தான்.

50 வயது ஈச்மெனும் லோதரை வரவேற்றார்,

வந்திருப்பது தன் தூக்கு கயிறு என அப்போதைக்கு ஈச்மெனுக்கு தெரியவில்லை

தான் ஒரு யூதன் என்பதை காட்டிகொள்ளாத ஹெர்மன் சகஜமாக பேசிவிட்டு, திடீரென கேட்டார்,

“உங்கள் பையன் சொன்னார், மிஸ்டர் ரிக்கார்டோ நீங்கள் நாஜிபடை வீரரா? சம்பந்தம் செய்யும் அளவிற்கு வந்துவிட்டோம், குடும்பரகசியம் இனி நமக்குள்தானே, சொல்லுங்கள் ரிக்கார்டோ”.

ஈச்மெனின் முகத்தில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது (பிண்ணணி இசை போட தேவா இல்லை).

ஆனால் சட்டென மறைத்து சொன்னார்.

“அன்று ஹிட்லருக்கு பின்னால் செல்லவில்லை என்றால் உயிர்போகும், ஜெர்மனியில் வசிக்க முடியாது, அவர் பின்னால் சென்றவர் எல்லாம் நாசிக்கள் அவ்வளவுதான் என்ன செய்ய விதி. நான் யுத்தம் தொடங்கியவுடன் அதிலிருந்தெல்லாம் விலகிவிட்டேன்.

இன்று அமைதியாக இங்கு வசிக்கின்றேன், சர்வம் கிறிஸ்துவுக்கு அர்ப்பணம். கிறிஸ்துவின் சமாதானம் உங்களோடும் என்னோடும் அர்ஜெண்டினாவோடும் இருப்பதாக.  அது இருக்கட்டும் இப்பொழுது நானும் நீரும் அர்ஜெண்டிக்காரர்கள் அவ்வளவுதான்” என்றார்  உருக்கமாக.

அன்று அர்ஜெண்டினா முழுக்க பல நாசிக்கள் இருந்தார்கள் இது ஒரு பிரச்சினையே அல்ல என்பது ஈச்மெனுக்கு தெரியும். அதனால்தான் தைரியமாக சொன்னார்.

இருவரும் 30 நிமிடம் பேசினார்கள், ஈச்மெனின் உருவ அமைப்பை நன்கு ஆராய்ந்த லோதர் சொன்னார்.

நான் சர்ச்சிக்கு செல்லவேண்டும், இவர்கள் பழகட்டும் 3 வருடம் கழித்து திருமணம் வைக்கலாம் எனக்கு சம்மதம் என சொல்லிவிட்டு குளோசின் கையை குலுக்கிவிட்டு சென்றார்.

கைகுலுக்கி சென்றவர் சர்ச்சிக்கா சென்றார் இல்லவே இல்லை, எல்லா நாட்டு தூதரகங்களிலும் குறைந்தது 3 உளவு அதிகாரிகளாவது இருப்பர்.

இது தான் உலக நடைமுறை. அவர் இஸ்ரேலுக்கு நெருக்கமான நாட்டின் தூதரகத்தில் போட்டு கொடுத்துவிட்டார்.

” இந்த முகவரியில் ஒருவர் இருக்கின்றார், அவர் மேல் சந்தேகமாக இருக்கின்றது இஸ்ரேலுக்கு சொல்லிவிடுங்கள்”,

சொல்லிவிட்டு மனதிற்குள் சொல்லிகொண்டார், “நான் தனியாள் அல்ல, 60 லட்சம் யூதரின் ஆன்மா”

தகவல் கிடைத்ததும் மொசாத் அவசர கூட்டம் கூட்டபட்டு விவாதிக்கபட்டது,”அவன் எனக்கு வேணும் உயிரோட வேணும்” என்றார் பிரதமர் பென்குரியன்.

சுட்டுகொல்வது மொசாத்திற்கு டீ குடிப்பது போல, ஆனால் உயிரோடு கடத்தவேண்டும், என்பதால் யோசித்தார்கள்.

அப்படியானால் ஒரு அதிரடியான “கேப்டன்” வேண்டும் என தேடினார்கள்.

ஷின்பெட் (இஸ்ரேல் உள்நாட்டு பாதுகாப்புதுறை) ஹீரோ ஒருவர் கண்டுபிடிக்கபட்டார்.

அவரது ஸ்பெஷாலிட்டி தேடபடுவது யாராக இருந்தாலும் லெபனான், சிரியா, எகிப்து என எங்கிருந்தாலும் பிடித்து, வாயினை பொத்தி, நாட்டாமை பொன்னம்பலம் போல தூக்கி வந்துவிடுவார்.

கேப்டன் விஜயகாந்த் சில சினிமாக்களில் டெல்லியிலும், காஷ்மீரிலும் எவ்வளவு சாகசங்கள் செய்வார் அப்படி நிஜமாக செய்த சாகசவீரன்.

இவ்வளவிற்கும் மொசாத் வேறு. ஷின்பெட் வேறு. ஹாய் கூட சொல்லியிருக்க மாட்டார்கள்.

பேருந்தில் ஒரே இருக்கையில் இருந்தால் கூட ஒருவர் மொசாத், ஒருவர் ஷின்பெட்டாக இருக்கலாம்.

ஆனால் இருவருக்கும் தெரியாது.

அவர் ரபி எய்டன், அசகசாய சூரன். ஆயிரத்தில் ஒருவன் எம்ஜிஆர் போல பொறுப்பும், கில்லி விஜய் போல வேகமும் சாதுரியமும் கொண்டவர்.

அவரிடம் பொறுப்பும், ஈச்மெனின் குறிப்பு அடங்கிய கோப்பும் கொடுக்கபட்டது.

அழும் சுவர் சென்று செபித்துவிட்டு 12 பேர் அடங்கிய குழுவினர் பயிற்சி முடித்து கிளம்பினர்.

எப்படி கிளம்பினர்?, கிரிக்கெட் அணிபோல மொத்தமாக இறங்கினால் ஏர்போர்ட்டிலே மாட்டிகொள்வர்.

உலகம் முழுக்க பிரிந்தனர்.

பின்னர் லண்டன், பாரீஸ் , பிராங்கபர்ட், லாஸ் ஏஞ்சல்ஸ்,கெய்ரோ என பல நாடுகளிலிருந்து ஒவ்வொருவராய் வந்து அர்ஜெண்டினாவில் இறங்கி களத்தில் இறங்கினர்.

அவர்கள் வருவது ஆண்டவனுக்கே தெரியுமா என்பது சந்தேகம்.

ஆனால் லோதர் வந்து நீங்கள் ஜெர்மானியரா என கேட்டதில் ஈச்மெனின் ராணுவ மனது விழித்துகொண்டது. வீட்டை மாற்றியிருந்தார்.

லோதர் குறிப்பிட்ட வீட்டு முகவரிக்கு சென்று கூரியர் பாய் வேடத்தில் கதவை தட்டினால் ஏற்கனவே அந்த வீட்டை காலிசெய்து வேறு அடையாளம் தெரியாத இடத்திற்கு குடும்பத்தோடு சென்றிருந்தார் ஈச்மென்.

என்ன இருந்தாலும் ஹிட்லரின் வளர்ப்பு அல்லவா? ரஷ்யர்களிடமே தப்பியர் அவர்.

கையை பிசைந்து நின்றது ரபி எய்டனின் குழு.

ஆனாலும் லோதரிடமோ அல்லது சில்வியாவிடமோ செல்லவே இல்லை.

ஏன் அர்ஜெண்டினாவின் இஸ்ரேலிய உளவாளிகளுக்கே வந்தது தெரியாது.

வீட்டை மாற்றினால் என்ன? கம்பெனி இருக்கிறதல்லவா?

ரகசியமாக பென்ஸ் கார் கம்பெனி பணியாளர் லிஸ்டில் ஊடுருவி ரிக்கார்டோ கிளமென்ட்டின் தகவல்களை தேடினார்கள் கண்டுபிடித்து பின் தொடர்ந்தார்கள்.

8 மாதம் இது நடைபெற்றது, தாங்கள் பார்க்கும் நபரின் உருவத்தையும் கோப்பில் காணப்படும் அடையாளங்களை வைத்து ஒப்பிட்டு பார்ப்பதை தவிர வேறு என்ன செய்யமுடியும்?

இது சந்தேகம் தான், இவர்தான் ஈச்மென் என உறுதிபடுத்தபடவில்லை.

அவரிடம் என்று நீர்தான் ஈச்மென் என்பவரோ என கேட்டுவிடவும் முடியாது

சந்தேகத்தின் பேரில் கொல்லலாம், கடத்தினால் விவகாரம் பெரிதாகும்,

இவர் போலி ஈச்மென் என்றால் ஒரிஜினர் ஈச்மென் தற்கொலை செய்தாலும் செய்வார், சிக்கவே மாட்டார்

அதனால் இவரை கண்காணிக்கும் திருப்பணியினை மட்டும் அப்பொழுது சரியாக செய்தார்கள்.

ஈச்மெனும் ஒழுங்காக வேலைக்கு சென்றார், பேருந்தில் திரும்பினார், சமத்து அகதியாக தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தார், அவர்தான் ஈச்மெனா என்பதில் மொசாத்திற்கே குழப்பம்.

இந்நிலையில் ஒருநாள் பெரிய கேக் வாங்கினார் ஈச்மென், அதோடு பூங்கொத்தும் வாங்கினார், வீட்டிற்கு சென்றார்.

கொஞ்சநேரத்தில் குடும்பத்தார் அலங்கார உடையுடன் விருந்து சாப்பாட்டுகு கிளம்பினர்.

இதை கவனித்த ரபி எய்டன் குழு அவசரமாக பைலை புரட்டியது.

அது அன்று ஈச்மெனின் திருமண நாள் என பைல் சொல்லிற்று.

இதைபோல அன்னாரின் பிறந்த நாளை அவர் கொண்டாடியதையும் உறுதிபடுத்தியிருந்தார்கள்.

வேட்டையாடும் புலி மொசாத், இரையை கண்டுவிட்டது ஆனாலும் உலாவ விட்டது

காரணம் கிட்டதட்ட 100 சிக்கல்கள் இருந்தன. கொஞ்சம் பிசகினாலும் சாரி ஹிஹிஹி என சமாளிக்கும் முருங்கக்காய் சாம்பாரில் உப்பு பிரச்சினை அல்ல.

மொசாத்தையே மூட வைக்கும் அல்லது இஸ்ரேலையே சிக்கலாக்கும் மகா பிரச்சினைகள் அவை.

நாசிகளுக்கு ஆதரவளித்த நாட்டில் ஜெர்மானியனை கொலை செய்தாலே தப்பமுடியாது.

இதில் உயிரோடு கடத்த வேறு வேண்டும், இப்போதைக்கு திருமண நாள் மட்டும் உறுதி செய்யபட்டிருக்கின்றது . இன்னும் சில காரியங்களை உறுதிபடுத்துவோம்.

சொல்லிவிட்டு கடத்தினால் எப்படி இஸ்ரேலுக்கு அர்ஜெண்டினா கண்ணில் மண்ணை தூவிவிட்டு கொண்டு செல்லலாம். அதில் எழும் சிக்கல் என்ன என்பதை பட்டியலிட்டார்கள்.

ஈச்மெனை கண்காணித்தபடியே ஹிட்லர் அங்கு எங்காவது இருப்பானா? இவர் கார் மெக்கானிக் என்றால் அவன் டயருக்கு பஞ்சர் போட்டுகொண்டிருக்கமாட்டானா என தேடவும் மொசாத் தவறவில்லை.

குறிப்பு:

முதல்படம் : மொசாத்தின் சின்னம், சகல கிறிஸ்தவருக்கும் தெரிந்தது கடவுள் மோசஸிடம் சொன்னபடி அவர் செய்த 7 விளக்குதண்டுகள் தான், (பார்த்தவுடன் கத்தோலிக்கர் பிதா,சுதன்,தூய ஆவி அடையாளமிடுவார்கள், சில‌ சபையினர் “அல்லேலூயா” என்பார்கள், இன்னும் சிலர் காளகேயனாக அந்நிய பாஷை பேசுவார்கள், ஆனால் இவற்றை எல்லாம் யூதர்கள் கண்டுகொள்வதே இல்லை 🙂என்பது தான் “தமாஷ்” )

இரண்டாம் படம் : “கேப்டன்” ரபி எய்டன்

மூன்றாம் படம் :  சில்வியா , இந்த வெள்ளை தக்காளியினை எப்படி குஷ்பூ போல‌ என சொல்லமுடியும்? இந்த அழகிற்கெல்லாம் அந்த குளோஸ் மயங்கியிருக்கமுடியாது, விதி விளையாடியிருக்கலாம்

தொடரும் …
 
 

காவிய தலைவன் படம் யாரை நினைவுபடுத்திற்று?

Image may contain: 21 people

தனது நாடக சகாக்களுடன் முன்பொரு காலத்தில் ராமசந்திரன் அமர்ந்திருக்கும் படம், அவர் எங்கிருக்கின்றார் என நீங்களே கண்டுகொள்ளுங்கள்..

காவிய தலைவன் படத்திற்கு விருதுகள் கிடைத்ததில் மகிழ்ச்சி : இயக்குனர் வசந்தபாலன்

உண்மையில் தமிழக அரசு இதனை தெரிந்து செய்ததா? தெரியாமல் செய்ததா என்று தெரியவில்லை, தெரியாமல் செய்திருந்தாலும் நல்ல விஷயம்

தெரிந்திருந்தால் செய்திருக்கமாட்டார்கள்.

அந்த காவிய தலைவன் படம் யாரை நினைவுபடுத்திற்று? சாட்சாத் அந்த ராமசந்திரனை

பாய்ஸ் நாடக கம்பெனி ஆகட்டும், இன்னும் சில நாடக கம்பெனிகளாகட்டும், நாடக நடிகரான ராமசந்திரன் அந்த ராஜபாட்டை வேடத்திற்கு ஏங்கியிருக்கின்றார்

அது கிடைக்காமல் துக்கடா வேடத்தில் எல்லாம் நடித்திருக்கின்றார், பெண் வேடம் எல்லாம் அணிந்திருக்கின்றார்.

“சாமி எனக்கு வேடம் தாங்க சாமி..” என பிருத்விராஜ் ஏங்கி நின்ற காட்சிகள் எல்லாம் ராமசந்திரன் வாழ்வில் நடந்த உண்மை காட்சிகள்.

நாடக நடிகர் என்பதால் அவருக்கு கிடைத்த அவமானமும், புறக்கணிப்பும் ஏராளம். சினிமாவில் மின்னிய ராம‌சந்திரனை நமக்கு தெரியும், ஆனால் நாடக கம்பெனியில் பெரும் அவமானமும் , வலியும் சுமந்த ராமசந்திரனை பலருக்கு தெரியாது.

இந்த படத்தில் வருவது போலவே ஒரு நாடககாரனாய் வாழ்ந்த ராமசந்திரனே பின்னாளில் புரட்சி தலைவரானார், இந்நாளில் அவரின் கட்சி இன்னும் ஆட்சியிலிருந்தாலும் அதன் மூலம் அந்த நாடக கம்பெனியில்தான் தொடங்கியிருக்கின்றது

அந்த நன்றிவிசுவாசத்தினாலோ என்னவோ காவிய தலைவன் படத்திற்கு விருதினை அள்ளி கொடுத்திருக்கின்றார்கள்

நிச்சயமாக பிருத்விராஜ் சித்தார்த் சண்டையினை மறந்துவிட்டு பார்த்தால் அது மிக நல்லபடம், விருதுக்கு தகுதியான படம்

அந்த நாசர் கதாபாத்திரம் கூட தமிழக நாடக கலையினை சினிமாவிற்கு முன்னோடியாக நிறுத்திய சங்கரதாஸ் சுவாமிகளையும், கமலஹாசனின் குருவாகிய அவ்வை சன்முகத்தையும் நினைவுபடுத்தியது

இன்றைய சினிமாவில் நாடக கம்பெனியிலிருந்து நடிகரான கடைசி நாடக வாரிசு கமலஹாசனே.

அது இருக்கட்டும்

அதிமுக அரசுக்கு கொஞ்சமேனும் அடிமனதில் நன்றி இருந்திருக்கின்றது என்பதனைத்தான் காவிய தலைவன் படத்திற்கு விருது கொடுத்து நிரூபித்திருக்கின்றார்கள்

அவர்களின் பிதாமகனின் ஆரம்ப வாழ்வினை கண்முன் நிறுத்திய படத்திற்கு அவரின் நூற்றாண்டு விழாவிலும் விருது கொடுக்கவில்லை என்றால் எப்படி?

அதனால் வசந்தபாலனோடு எல்லோரும் அரசுக்கு நன்றி தெரிவிக்கலாம், இப்படி அரசு எல்லா விஷயங்களிலும் வெளிப்படையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

 

 
 

சாதி என்பது அரசியல்வாதிகளாலே வாழ்கின்றது…

No automatic alt text available.மிக பெரும் நடவடிக்கை எடுக்கவேண்டிய விஷயம் இது, அருவருக்கதக்க, கொஞ்சமும் பகுத்தறிவே இல்லாத, ஏன் அறிவே இல்லாத விஷயம் இது

ஆயிரம் சர்ச்சைகள் இருக்கலாம், ஆயிரம் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம், அதற்காக இப்படி எல்லாம் வன்ம் சர்ச்சை வளர்ப்பது இத்தேசத்திற்கு நல்லது அல்ல‌

ஒன்று கடவுள் இல்லை என சொல்லவேண்டும் அல்லது அம்பேத்கர் புத்தமதம் பக்கம் ஒதுங்கியது போல ஒதுங்க வேண்டும்

மாறாக இப்படி அந்த மதத்தை சீண்டுவது என்பது கண்டிக்கதக்க இன்று, தண்டிக்கதக்க கூடியது.

பன்றி என்பது இஸ்லாமிருக்கு ஆகாத விலங்கு, பூனூல் என்பது இந்துக்களின் ஒரு பிரிவின் 
அடையாளம். இரண்டையும் வைத்து போராடுவோம் என்பது எப்படி சரியாகும்?

அவர்கள் மதம் ஆவணி அவிட்டத்தை கொண்டாடுகின்றது, அது அவர்கள் பாடு, அதில் இவர்களுக்கு ஏன் எரிகின்றது?

இத்தேசத்தில் எல்லா மதங்களிலும் சடங்குகளும் கொண்டாட்டமும் உண்டு, அங்கெல்லாம் இப்படி இந்த பன்றிமூளைக்காரர்கள் பன்றியோடு நின்றால் என்னாகும்?

இந்த நாட்டில் அமைதியும், சகிப்புதன்மையும் நீடிக்க வேண்டுமென்றால் இவர்களை எல்லாம் விடவே கூடாது

அது என்ன பார்ப்பானுக்கு பூனூல்?

விருதுநகர் நாடாகள் கூட அக்காலத்தில் அணிவதாக சொல்வதுண்டு, அதனால் அவர்கள் பார்பனர்களாக முடியுமா?

சூத்திரன் சூத்திரனாக இருக்க காரணம் பூனூல் அல்ல, மாறாக அறியாமை. கல்வியின்மைதான், சிந்தனையின்மைதான் அவர்களை தாழ்த்தியதே தவிர பூனூல் அல்ல.

யார் எந்த நூல் அணியவேண்டும் என சொல்ல இவர்கள் யார்?

இவர்கள் பெரியார் திராவிட கழகமாம்

பெரியார் சிந்திக்க சொன்னாரே அன்றி, இப்படி வம்பிழுக்க சொல்லவே இல்லை. தன்மீது விழுந்த கற்களை தடுத்தபடி தன் காயங்களை துடைத்தபடி சிந்தியுங்கள் என்றாரே தவிர, திருப்பி அடி என்றோ, கலவரம் செய் என்றோ சொல்லவே இல்லை.

இவர்கள் பெரியார் வழி என சொல்லிவரும் சிறியவர்கள், குறுக்கு புத்தியுள்ள சிறுமூளைக்காரர்கள்

நாளையே அப்பக்கம் கழுதைக்கு பெரியார் என்றும், இன்னொரு கழுதை குட்டிக்கு வீரமணி என்றும் பெயரிட்டு பகுத்தறிவு காகிதத்தை உண்ண கொடுத்து அவர்கள் போராட எவ்வளவு நாழிகையாகும்?

இப்படி நீ பன்றி, அவன் கழுதை என ஆளாளுக்கு கிளம்பினால் நாடு நாடாக இருக்குமா?

ஒருவனின் மொழி, மதம்,உணவு இம்மூன்றிலும் கைவைப்பது விபரீதத்தில் முடியும், பெரும் கலவரங்களுக்கு எல்லாம் இதுதான் காரணம்

பிராமண ஆதிக்கம் என்றோரு காலம் இருந்தது, அன்று பெரியாரின் கருத்துக்கள் தேவைபட்டன‌

இன்று மாறிவிட்ட காலங்கள், சாதிக்கேற்ற தொழில் என எதுவுமில்லை, எல்லா சாதியும் எல்லா வேலையும் செய்யும் காலமிது.

கீழ்சாதி என முன்பொருகாலத்தில் சொல்லபட்டவர்கள் எல்லாம் பெரும் பதவியிலும், மேல்சாதி என சொல்லபட்டவர்கள் எல்லாம் 10 பைசாவிற்கு அல்லாடும் தொழிலும் இருக்கும் காலமிது.

இந்த சாதி இந்த தொழில்தான் செய்யவேண்டும் என்ற அக்கால சட்டங்கள் எங்காவது இன்று உண்டா? எல்லாம் மாறிவிட்டன, பல தொழில்களே இன்று இல்லை

இந்த காலத்தில் வாழ்ந்துகொண்டு அக்கால கொள்கைகள் எதற்காக? இது பெரும் குழப்பத்தையே கொண்டுவரும்

சாதி என்பது அரசியல்வாதிகளால் வாழ்கின்றதே அன்றி, வேறு எங்கும் அல்ல‌

அரசுகள் மிகுந்த விழிப்புடன் வேகமாக நடவடிக்கை எடுத்து இந்த பன்றிக்கு பூனூல் போடும் கழுதைகள் மீது நடவடிக்கை எடுத்து , பகுத்தறிவு என்றால் என்ன என்பதை கற்றுகொடுக்க வேண்டிய தருணமிது.

 
 

இஸ்ரேலிய நிலைப்பாடு இப்படி

அல் அக்சா மசூதியினை திறந்துவிட்டு பதற்றத்தை தணித்திருக்கின்றது இஸ்ரேல்

ஆனால் கடும் சோதனைக்கு பின்புதான் பாலஸ்தீனியரை அனுமதிப்போம் என பாதுகாப்பு சோதனைகளை மிக வலுவாக்கியிருப்பதால் பாலஸ்தீனர்கள் கொந்தளிக்கின்றார்கள்

சமீபத்தில் நடந்த தாக்குதல், ஐஎஸ் மிரட்டல் என பல காரணங்களை சொல்லி பாதுகாப்பினை மிக இறுக்கமாக்குகியிருக்கின்றது

மிக சென்சிட்டிவான அந்த பிரச்சினையில் இப்பொழுது இஸ்ரேலிய நிலைப்பாடு இப்படி

“மிகுந்த சோதனைக்க்கு ஒத்துழைத்துவிட்டு மசூதிக்குள் சென்று தொழுகை நடத்துங்கள், அல்லது ஓடிவிடுங்கள்..”

இஸ்ரேலிய சோதனை எப்படி இருக்கும் என தெரிந்ததால் பாலஸ்தீனரின் எதிர்ப்பு பெருகுகின்றது

துணை ஜனாதிபதியாகிறார் வெங்கையா நாயுடு

துணை ஜனாதிபதியாகிறார் வெங்கையா நாயுடு

இப்போது மனம் வெறுத்து திரியும் ஒரு நபர் யாரென்றால் தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசுதான்

அந்த பாஜகவிலே இருந்திருந்தால் நிச்சயம் நல்லவாய்ப்பினை பெற்றிருக்கலாம் , இப்பொழுது காங்கிரசில் வந்து சிக்கிகொண்டார், விதி வலியது என்பது இதுதான்

துணை ஜனாதிபதியான பின்பாவது “அதிமுக அரசினை கலைக்கமாட்டோம்” போன்ற கருத்துக்களை அவர் பழக்க தோஷத்தில் பேசாமல் வெங்கய்யா நாயுடு
நிறுத்தட்டும்.

பதவிக்கு ஒரு பொறுப்பு உண்டல்லவா?


தமிழகத்துக்கு தண்ணீர் தர மழை பெய்விக்க முடியாது: கர்நாடக மந்திரி

மழை பெய்விக்க முடியாதுதான், ஆனால் அணையினை திறக்க முடியும் அல்லவா?


வேட்டி கட்டிய ஒரு தலைவர் துணை குடியரசுத் தலைவராக ஆகப்போகிறார் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி: தமிழிசை

பொன் ராதாகிருஷ்ணன் என்ன சுடிதாரா அணிந்திருக்கின்றார்? அவரை பிரதமராக்கி மகிழ்ச்சியினை மும்மடங்காக்கினால் என்ன?


பெங்களூர் சிறையில் சசிகலாவிற்காக சிசிடிவி நீக்கமா? பரபரப்பான செய்திகள்

இந்த கும்பலுக்கு சிசிடிவி மேல் அப்படி என்ன கோபம்?, அது அப்பல்லோவில் இருந்தாலும் பிடிக்கவில்லை, சிறையில் இருந்தாலும் பிடிக்கவில்லை உடனே எடுத்துவிடுகின்றார்கள்.

அப்படி அந்த கேமராவினை கண்டு என்னதான் பயம்?


அப்துல் கலாமை குடியரசு தலைவராக்க வலியுறுத்தியவன் நான் : வைகோ

பிரபாகரனிடமிருந்து ராக்கெட் நுட்பத்தினை வாங்கி, அப்துல் கலாமிற்கு கற்று கொடுத்தவன் நான் என எப்போது சொல்வீர்கள்?

அய்யா, அப்துல்கலாமினை ஜனாதிபதியாக்கிய உங்களுக்கு, இந்த தமிழிசையினை ஜனாதிபதியாக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்? ஏன் செய்யவில்லை?


நடிகர் கமல் குறித்து அமைச்சர்கள் பேசுவது தேவையற்ற ஒன்று: பொன்.ராதாகிருஷ்ணன்

அவர்கள் என்றுதான் தேவையுள்ள விஷயங்களை பேசியிருக்கின்றார்கள்? வழக்கம் போல பேசிவிட்டார்கள் அய்யா..