சாதி என்பது அரசியல்வாதிகளாலே வாழ்கின்றது…

No automatic alt text available.மிக பெரும் நடவடிக்கை எடுக்கவேண்டிய விஷயம் இது, அருவருக்கதக்க, கொஞ்சமும் பகுத்தறிவே இல்லாத, ஏன் அறிவே இல்லாத விஷயம் இது

ஆயிரம் சர்ச்சைகள் இருக்கலாம், ஆயிரம் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம், அதற்காக இப்படி எல்லாம் வன்ம் சர்ச்சை வளர்ப்பது இத்தேசத்திற்கு நல்லது அல்ல‌

ஒன்று கடவுள் இல்லை என சொல்லவேண்டும் அல்லது அம்பேத்கர் புத்தமதம் பக்கம் ஒதுங்கியது போல ஒதுங்க வேண்டும்

மாறாக இப்படி அந்த மதத்தை சீண்டுவது என்பது கண்டிக்கதக்க இன்று, தண்டிக்கதக்க கூடியது.

பன்றி என்பது இஸ்லாமிருக்கு ஆகாத விலங்கு, பூனூல் என்பது இந்துக்களின் ஒரு பிரிவின் 
அடையாளம். இரண்டையும் வைத்து போராடுவோம் என்பது எப்படி சரியாகும்?

அவர்கள் மதம் ஆவணி அவிட்டத்தை கொண்டாடுகின்றது, அது அவர்கள் பாடு, அதில் இவர்களுக்கு ஏன் எரிகின்றது?

இத்தேசத்தில் எல்லா மதங்களிலும் சடங்குகளும் கொண்டாட்டமும் உண்டு, அங்கெல்லாம் இப்படி இந்த பன்றிமூளைக்காரர்கள் பன்றியோடு நின்றால் என்னாகும்?

இந்த நாட்டில் அமைதியும், சகிப்புதன்மையும் நீடிக்க வேண்டுமென்றால் இவர்களை எல்லாம் விடவே கூடாது

அது என்ன பார்ப்பானுக்கு பூனூல்?

விருதுநகர் நாடாகள் கூட அக்காலத்தில் அணிவதாக சொல்வதுண்டு, அதனால் அவர்கள் பார்பனர்களாக முடியுமா?

சூத்திரன் சூத்திரனாக இருக்க காரணம் பூனூல் அல்ல, மாறாக அறியாமை. கல்வியின்மைதான், சிந்தனையின்மைதான் அவர்களை தாழ்த்தியதே தவிர பூனூல் அல்ல.

யார் எந்த நூல் அணியவேண்டும் என சொல்ல இவர்கள் யார்?

இவர்கள் பெரியார் திராவிட கழகமாம்

பெரியார் சிந்திக்க சொன்னாரே அன்றி, இப்படி வம்பிழுக்க சொல்லவே இல்லை. தன்மீது விழுந்த கற்களை தடுத்தபடி தன் காயங்களை துடைத்தபடி சிந்தியுங்கள் என்றாரே தவிர, திருப்பி அடி என்றோ, கலவரம் செய் என்றோ சொல்லவே இல்லை.

இவர்கள் பெரியார் வழி என சொல்லிவரும் சிறியவர்கள், குறுக்கு புத்தியுள்ள சிறுமூளைக்காரர்கள்

நாளையே அப்பக்கம் கழுதைக்கு பெரியார் என்றும், இன்னொரு கழுதை குட்டிக்கு வீரமணி என்றும் பெயரிட்டு பகுத்தறிவு காகிதத்தை உண்ண கொடுத்து அவர்கள் போராட எவ்வளவு நாழிகையாகும்?

இப்படி நீ பன்றி, அவன் கழுதை என ஆளாளுக்கு கிளம்பினால் நாடு நாடாக இருக்குமா?

ஒருவனின் மொழி, மதம்,உணவு இம்மூன்றிலும் கைவைப்பது விபரீதத்தில் முடியும், பெரும் கலவரங்களுக்கு எல்லாம் இதுதான் காரணம்

பிராமண ஆதிக்கம் என்றோரு காலம் இருந்தது, அன்று பெரியாரின் கருத்துக்கள் தேவைபட்டன‌

இன்று மாறிவிட்ட காலங்கள், சாதிக்கேற்ற தொழில் என எதுவுமில்லை, எல்லா சாதியும் எல்லா வேலையும் செய்யும் காலமிது.

கீழ்சாதி என முன்பொருகாலத்தில் சொல்லபட்டவர்கள் எல்லாம் பெரும் பதவியிலும், மேல்சாதி என சொல்லபட்டவர்கள் எல்லாம் 10 பைசாவிற்கு அல்லாடும் தொழிலும் இருக்கும் காலமிது.

இந்த சாதி இந்த தொழில்தான் செய்யவேண்டும் என்ற அக்கால சட்டங்கள் எங்காவது இன்று உண்டா? எல்லாம் மாறிவிட்டன, பல தொழில்களே இன்று இல்லை

இந்த காலத்தில் வாழ்ந்துகொண்டு அக்கால கொள்கைகள் எதற்காக? இது பெரும் குழப்பத்தையே கொண்டுவரும்

சாதி என்பது அரசியல்வாதிகளால் வாழ்கின்றதே அன்றி, வேறு எங்கும் அல்ல‌

அரசுகள் மிகுந்த விழிப்புடன் வேகமாக நடவடிக்கை எடுத்து இந்த பன்றிக்கு பூனூல் போடும் கழுதைகள் மீது நடவடிக்கை எடுத்து , பகுத்தறிவு என்றால் என்ன என்பதை கற்றுகொடுக்க வேண்டிய தருணமிது.

 
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s