தமிழக எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு

தமிழக எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு: முதல்வர் பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு

அரசின் கடன் 4 லட்சம் கோடியாக இருக்கும் பொழுது இது அவசியமா?

இவர்கள் கிழிக்கும் கிழிக்கி இந்த சம்பளம் எதற்காக?

கூவத்தூரில் இருந்தற்கும், சின்னம்மா வாழ்க, தினகரன் வாழ்க என சொல்வதற்கும் அரசு சம்பளமா?

நிச்சயம் எதிர்கட்சியும் இதனைபற்றி பேசமுடியாது அவர்களிடமும் 80 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றார்கள், பேச விடமாட்டார்கள்.

ஆக கூவத்தூரில் கொடுப்பதாக சொன்னதை சம்பளத்தை ஏற்றி கொடுத்து சரிசெய்கின்றார்கள், நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் புசிவது போல எதிகட்சி எம்.எல்.ஏல்களுக்கும் லாபம்

தமிழ்நாடு நாசமாகிகொண்டிருக்க, விவசாயி கடன்களோடு தத்தளித்துகொண்டிருக்க ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் கஜானாவினை பங்கு வைத்துகொண்டிருக்கின்றன‌


அரசியல் என்பது ட்விட்டரில் இல்லை- தமிழிசை

பின் என்ன மண்ணாங்கட்டிக்கு நீங்கள், மோடி, அமித்ஷா எல்லாம் டிவிட்டி கொண்டிருக்கின்றீர்கள்???


சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞர் படுகொலை

சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞர் படுகொலை

இதனை எல்லாம் இந்த திராவிட கழகம், பெரியாரிஸ்டுகள் எல்லாம் கண்டிக்கமாட்டார்கள், மாறாக பிராமணரின் பூனூலில் மட்டும் தலைகீழாக தொங்கிகொண்டிருப்பார்கள்.

இரு பன்றிகளை பிடித்து இது தலித் பன்றி, இது உயர்சாதி பன்றி அந்த இரண்டிற்கும் திருமணம் செய்வித்து எங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கின்றோம் என சொல்லட்டும் பார்க்கலாம்

அதெல்லாம் செய்யமாட்டார்கள்

அதுவும் ஒரு பன்றிக்கு வன்னியர் என்றும், ஒரு பன்றிக்கு நாடார், தேவர், தலித் எனவும் பெயரிட சொன்னால் வங்க கடலை தாண்டி ஓடிவிடுவார்கள்

ஆனால் பிராமணர்கள் என்றால் மட்டும் இழுத்துபோட்டு அடிக்க இவர்கள் ரெடி, காரணம் அந்த சாதிமட்டும்தான் திரும்ப அடிக்காது, மற்றசாதி என்றால் வெட்டி எறிந்துவிடும்,

அதனால் பிராமணரையே வம்புக்கு இழுப்பது, அது பெரியாரிசம், திராவிடயிசம் என சொல்லிகொள்வது.

பிராமணன் என அவனையே சாதி என சொல்லி கரித்துகொட்டுவது, சூத்திர சாதிக்குள் சாதிபெயரால் வெட்டு குத்து என்றால் குத்துகல்லாக இருப்பது..

இதுதான் இப்போதுள்ள திராவிட கழக கொள்கை

சசிகலாவை பொறி வைத்து பிடித்த மத்திய அரசு : செய்தி

சசிகலாவை பொறுமையாக காத்திருந்து பொறி வைத்து பிடித்த மத்திய அரசு : செய்தி

இவர்களுக்கு இதுவே வேலையாகிபோனது, ஒரு மண்ணாங்கட்டியும் கண்டுகொள்ளமாட்டார்கள், ரூபா போன்ற நேர்மமையான அதிகார்கள் உண்மையினை வெளிகொணர்ந்தால் நாங்கள் தான் பொறிவைத்தோம் என வந்து நிற்பார்கள்

அப்படி பொறி வைப்பவர்கள், அப்பல்லோ மர்மத்தை வெளிகொணர்ந்தால் என்ன? செய்யமாட்டார்கள். இனி என்றொவது ஒரு நாளில் மர்மம் வெளிவந்தால் மோடி மேஜிக் என்பார்கள்

எல்லா இடத்திலும் இதே அட்டகாசம், இதோ எல்லையில் சீனா மல்லுகட்டுகின்றது, நாளை அவர்களே விலகிசென்றால் உடனே இது எங்களின் மாபெரும் வெற்றி என கொஞ்சமும் வெட்கமின்றி சொல்வார்கள்

இப்பொழுது சசிகலாவினை பிடித்துவிட்டோம் என்பது போல‌

சரி, சசிகலா பெங்களூர் சிறையில் தகிததித்தோம் செய்து மாட்டிகொண்டார் அல்லவா? பொறி வைத்து பிடித்தாயிற்று அல்லவா? இனி என்ன செய்வீர்கள் என கேட்டால் பதிலே வராது


அதிகாரிகளுக்கு இடையிலான போட்டி காரணமாக சசிகலா மீது புகார் கொடுக்கிறார்கள்: டிடிவி தினகரன்

இது உண்மையாக இருக்கலாம், ஒரு அதிகாரிக்கு ஒரு கோடி கொடுத்துவிட்டு இன்னொரு அதிகாரிக்கு 2 கோடி கொடுத்தால் போட்டிவராமல் என்ன செய்யும்?

அதிகாரிகளுக்குள் இவர்களின் லஞ்ச பணம் தொடர்பாக சண்டை வந்திருக்கலாம், அதனால் விஷயம் கசிந்திருக்கலாம்

எனக்கும் ஒரு பங்கு தருகின்றீர்களா இல்லையா என மிரட்டிவிட்டு யாரோ விஷயத்தை வெளிசொல்லிவிட்டார்கள்

இதனைத்தான் அன்னார் சொல்லவருகின்றார்,

அது என்ன போட்டி என இவர் சொல்லாததாலும், சொல்லியிருப்பவர் தினகரன் என்பதாலும் எளிதாக முடிவு செய்யலாம்,

அதாவது இவர்கள் கொடுத்த பணத்தில் அதிகாரிகளுக்கு இடையே நடந்த பங்கீடு போட்டிதான் சசிகலா சிக்கலுக்கு காரணம்

முதன்முறையாக உண்மையினை சொன்ன தினகரனுக்கு வாழ்த்துக்கள்


 

 
 

முதுகெலும்பு இல்லாத கோழை கமல் : ஹெச்.ராஜா

முதுகெலும்பு இல்லாத கோழை: கமலால் முதலமைச்சராக முடியாது –ஹெச்.ராஜா

இப்பொழுது கமல் நான் முதலமைச்சராக போகிறேன் என எங்கு சொன்னார்???,

சரி இந்த முதுகெலும்புள்ள மாவீரன் எத்தனை முறை முதல்வராகிவிட்டார்..

எங்கே? இந்த மாவீரன் ராமர்கோவிலை கட்டிவிடட்டும் பார்க்கலாம்

அட அதுகூட வேண்டாம் முதுகெலும்புள்ள வீரனாக பாகிஸ்தான் எல்லையில் ஒரு கல்வீசி வந்துவிடுங்கள் பார்க்கலாம்..

TV பேட்டியில் தான் சொன்னதை கூட, உலகமே பார்த்த விஷயத்தையே பயத்தில், ” நான் அப்படி சொல்லங்கிறேன்” என பல்டி அடிக்கும் இந்த கோமாளி முதுகெலும்பு பற்றி பேசுகின்றார்

மிஸ்டர் ராசா அட்டேன்சனில் ஒரு மணிநேரம் நிமிர்ந்து நின்று உங்கள் முதுகெலும்பினை நிரூபிக்க முடியுமா?

குஷ்பூ குறுகுறு விழி எங்கே ….

Image may contain: 1 person, smiling, close-upஎலேய் திருட்டுமுழி கஞ்சா கண்ணா, செத்த மூஞ்சி சிநேகரே என்ன சொன்னீர்? அந்த ஓட்டைபல்லும், ஒட்டுபல்லுமாக இருக்கும் “சூர்ப்பநகை” சூலி அடுத்த குஷ்பூவா?

சித்தன்னவாசல் ஓவியம் போலிருக்கும் குஷ்பூவிற்கு, மாலிக்காபூரால் உடைக்கபட்ட சிலையின் முகம் போலிருக்கும் ஜூலி சமமா?? இதனை சும்மா விட மாட்டோம்

குஷ்பூ குறுகுறு விழி எங்கே, 
இந்த ஜூலியின் திருட்டு முழி எங்கே?

குஷ்பூ மயில் ஜூலி மந்தி, 
குஷ்பூ குளிர்நிலவு ஜூலி கொள்ளிகட்டை

கருவாடு மீனாகாது, ராமராஜன் ரஜினி ஆகமாட்டார், புரியாத மொழியில் கவிதை எழுதும் மனுஷபுத்திரன் எல்லாம் கமலஹாசன் ஆக முடியாது, ரோபோ சங்கர் கலாபவன் மணியாக முடியாது

Image may contain: 1 person, smiling, hat and close-up

 

கருவாடு மீன் ஆனாலும் ஜூலி குஷ்பூ ஆக முடியாது

ஜூலி எனும் காளான் எல்லாம் இந்த வைரச்சிலை முன் எப்படி வரமுடியும்?

இன்னொரு முறை சிநேகன் இப்படி சொன்னால், பிக்பாஸ் வீட்டை உடைத்து, அந்த நீண்ட முடியினை பிடித்து தூக்கி எறிவோம் என எச்சரிக்கின்றோம்

எங்கே துணிவிருந்தால் ஆயிரத்தில் ஒருவன் ஜெயா போலவோ, 1990களின் சசிகலா போலவோ ஜூலி இருக்கின்றார் என சொல்லுங்கள் பார்ப்போம்?

முடியாதல்லவா? அந்த சிநேகனை வன்மையாக கண்டிக்கின்றோம்

இதனை எல்லாம் பொறுக்க முடியாது, இன்னொரு முறை அந்த பிக்பாஸில் இருக்கும் இம்சைகளில் யாரையாவது எவனாவது அடுத்த குஷ்பூ என சொல்வாரானால் சங்கம் சும்மா இருக்காது

அது பிக்பாஸ் இம்சைகள், பிக்பாஸ், கமல், ஏன் அந்த ஆண்டவனே சொன்னாலும் விடமாட்டோம்.

எலேய் சுடுகாட்டு மூஞ்சி, இந்த இரு படங்களையும் பார்த்துவிட்டு இனி பேசு..

 
 

வளர்மதி நக்சல் இயக்கம் என்றால் நிரூபிக்கட்டும்

Image may contain: 3 people, people standing and outdoorஅந்நிய நாட்டு தீவிரவாதி படம் பிடித்து அலையும் சீமானை விட்டுவிட்ட தமிழக அரசு, வீரலட்சுமி, வைகோ, நெடுமாறனை எல்லாம் விட்டுவிட்ட தமிழக அரசு…

அப்பட்டமாக பிரிவினை பேசும், குதர்க்கம் விளைவிக்கும் பலரை விட்டுகொண்டிருக்கும் இந்த அரசு…

சொந்தமாநில பிரச்சினைக்காக குரலெழுப்பிய வளர்மதியினை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கின்றது?

அந்த புலி தொண்டர்கள் அல்லவா குண்டர்கள்? அவர்களை முதலில் பிடித்த்து போட்டிருக்கவேண்டாமா? வளர்மதி அவர்களை விட இந்த நாட்டிற்கு ஆபத்தானவரா?

மாணவர்கள் மீது எந்த அரசும் கைவைக்காது, இந்த அரசுக்கு எது பற்றிய அறிவோ கவலையோ இல்லை

ஆப்பினை அசைத்த கதையில் வருவது போல‌ கால், வால் என எல்லாம் உள்ளே விட்டு ஆப்பினை புடுங்குகின்றார்கள் என்பது மட்டும் புரிகின்றது

ஏன் வைகோவும், சீமானும் கூடத்தான் கதிராமங்கலம் சென்றனர், கண்ட பேச்சுக்களை பேசினர், அவர்கள் மேல் எல்லாம் ஏன் சட்டம் பாயவில்லை?

வளர்மதி நக்சல் இயக்கம் என்றால் நிரூபிக்கட்டும், அதன் பின் சிறையில் போடட்டும்

ஆனால் அதற்கு முன்பு நான் பிரபாகரனின் அண்ணன் என சொல்லும் வைகோவினையும், நான் பிரபாகரனின் தம்பி என சொல்லும் சீமானையும் இந்த அரசு என்ன செய்தது?

நக்சலைட்டுகள் இந்த தேசத்திற்கு எவ்வளவு ஆபத்தோ, புலிகளும் அதே வகை என்பதை மறுக்க முடியுமா?.


குண்டர் சட்டத்தில் மாணவி வளர்மதியை கைது செய்ததில் தவறு இல்லை –சி.வி.சண்முகம்

முன்பு ஜெயா சிறைபட்டபோது மட்டும் ஏன் தமிழகத்தை கலவரக்காடு ஆக்கினீர்கள்? அப்பொழுதும் இப்படி சொல்லியிருக்கலாமே அய்யா..


 
 

கமல் ட்வீட்ஸ்…

இவர் தமிழில் எழுதியே தலைகீழாக நின்றாலும் ஒரு மண்ணும் புரியவில்லை, இதில் ஆங்கிலத்தில் எழுதி புரியவைக்க போகின்றாராம்.

Image may contain: text
 
 


Image may contain: 1 person, close-upகொஞ்சம்பேர் இந்த “ஒட்டடை குச்சி ஓவியா” அடுத்த குஷ்பூ என சொல்லி கொண்டிருக்கின்றான், அவனுக்கெல்லாம் சங்கத்தின் சார்பில் இலவச கண் பரிசோதனை செய்யலாம் என்ற கோரிக்கை பரிசீலிக்கபடுகின்றது

தமிழிசை இந்திராகாந்தி ஆக முடியாது, ஓவியா குஷ்பூ ஆக முடியாது

ஓவியா சின்னதம்பி குஷ்பூ மாதிரி என எந்த பயலாவது கிளம்பினால் சும்மா விடமாட்டோம் ..