சசிகலாவின் சட்ட மீறல் மற்றும் சட்ட வளைப்பு

Image may contain: 2 people, textபெங்களூர் சிறையில் சசிகலாவின் சட்ட மீறல் மற்றும் சட்ட வளைப்பு மிகபெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியிருக்கின்றது

சிறையில் இருப்பேனே தவிர, சிறையின் எந்த சட்டதிட்டத்திற்கும் கட்டுபட‌ மாட்டேன் என பல காரியங்களை லஞ்சத்தை விட்டெறிந்து செய்திருக்கின்றார் சசிகலா, கிட்டதட்ட சிறை அவருக்கு ஓய்வெடுக்கும் அறைபோலவே இருக்கின்றது

மற்றபடி போயஸ்கார்டன் சமையல்காரி முதல் அங்கு சமையலுக்கு அமர்த்தியிருக்கின்றார், தன்னை தனிமைபடுத்தியிருக்கின்றார், டிஜிபி எனும் பிக்பாஸின் கேமராக்களை பிடுங்கி எறிந்திருக்கின்றார், எப்பொழுது வேண்டுமானாலும் பெங்களூர் முழுக்க சுற்றிவிட்டு எந்நேரமும் அவரால் சிறைக்கு வரமுடிந்திருக்கின்றது

நடராஜனும் அவரும் தேனிலவு தம்பதிகளாக செல்பி எடுக்கவில்லையே தவிர, அதிமுக பொதுகுழு கூட்டம் சிறையில் நடைபெறவில்லையே தவிர வேறு எல்லா அட்டகாசமும் நடந்திருக்கின்றது

லஞ்சத்தால் மட்டும் இது சாத்தியமா என்றால் சத்தியமாக இல்லை, லஞ்சத்தால் எல்லாம் சாத்தியம் என்றால் சசிகலா தண்டிக்கபட்டிருக்கவே மாட்டார்

Image may contain: one or more peopleபின் எங்கே சட்டம் வளைகின்றது?

பாஜகவிற்கு எதிரான ரகசிய கூட்டணியில் காங்கிரசுக்கும், அதிமுகவிற்கும் ஒரு உடன்பாடு ஏற்பட்டிருக்கலாம், தமிழக காங்கிரஸ் தலைவர் என சொல்லபடும் திருநாவுக்கரசர் எனும் முன்னாள் அதிமுகவின் தலைவர் அந்த நாடகத்தை நடத்தலாம்

விலாங்கு மீன் பாம்புக்கு தலையினையும் மீனுக்கு வாலினையும் காட்டுவது போல, டெல்லி பிரச்சினைகளில் பாஜகவிற்கு ஆதரவு, வருங்காலத்தில் அதிமுகவிற்கு ஆதரவு என அதிமுகவின் நகர்வு இருக்கின்றது

இதில் மிக காட்டமாக பார்க்கவேண்டிய கட்சி திமுக‌

Image may contain: one or more people and indoorநாம் முன்பே சொன்னதுதான், திமுக அதிமுக இடையே ஒரு ரகசிய இணைப்பு இப்பொழுது தெரிகின்றது, சும்மா ஏதாவது சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகின்றார் ஸ்டாலின்

அது பல இடங்களில் தெரிந்தது, குட்கா விவகாரம், சட்டமன்ற தொடர் என பல இடங்களில் அது புரிந்தது

அது இன்னொரு கட்சி தமிழகத்தில் பலம்பெற்றுவிட கூடாது எனும் அச்சமா அல்லது தந்திரமா என தெரியவில்லை, ஆனால் ஒரு உடன்பாடு இருக்கின்றது

ஆக திமுக, அதிமுக, காங்கிரஸ் என எல்லா கட்சிகளின் கூட்டுசதியிலே பெங்களூர் சிறையில் சசிகலா அட்டகாசம் செய்கின்றார்

இதில் மகா விசித்திரம் என்ன?

ஜெயா சொத்துகுவிப்பு வழக்கினை நடத்தியதே திமுக, 18 ஆண்டுகாலம் கலைஞரின் போராட்டம் கொஞ்சமல்ல, பின் பெங்களூருக்கு நகர்த்த சொன்னதும் திமுக‌

அந்த திமுக போராட்டம் இல்லையென்றால் இந்த வழக்குமில்லை, சசிகலாவிற்கு தண்டனையுமில்லை

அதுவும் குன்ஹாவினை குமாரசாமி நிராகரித்தபின்னும், டெல்லிக்கு சென்று போராடியது திமுக‌

ஆனால் அதே திமுக இன்று சசிகலா சிறையில் அரசாங்கம் நடத்தும்பொழுது மகா அமைதி, இதற்கா இவ்வளவு போராட்டம்?

இந்நேரம் கலைஞர் இருந்திருந்தால் சசிகலாவினை திகாருக்கு மாற்றுங்கள் என அன்பழகனை கொண்டு கோர்ட்டில் மனுசெய்திருப்பார், அதுதான் கலைஞர்

இது கலைஞரின் திமுக அல்ல, அது தன் போர்குணத்தினை இழந்துவிட்டது, கர்ஜனையும் பலமும் போனால் அது என்ன சிங்கம்? அதன் பெயர் சவம்

அதிமுக அப்படித்தான் லஞ்சத்தை வீசியடிக்கும் கட்சி, காங்கிரஸ் அக்காலத்திலிருந்தே அதிமுக அனுதாப கட்சிதான், ஜெயாவின் ஆணவத்திற்காய் அது கலைஞரோடு கைகோர்த்தது, இன்று ஜெயா இல்லாததால் ஒட்டி கொள்கின்றது

பாஜக பற்றி சொல்வதற்கில்லை, ஆனால் இந்த கன்னட‌ காங்கிரஸ் அளவு மோசமில்லை

ஆனால் திமுக?

எப்படி இருந்த திமுக? எப்படி எல்லாம் தமிழகத்தில் மல்லு கட்டும் திமுக? ஜெயாவினை குற்றவாளி என அறிவிக்க வைக்க தர்மயுத்தம் நடத்தி அதில் வென்று சசிகலாவினை உள்ளே தள்ளிய திமுக இப்படி ஆகிவிட்டதுதான் ஆச்சரியம்

அப்படி என்ன பயம்?

பாஜக தமிழகத்தில் வளர்ந்துவிடும் என்றா, அதிமுகவுடன் கைகோர்க்க துணிகின்றார்கள்?

இந்த பயம் திமுகவிற்கே வந்துவிட்டால், நம்மால் நிச்சயம் வளர முடியும் எனும் நம்பிக்கை பாஜகவிற்கு ஏன் வராது?

ஆனானபட்ட திமுக நமக்கு அஞ்சி அதிமுகவுன் மேஜைக்கு கீழ் கைகோர்க்கின்றது எனும் பெரும் தைரியம் பாஜகவிற்கு எவ்வளவு தன்னம்பிக்கையினை கொடுக்கும் தெரியுமா?

அது கொடுக்கட்டும்..

போயஸ் கார்டன் சமையல்காரி சசிகலாவிற்கு சிறையில் சமைத்தார், அதே டிரைவர் கார் ஓட்டினார் என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன‌

நமது எதிர்பார்ப்பெல்லாம் சிறையில் சசிகலாவிற்கு மேக்‍அப் போட்டு கொண்டை போட்டது போயஸ் கார்டன் ஆளா? இல்லை பெங்களூரில் சரோஜாதேவிக்கு ஒப்பனை செய்யும் மேக்கப் ஸ்பெஷலிஸ்டா என்பதுதான்

பல செய்திகள் வருகின்றன, அதில் நிச்சயம் அந்த செய்தியும் வரும்

 
 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s