அற்புத சண்டை கலைஞன் புரூஸ்லீ நினைவுநாள்

Image may contain: 1 personஅவன் அமெரிக்காவில்தான் பிறந்தான், ஆனால் சீன தந்தை அவனை ஹாங்காங்கிற்கு கொண்டுசென்று வளர்த்தார். அவனோ பள்ளிக்கு செல்லும் பொழுதெல்லாம் நாலுவார்த்தை கற்றானோ இல்லையோ 4 பேரை அடிக்க மறக்காமல் கற்றுகொண்டான்

அவ்வப்போது குழந்தை நட்சத்திரமாக ஹாங்காங் படத்திலும் வந்தான், ஆனால் முழுநேர தொழில் மற்றும் பொழுதுபோக்கு எங்காவது தெருவில் சண்டையிடுவது, போதாகுறைக்கு குங்பூ வேறு கற்றுவிட்டான், அட்டகாசம் தாளவில்லை

அவன் தாதாவாக வேறு மாறிவிட்டான், அவனுக்கு கீழ் 10 அடியாள்.

பொறுத்துபார்த்த தந்தை அவன் கையில் 100 டாலரை கொடுத்து அமெரிக்காவிற்கு விரட்டினார், காரணம் பொழுதுதோறும் பஞ்சாயத்து என்றால் எப்படி?

அமெரிக்கா சென்றவனுக்கு சும்மா இருக்க முடியவில்லை, சரி இங்கு அடிக்கமுடியாது எல்லோரும் இடிமாடு போல இருக்கின்றார்கள், சண்டை சொல்லிகொடுக்கலாம்

குங்பூ கராத்தே டேக்வாண்டோ எல்லாம் கலந்து ஜீட்குண்டோ என அவனே ஒரு சண்டை கலை தொடங்கினான்

நல்ல மாஸ்டர்தான், ஆனால் அவனின் ஆசை சினிமாவில் நடிக்க தூண்டியது, ஹாலிவுட்டில் நடிக்க சில உடலமைப்பு அவசியம், முதலில் உயரமாக நிறமாக கட்டுடலோடு நல்ல முகவெட்டில் இருக்கவேண்டும், ஐரோப்பியர் அல்லது அமெரிக்கராக இருக்கவேண்டும் என பல சட்டங்கள்

ஒடுங்கிய தேகமும், இடுங்கிய கண்ணும் கொண்ட அந்த சீன இளைஞனை பரிகாசம் செய்தே விரட்டினார்கள், அவன் சீறியபடி சொன்னான் உங்களுக்கெல்லாம் நான் தான் போட்டி

யார் நம்புவார்கள்? அந்த லீயினை விரட்டியே விட்டார்கள்

ஹாங்காங் திரும்பிய லீ, புரூஸ் லீயானான். தி பிக் பாஸ், ஸ்பிட் ஆஃப் பியூரி ஆகிய இரு படங்களில் நடித்தார், பெயர் சொன்ன படங்கள்தான், ஆனால் ஹாலிவுட் கண்டுகொள்ளவில்லை

ஓஓ அப்படியா இதோ பார் என “ரிட்டன் ஆப் தி டிராகன்” படத்தினை அவரே எடுத்தார், அது உலகெமெல்லாம் மக்களை கவர்ந்தது, குறிப்பாக இளைஞர்களை

கேமரா வித்தைகள் இல்லாமல் அதிவேகமாக அதேநேரத்தில் தத்ரூபமாக சண்டைப் போடக்கூடிய திறமைசாலி என்பதை அந்தப்படம் அமெரிக்கர்களுக்கு உணர்த்தியது.

“யாராய்யா இவன் உடலை அப்படி வைத்திருக்கின்றான், எல்லா ஆயுதமும் அவன் கையில் அப்படி சுழல்கின்றது, ஆயுதம் இல்லாமலே எல்லா ஆயுதமும் சமாளிக்கின்றான் என அதிசயத்தது” உலகம்

ஆம் அழகாலும், நடிப்பாலும் , கேமரா கோணத்தாலும் இயங்கிய மேற்கு சினிமாவினை தன் சண்டைகாட்சி ஒன்றால் உடைத்து அதன் போக்கினை மாற்றினார் புருஸ் லீ

அமெரிக்காவில் அவர் படங்கள் பிய்த்துகொண்டு ஓடின, எங்கு பார்த்தாலும் புருஸ் லீ

அமெரிக்க முதலாளிகள் அவர்முன் குனிந்து நின்றார்கள், ஹாலிவுட் படத்தில் நடிக்க அழைத்தார்கள், எந்த ஹாலிவுட் அவரை விரட்டியதோ அதே ஹாலிவுட் காலில் விழுந்து அழைத்தது

எண்டர் தி டிராகன் என சொல்லி ஹாலிவுட்டில் இரு மாதத்தில் தயாரானது, வேலை முடிந்தது இன்னும் இரு வாரத்தில் படம் ரீலிஸ் என்றார்கள்

புரூஸ்லி தன் இன்னொரு படமான கேம் ஆப் டெத் என்பதை தொடங்கியிருந்தார், அந்த வேலை விஷயமாக அவர் வெளியே சென்றபொழுதுதான் அவரின் மரணம் நிகழ்ந்தது

இதே ஜூலை 20.

எந்த மனிதனுக்கும் வாய்க்க கூடாத சாபம் அவருக்கு வாய்த்த்திருந்தது, ஆம் அவர் இறந்த பின்புதான் “எண்டர் தி டிராகன்” படம் வெளிவந்தது, வெற்றி என்றால் பெரும் வெற்றி

ஆனால் அதனை காணவோ, அதனை கொண்டாடவோ புருஸ்லி இல்லை

அவன் ஹாலிவுட்டில் நடித்தது அந்த ஒரு படம் தான், ஆனால் சாகா புகழை அவனுக்கு கொடுத்தது, அதன் பின் உலகெங்கும் அவனால் கராத்தே, குங்பூ பள்ளிகள் தொடங்கபட்டன, எல்லா பள்ளிகளிலும் புருஸ் லீ படம் இருந்தது, இன்றும் இருக்கின்றது

உலகெல்லாம் அந்த தற்காப்பு கலைகளுக்கு பெரும் அடையாளம் கொடுத்த அவன் கொஞ்ச நாள் இருந்திருப்பானானால் இன்னும் பெரும் உயரம் சென்றிருப்பான்

அவன் சாகும் பொழுது வயது வெறும் 32.

இன்றுவரை அவன் சாவு மர்மமே, அவன் புகழை தாங்கமுடியாத சில எதிரிகள் அவன் காதலியின் மூலம் விஷம் கொடுத்தனர், சண்டையில் தலையில் அடிபட்டு இறந்தான் என பல மர்ம கதைகள் வந்தாலும் அப்பல்லோ மர்மம் போல புரூஸ் லீ மர்மமும் தொடர்கின்றது

ஹாங்காங் அரசு பெரும் முயற்சி எடுத்தும் அந்த மர்மம் தீரவில்லை

ஹாலிவுட்டில் ஒரே ஒரு படம் நடித்து, அது வெளிவருவதற்குள் தன் ஆயுளை புரூஸ் லீ முடித்து கொண்டாலும் , தன் ஆயுள் முழுவதும் அடையவேண்டிய புகழை அந்த ஒரு படத்திலே அடைந்துவிட்டார்.

இன்றும் ஹாங்காங்கில் அவர் சிறுவயதில் தெரு சண்டையிட்ட இடத்தில் அவருக்கு சிலை உண்டு, அதனை கடந்து போகும் யாரும் கண்ணீர் விட தவறுவதில்லை

தெருச்சண்டையில் பெரும் கில்லாடிகளில் இப்படிபட்டவர்களும் இருக்கலாம், நமது ஊர் தெருசண்டைக்காரர் எல்லாம் சாதிக்காக சண்டையிட்டு செத்துபோவதோடு சரி

புரூஸ்லீ போல சாதிக்க அவர்களுக்கு சிந்தனையுமில்லை, ஆர்வமுமில்லை

இன்று அந்த அற்புத சண்டை கலைஞனின் நினைவுநாள், பெரும் புகழை அடைந்துவிட்ட அந்த மகா கலைஞன் உலகிற்கு சொன்னது இதுதான்

“பலம் என்றோ, அழகு என்றோ மனிதனிடம் ஒன்றும் இல்லை. மனமும் உடல் உறுதியும் நம்பிக்கையுமே மகா முக்கியம், அது இருந்தால் போதும் எதனையும் சாதிக்கலாம்”

ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்து இன்றோடு 57 வருடம் ஆகின்றது

Image may contain: one or more people and outdoorஅதுவரை மானிட குலம் விண்வெளிக்கு பறந்ததில்லை, மனிதன் பறக்க ஆரம்பித்து 60 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் வளிமண்டலத்தை கூட அவனால் எட்டமுடியவில்லை

ஹிட்லரின் உத்தரவுபடி ஏவுகனைகளுக்கான‌ இன்சினை வார்ன் பிரவுண் தயாரித்து அதனை சோதித்து கொண்டிருக்குந்த பொழுதே ஹிட்லரின் காலம் முடிந்தது

ஹிட்லரின் விஞ்ஞானிகளை பங்குபோட்டு கொண்டனர் அமெரிக்காவும் ரஷ்யாவும், அதாவது பொது எதிரியினை ஒழித்தபின் அமெரிக்காவும் ரஷ்யாவும் எதிரியாயிருந்தன‌

இந்த விஞ்ஞானிகள் எல்லாம் போர்குற்றவாளிகள், சதாமின் கெமிக்கல் அலி தூக்கில் தொங்கியதை போல தொங்கியிருக்கவேண்டியவர்கள், ஆனால் வல்லரசுகள் விடுமா?

Image may contain: one or more peopleஹிட்லர் செய்த ஆராய்ச்சியினை கேட்டு மலைத்துபோய் நின்றன, கொஞ்சம் பிந்தியிருந்தாலும் ஹிட்லர் பெரும் ஆற்றலை பெற்றிருப்பார், முந்திகொண்டோம். இனி அவர் பெற விரும்பிய ஆற்றலை நாம் பெற்று வல்லரசாவோம்

அப்படித்தான் ஏவுகனை ஆராய்ச்சிகள் தொடங்கின, ஹிட்லர் தொடங்கியிருந்த இன்னொரு ஆராய்ச்சி வட்டவடிவ விமானம்

அவன் அப்படி ஒரு விமானத்தை தயாரித்திருந்தான், அதனால் நெடுந்தூரம் மின்னல் வேகத்தில் பறக்க முடிந்தது என அன்றொரு நம்பிக்கை இருந்தது, அவனே அதில் தப்பித்தான் என்றெல்லாம் கதைகள் உண்டு

அந்த உண்மைகளோ என்னமோ தெரியாது , ஆனால் ஹிட்லர் காலத்திற்கு பின்புதான் பறக்கும் தட்டுக்கள் பற்றிய கதை வந்ததும் மறுக்க‌ முடியாது.

அலெக்ஸாண்டர் காலத்தில் குதிரைபடை பலம் வாய்ந்தது , நெப்போலியன் காலத்தில் பீரங்கிபடையும் , துப்பாக்கி பிரிவும் பலம் வாய்ந்தது, பிரிட்டன் காலத்தில் கப்பல்படை வெற்றியினை சொன்னது

ஹிட்லர்தான் விண்வெளியுத்தம் பற்றி முதலில் சொன்னான், அடுத்த தலைமுறையில் விண்வெளி பலமே வெற்றியினை நிர்ணயிக்கும்

அப்படி அவன் தொடங்கியிருந்த ஆராய்ச்சிதான் அமெரிக்காவிலும்,ரஷ்யாவிலும் தொடர்ந்தன‌

முதல் வெற்றி என்னமோ ரஷ்யாவிற்குத்தான். ஸ்புட்னிக் என்றும் லூனார் என்றும் விண்வெளியில் கலங்களை செலுத்தி அசத்தியது, அமெரிக்காவிற்கு அதிர்ச்சி

அந்த அதிர்ச்சி தீருமுன் லைக்கா எனும் நாயினை அனுப்பியது, பின் தவறுகளை சரி செய்து யூரி ககாரின் எனும் முதல் விண்வெளி மனிதனை அனுப்பியது

அமெரிக்கா அதிர்ச்சியில் இருந்தபொழுதே தெரஸ்கோவா எனும் பெண்ணை அனுப்பியது.

விண்வெளியின் ஆதாம், ஏவாள் இவர்கள்தான்.

விண்வெளி அறிவில் ரஷ்யா முன்னேறுவது அமெரிக்காவிற்கு பெரும் அச்சத்தை கொடுத்தது, இந்த அனுபவம் ரஷ்ய ராணுவம் பக்கம் திரும்புமானால் அமெரிக்கா அவ்வளவுதான்

அப்பொழுது அங்கு கென்னடி அதிபராக இருந்தார், துணிச்சல் மிக்கவர் அல்லவா? சவால் விட்டார் இன்னும் கொஞ்சநாளில் ஒரு அமெரிக்கர் நிலாவில் கால்பதிப்பார்

யாரும் நம்பவில்லை, அமெரிக்கர்கள் கடுமையாக உழைத்த்தார்கள், நிறைய தோல்விகள் கொஞ்சம் உயிரிழப்பும் உண்டு

ஆனாலும் அஞ்சாமல் போராடி நிலாவில் இதே ஜூலை 20ல் கால் வைத்தார்கள், ஆனால் பார்க்க கென்னடி இல்லை அவர் அதற்கு முன்பே கொல்லபட்டிருந்தார்

மானிட வரலாற்றில் அது பெரும் நிகழ்வு, 1945 வரை அப்படி யாரும் சிந்தித்தது கூட இல்லை , ஆனால் அடுத்த 22 ஆண்டுகளில் அது சாத்தியம்

முதல் காரணம் ஹிட்லர், இரண்டாம் காரணம் அமெரிக்க ரஷ்ய பனிப்போர்

அமெரிக்கா கொண்டாட, ரஷ்யாவோ இது சாத்தியமில்லை என்றது காரணம் அன்றைய தொழில்நுட்பத்துபடி 10% கூட அப்பயணம் சாத்தியமில்லை, எங்கோ செட் போட்டு படம் எடுத்துவிட்டு அமெரிக்கா ஏமாற்றுகின்றது என்றது. அது ரஷ்யர்களின் இயலாமையில் உருவாக்கபட்ட கட்டுகதை என சொன்னது அமெரிக்கா

அந்த சர்ச்சை இக்காலம் வரை உண்டு

ஆனாலும் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்தார் என்றே வரலாற்று குறிப்புகள் உண்டு, அமெரிக்காவின் பிற்கால சாதனைகளும் அதனை வலுப்படுத்துகின்றன‌

தங்களில் யார் பெரியவன் என காட்ட அப்பயணத்தை அமெரிக்கா செய்தாலும் அதன் மூலம் விண்வெளி கனவு சாத்தியபட்டது, ஏகபட்ட மாறுதல்கள் உலகில் வந்தன‌

இன்றோடு 57 வருடம் ஆகின்றது, ஆம்ஸ்டாராங்கும் இன்று இல்லை

ஆனால் அவர் சொன்ன வார்த்தை உண்மையானது

“நிலவில் நான் வைத்தது சிறிய அடிதான், ஆனால் மானிட குலத்தின் பாய்ச்சல் மிக நீளமானது”

அப்படி மறக்கமுடியாத நாள் இன்று

முரசொலி பவள விழாவில் ரஜினி கமல் பங்கேற்பு

முரசொலி பவள விழாவில் ரஜினி கமல் பங்கேற்பு

இரு நாள் தூங்காமல் போர் நடத்தியதில்
காயம்பட்ட நெப்போலியன் களத்திலிருந்து வெளியேறிவிட்டான், அவன் தூங்கியே ஆகவேண்டிய நிலை

அந்த சேனைக்கோ என்ன செய்வதென அறியாத நிலை , அவனை எழுப்பியே ஆகவேண்டிய நிலை, சென்றார்கள்

அவன் தூங்கும் அறைக்கு வெளியே ஒரு மேஜையில் சில குறிப்புகள் இருந்தனவாம்

தான் வெளியேறிவிட்டாலும் என்னென்ன செய்யவேண்டும் என அவன் எழுதி வைத்துவிட்டுத்தான் ஓய்வெடுக்க சென்றான் அந்த மாவீரன்

அப்படியே சேனையும் போரிட்டு வெற்றிகொடி ஏற்றியது

கலைஞரும் எல்லா காலத்திற்கும் திமுகவிற்கு எல்லா வியூகமும் வகுத்துவிட்டுத்தான் ஓய்வில் இருக்கின்றார்,

இனி வெல்ல வேண்டியது சேனையின் பொறுப்பு


மராட்டிய ரஜினியையும்,பரமக்குடி பார்ப்பணரயும் விரட்டுவோம் : சீமான்

இதே வாய்தான் பிராமணர் எல்லாம் தமிழர் என்றது, இன்று இதே நாரவாய்தான் கமல் பிராமணர் என்கின்றது

இதற்கு இந்த தவளைவாயன் சீமான் இப்படி சொல்லிவிடலாம், “அதிமுகவினை எதிர்க்கவரும் எல்லோரும் எங்கள் எதிரிதான்”

தமிழ் கூறும் நல் உலகம் அறிந்துகொள்ளவேண்டிய செய்தியும் அதுதான். அதாவது சீமான் போயஸ் தோட்டத்து வளர்ப்பு நாய்களில் ஒருவர். அதிமுகவினரை யாராவது சீண்டிவிட்டால் குரைப்பார், கடிக்க வருவார்.

ஆனால் விரைவில் அது எல்லோரிடமும் கல்லெறி வாங்கி
கொண்டு ஓடப்போவதும் உறுதி, கல்லடி பலமாக இருந்து செத்தாலும் சாகலாம்


 

ஆண்பால் பெண்பால் அன்பால் …

Image may contain: 1 person, smiling, textசிகப்பு ரோஜாக்கள் கமலஹாசன் பெண்களால் பாதிக்கபட்டு சைக்கோ ஆனதை படமாக பார்த்திருப்போம்

அப்படி ஆண்களாலும் பாதிக்கபட்டு உண்மையில் ஒரு மாதிரி ஆகிவிட்டவர்கள் நிறையபேர் இருப்பார்கள் போலும், அது சிக்கல் இல்லை ஆனால் அவர்கள் எழுத வந்து நிற்பதுதான் மகா சிக்கல்

சில மதவெறியர்களின் கொடூர எழுத்துக்கள் போல, சில சாமியார்களின் அரைகுறை உளறல் போல இந்த பெண்ணும் அப்பட்டமான ஆண் வெறுப்பில் எழுதிகொண்டிருக்கின்றது

சொந்த பாதிப்பினை ஏதோ உலகளாவிய பாதிப்பாக எண்ணுவது ஒரு வகை வியாதி

அந்த வியாதியில் பல வகையான ஆகாத சிந்தனை எல்லாம் வரும், அதனை எல்லாம் பொதுவில் எழுதமுடியுமா? முடியும் என்கின்றது விகடன் பத்திரிகை

இந்த அம்மணி ஆண்பால், பெண்பால், அன்பால், அமலா பால். சந்தர் பால், ஆவின் பால் என என்னமோ எழுதுகின்றார், பார்த்தால் உவ்வே ரகம்

பெரும் மனபாதிப்பும், குழப்பமும் இல்லாமல் இப்படி எல்லாம் எழுத முடியாது,

இவர் எழுதுவது எல்லாம் எழுத்து என்றால் “சரோஜா தேவி” போன்ற மஞ்சள் பத்திரிகைகளுக்கு தேசிய விருதும், அது என்ன தேசிய விருது? புக்கர் போன்ற அகில உலக விருதும் வழங்கபட வேண்டும்

விகடன் அதற்குத்தான் ஆசைபடுகின்றது.

எப்படி இருந்த விகடன்? எத்தனை பெரும் ஜாம்பவான்கள் எழுதிய விகடன், இப்பொழுது இப்படிபட்ட ஒருமாதிரி ஆட்களையும் எழுத வைத்து பார்த்துகொண்டிருகின்றது.

மாத்ரூபூதம் அளவிற்கு சீறும் அம்மணி என்ன படித்திருகின்றது என விசாரித்தால் அம்மணி அப்படி ஒன்றும் ஆராய்ச்சி படிப்பெல்லாம் படிக்கவில்லை, பெரும் போராளியும் இல்லை. எங்கோ பெற்ற கசப்பான அனுபவத்தை ஏதோ பெரும் புரட்சி போல சொல்லிகொண்டிருக்கின்றது.

அரைகுறை வைத்தியன் ஆபத்தானவன் என்பது போல, இந்த அரைகுறை புரட்சியாளர்களும் மகா ஆபத்தானவர்கள், பெரும் குழப்பத்தினை சமூகத்திற்கு கொடுப்பார்கள்.

இவரை விட ஐ.எஸ் இயக்க தலைவர் அல்பத்தாதியினை விகடனில் எழுத வைக்கலாம், இவர் அளவிற்கு அவர் சமூகத்திற்கு ஆபத்தானவர் அல்ல.


அந்த பெண்ணிய புரட்சிவாதி ஆண்பால், பெண்பால், அன்பால் என சொல்லிகொண்டிருப்பவர் யாரென தேடினால், Kavignar Thamarai வந்து,  இவர்தான் தியாகுவுடன் ஓடியவர், ஓடியதோடு மட்டுமன்றி எல்லாம் சுருட்டியவர் என சொல்லிகொண்டிருக்கின்றார்.

இந்த சமாச்சாரமெல்லாம் முன்பு வராத பத்திரிகைகள் இல்லை, பெரும் வில்லங்கமான செய்திகளாக அவை வந்ததெல்லாம் நினைவுக்கு வருகின்றன,

அவரா இவர்? இவரா அவர் என நினைக்கும்பொழுதே தலை சுற்றுகின்றது

இது முதலிலே தெரிந்திருந்தால்” ஓஓ அவரா அப்படித்தான் எழுதுவார்..” என சொல்லிவிட்டு நகரலாம்

தியாகு என்பவர் எப்படிபட்டவர் என்பது உலகிற்கே தெரிந்தது, அவருடன் அடைக்கலமானவர் எப்படி இருப்பார் என்பது எழுத்திலே தெரிகின்றது

இவர்தான் வாழும் அரிஸ்டாட்டிலாக தத்துவம் பேசுகின்றாரா? எல்லாம் தமிழ்நாட்டு தலைவிதி என சொல்லிவிட்டு நகர வேண்டியதுதான்

இதற்கு மேலும் தகவல் வேண்டுமென்றால், ஆண்பால் பெண்பால், என எல்லோரும் Kavignar Thamaraiயிடம் கேட்டுகொள்ளலாம்

“அன்பால்” என்றால் என்னவென்று விளக்க அவர் தயாராக இருக்கின்றார்.


நாங்கள் கமலுக்கு உறுதுணையாக இருப்போம் : விஷால்

கமலஹாசன் சலசலப்பு ரஜினியின் அரசியல் வருகைக்கு வைக்கபடும் மிரட்டல் அல்லது செக் என பலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

உண்மையில் தமிழக அரசும் கமலஹாசனும் கட்டிபுரண்டு சண்டையிடுவதில் ரஜினிக்குத்தான் நிம்மதி, எப்படியோ தன்னை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதில் அவருக்கு மகா மகிழ்ச்சி

ரஜினியினை உணர்ந்த யாரும் எளிதாக யூகிக்கும் விஷயம் அது, தனக்கு வந்தது கமலைபோட்டு தாக்குகின்றது என்பதில் அவருக்கே ஆறுதல்.

கமலஹாசனை சிலர் ஆட்டுவிக்கின்றனர் என பலர் சொல்கின்றனர், இருக்கலாமோ இல்லையோ தெரியாது.

ஆனால் எம்மிடம் கேட்டால் கமலை யாரோ தூண்டிவிடுகின்றார்கள் என்றால் அது சாட்சாத் அந்த ரஜினியாகவே இருக்கலாம்

ஏன்?

ஒருவேளை கமல் அரசியலுக்கு வந்தால், “ஹஹஹஹா..” என வந்து “இப்போதைக்கு கமலுக்கு ஆதரவு, எனக்கான நேரம் வரும் பொழுது நிச்சயம் அரசியலுக்கு வருவேன்” என சொல்லிவிட்டு செல்ல அவருக்குத்தான் மிக வசதி


நாங்கள் கமலுக்கு உறுதுணையாக இருப்போம் : விஷால்

விஷாலேதான், ஆம் அவரேதான் இப்படி எல்லாம் பேசுகின்றார், சில ஆச்சரியங்களும் நடக்கத்தான் செய்கின்றன.

இப்படி கமலோடு நிலைத்து நின்றால் வாழ்த்துக்கள்.


ஸ்டாலின், ஓபிஎஸ், கமல் 3 பேரும் சேர்ந்து கூட்டு வைத்தது போல் தோன்றுகிறது: ஜெயக்குமார்

எங்களுக்கும் சசிகலா, சித்தராமையா, திருநாவுக்கரசர் எடப்பாடி, மோடிராகுல், சு.சாமி, கவர்ணர், கருணாஸ் என எல்லோரும் கூட்டு வைத்தது போலத்தான் தோன்றுகின்றது

அந்த கூட்டில் இவரும் உண்டு என ஆறாவது அறிவும் சொல்கின்றது


Image may contain: 1 person, textராமசந்திரனும், வி.என் ஜாணகியும், ஜெயலலிதாவும் ஆக்ஸ்போர்டிலும், கேம்பிரிட்ஜ்லிலும் பட்டம் பெற்றவர்களா?

இல்லை இவர்தான் பொருளாதார மேதையா?

கலைஞருக்கு பின் அரசியல் தெரிந்தவர் யார் முதல்வரானார் அய்யா?

அரசியல் தெரியாதவன் கமலஹாசன் என்றால், இவர் செய்த புளிவியாபாராத்தின் பெயர் என்ன?


 

சமீபத்தில் இரு விஷயங்களில் இந்தியா சாதித்திருக்கின்றது

சமீபத்தில் இரு விஷயங்களில் இந்தியா சாதித்திருக்கின்றது

மிகபெரும் லஷ்கர் தீவிரவாதி ஒருவன், நாட்டின் பல நாசவேலைகளுக்கு காரணமான அவன் சலீம் கான். துபாய்க்கு தப்பிய அவன் அங்கு சாதரண தொழிலாளியாக வேலை செய்திருக்கின்றான்

மறுபடியும் ஏதோ திட்டத்துடன் மும்பை வந்த அவனை ஈரசாக்கு போட்டு தூக்கிவிட்டது மும்பை போலீஸ்

அதாவது அவன் துபாயின் என்ன செய்கின்றான்? எந்த போலிபாஸ்போர்ட்டில் வருகின்றான் என சகலத்தையும் இந்திய உளவுதுறை திரட்டியிருக்கின்றது, பின் அவன் மும்பை வரும் தகவலை சொல்லிவிட்டது, அமுக்கிவிட்டார்கள்

இந்திய உளவுதுறை இப்படி சில விஷயங்களில் அசத்தும், வாழ்த்துக்கள்

இன்னொரு விஷயம் இந்த ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சம்பந்தபட்ட இத்தாலி கம்பெனியின் நிர்வாக‌ அதிகாரி துபாயில் தூக்கபட்டிருக்கின்றார்,

என்னதான் நல்ல விஷயங்கள் இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சியில் இரு கருப்பு புள்ளிகள் உண்டு, ஒன்று போபால் ஆண்டர்சனை தப்ப விட்டது, இன்னொன்று போபர்ஸ் குவாத்ரோச்சியினை பிடிக்காமல் விட்டது

இரு சர்சையான “போ”பால், “போ”பர்ஸ் விவகாரங்களின் முதலைகளை “போ” என அனுப்பியது இந்தியா

அட குவாத்ரோச்சி மலேசியால் இருந்தார், இந்தியா கேட்டுகொண்டே இருந்தது அவர்கள் கொடுக்கவில்லை. இதுவே இஸ்ரேலாக இருந்தால் ஈச்மென் பாணியில் தூக்கியிருப்பார்கள்

இந்தியா ஏன் செய்யவில்லை என்றால் தெரியவில்லை, ஆனால் ராஜிவ் அவரை கொண்டுவருவதில் தீவிரமாக இருந்தபொழுது கொல்லபட்டார், அதன் பின் குவாத்ரோச்சிக்கு சிக்கல் இல்லை

இந்த வழக்கு அப்படி அல்லாமல் ஓரளவு வேகமாக குற்றவாளிகள் தூக்கபடுவது நல்ல விஷயம்

அது என்ன போபர்ஸ் என்றாலும் இத்தாலி, ஹெலிகாப்டர் என்றாலும் இத்தாலி? உலகில் வேறு நாடுகளே இல்லையா?

இருக்கட்டும்

எப்படியோ துபாயில் இந்தியா பல விவகாரங்களில் சாதிப்பது நல்ல விஷயம், இந்திய வெளியுறவு மற்றும் உளவுதுறை பல விஷயங்களில் அமைதியாக சாதிக்கின்றது வாழ்த்துக்கள்

அப்படியானால் விஜய் மல்லையா லலித் மோடி எல்லாம் இப்படி கொத்தபடுவார்களா 
என்றால் பதில் இல்லை 🙂

ஆனால் தூக்கவேண்டும் என முடிவெடுத்தால் தூக்கிவிடலாம், ஆனால் முடிவு எடுக்க வேண்டும் அல்லவா? அதுதான் சிக்கல்.

அடால்ப் ஈச்மென் Vs மொசாத் : 05

Image may contain: one or more people and people sittingபெரும் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தது குழு. பட்சி சிக்கியாயிற்று இனி உயிரோடு இஸ்ரேல் கொண்டுசெல்லவேண்டும்.

பக்கத்து நாடு என்றால் பொதுவாக தொட்டி ஆட்டோவிலே கடத்துவார்கள்.

ஐரோப்பா என்றால் ஏதாவது ஒரு மீன்பாடி வண்டி அல்லது மினிலாரி அல்லது ஆம்புலன்ஸ்லில் கொண்டு சென்று ஆளில்லா கடல்கரை வழியாக படகில் நடுகடலில் நிற்கும் இஸ்ரேல் படகினை அடைவார்கள், நடுக்கடலில் எந்த குடியுரிமை சோதனையையும் கடல்மீன்கள் செய்யாது.

ஐரோப்பா மற்றும் மேற்காசியாவில் இப்படித்தான் செய்வார்கள், குடியுரிமை சோதனை பாஸ்போர்ட் எல்லாம் அவர்களுக்கு தேவையே இல்லை.

ஆனால் அர்ஜெண்டினா மிக மிக தொலைவான நாடு, இவை ஏதும் சாத்தியமில்லை , விமான பயணமே சாத்தியம், ஆக குடியிரிமை சோதனையினை ஈச்மென் கடந்தாக வேண்டும்.

ஆனால் ஈச்மென் விடுவாரா? விமான நிலைய வாசலிலே என்னை கடத்துகின்றார்கள், நான் நாசி என சொல்லிவிடுவார். அதற்காக அவரை வாயினை பொத்தியும் கொண்டு செல்லமுடியாது, இமிகிரேஷனில் சிக்கல்.

சரக்குக்கு விமானத்தில் புகையிலை பெட்டி இடையே போட்டும் அனுப்பமுடியாது.

விஷயம் தெரிந்தால் எந்த நாட்டு எல்லையிலாவது சிக்கிவிடும் அபாயம் உண்டு, அப்படியே கப்பலில் தூக்கிபோட்டாலும் நெடுநாள் பயணம் சரிவராது.

இது மிக மிக அவசரமாக கொண்டுசெல்லபடவெண்டிய விஷயம்.

னியனை உயிரோடு வேறுகொண்டு செல்லவேண்டும் என பென் குரியன் சொல்லிவிட்டார் அதுதான் மகா முக்கியம், இல்லையென்றால் இப்பொழுதே தீர்த்துவிட்டு செல்லலாம்.Image may contain: one or more people, shoes and indoor

ஆனால் இவன் எல்லா யூதரும் பார்க்க பார்க்கத்தான் சாகவேண்டும்.

ஆக இவர் குடியுரிமை சோதனையினை கடந்து ஆகவேண்டும் ஆனால் பேசகூடாது, இதுதான் பிரச்சினை.

சரி ஒரு மனிதன் சுயநினைவில் இருந்தால்தானே பேசுவான், சுயநினைவு அற்ற நிலை என்றால் எப்படி பேசுவான், சரி பேசாதவனாக்கி விடலாம்.

வசூல்ராஜா படத்தில் வரும் சப்ஜெக்ட் ஆக்கிவிட்டால் சிக்கலே இல்லை. ஆக்கிவிடலாம்.

நாடு இப்பொழுது கொண்டாட்டத்தில் இருக்கின்றது, விமான நிலையம் மூல்ம் செல்லலாம், ஈச்மெனுக்கு உடனடியாக பாஸ்போர்ட் வேண்டும், அர்ஜெண்டினா பாஸ்போர்ட்டா?

இல்லை இஸ்ரேலிய பாஸ்போர்ட் அப்பொழுதுதான் அதிக சோதனை இருக்காது, ஓடுங்கள் யூதர்களே என விரட்டுவார்கள்.

எப்படி இஸ்ரேலிய பாஸ்போர்ட் பெறுவது?

Image may contain: 2 people, people sitting and indoorஅர்ஜெண்டினா சுதந்திர தின கொண்டாடத்திற்கு ஒரு இஸ்ரேல் குழு அவர்கள் விமானத்தில் வந்திருந்தது.

அவர்களில் ஒரு விமான சிப்பந்தியின் பாஸ்போர்ட் ஈச்மெனுக்காக மாற்றபட்டது, அந்த ஒரிஜினல் நபர் வேறு பாஸ்போர்ட்டில் பறந்துவிட்டார்.

எல்லா நாட்டு பாஸ்போர்ட்டுகளை தயாரிப்பதில் அவர்கள் பாணியே வேறு

இன்றும் பாருங்கள், மொசாத் நடத்தும் ஆப்பரஷேன்களில் ஐரோப்பிய நாடு, ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து என பலநாட்டு பாஸ்போர்ட்டுகள் கைபற்றபடும்.

ஆனால் பாஸ்போர்ட் சம்பந்தபட்ட‌ நபர் அந்நாட்டில் வான்கோழி சாப்பிட்டுகொண்டிருப்பார், அவரின் பெயர் பாஸ்போட்டில் மொசாத் விளையாடிருக்கும்.

எல்லா நாட்டு பாஸ்போர்ட்டையும் அச்சு பிசகாமல் தயாரிப்பதில் மொசாத் பிஎச்டி முடித்திருந்தது.

கூடுதல் வசதியாக‌ புண்ணிய பூமி ஜெருசலேமிற்கு செல்லும் நபர்கள் மிக அதிகம்.

‘உங்கள் மேல் சந்தேகமாக இருக்கின்றது, இது வேறு ரத்த பூமி கொஞ்சம் ஒத்துழையுங்கள்” என பாஸ்போர்ட்டை கொண்டு சென்று 10 நிமிடத்தில் போலி தயாரித்து விடுவார்கள்.

பின்னர் “நீங்கள் ரொம்ப தூய்மையானவர்” என சொல்லி புன்னகையுடன் கொடுத்துவிடுவார்கள் தேவை படும்பொழுது எடுத்து களமிறங்குவார்கள்.

அப்படி ஈச்மெனுக்கும் பாஸ்போர்ட் தயார் செய்யபட்டு விட்டது, இனி அவர் இஸ்ரேலியர் சிக்கல் இல்லை.

ஆனால் அவர் விமான நிலையத்தில் வாய் பேசகூடாது தன்னை மறந்த நிலையில் இருக்கவேண்டும் அல்லவா?

அடுத்த கட்டமாக ஈச்மென் முன்னால் ஒரு விஸ்கி பாட்டில் வைக்கபட்டது.

தன் முன்னால் இருந்த விஸ்கி பாட்டிலை பார்த்தபடி இருந்தார் ஈச்மென், முழுவதையும் குடிக்குமாறு அன்போடு கேட்டுகொள்ளபட்டார்.

விட்டுத்தான் விஸ்கி கொடுக்கபட்டது, அவர் மல்லாக்கவிழுந்ததும் ஒரு ஊசி போடபட்டது, அது ஒரு வகையான நினைவு மயக்கும் மருந்து.

Image may contain: 2 peopleஒரு காலத்தில் ஹிட்லர் பல வகையான மருந்துகளை தயாரித்து யூதர்மேல் ஊசிகுத்தி பரிசோதித்தார்.

அப்பொழுது உதித்த மருந்தில் ஒரு வகை அது, பரிதாபம் அல்லது பழிவாங்கல் என்னவென்றால் அன்று அந்த கொடுமையை யூதர்மேல் நிகழ்த்திய மேற்பார்வையாளர் சாட்சாத் ஈச்மென், இன்று அவருக்கே குத்தியாகிவிட்டது.

பின்னர் விமான சிப்பந்தி உடை ஈச்மெனுக்கு மாட்டபட்டது.

அவர் இஸ்ரேலிய விமான சிப்பந்தி என்பதுபோல் எல்லாம் தயார் செய்தார்கள், ஒரு காலத்தில் ஹிடலரின் நாசி தொப்பி அணிந்த கம்பீர ஈச்மெனுக்கு.

இஸ்ரேலிய சின்னத்துடன் தொப்பி அண்விக்கபட்டது, சுயநினைவு இல்லையென்றால் ஈச்மென் தற்கொலை செய்திருப்பார், எப்படிபட்ட அவமானம்?

ஈச்மெனின் சட்டை மேலும் விஸ்கி தெளிக்கபட்டது.அப்படியே மயக்கநிலையில் சக்கர நாற்காலிக்கு மாற்றபட்டு, விமான நிலையம் கொண்டு சென்றார்கள்.

மொத்தமாக சென்றால் சிக்கல் வந்துவிடாதா? அதனால் மூவர் மட்டும் சென்றனர், மற்ற 9 பேரும் வேறு வேறு நாடுகளுக்கு செல்லும் கவுண்டர்களில் தனி தனியாக நின்று கண்காணித்தனர்.

அர்ஜெண்டினா குடியுரிமை அதிகாரி முன் சொன்னார்கள் , “இவர் எங்கள் நாட்டுக்காரர் ஆனால் பெரும் குடிகாரர்தான். ஆனால் உங்கள் நாட்டு சரக்கு ம்ம் சும்மா சொல்லகூடாது.

எத்தனையோ நாட்டு சரக்குகளை 10 பாட்டில் குடித்துவிட்டு அசால்டாக நின்றவர் உங்கள்நாட்டு சரக்கில் கால் பாட்டிலிலே சரிந்துவிட்டார், இங்கேயே விட்டு செல்ல முடியுமா?

அங்கே கொண்டு குடும்பத்தாரிடம் போடும் பொறுப்பு எமக்கு இருக்கின்றது, இந்த எருமையினை கொண்டு மதுஅடிமைகள் மறுவாழ்வு நிலையத்தில் சேர்க்க போகின்றோம்” என்றனர்.

அர்ஜெண்டினா இமிகிரேஷன் அதிகாரிகள் அவரை பரிதாபமாக பார்த்தனர், அவர்தான் வசூல்ராஜா ஆனநத்சார் நிலைக்கு சென்றுவிட்டாரே? எங்கு கத்துவது, மொசாத் உறுப்பினர்கள் வேறு அவரை திட்டி முணுமுணுத்தனர்

தங்கள் நாட்டு டாஸ்மாக் சரக்கினை மனதிற்குள் பெருமையாக நினைத்துகொண்டே அவரை பரிதாபமாய் பார்த்தபடி கிளியரன்ஸ் செய்து உள்ளே அனுப்பினார்கள்.

இன்னொன்று அர்ஜெண்டினா விமான நிலையம் மிக மிக பரபரப்பாய் இருந்ததும் ஒரு காரணம். அவரை இஸ்ரேலி விமானத்தில் ஏற்றினார்கள் மொசாத் குழுவினர்.

விமானம் பறந்தது, ஜெருசலேம் பாராளுமன்றத்தில் ஈச்மெனை தாங்கள் கைது செய்திருப்பதாக பிரதமர் பென் குரியன் அறிவித்தார்.

ஈச்மெனுக்கு மறுபடியும் ஒரு ஊசி, “இவ்வளவு நேரம் நான் எங்கிருந்தேன், இது எந்த இடம்” என கேட்டார். இது இஸ்ரேல் என அறிவிக்கபட்டது.

அப்பொழுதுதான் தான் யூதர்களால் கடத்தபட்ட விஷயமே அவருக்கு புரிந்தது.

இஸ்ரேல் எதிர்பார்த்தபடியே அர்ஜெண்டினா பயங்கர ரியாக்ஷன் காட்டியது, சர்வதேச மன்றத்தில் முறையிட்டு அலறியது, அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படியும் தாங்கள் விசாரணை செய்வோம் எனவும் அடம்பிடித்து பார்த்தது.

ஆனால் கடும் பாதுகாப்பில் குண்டு துளைக்காத கூண்டில் வைத்து ஈச்மெனிடம் விசாரணை நடந்தது. எமபாதக ஈச்மென் எல்லாம் அரசு உத்தரவு நான் பணியாளன் என சாதித்தார்.

ஆனால் அவர் செய்த அநியாயங்களையும் கொலைகளையும் அதன் கொடூர முறையினையும் அவர் சொல்ல சொல்ல உலகம் கண்ணீர் விட்டது.

எப்படி எல்லாம் யூதர்களை கொன்றோம் என அவர் சொல்ல, சொல்ல இஸ்ரேல் அழுதது, அதனை உலகிற்கெல்லாம் சொல்லி யூதரும் அழுதார்கள்

பின்னர் அவரை தூக்கிலேற்றி, எரித்து சாம்பலை கடலில் வீசினார்கள், எவ்வளவு காலம் ஆனாலும் தங்கள் மேல் கைவைத்த யாரும் தப்பமாட்ட்டார்கள் என உலகிற்கு காட்டியது இஸ்ரேல்.

அசந்து நின்றது உலகம், சில நாடுகள் மூச்சுவிட கூட மறந்தன, எப்படிபட்ட வன்மம் இஸ்ரேலின் மனதில் இருக்கின்றது என்பதை உலகம் உணர்ந்தது.

மொசாத் உலகினை அசரவைத்த சம்பங்களில் இதுதான் முதன்மையானது, அந்த குழுவின் தலைவர் ரபி எய்டனிடம் வெற்றிக்கு வாழ்த்து சொன்னார்கள்.

எய்டன் சொன்னார் இது பெரும் தோல்வி, ஈச்மென்னுடன் இன்னும் இருவரை கண்டுபிடித்து கடத்தும் திட்டம் இருந்தது, ஆனால் அது தோல்வியில் முடிந்தது என்றார்.

அந்த இருவர் யாரென்றால் ஹிட்லரும் அவரின் இன்னொரு கூட்டாளியும்.

ஆம் ஹிட்லர் சாவதை யாரும் கண்ணால் பார்க்கவில்லை, சோவியத் படைகள் ஹிட்லர் மாளிகையினுள் நுழையும் பொழுது இரு சடலம் எரிந்துகொண்டிருந்தது. ஒன்று ஈவாபிரவுண் இன்னொன்று ஹிட்லர் என சொல்லி எலும்பு மண்டையோட்டை எடுத்து சென்றார்கள் ரஷ்யர்கள்

ஆக ஹிட்லரை அடையாளம் கண்டு கொன்றவர் யாருமில்லை அதனால் ஹிட்லர் தப்பினான், அவன் அர்ஜெண்டினாவில் இருந்தான் என மனமார நம்பியது இஸ்ரேல்

அதற்காக சிக்கிய ஈச்மெனை விட்டுவிடவும் மனமில்லை, தூக்கிவிட்டார்கள். ஈச்மென்னை பிடித்தபின் ஹிட்லர் எவ்வளவு உஷார் ஆகியிருப்பான் என உணர்ந்தது மொசாத்

அதனைத்தான் பெரும் தோல்வி என சொன்னார் ரபி எய்டன்

Image may contain: 1 personஹிட்லரும் மொசாத்தும் சளைத்தவர்கள் அல்ல, ஆனாலும் இறுதிவரை ஹிட்லரை நெருங்கவே முடியவில்லை மர்மாகவே முடிந்தான் ஹிட்லர், இது அவனின் வெற்றி

ஆனால் தன்னால் ஓட ஓட அடிபட்ட இனம் தனிநாடு அடைந்து பெரும் சாகசங்களை படைத்து கொண்டிருப்பதை பார்த்துகொண்டே, தன்னால் உருவாக்கபட்ட ஜெர்மனி கிழக்கு மேற்கு என பிரிக்கபட்டும்.

தன் ராக்கெட் விஞ்ஞானிகளின் உழைப்பால் அமெரிக்காவும் ரஷ்யாவும் விண்வெளி ஆராய்ச்சியில் உச்சம் தொடுவதை எங்கிருந்தோ பார்த்துகொண்டேதான் செத்தான் ஹிட்லர் என்பது இன்றும் இஸ்ரேலியர் நம்பிக்கை.

அதாவது அவன் பூண்டோடு அழிக்க நினைத்த எம் இனம், அவன் மிக வெறுத்து ரசித்து சித்திரவதை செய்து கொன்ற எம் இனம்.

உலகில் அவன் கண்முன்னாலே வாழ்வாங்கு வாழ்கின்றது, உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கின்றது.

இதனை பார்த்துகொண்டே அவன் அனுதினமும் சாகட்டும், அதனை விட என்ன பெரும் தண்டனை அவனுக்கு கொடுக்க முடியும்? என சாந்தியடைந்தது இஸ்ரேல்.

இப்படி விமான பயணிகளை கடத்தியது அல்லது மனிதனை கடத்தியது. இது போக ஒரு விமானத்தையே மொசாத் அட்டகாசமாக கடத்திய கதை உண்டு நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கலாம்.

சிலர் அந்த மியூனிச் சம்பவத்தில் இஸ்ரேல் எப்படி பழிவாங்கிற்று என அறிய ஆவல் என்றார்கள், எழுதலாம்

ஆனால் அதற்கு முன் குஷ்பூ தொடருக்கு நீங்கள் ஆதரவளித்தே தீரவேண்டும்.

 

முற்றும்