“ஓவியா வாழ்க..” என சொல்லாவிட்டால் வெளியேறு…

Image may contain: 1 person, smiling, sitting and indoorபாகம் பிரியாளும் ஓவியா ரசிகையாகிவிட்டார், அதுவும் அதி தீவிர ரசிகை, ஓவியா அழுததால் கிட்டதட்ட பத்ரகாளி கோலத்தில் இருக்கின்றார், அந்த காயதிரியோ ஜூலியோ இந்த வீட்டு பக்கம் வந்தால் கொலைதான், அதுவும் பலமுறை கொல்வார் போல‌..

சுப்பிரமணியபுரம் கிளைமாக்ஸ் காட்சி போல படுகொலை நடத்த கிளம்பிவிடுவாரோ என பேரச்சமாக இருக்கின்றது, அது கூட சிக்கல் இல்லை, அடுத்து வருவதுதான் சிக்கல்

நானும் ஓவியாவினை ஆதரித்து வாக்களிக்காவிட்டால் வீட்டில் சாப்பாடு கிடைக்காது என மிரட்டல்

ஒரு அதிதீவிர ஏக குஷ்பூ ரசிகன் ஓவியாவினை ஆதரிப்பது என்பது ஏற்றுகொள்ளமுடியாத விஷயம், அதற்கு பதிலாக சயனைடு கடிக்கலாம். ஓவியாவினை எல்லாம் நாம் ஆதரித்தால் குஷ்பூவிற்கு என்ன மரியாதை?? சங்கத்திற்கு என்ன மரியாதை? முடியாது என சொல்லியாயிற்று

ஆனாலும் இது அவர் இல்லாத பட்டியல் அதனால் நீ ஓவியாவினை ஆதரிக்கலாம் என்றெல்லாம் மூளையினை சலவை செய்யும் விஷயம் வேகமாக நடந்தது, முடியவில்லை

மூளை இல்லாத இவனை எப்படி மூளை சலவை செய்வது என பாகம்பிரியாளுக்கு தாமதமாக புரிந்திருக்கின்றது, அதனால் நீ குஷ்பூ ரசிகனாகவே இருந்து தொலை, ஆனால் ஓவியாவிற்கு வாக்களித்துவிடு என சாம, பேத தான, தண்ட முறையில் ஆதரவு கோருகின்றார்

எல்லா முறையும் தோல்வியுற்று இப்பொழுது தண்ட கட்டம் வந்திருக்கின்றது

“நீ ஓவியாவினை குஷ்பூவின் விசிறி என சொல்ல சொல், அதன் பின் எங்களுக்கு தயக்கம் இல்லை..” என சொன்னாலும் பிரச்சினை தீரவில்லை,

“ஓவியா வாழ்க..” என சொல்லாவிட்டால் வெளியேறு என மகாத்மா காந்தி பாணியில் மிரட்டல் வருகின்றது, அது விரைவில் ஹிட்லர் பாணியாக மாறும் போல் தெரிகின்றது

“நானும் கோடி பொருள் கொடுத்தாலும் கோமகளை மறவேன்…” என சொல்லிகொண்டேதான் இருக்கின்றேன்

விரைவில் தசவதாரம் கமல் போல என்னை தூக்கி கடலில் போடும் திட்டத்தில் பாகம்பிரியாள் இறங்கியிருப்பது போல் தெரிகின்றது,

இந்த ஓவியா இன்னும் எத்தனை குடும்பத்தில் குழப்பம் விளைவிக்க போகின்றாரோ தெரியவில்லை

 
 

அவானி மூவிஸின் இந்த “மீசையினை முறுக்கு” படம் வெற்றி பெற வாழ்த்துவோம்

Image may contain: 1 person, textஇது யார் நடித்த படம்? நடிகர் யார்? நடிகை யார்? இயக்குநர் யார்? என்ன கதை என்பதெல்லாம் தேவையே இல்லை

இதில் ஹிப்காப் தமிழாவோ அல்லது டண் டண் ஆப்ரிக்கனோ நடித்திருந்தாலும் பார்த்தே தீரவேண்டும், கதை யாருக்கு வேண்டும்? அது சிம்பு படத்து கதையோ அல்லது சிங்கி அடிக்கும் கதையோ பிரச்சினையே இல்லை

காரணம் இந்த படம் குஷ்பூவின் கம்பெனியால் தயாரிக்கபட்டிருக்கின்றது, அதனால் எப்படி இருந்தாலும் தலைவிக்காக இந்த படத்தினை பலமுறை பார்த்தே தீரவேண்டும் என சங்கம் முடிவு செய்திருக்கின்றது

தலைவி தயாரித்த படம், 2.30 மணிநேரம் வெற்றுதிரையாக‌ ஓடுகின்றது என்றாலும், ஒரு கல் நடித்திருக்கின்றது என்றாலும் தவமாக தியானம் ஏற்றுகொள்பவர்கள்த்தான் தலைவியின் தொண்டர்கள்

இப்படத்தை மாபெரும் வெற்றிபடமாக்கி தலைவிக்கு வெற்றியளிப்போம் என சங்கம்Babu Rao , Chandran Kannan தலையில் சூடமேற்றி சத்தியம் செய்கின்றது

அவனியில் எந்தபடமும் பெறாத வெற்றியினை அவானி மூவிஸின் இந்த “மீசையினை முறுக்கு” படம்    பெற வாழ்த்துவோம்

சங்கத்தோரே, தலைவி ஆணையிடுகின்றார், அலைகடலென திரள்வீர் தியேட்டருக்கு, அவானியின் குஷ்பூ யார் என அவனிக்கு காட்டும் கடப்பாடு நம் எல்லோருக்கும் உண்டு

 
 

வெல்ல பிறந்தவன் : 01

No automatic alt text available.பைபிளில் உள்ள காட்சி அது, தானியேல் எனும் இறைவாக்கினர் அல்லது கடவுளுக்கு மிக பிரியபட்ட யூதர் அந்த காட்சியினை காண்கின்றார்

எங்கு வைத்து காண்கின்றார் என்றால் பாபிலோன் பக்கம், அதாவது இன்றைய பாக்தாத் பக்கம்.

ஏன் சென்றார் என்றால், பாபிலோனிய அரசன் இஸ்ரேலை வென்று சாலமோனின் ஆலயத்தை இடித்து இருந்த யூதர்களை எல்லாம் தாடியினை பிடித்து இழுத்து சென்றான்.

அது நெபுகாத்நேச்சர் எனும் மன்னன் காலம், அன்றைய சதாம் உசேனுக்கு முப்பாட்டன், இப்படி சொன்னால் புரியும்.

இந்த பாபிலோன் தொங்கும் தோட்டம் எல்லாம் வைத்திருந்தான் அல்லவா? அந்த மன்னன்.

தோல்வியே அடையாத வரலாற்று மன்னர்களில் அவனும் ஒருவன். அப்படிபட்ட மன்னர்தான் யூதர்களை சிறைபிடித்து சென்றார்.

அதில் ஞானத்தில் சிறந்தவர்களை தன் அருகே வைத்துகொண்டான். அவர்களில் ஒருவர்தான் இந்த தானியேல்.

பெரும் ஞானி அவர், கனவு சாஸ்திரம் முதல் எல்லா சாஸ்திரங்களும், ஆளும் ஞானமும் அவருக்கு அத்துபடி. விடுவானா அரசன், மகிழ்ச்சியோடே அருகே வைத்திருந்தான்.

அரசன் அவரை நன்றாகத்தான் வைத்துகொண்டான். ஆனால் மதகுருக்களுக்கு பிடிக்கவில்லை.

என்ன இருந்தாலும் ஜகோவினை மட்டும் வணங்கும் யூதன், பெரும் சக்திவாய்ந்த பாபிலோனிய கடவுளை வணங்காத யூதனுக்கு இந்த மரியாதையா? என பல சூழ்ச்சி எல்லாம் செய்து அவரை மாட்டிவிட்டனர்.

மன்னனும் பலமுறை பூசாரிகளிடம் அவனை கையளித்தார். அவர்களும் தீயில் போட்டு பார்த்தனர்.

சிங்கத்தின் முன் போட்டு பார்த்தனர். கடவுள் தானியேலை காப்பாற்றிகொண்டே இருந்தார். அவருக்கு அவனை பிடித்திருந்தது.

இந்த சனியனை கொல்லவும் முடியாது, அரசனும் இவனை விடமாட்டான் எப்படியும் தொலையட்டும் என மதகுருக்களும் ஒதுங்கினர்.

அந்த தானியேல் அரசனுக்கு ஆலோசகன் எனும் பதவியில் இருந்தாலும் தன் யூத இனம் எத்தனை நாள் இங்கு அடிமையாக இருக்கும். பாபிலோனிய அரசு வீழ்ந்தால் அன்றி யூத இனம் வெளியேறமுடியாது.

ஆனால் அது வீழுமா? வாய்ப்பே இல்லை இன்னும் 500 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது போல, நமது தாவீதும், சாலமோனும் இவர்களை அடக்கி வைத்திருந்தார்கள்.

அடுத்து வந்ததுகளுக்கு அந்த ஆற்றல் இல்லை சிக்கிகொண்டோம், கோயிலும் போனது, இனி வருமா? சாலமோன் கட்டியது போல் இனி யார் கட்டுவார்கள்.

கோயிலை பிறகுபார்க்கலாம், இந்த பாபிலோனியரின் அதிகாரத்திற்கு முற்றுபுள்ளி வைப்பது யார்? என்றெல்லாம் அவர் சிந்தித்துகொண்டிருக்கும் பொழுது அந்த காட்சி கண்டார், காட்சி இதுதான்.

Image may contain: one or more peopleமேற்கிலிருந்து ஒரு வெள்ளாட்டு கிடா பாய்ந்து வந்தது. இந்த கிழக்கில் நின்ற கிடாவினை புரட்டி போட்டு இரு கொம்புகளையும் உடைத்தது.

எலும்பினையும் உடைத்தது. அதன் பின் அந்த மேற்கு கிடாவினை நெருங்க யாராலும் முடியவில்லை.

தானியேல் உற்றுபார்க்க அந்த கிடாவின் கொம்புகளிடையே வித்தியாசமான ஒரு பெரிய‌ கொம்பு இருந்தது.

தன்னை எதிர்க்க யாருமில்லை என்ற மதப்பில் அது திரிந்தது. அதனை அடக்குவோர் யாருமில்லை, அதிகார‌ பலத்தின் உச்சத்தில் இருக்கும்பொழுதே அதன் பெரிய கொம்பு உடைந்தது.

எல்லா கனவுகளுக்கும் அர்த்தம் சொன்ன டானியேலுக்கு இந்த அர்த்தம் புரியவில்லை, சிந்தித்துகொண்டே இருந்தபொழுது அவர் முன் கடவுளின் தூதன் கப்ரியேல் தோன்றினான்.

இந்த கபிரியேல் ஒரு தந்திக்காரன், ஏதும் கடவுள் சொன்னால் ஓடி வந்து அந்த நபரிடம் சொல்லிவிட்டு பறந்துவிடுவார், யூத கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களில் இவர்தான் போஸ்ட்மேன் அல்லது கொரியர் பாய்.

அவர் வந்து கடவுள் சொன்னபடி விளக்கினார். தானியேலே அந்த வெள்ளாட்டு கிடா கிரேக்க அரசனை குறிக்கும், அவன் இந்த பாபிலோனை மட்டுமல்ல,உலகையே மிரட்டுவான்.

அவனை வெல்ல யாராலும் முடியாது நீ பார்த்த வெள்ளாடு கடா அவன் தான். முதல் கிரேக்க மன்னன்.

அந்த வினோத கொம்பு என்பது அவனின் ஆற்றல், ஆம் அவனை போல இன்னொருவன் வரமாட்டான்,

அவன் மிக மிக வினோதமான பிறவி அவனின் ஆற்றல் அடுத்து வருபவருக்கு இருக்காது.

அந்த கிடாவிற்கு இரு கொம்புகள் என்பது கிழக்கிற்கும் மேற்கிற்கும் அவனே ராஜா என்பது.

இன்னொரு கிடா தோற்றதல்லவா? அது என்னவென்றால் இந்த மாபெரும் பாபிலோன் சாம்ராஜ்யம் இரு நாடுகளாக பிரியும். அவைதான் அந்த கொம்புகள்.

அந்த கிரேக்க அரசன் இந்த இரு அரசையும் நொறுக்குவான் அதுதான் நீ கண்ட காட்சி. அவன் வந்துசென்றபின்பு இங்கு நிலை மாறும்.

ஆனால் பெரும் புகழில் இருக்கும் பொழுதே அவன் இறந்துவிடுவான். அதுதான் அந்த பெரிய கொம்பு உடையும் அர்த்தம்.

அதன் பின் அவன் அரசு 4 துண்டாக உடையும், அதில் உன் இனம் மீளும்” என சொல்லிவிட்டு மறைந்தது.

இது யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய நூல்களில் எல்லாம் காணகிடக்கின்றது. தானியேல் புத்தகம் படிக்கும் யாரும் இந்த காட்சியினை கடக்காமல் இருக்க முடியாது.

அதுவரை பெரும் அரசன் ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்கு வரவில்லை.

அவ்வளவு பயம் கொடுக்கும் வலுவான அரசுகள் மேற்காசியாவில் , தெற்கு ஆசியா, வடக்கு ஆசியா என இருந்தன. எந்த ஐரோப்பியன் வந்தாலும் காலி.

அதுவும் அரேபிய பகுதிகள் முரட்டுதனமான பலம் கொண்டவை. அவர்களை வீழ்த்துவது என்பது நினைத்து பார்க்கமுடியாத விஷயம்.

முதன் முதலில் அரேபியா ஒரு ஐரோப்பியனிடம் அடிவாங்க போகின்றது என உணர்ந்தார் தானியேல்.

“கடவுளே சொல்லிவிட்டார், அப்படி ஒரு கிரேக்க அரசன் வருவான், இந்த அரேபியாவினை காலில் போட்டு மிதிப்பான்” என முதலில் உணர்ந்தது தானியேல்தான்.

நிச்சயமாக முதன் முதலில் கிரேக்க மாவீரனை எதிர்பார்த்தது அவர்தான். ஆனால் அவர் காலம் முடிந்தது.

மானிடர் காலம் முடியும், கடவுளின் காலம் முடியுமா? அவரின் கடிகார முள் மிக சரியான நேரத்தை காட்டும் பொழுது அவன் மாசிடோனியாவில் அவதரித்தான்.

அவன் தான் மாவீரன் அலெக்ஸாண்டர்

யூத‌ கடவுளே முன்னறிவித்த பெரும் ஆற்றல் மிக்க மாவீரன். பெரும் மதியூகி, நிர்வாகி, தைரியம், ராஜதந்திரம் என எல்லாவற்றின் மொத்த கலவை.

வெற்றி வெற்றி என்பதை தவிர ஏதுமறியா யுத்தம் அவனுடையது.  இந்த உலகில் என்னை எதிர்க்க யார் உண்டு என அவன் மார்பினை தட்டி கேட்டபொழுது இந்த உலகம் அவனிடம் அடங்கி கிடந்தது.

வரலாற்றை மாற்றி அமைத்தவன் அவன், அவனின் பாதிப்பு நெடுங்காலம் உலகில் இருந்தது, இன்றளவும் அவன் பெரும் பிரமிப்பே

என்றைக்கும் இன்றைக்கும் பெரும் அதிசயமாக விளங்கும் அவனை, பாகுபலி படம் வரை அவன் பாதிப்பு இருக்கும் அந்த மாவீரனின் வாழ்வினை அவ்வப்போது பார்க்கலாம்

 

தொடரும்…

 
 

காஷ்மீர் : என்னதான் நடக்குது ….

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் , பள்ளிகள் மூடபட்டன, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இப்பொழுது பாகிஸ்தானை மிரட்ட யார் செல்வார்? இந்திய ராணுவம்தான் செல்லவேண்டும்

இந்திய ராணுவத்தை காஷ்மீரிலிருந்து வெளியேற்றவேண்டும் என சொல்பவன் எல்லாம் இப்பொழுது சத்தமே போடமாட்டான்,

பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து நீங்கள் செல்கின்றீர்களா? இந்திய ராணுவம் வெளியேறும் என கேட்டால் பதிலே இருக்காது.

இனி எவனாவது / எவளாவது தமிழகத்தில் இருந்து கொண்டு காஷ்மீரில் இந்தியா அட்டகாசம் என சொல்லிகொண்டிருந்தால் அவனை பிடித்து எல்லையில் நிறுத்திவிடவேண்டியதுதான், மீதியினை பாகிஸ்தான் பார்த்துகொள்ளும்

தமிழகத்தில் தனிகொடியா….

ஒரு விஷயம் விவகாரமாகின்றது, அதாகபட்டது இந்தியாவில் நிறைய மாநிலங்கள் உண்டு, அவற்றிற்கொரு அரசு, சின்னம் இன்னபிற அடையாளம் எல்லாம் உண்டு

ஆனால் தனிகொடி கிடையாது, அது காஷ்மீருக்கு மட்டுமே உண்டு.

மாநில அரசுக்கு தனி முத்திரை இருக்கும்பொழுது ஏன் தனிக்கொடி இருக்க கூடாது எனும் சிந்தனை கன்னடா முதல்வர் சித்தராமையாவிற்கு வந்துவிட்டது

என்ன இது? பரப்பான அக்ரஹாரா சிறையில் அரசுகொடி பறக்கும்பொழுது , சசிகலா கொடியும் பறக்கவில்லையா? அப்படி கன்னட கொடியும் பறந்தால் என சிந்துவிட்டார், கொடி உருவாக போகின்றதாம்

இதனை கண்ட நாட்டுபற்று மிக்க இயக்கமான சிவசேனைக்கு கோபம் கமலஹாசனை கண்ட அதிமுக அமைச்சர்கள் போல வந்துவிட்டது. மராட்டியத்தில் மராட்டியராகவும் மற்றபடி இந்தியராகவும் இருப்பவர்கள அவர்கள் சும்மா விடுவார்களா?

இது இந்திய ஒருமைபாட்டுக்கு ஆபத்து, கொடி கொடுத்தால் இனி தனி சட்டம் கேட்பார்கள், நாடு உடையும் என பொங்கி தள்ளுகின்றது, அத்தோடு சித்தராமையா அரசினை டிஸ்மிஸ் செய் என்றும் ஒரே சத்தம்.

ஆனால் மாநிலம் தனி கொடி அமைக்க சட்டத்தில் தடை இல்லை என்பதும் கவனிக்கதக்கது

எப்படியோ கன்னடம் விரைவில் மாநில கொடி அறிவிக்கலாம், மாநிலத்திற்கொரு சின்னமும் அடையாளமும் இருக்கும்பொழுது கொடி வருவதை தடுப்பது சுலபம் அல்ல‌

இனி இதனை கண்டுவிட்டால் என்னாகும்?

தமிழகத்தில் தனிகொடி உருவாக்குவார்கள், கலைஞர் இருந்திருந்தால் மனிதர் பின்னி எடுப்பார். இம்மாதிரி விஷயங்களில் அம்மனிதர் அபார ஞானம் கொண்டவர்

ஆனால் இருப்பது பழனிச்சாமி அல்லவா?

தமிழ்மாநில கொடி என எம்ஜிஆர் ஜெயா இருக்கும் கொடி அல்லது சசிகலா ஜெயா இருக்கும் கொடி என எதனையாவது தமிழக மானத்தை கொடியில் காயபோடாமல் இருக்கட்டும்

ராஜபக்சே இப்படி உடற்பயிற்சி செய்கின்றார்…

Image may contain: 1 person, sittingராஜபக்சே இப்படி உடற்பயிற்சி செய்கின்றார் என இலங்கை ஊடகம் சொல்கின்றது. இவ்வளவுதான் விஷயம்

இதனை சீமான் எப்படி சொல்வார் தெரியுமா?

“இது என்ன தெரியுமா என் சொந்தங்களே, தமிழரை அழிக்கும் பொழுது ,தன் கையால் தான் தமிழரை கொல்வேன் என கொடூரமாக சொன்ன ராஜபக்சே, பெரும் பீரங்கியினை சுமக்க தன் உடலை தயார் செய்தபொழுது எடுத்தபடம்.

அந்த பீரங்கியால சுட்டா ஒரு சுடுல 100 தமிழன் சாவான், பெரிய பீரங்கி , நான் அண்ணன சந்திக்கும் பொழுது போராளிகள் தள்ளி இருந்து காட்டி தந்தாங்க, சிங்களன் ஏரியாவில இருந்திச்சு. இந்தியா குடுத்தது, தமிழன் வரிப்பணத்தில் கொடுத்தது என் உறவே

இப்படி தமிழரை கொல்ல ராஜபக்சே உடலை தயார் செய்யும் பொழுது ஏன் கலைஞர் தடுக்கலை, சோனியா தடுக்கல‌.. ஏன் தடுக்கல. ..அவனை உடற்பயிற்சி செய்ய சொன்னதே காங்கிரசும் திமுகவும் தான.

டேய் ராஜபக்சே, தமிழரை அழிக்க 
உடற்பயிற்சி செய்யாதே என சொல்லியிருக்க வேண்டுமா இல்லையா?

சொல்லலியே, சொல்லிலிருந்தா தமிழன் அழிஞ்சிருப்பானா? நாதியில்லையே, சொல்ல ஒரு நாதியில்லையே

டேய் ராஜபக்சே ராமேஸ்வரம் வாரியா, நீனா நானான்னு பாத்துருவோம்”


“பயிற்சி பற்றி எனக்கு புதிதாக எதையும் தெரிந்துகொள்ளத் தேவையில்லை” : கோஹ்லி

இந்த ஆணவம் நிச்சயம் இவரை அழிக்கும், இவர் பெரும் வீழ்ச்சியினை விரைவில் சந்திப்பார்.

அழிவுக்கு தயாராகின்றார் கோஹ்லி, அவ்வளவுதான் சொல்ல முடியும்.


 
 

கமல் விவகாரம் : விரைவில் பேசுவார் குஷ்பூ

20228244_10209749636472765_3917202123509734478_n.jpg


 தமிழ்நாட்டு அரசியலை பலப்படுத்த கமல்ஹாசன் அவசியம் இல்லை: தமிழிசை

ஆமாம் அதற்கு அம்மணி அரசியலை விட்டு போனாலே போதும்.


ஊழலுக்கு எதிராக போர்க்கொடி: கமல்ஹாசனுக்கு கிரண்பேடி ஆதரவு

சல்யூட் மேடம், தமிழ்நாட்டு கவர்ணர் பொறுப்பையும் சேர்ந்து கவனிக்க வாருங்கள், மத்திய அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைக்கின்றோம்


கமலஹாசனுக்கு ஆதரவாக குஷ்பூ இன்னும் ஏன் கருத்து சொல்லவில்லை என பலர் கேட்டுகொண்டிருக்கின்றார்கள்.

மாநில முதல்வரே கமலஹாசன் கோதாவில் குதித்து தன் சகாக்களுடன் குத்துசண்டைக்கு வந்துவிட்ட பின்னும் குஷ்பூ ஏன் அமைதியாயிருக்கின்றார் என பல கேள்விகள்.

நிலவரத்தை மிக‌ உன்னிப்பாக கவனித்துகொண்டிருக்கின்றார் எம் தலைவி, பேசவேண்டிய நேரத்தில் மிக சரியாக பேசுவார்.

அவர் இருக்கும் காங்கிரஸ் கட்சி தன் நிலைப்பாட்டினை இன்னும் தெரிவிக்காததால் தலைவி அமைதியாக இருப்பதாக சர்வதேச ஊடகங்ள் தெரிவிக்கின்றன.

திருநாவுக்கரசர் எனும் பாஜக, அதிமுக உளவாளி இங்கு இருக்கும்வரை தமிழக காங்கிரஸ் இப்படி உம்மென்றுதான் இருக்கும்,

ஆனால் குஷ்பூவின் இந்த அமைதி புயலுக்கு முந்தைய அமைதி. இந்த அமைதி நீடிக்குமானால் அந்த புயல் வீசும்பொழுது திருநாவுக்கரசர் நாற்காலியும் இருக்காது, சத்யமூர்த்தி பவனும் இருக்காது

காங்கிரஸின் இந்த அமைதி அதிமுகவிற்கு ஆதரவு, கமலஹாசனுக்கு எதிர்ப்பு என்பது எல்லோருக்கும் தெரியும்

விரைவில் பேசுவார் குஷ்பூ

கமல்ஹாசன் விவகாரமே இப்படி என்றால், குஷ்பூ பேச ஆரம்பித்தால் மோடி வரை அலறுவார், அது தமிழக காட்சிகளையே மாற்றும்


கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது..” தமிழிசை

ஏம்மா, அது தேசிய மொழி அதனால் எல்லோரும் கற்கவேண்டும் என சொல்வதும் நீங்கள்தான், இந்திமொழியில் அவர் ஏன் நடித்தார் என கேட்பதும் நீங்கள்தான்.

ஒரு தேசிய கட்சியின் தலைவி இப்படி பிரிவினை பேசுவது சரியே அல்ல, அம்மணி இப்படி வழக்கமாக பேசமாட்டார், மாறாக என்னமோ ஆகிவிட்டது,

அம்மணி முன்பு லூசு போல பேசிகொண்டிருந்தது இப்பொழுது லூசாகவே மாறிவிட்டது

எச்.ராசாவிடம் பேசிகொண்டிருந்திருப்பாரோ?

“என்னம்மா ஆச்சு உங்களுக்கு?”