எல்லாம் பிக்பாஸ் செய்யும் மாயம்

இது ஆடிமாதம், இந்துக்களுக்கு பல வழிபாடுகள் நிறைந்த மாதம்

கவனித்தால் இது இந்துக்களுக்கு மட்டுமல்ல, சீனர்களுக்கும் மகா புனிதமான மாதம். சீனர்கள் என்றால் புத்தர்கள் மட்டுமல்ல அதிலும் பல பிரிவுகள் உண்டு

நமது ஊர் பிள்ளையார் போலவும், சிறு தெய்வங்கள் போலவும் மரத்தடி சீன சாமிகள் நிறைய உண்டு, சரியாக 10 மீட்டருக்கு ஒரு சீனதாடி சாமி சிலையினை காண முடியும், அதன் முன்னால் பழங்கள் பத்தி எல்லாம் படையலிட்டிருப்பார்கள்

இது அனுதினமும் காணும் காட்சி என்றாலும், ஆடி மாதம் அதிகம்

ஆடி அமாவாசை என நாம் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம் அல்லவா? அவர்களிலும் உண்டு நம்மை விட மோசம் அல்லது அதீத நம்பிக்கை

ஒரு வித காகிதத்தை எரிக்கின்றார்கள், அதுபணமாம் சொர்கததில் இருப்பவர்களுக்கு சென்று சேருமாம், அதில் கரன்சி தவிர சில்லறை காகிதமும் உண்டாம், அவ்வளவு கணக்காக எரிக்க்கின்றார்கள்

இப்படி பல காட்சிகள் ஆடிமாதத்தில் சீன சமூகத்திடமும் காண முடிகின்றது, சில இடங்களில் வழிபாடுகள் சிறப்பாக நடக்கின்றன‌

இவ்வளவு நாளும் அந்த சாமிகளை எல்லாம் ராகுல் காந்தியினை அசால்ட்டாக கடந்து செல்லும் மோடி போல சென்றுகொண்டிருந்த நண்பர் Omm Prakashஇப்பொழுதெல்லாம் சசிகலா முன் அதிமுக எல்.எல்.ஏவாக குனிந்து நிற்கின்றார்

எல்லாம் பிக்பாஸ் செய்யும் மாயம்

ஆம் எல்லா சீனசாமி முன்னாலும் நின்று, சீனரை போலவே குனிந்து டிங் மங் சுங் தங் என ஜெபிக்கின்றார், யாருக்காக என்றால் ஓவியாவிற்காம்

சூ.. லி.. ஓ..வி. யா…. காய் தி ரி என சீனரோடு சீனராக நின்று அவரும் பிரார்த்திக்கின்றார்

வெல்ல பிறந்தவன் : 03

Image may contain: horse and text

அன்று ஜுலை 26, கி.மு 356 அலெக்ஸாண்டர் பிறந்திருந்தான்

பிலிப்பிற்கோ ஏக மகிழ்ச்சி, பெரும் விழாவாக அவனின் பெயர் சூட்டும் விழாவினை நடத்தி கிரேக்க குருமார்கள் புடைசூழ அவனுக்கு மூன்றாம் அலெக்ஸாண்டர் என பெயரிட்டார், அதாவது அவனுக்கு முன்பும் அலெக்ஸாண்டர்கள் இருந்திருக்கின்றார்கள் தம்பிடிக்கு பிரயோசனம் இல்லை.

இவனை பெரும் வீரனாக்கி மாசிடோனியாவின் புகழை பரவச்செய்வேன் என அவர் முழங்கியபொழுது நிச்சயம் சுபமுகூர்த்த நேரமாகத்தான் இருந்ந்திருக்க வேண்டும்

அலெக்ஸாண்டர் தாயின் மடியில் தவழ ஆரம்பித்தான், தந்தையோ போர்க்களம் செல்லுதல் ஆட்சி என இருந்தாலும் ஓரக்கண்ணால் அவனை கண்க்காணித்துகொண்டே இருந்தார்

இந்த இடத்தில் ஒருவிஷயம் சொல்லியாக வேண்டும், அலெக்ஸாண்டரின் தந்தையினை விட மகா உறுதியும் வீரமும் தைரியமும் மிக்கவள் அவன் தாய் ஒலிம்பியஸ்

சில சமயங்களில் மாமன்னன் பிலிப்பினையே அவள் அசால்ட்டாக முறைத்த சம்பவங்களும் உண்டு, சாதரண சம்சாரியெ சொல்ல முடியாதபொழுது மாமன்னன் பிலிப் வெளிசொல்ல முடியுமா?

மன்னன், அதுவும் மாமன்னன் போதாதா ஒலிம்பியஸ் தவிர ராணிகள், அழகிகள், நடன மங்கைகள் என நிறைய வசதி அவருக்கு இருந்ததால் பிலிப்பிற்கு சிக்கல் இல்லை, ஆனால் ஒலிம்பியசுக்கு அதுதான் சிக்கல்

அந்த முரட்டுகாரியின் கையில்தான் அலெக்ஸாண்டர் வளர்ந்தான், அவள் அன்னை எவ்வளவு தைரியசாலி என்றால் செல்லபிராணியாக விஷ‌ பாம்புகளை வளர்த்தவள், அவ்வளவு தைரியம்

ஆனால் அவள் தன் உயிராக அலெக்ஸாண்டரை கருதினாள், பாலும் உணவும் கொடுக்கும்பொழுதெல்லாம் வீரமிக்க கிரேக்க கதைகளை அவனுக்கு ஊட்டினாள், அவன் இதயம் அக்கதைகளால் நிரம்பியது, தன்னையும் அதில் ஒருவனாக அன்றே நினைத்துகொண்டான்

மாவீரன் சிவாஜியினை அவர் அன்னை உருவாக்கினாள் என்றால் அலெக்ஸாண்டரின் வெற்றியிலும் அந்த அன்னைக்கு பங்கு உண்டு

8 வயதுவரை அலெக்ஸாண்டர் அவரிடம்தான் இருந்தார், பின்பு ஒரு குரு அமர்த்தபட்டு அரசபாடங்கள் போதிக்கபட்டன, வருங்கால அரசனுக்கான தயாரிப்பு அது

லியோனடஸ் எனும் குரு அமர்த்தபட்டார், கிரேக்க‌ மன்னனுக்கு முதல் தேவை அபரிமிதமான கடவுள் பக்தி அதுதான் முதலில் அவனுக்கு போதிக்கபட்டது, பின் சண்டை முதல் சமயோசித்த புத்திவரை போதிக்கபட்டது

எல்லாவற்றையும் முதலில் உள்வாங்கிவிட்டு பின் தன் சந்தேகங்களை கேட்பது அலெக்ஸாண்டர் பாணி, அப்படி எல்லாம் கற்றுகொண்டிருந்தான்

அன்னை விதைத்த கிரேக்க இதிகாச கதைகளுக்கு உருவம் கொடுத்து அவர்களை அலெக்ஸாண்டர் மனம் முன் நிறுத்தினார் லியோன்டஸ்

நிதானம், கூர்மை, வேகம் என பல நுட்பங்களை அவன் அவரிடம்தான் படித்திருந்தான், அரண்மனையில் நடக்கும் இந்த விஷயங்களை பிலிப்பும் கண்காணித்தான்

எப்பொழுதாவது மகனுடன் அவன் பேசுவது வழக்கம், அப்பொழுதெல்லாம் தன் மாபெரும் கிரேக்க கனவினை அவன் சொல்வது வழக்கம்

ஒருநாள் பேச்சு வெளிநாடுகளுக்கு சென்றது, பேசிகொண்டார்கள்

தந்தையே மாசிடோனியாவினை கிரேக்கத்தில் தலைசிறந்த நாடாக மாற்ற போராடுகின்றீர்கள், இதில் வென்றுவிட்டால் அடுத்து என்ன செய்வீர்கள்

நமக்கு பெரும் தொல்லையான பாரசீகர்களை வெல்வேன், பாபிலோனை கைபற்றுவேன்

ஏன் தந்தையே அவர்கள் பாபிலோன் அவ்வளவு வளமானதா?

இல்லை, அதை தாண்டினால்தான் இந்தியாவினை அடைய முடியும். பெரும் வளமான நாடு, பெரும் வரலாற்று பின்புலம் கொண்ட சொர்க்கம். அவர்களின் ராமாயனமும், மகாபாரதமும் பெரும் காவியங்கள்

நீ ஆட்சியில் ராமனாகவும், மதிவியூகத்தில் கிருஷ்ணனாகவும் இருக்க வேண்டும்” என சொல்லிகொண்டே சென்றார்

நம்புகின்றவர்கள் நம்பலாம், நம்பாதவர்கள் செல்லலாம். ஆனால் அன்றைய ராமாயணமும், மகாபாரதமும் அவ்வளவு பெரும் இடத்தில் உலகெல்லாம் இருந்தன, அதன் தாக்கம் அப்படி இருந்தது

இந்தியா அப்படி ஒரு உயர்ந்தநாடா? நான் செல்லமுடியுமா? என அவன் கனவு கண்டது அப்படித்தான் , இந்தியா கனவு அலெக்ஸாண்டருக்கு அன்றுதான் விதைக்கபட்டது

அதன் பின் கொஞ்ச காலம் சென்றது அவனுக்கு 12 வயது ஆகியிருந்தது, தந்தையுடன் போர்களம் தவிர எல்லா இடங்களுக்கும் சென்றான், அப்பொழுதுதான் அந்த சம்பவம் நடந்தது

அது ஒரு குதிரை பந்தய விழா, நமது ஊர் ஜல்லிகட்டு போன்றது. அதில் ஒரு கருப்பு குதிரை சவால் விட்டுகொண்டிருந்தது, அது தெசாலி நகரத்து குதிரை

செதுக்கபட்ட குளம்புகளும், அழகுபடுத்தபட்ட வாலும் , பள பள என மின்னும் கட்டுறுதியான உடலும் , கழுத்தில் சரியும் முடியுமாய் மிக கம்பீரமாக அக்குதிரை நின்று கொண்டிருந்தது

(யுத்தத்தில் கிரேக்கரும், ரோமானியரும், பாரசீகரும் ஜொலிக்க முதல் காரணம் குதிரைபடை, செங்கிஸ்கானும் அதனைத்தான் நம்பியிருந்தான்

குதிரைபடை என்பது இன்றுள்ள அமெரிக்க விமானபடைக்கு அன்று சமம்

அதிலும் ஐரோப்பியர்களுக்கு அந்த குதிரை வளர்ப்பு அட்டகாசமாக வந்தது, அங்கிருந்துதான் துருக்கி வழியாக நமக்கெல்லாம் வந்தது. நாம் அரபு குதிரை என சொல்லிகொண்டோம்

உண்மையில் அவை ஐரோப்பிய குதிரைகள், அரேபியா என்பது சந்தை அவ்வளவுதான். மற்றபடி இந்தியா அவர்களின் உயர்சாதி குதிரைகளை விரும்பும், அவர்களோ நமது யானையினை அச்சமாக பார்ப்பார்கள், ஆம் அவர்களுக்கு யானை எல்லாம் பழக்கமே இல்லை

இப்படி குதிரைகளுக்கு பெரும் மவுசு இருந்த காலத்தில்தால் அந்த போட்டி நடந்தது.)

Image may contain: 1 person

பொதுவாக தெசாலியருக்கும் மாசிடோனியருக்கும் ஆகாது, இந்தியா பாகிஸ்தான், திமுக அதிமுக‌ போன்ற மோதல் அது. அந்நிலையில் மாசிடோனியர் அக்குதிரை முன் தோற்பது அதனை கண்டுகொண்டிருந்த பிலிப்பிற்கு பெரும் அவமானமாக இருந்தது.

இந்த மாவீர மாசிடோனியாவில் இக்குதிரையினை அடக்க ஒருவனும் இல்லையா? என சீறினான் பிலிப், கூட்டத்தில் சத்தமே இல்லை, தெசாலி நாட்டு குதிரை உரிமையாளன் ஒரு மாதிரி வெற்றி சிரிப்பு சிரித்துகொண்டிருந்தான்

மைதானத்தில் ஒரு சத்தமுமில்லை, அக்குதிரையிடம் அடிவாங்கியவர்கள் ஆங்காங்கு விழுந்து கிடந்தார்கள். பெரும் அமைதி

ஒரு குரல் கேட்டது, இக்குதிரையினை நான் அடக்கட்டுமா? கூர்ந்து பார்த்தான் பிலிப் , பின் இது விளையாட்டு என விட்டுவிட்டான், அக்குரலோ கேட்டுகொண்டே இருந்தது

அது சிறுவன் அலெக்ஸ்டாண்டரின் குரல்

ஒரு கட்டத்தில் சொன்னான் பிலிப், மகனே இது விளையாட்டல்ல குதிரை வித்தகர்கள் எல்லாம் அதோ மண்ணில் கிடக்கின்றார்கள், நீயோ சிறுவன் இந்த விளையாட்டு வேண்டாம்

ஆனால் உறுதியாக கேட்டான் அலெக்ஸாண்டர், அது கூட்டம் என்பதால் வருங்கால இளவரசனை பாசத்தின் காரணமாக அரசர் தடுக்கின்றார் எனும் அவப்பெயரையும் அவன் ஏற்க விரும்பவில்லை

மகனே நீ செல், அடக்கிவிட்டால் நிச்சயம் குதிரை உனக்கு என்ன விலை என்றாலும் வாங்கிதருவேன், ஆனால் இப்பொழுது நீ அடிபடாமல் வருவதுதான் எனக்கு முக்கியம் என சொல்லிவிட்டான்

சொல்லிவிட்டு தன் சேவகர்களுக்கு கண்ணை காட்டினான், அதன் அர்த்தம் அலெக்ஸாண்டருக்கு ஆபத்தென்றால் அந்த கருப்பு பேய் உயிரோடு இருக்க கூடாது, அதன்னை கொன்றாவது அவனை காப்பாற்றுங்கள் என்பது

எரிய தயாரான ஈட்டியுடன் பாதுபாவலர்கள் தள்ளி நின்றனர், நடுவில் குதிரை தனியாக நின்றது

அருகில் சென்றான் அலெக்ஸாண்டர், அதன் கண்களை பார்த்தான், என்றுமே பிரச்சினையினை அதன் தன்மையில் பார்ப்பவன் அல்ல அவன், அது எங்கே தொடங்குகின்றது என்பதுதான் அவன் முதலில் நோக்குவது

குதிரையினை தொட்டால் அல்ல, கிட்ட சென்றாலே அடிக்கின்றது என்றால் அதன் பார்வையில்தான் சிக்கல், இதுதான் அலெக்ஸாண்டர் கணிப்பு

அதனால் கண்களை நோக்கியபடியே அருகில் சென்றான், அக்குதிரையும் அவனை நோக்கிவிட்டு அமைதியாக இருந்தது

கூட்டத்தின் இதயதுடிப்பு எகிறியது, மன்னன் பிலிப் பதற்றத்தின் உச்சியில் இருந்தான்

அடுத்து தன் குதிரை மாசிடோனிய இளவரசனை தூக்கி எறிய போகின்றது என மகிழ்ந்தான் குதிரைக்காரன், எப்படிபட்ட பெருமை

அலெக்ஸசாண்டர் கொஞ்சம் அஞ்சாமல் அதன் அருகில் சென்றான், மெல்ல அதன் உடலை தொட்டான், சிலிர்த்தது குதிரை, வானத்தை பார்த்தான் பின் குதிரையினை பார்த்தான் மாறி மாறி பார்த்த அலெக்ஸாண்டரை கண்டு கூட்டம் குழம்பியது

மெல்ல அதனை திருப்பினான், குதிரையே குழம்பியது, இதுவரை எல்லோரும் வருவார்கள் முதுகில் ஏற முயற்சிப்பார்கள், நாம் தூக்கிபோட்டு மிதிப்போம் இவன் என்ன இப்படி திருப்புகின்றான்? சரி திரும்புவோம்

மெல்ல திருப்பியபின் அதோடு கொஞ்ச தூரம் நடந்தான், பிலிப்பிற்கு திகைப்பு, அடக்குதல் என்றால் ஏறி அமரவேண்டும் அல்லவா? இவன் என்ன பூனைநடை நடக்கின்றான்? பயிற்சி போதாதோ? அந்த ஆசிரியரை சாத்தவேண்டும் என எண்ணிகொண்டான்

கொஞ்சதூரம் நடந்த அலக்ஸாண்டர் நொடிப்பொழுதில் எதனையோ குதிரையிடம் மாற்றம் கண்டான், நொடிபொழுதில் ஏறி அமர்ந்தான், குதிரை அவனை தள்ளவில்லை மாறாக பணிந்து சுமந்தது அதன் கழுத்தில் தடவிகொடுத்து சுற்றிவந்தான் அலெக்ஸாண்டார்

கூட்டம் ஆர்பரித்தது, பிலிப் என் மகனே என அலறினான், ஆசிரியரோ இறுதிசுற்று கிளைமாக்ஸ் வில்லன் போல என் ஸ்டூடண்ட், ஹி இஸ் மை ஸ்டூடண்ட் என கிரேக்கத்தில் கை உயர்த்திகொண்டிருந்தான்

மாவீரன் அலெக்ஸாண்டர் வாழ்க எனும் குரல் அப்பொழுது மைதானத்தை நடுங்க வைத்தது

அத்தோடு அக்குதிரை அவனோடு ஐக்கியமாயிற்று, ஆம் அவனின் வாழ்வுவரை அவனோடு இருந்த குதிரை அதுதான்

புக்கிலேஸ் என பெயரிட்டான், அது அலெக்ஸாண்டரின் உற்ற தோழனாயிற்று, வரலாறு அப்படித்தான் சொல்கின்றது, ராமனின் வரலாற்றில் அனுமான் போல, அலெக்ஸாண்டர் வாழ்வில் புக்கிலேஸ் இருந்தது.

கிராமங்களில் சில வீடுகளில் மாடுகளை கால்ராசி உள்ளமாடு என்பார்கள், அதாவது அது வந்தபின் அங்கு வளம் கூடியிருக்கும், அப்படி புக்கிலேஸ் அலெக்ஸாண்டரின் ராசியான குதிரையாயிற்று

பெரும் மாவீரனான அலெக்ஸாண்டர் அக்குதிரையின்றி ஒரு யுத்தமும் நடத்தவில்லை எனும் அளவிற்கு அவனோடு இருந்தது

பின்னர் பார்க்கலாம்

மெல்ல கேட்டான் பிலிப், மகனே இந்த சண்டியினை எப்படி அடக்கினாய்? நமது குதிரைபடை தலைவானாலே முடியவில்லையே, நீ எப்படி?

அவன் சொன்னான் “தந்தையே அது மிக நல்ல குதிரை, தவறு உம்மீது இருந்தது அதாவது நீர் சூரியன் இருக்கும் திசையில் இருந்தீர், நீர் மன்னன் என்பதால் குதிரையினை உம்மை நோக்க்கி நிறுத்தினார்கள்

கவனித்தீர்களா, அதுவரை குதிரை குனிந்துதான் நிற்கும், நம்மவர் சென்று ஏறியவுடன் அதன் தலைநிமிரும் அதன் கண்களுக்கு சூரிய வெளிச்சத்தால் அது மிரண்டது, அது பலமிக்க குதிரை என்பதால் இவர்களை வீழ்த்திவிட்டது, அது வெளிச்சத்தில் மிரண்டதுதான் காரணம்

நான் அதனை வேறுதிசைக்கு திருப்பி அதன் மேல் ஏறியவுடன் அது நன்றாய் ஒத்துழைத்தது, குதிரையின் மனநிலையினை படிக்காதவன் குதிரைவீரன் ஆகமுடியாது”

பிலிப் கொஞ்சநேரம் பேசவே இல்லை, அரண்டு நின்றார் லியோனடஸ்.

ஆசிரியர் லியோன்டஸ் இச்சம்பவத்தின் பின் அதிர்ந்து போனார், மெல்ல பிலிப்பிடம் சொன்னார்

மாமன்னா இவன் சாதாரணவன் இல்லை, இவனிடம் அபரிமிதமான ஆற்றல் இருக்கின்றது, மிக சிறந்த ஆசிரியன் கிடைத்தால் இவன் பெரும் அடையாளமாக ஜொலிப்பான், நம்மூரில் அப்படி ஆசிரியர் இல்லை

இவனுக்கு பெரியவர்தான் லாயக்கு, ஆனால் வரமாட்டார் இனி உங்கள் சமார்த்தியம்

பெரியவர் என அவர் சொன்னது, மேதை அரிஸ்டாட்டில் வரலாற்றின் மிகபெரும் ஞானியான அந்த அரிஸ்டாட்டில்

பொதுவாக கிரேக்க கலாச்சாரத்தில் சாக்ரடீசுக்கு பின் ஞானிகளுக்கு மவுசு இருந்தது, அரசர்களும் அஞ்சித்தான் பெசுவார்கள், சாக்ரடீஸ் ஏதன்ஸ் பக்கம் இருந்தார்

இவன் மிகசிறந்த அறிவாளி, இவனுக்கு நீங்கள் பாடம் கற்பித்தால் மிகபெரும் கிரேக்க தலைவன் கிடைப்பான் என தலையினை சொரிந்து கொண்டே அரிஸ்டாட்டிலிடம் சொல்லிகொண்டிருந்தார் லியோனடஸ்

அரிஸ்டாட்டில் அந்த சிறுவனை கண்டார், அவனின் கண்களிலே அவருக்கு நம்பிக்கை வந்தது

 

தொடரும்…

 
 

போராட கிளம்புவோர் மீதெல்ல்லாம் குண்டர் சட்டம் பாய்கிறது

போராட கிளம்புவோர் மீதெல்ல்லாம் குண்டர் சட்டத்தினை பாய்ச்சுகின்றது, பெரும் மிரட்டலான விஷயம் இது

கவனியுங்கள், இவர்கள் எதற்காக கிளம்புகின்றார்கள்? பசுமை காக்க, சுற்று சூழல் காக்க, மீத்தேன் என்பது பெரும் பசுமை எதிரி என கிளம்புகின்றார்கள், இவர்களைத்தான் குண்டர் என உள்ளே தள்ளுகின்றது அரசு.

ஆக தமிழ்நாடு நாசமாக்கி தீருவது என இந்த ஆட்சி கங்கணம் கட்டி அலைகின்றது, ஆற்றுமண், கடல்மண், மலை என எல்லாம் விழுங்கி இன்னமும் விழுங்கத்தான் வெறியோடு அலைகின்றது

இதனை எதிர்ப்பவர்கள் மீது குண்டர் சட்டம்

சரி இந்த பசுமை காவலர்கள், தமிழகத்தை பசுமையாய் ஆக்கி தீருவோம் என முழங்குபவர்கள் யாராவது இதனை கண்டிக்கின்றாரளா என்றால் இல்லை

அதாவது அதிமுக அரசு எது செய்தாலும் இவர்கள் கண்டுகொள்வதில்லை, மாறாக திமுக என்றால் போதும் எல்லா சிக்கலுக்கும் காரணம் திமுக, தமிழகத்தை கெடுத்தது திமுக, அது இது என பொங்குவார்கள்

இப்பொழுது இந்த மாபெரும் அடக்குமுறையில் இருந்து தமிழகத்தை காக்க யாரால் முடியும் என கேளுங்கள், ரகசியமாக காதுக்குள் திமுகவால் மட்டும் முடியும் என்பார்கள்

சரி திமுக ஆட்சியில் போராடீனிர்களே என்றால், ச்சே அருமையான ஆட்சி அது, திமுக அரசு என்றால் எவ்வ்வளவும் போராடலாம், அவமானபடுத்தலாம், திட்டி தீர்க்கலாம் ஒரு நடவடிக்கையும் இருக்காது என மகிழ்ந்து சொல்வார்கள்

ஆக இவர்கள் 5 பைசா பெறாத பிரச்சினைக்கெலலம் சுதந்திரமாக திட்டி தீர்க்க‌
திமுக வேண்டும், இது போன்ற பெரும் அடக்குமுறைகளை சந்திக்க திமுக வேண்டும்

ஆனால் திமுக தமிழகத்தை கெடுத்தது என சொல்லிகொண்டே இருப்பார்கள், அதிமுக அடித்து நொறுக்கும்பொழுது சத்தமே காட்டமாட்டார்கள்

அவர்கள் அப்படித்தான்..

சும்மா இருக்கும் பொழுது கலைஞர் ஒழிக திமுக ஒழிக என்றவர்கள் எல்லாம், இப்பொழுது அதிமுக அரசு அடிக்கும்பொழுது எங்கே கலைஞர்? எங்கே திமுக? கலைஞர் வாழ்க, திமுக வருக என மனதிற்குள் சொல்லிகொள்கின்றார்கள்

 
 
 

எசமான் ஆட்சியை கலைச்சிராதீங்க….

Image may contain: 2 people, people smilingஎசமான், உங்க திட்டங்களுக்கு எதிரா பேசுரவன எல்லாம் குண்டர் சட்டத்தில் உள்ளே போட்டு உங்களுக்கு ரொம்ப விசுவாசமா இருக்கேன், கருணை காட்டுங்க எசமான் ஆட்சியெல்லாம் கலைச்சிராதீங்க….

சே..சே நாங்க என்ன முட்டாளா? தனியா 132 எம்.எல்.ஏ வாங்கி தமிழகத்தில் நாங்க ஆட்சி அமைக்க முடியுமா? நீங்கள் இருக்கும் பொழுது நாங்க ஏன் ரிஸ்க் எடுக்கணும்? அந்த பன்னீரெல்லாம் நம்ம பய, பயப்படாம போங்க. ஆனாலும் நீங்கதான் தமிழ்நாட்டை ஆளுவதாக சிலர் நம்புகின்றார்கள் பார்த்தீர்களா? அதுதான் காமெடி

சொல்லுங்கள் பழனிச்சாமி, அது உங்கள் ஆட்சியா? நெசமாவா??? ஹாஹாஅஹா ஹஹஹஹஹாஹா….


உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்து மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யும்படி மருந்துக்கம்பெனிகள் என்னை மிரட்டுகின்றன : மோடிக்கு எழுதிய கடிதத்தில் சத்யராஜ் மகள் பரபரப்பு புகார்

வேதனைபடுவதற்கும் கவலைபடுவதற்கும் மட்டுமே பிரதமராகியிருப்பவர் அவர்.

மாட்டுற்காக மனிதரை கொல்கின்றார்கள் என கடிதம் எழுதினாலே வேதனை தெரிவிக்கும் பிரதமர் அவர், இந்த கடிதத்திற்கும் நிச்சயம் வேதனை தெரிவிப்பார்

ஏம்மா, அவரே உலகம் சுற்றிவிட்டு டயர்டாக வந்திருக்க்காக, அவுகளை போய் வேதனைபடுத்துவது நல்லாவா இருக்கு?

தமிழ்நாட்டு முதலமைச்சர் ஒருத்தங்க இருக்காக, அவுகளுக்கு கடிதம் எழுதினால் என்ன?


தமிழகத்தின் பள்ளி கல்லூரிகளில் வந்தேமாதரம் பாடல் கட்டாயம் : செய்தி

நல்லது, அப்படியே பாரதியாரின் “வந்தே மாதரம் என்போம்”, “தாயின் மணிக்கொடி பாரீர்” போன்ற தேசபக்திபாடல்களை வடக்கத்தியவர்களும் தமிழில் படிக்கவேண்டும் சட்டம் இயற்றுங்கள்.

தாகூருக்கும், பக்கிம் சட்டர்ஜிக்கும் கொஞ்சமும் குறந்தவனல்ல பாரதி, அவன் பாடல்களும் தேசபக்திக்கு குறைவில்லாதவை


சசிகலாவுக்கு அமைச்சர் வீட்டில் இருந்து சாப்பாடு- காய்கறி, பழங்களை ஆம்புலன்சில் அனுப்பினார் சப்-இன்ஸ்பெக்டர்…

இந்த மணிரத்தினத்தின் நாயகன் பட காட்சிகள் சமூகத்திற்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கின்றது.


 
 

ஆயிரம் ஓவியாக்கள் வந்தாலும் அசைக்க முடியாதவர் குஷ்பூ.

Image may contain: 1 person, smiling, close-upஓவியா பாசறைகளின் கனிவான கவனத்திற்கு, இதோ தமிழகத்தின் “நிரந்தர பிக்பாஸ்”…

ஏண்டா டேய்..வெறும் இந்த 25 நாட்களில் காயத்திரி, ஆர்த்தி, ஜூலி, கஞ்சா கருப்பு போன்ற அல்லக்கைகளை மட்டும் எதிர்த்து நிற்கும் ஓவியாவிற்கே ரசிகர்களாக சிலர் கூடும்பொழுது..

30 வருடமாக எத்தனையோ எதிர்ப்புகளையும், மிரட்டல்களையும், பெரும் சக்திகளின் சதிகளையும், வழக்குகளையும், சில கலவரங்களையும் கல்வீச்சையும் தாண்டி, அவற்றை எல்லாம் அசால்ட்டாக தாண்டி வந்து, எல்லா எதிர்ப்புகளையும் வீழ்த்தி தமிழகத்தில் நிலைத்து நிற்கும் குஷ்பூவிற்கு எவ்வளவு கோடி ரசிகர்கள் இருப்பார்கள்?

மிகபெரும் ரசிகசேனை அவரின் தைரியத்திற்கும் , துணிவிற்குமே வியந்து அவரை தலைவி என சொல்லி கொண்டாடி கொண்டிருக்கின்றது..

ஓவியா எல்லாம் அவரின் வீட்டு படியாகவோ, காரின் டயராகவோ கூட வரமுடியாது.

இதனை எல்லாம் சிந்தித்து ஓவியா அலப்பறைகள் செயல்படுவது நல்லது.

தலை(வி) இருக்கும்பொழுது வால் ஆட கூடாது..


ஓவியாவின் ரசிகர் குழாம் தேனீக்களாய் குவிகின்றன‌, இந்தியாவின் அடுத்த செயற்கை கோளுக்கு ஓவியா பெயரினை சூட்டவேண்டும் எனும் அளவிற்கு கோரிக்கைகள் வலுக்கின்றன.

சகிப்புதன்மைக்கான காந்தி விருதும், அமைதிக்கான நோபல் பரிசும் அவருக்கு வழங்கபடவேண்டுமாம், கேட்கட்டும் ஜெயலலிதாவிற்கே நோபல் கேட்ட தமிழகத்தில் ஓவியாவிற்கு கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்??

விஜயின் அடுத்தபடம், அஜித்தின் அடுத்தபடத்திற்கு எல்லாம் ஓவியா தான் ஜோடி, அதனால் அஜித்தும் விஜயும் யாரிடம் கால்ஷீட் வாங்க என தவித்துகொண்டிருக்கலாம், வாய்ய்பு இருக்கின்றது

ஏன் கமலும் ரஜினியுமே வரிசையில் நிற்கலாம், ஆனால் “மன்மதன் அம்பு” படத்தில் ஒரே ஒரு நொடி காட்சிக்கு தன்னை அழைத்து ஏமாற்றிய கமலஹாசனுக்கு நோ கால்ஷீட் என சொல்லி ஓவியா பழிவாங்கலாம் தான், ஆனால் பச்சமண்ணு ஓவியா அப்படி எல்லாம் யாரையும் காயபடுத்தாது என புளகாங்கிதம் அடைகின்றனர் ஓவியா பாலோயர்ஸ்..

அதனை விட மகா முக்கியமான விஷயம், நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்த பிக்பாஸை அடித்து விரட்டிவிட்டு அந்த வீட்டை கைபற்றி “உலக நாயகி ஓவியா இல்லம்”, “ஓரங்க நாயகி ஓவியா இல்லம்” என பெயர் வைக்கும் அளவு பெரும் திட்டம் தீட்டிகொண்டிருக்கின்றன ஓவியா பாறைகள்.

இது ஓவியா எனும் சூறாவளி அடிக்கும் நேரம், அடிக்கட்டும்

ஆனால் குஷ்பூ எனும் வைரநிலவினை இக்காற்று என்ன செய்துவிட முடியும்??, தொட்டு கூட பார்க்க முடியாது

ஆயிரம் ஓவியாக்கள் வந்தாலும் அசைக்க முடியாதவர் குஷ்பூ.


Image may contain: 1 person, close-upநர்ஸுகளின் சம்பளத்தை உயர்த்தவேண்டும் அன்புமணி கோரிக்கை

இந்த யழ்வு பிக்பாஸ் பார்த்ததிலிருந்து இந்த லவ்பெல் ஒருமாதிரி ஆகிவிட்டார், முதலில் ஒவியாவிற்கு விழுந்த வோட்டு எனக்கு விழவில்லை என சொல்லிகொண்டிருந்தார்

Image may contain: 2 people, people smiling, close-upஇப்பொழுது நர்ஸ் சம்பளம் உயர்த்தவேண்டும் என்று ஜூலிக்காக குரல் கொடுக்கின்றார் போலும், முன்பு இவர் அமைச்சராக இருந்தபொழுது வராத அக்கறை எல்லாம் நர்சுகள் மேல் இப்பொழுதுதான் வருகின்றது

இன்னும் இந்த பிக்பாஸ் பார்த்து என்னவெல்லாம் சொல்லபோகின்றாரே தெரியவில்லை, அநேகமாக அடுத்து ரைசா போடும் மேக் அப்பினினை பார்த்து, அரசு பியூட்டி பார்லர் அமைக்கபடவேண்டும் என்ற கோரிக்கை வந்தாலும் வரலாம்

அப்படித்தானே மிஸ்டர் லவ்பெல்???


கடை என்னுடயது – முதலீடு என்னுடையது- ஆனா வரி 23+30 = 53% வரி : சீமான்

கடை என்னுடயது – முதலீடு என்னுடையது- ஆனா வரி 23+30 = 53% வரி : சீமான்

அடேய் எங்கே 23% வரி இருக்கின்றது? எல்லா பொருளுக்குமா கட்டிகொண்டிருக்கின்றோம்?, 53% வரி என எந்த இடத்தில் இந்த அறிவாளி கண்டார்? எந்த வியாபாரி 53% கட்டுவதாக சொன்னான்?

எந்த அதிகாரி 53% கட்டு என வியாபாரி கழுத்தை பிடித்தான்?

அது என்னடா? கடை என்னுடையது, முதலீடு என்னுடையது?

நீ வாழும் நாட்டின் பாதுகாப்பு என்ன? அரசு ஊழியர்களின் சம்பளம் என்ன? இந்நாடு கல்விக்கும், மருத்துவத்திற்கும் இன்னும் பல விஷயங்களுக்கும் செலவழிக்கும் செலவு என்ன?

எல்லோருக்கும் இவரை போல ஐரோப்பாவிலிருந்து ஈழதமிழர் காசா வருகின்றது?

சாலை, பாலம் முதல் குடிநீர் வரை இத்தேசம் எவ்வளவு செலவழிக்கின்றது, எவ்வளாவு மக்கள் திட்டங்கள்? எங்கிருந்து வரும் பணம்

வரி இல்லாமல் ஒரு தேசம் இயங்க முடியுமா? இவர் இவ்வளவு சுகமாக சென்னையில் மடத்தனமாக பேசிகொண்டிருக்க அரசு எவ்வளவு செலவழித்துகொண்டிருக்கின்றது என கூர்ந்துபார்த்தால் இப்படி மடத்தனமான உளறல் வருமா?

இந்த அறிவாளிகு ஒரு கட்சி, அதில் என்னை தாண்டி ரஜினி வரகூடாது, கமல் வந்தாலும் திமுகவிற்கு செல்லகூடாது என கட்டளை வேறு, சுத்த அபத்தம்.

இவர் பெரும் மடையன் என்பதை இதற்கு மேல் எப்படி சொல்ல? கடையும் முதலீடும் இவருடையது என்றால் வரி கட்டமாட்டாராம்? என்ன அநியாயம்

அப்படி சொல்லும் இவர், தனியாக கச்சதீவு அருகே ஒரு தீவில் ஒரு கடை வத்து தனியாக அமர்ந்து கொண்டு என் கடை, என் முதலீடு யாருக்கும் வரி செலுத்தமாட்டேன் என அமரட்டும்

முடியுமா மிஸ்டர் சைமன்???

53% வரி உன் அண்ணன் பிரபாகரன் ஆண்ட வன்னியில் இருந்தது, பின் அது 100% கூட ஆனது, அதுதான் உன் அண்ணனின் பொற்கால ஆட்சி.

கொடநாட்டிலிருந்து தலமைசெயலகம் வரை …

சிறுதாவூர் பங்களா மர்மம், அப்பல்லோ மர்மம், கொடநாடு மர்மம் , கூவத்தூர் மர்மம், பரப்பான அக்ரஹார சிறை மர்மம் என்றேல்லாம் சர்ச்சை வந்தது அதாவது வேறு விவகாரங்கள்

ஆனால் தமிழக தலமை செயலகத்திலே மர்மமாம், குட்கா சம்பந்தபட்ட கோப்புகளை காணவில்லையாம்.

மர்மமான வீட்டு பூசாரியினை ஆலய கருவறையில் விட்டால் அங்கும் மர்ம விஷயங்கள் நடக்கும், தலமை செயலகம அப்படி ஆகிவிட்டது

இவர்கள் காலப்ட்ட இடமெல்லாம் இப்படி பல மர்மங்கள் நடக்கும் போல, மாநிலத்தின் தலமை செயலகத்திலே மர்ம விஷ்யங்கள் நடக்கிறதென்றால் மாநிலம் எப்படி இருக்கும்?

மிகபெரிய மர்ம மாநிலமாக தமிழகம் மாறிகொண்டிருக்கின்றது.

முன்பு திருச்செந்தூர் வைரவேல் மர்மமாக காணாமல் போனதற்கே நடையாய் நடந்து பெரும் விஷயங்களை வெளிகொண்ர்ந்தவர் கலைஞர், இன்று அவரும் இல்லை

நடக்கவேண்டிய நேரத்தில் நடக்காமல், திடீரென நடக்க கூடாத நேரத்தில் நடப்பவர் ஸ்டாலின் அவர் அப்படித்தான்

இனி தமிழகத்தின் மர்மங்களை வெளிகொணர யார் இருக்கின்றார், வைரமுத்து சொன்னது போல நல்ல தலைவர்களுக்கு பெருன் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது

கொடநாட்டிலிருந்து , தலமைசெயலகம் வரை பல பொருட்கள் மர்மமாக காணாமல் போகின்றன, ஆக தமிழர்களே உங்கள் கிட்னியும் மர்மமாக காணாமல் போகலாம் கவனமாக இருங்கள்