எந்த மீடியாவது வாய் திறக்கின்றதா?

ஜிஎஸ்டி என்பது பற்றி சீமானை எல்லாம் பேசவைத்து பார்க்கும் ஊடகங்களில் ரஷ்ய mic 25 விமானம் நல்லதா? இஸ்ரேலிய பிரெஞ்ச் விமானம் நல்லதா? என எவனாவது விளக்குகின்றானா?

சீனா வளைக்க நினைக்கும் கோழிகழுத்து மலைப்பகுதி பற்றி எவனாவது, எந்த மீடியாவது வாய் திறக்கின்றதா?

கதிராமங்கலம் எரியும் பொழுது, இப்படி அசாமிலும், கோதாவரி படுகையிலும் மீத்தேன் எடுக்கின்றார்கள், அஞ்சவேண்டாம் என நம்பிக்கை கொடுக்கின்றதா? அல்லது அங்கெல்லாம் இப்படி அழிவு அதனால் நமக்கு வேண்டாம் என்றாவது சொல்கின்றதா சுத்தமாக இல்லை, அப்படிபட்ட ஆக்கபூர்வ நிகழ்ச்சியோ அப்படி அறிவாய் பேசும் புத்திஜீவிகளையோ அழைப்பதில்லை

மாறாக அரைவெட்டு, குறுக்குபுத்தி, ஒன்றுமே தெரியாத உளறுவாயனை எல்லாம் ஏதோ சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் அளவிற்கு கொண்டுவந்து பேசவிடுகின்றது

ஜிஎஸ்டி என்றேல்லாம் அரைகுறைகளை அலறவிடும் ஊடகங்கள் இந்திய எல்லையில் சீனாவினை இந்தியராணுவம் எப்படி சமாளிக்கவேண்டும் என ஏன் ஒரு பயலையும் பேட்டி எடுக்கவில்லை?

இந்த மீடியாக்கள் இன்னும் அதனைத்தான் செய்யவில்லை, மற்றபடி ரோட்டில் சும்மா கட்டைபீடி குடித்துகொண்டிருப்பவனை அழைத்து, ஜிஎஸ்டி பற்றி அரசுக்கு உங்கள் ஆலோசனை என்ன? ஜிடிபி குறித்து அரசுக்கு நீங்கள் சொல்லும் கருத்து என்ன என கேட்டு இம்சைபடுத்துகின்றார்கள்

விரைவில் தந்தி டிவி சீமானை வைத்து, சீன எல்லையினை விளக்குகின்றார் சீமான் என்றொரு நிகழ்ச்சி நடத்தினால் என்னாகும்? சீமானும் ராணுவ உடையில் தோன்றுவார் இந்திய ராணுவ ஜெனரல் போல முழங்குவார்

இமயமலையினை அப்படி வளைக்கவேண்டும், இந்த பக்கம் இப்படி திருப்ப வேண்டும் , சீன ஏவுகனையினை கையால் பத்துபேர் தடுக்கவேண்டும், சீன ஹெலிகாப்டரை கைதுப்பாக்கியால் சுடவேண்டும் , சீன கப்பலை அப்படி புரட்டவேண்டும்,

நம் வீரர்கள் எல்லாம் உமி மூட்டையின் நடுவில் அமரவேண்டும் எதிரி சுட்டால் தோட்டா உள்ளே வராது, கிராமத்து உமி, நம் அப்பனும் ஆத்தாளும் அத்தாச்சியும் பாதுகாக்கும் உமி சும்மா அல்ல உறவே, உமியாலே சீனனை அடிக்கலாம்

(உடனே ஒரு கூட்டம் கைதட்டும், அட தவிட்டில் தீப்பொறி பட்டால் மொத்தமும் காலி அல்லவா? என தலையில் உமி இருக்கும் இந்த கூட்டமும் யோசிக்காது )

நான் எல்லாம் எங்க ஊரில கவணில் கல் வைத்து எத்தனை பேர் மண்டையினை உடச்சிருக்கேன் தெரியாம், அப்படி சீனன் கண்ணையும் நம்மால் உடைக்கமுடியும் தம்பி, அண்ணன் பிரபாகரன் கூட அப்படி ஒரு படை வைத்திருந்தார், நம்ம பாரம்பரியம் தம்பி…

சீன நீர்மூழ்கியினை நீருக்குள் சென்று 10 பேர் அமுக்கவேண்டும், நாம் தூத்துகுடியில் கடலில் மூழ்கி முத்தெடுத்த தமிழன் வம்சம் …….

என்றெல்லாம் அன்னார் தன் ராணுவ மூளையில் சொல்வார் அல்லவா?

பார்க்க எப்படி இருக்கும்? உலகமே வாய்விட்டு சிரிக்காதா? அதே காமெடிதான் அன்னாரின் ஜிஎஸ்டியும்.

அப்படி ஒரு நிகழ்ச்சி நடத்துமாறு தந்திடிவியினை கேட்டுகொள்கின்றோம், சீமான் அப்படி அள்ளிவிடும் பொழுது இந்திய ராணுவ‌ தளபதிகள் சிலரும் அருகில் கண்டிப்பாக இருக்கவேண்டும்

காரணம் அன்னார் அபத்தமாக உளறும்பொழுது, “யூ இடியட்…” என சொல்லி சீமான் வாயிலே குத்த அவர்களுக்குத்தான் முழு தகுதி இருக்கின்றது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s