ஜெர்மனி பெரியார் சுயமரியாதை மாநாடு வெற்றிபெற வைகோ வாழ்த்து!

No automatic alt text available.ஜெர்மனி பெரியார் சுயமரியாதை மாநாடு வெற்றிபெற வைகோ வாழ்த்து!

கடவுள் இல்லை என சொன்ன சோவியத் யூனியனிற்கு பெரியார் செல்ல காரணம் இருந்தது, ஆனால் மிகபெரும் மதநம்பிக்கை கொண்ட ஜெர்மனிக்கு பெரியார் சென்று பகுத்தறிவினை போதிக்க என்ன அவசியம் இருந்தது?

ஆனாலும் சென்றிருக்கின்றார், அவர் சென்று 91 வருடம் ஆயிற்றாம், அதனால் விழாவாம்

சரி இந்த விழாவில் என்ன பேசுவார்கள் என நினைக்கின்றீர்கள்? அதே தான், “ஏய் பார்ப்பனனே , உனக்கு ஏன் நாங்கள் அடங்க வேண்டும், நாங்கள் திராவிடர்கள், நாங்கள் இந்துக்கள் அல்ல, ஏய்ய்ய்ய் ஆரியா..” என சீறிகொண்டிருப்பார்கள்

இதனை மொழிமாற்றி ஜெர்மானியனிடம் கொடுத்தால் அவன் ஒரு மாதிரி ஆகிவிடுவான்

இது ஜெர்மனி, கிறிஸ்தவ நாடு. இங்கு பிராமணர் எல்லாம் அதிகாரமே இல்லை, பூசாரியாகவும் அவர்கள் இல்லை, ஆட்சியிலும் இல்லை, பெரியார் என்பவர் யார்? ஜெய்சர் படையிலோ, ஹிட்லர் படையிலோ இருந்தவர் இல்லை, பெர்லின் சுவரை உடைத்தவருமில்லை

இங்கும் சம்பந்தமே இல்லாத இருவரை பற்றி ஏன் இப்படி நீட்டி முழக்குகின்றார்கள், ஒருமாதிரியானவர்கள் போல என தலையில் அடித்துவிட்டு நகர்வான்

இந்த திராவிட கழகத்தாரை பல நாடுகளில் பார்த்திருக்கின்றேன், மகா விசித்திரமானவர்கள்

Image may contain: one or more peopleமலேசியாவிலும் திராவிட காமெடிகள் உண்டு

மலேசியா மூவினம் வாழும் நாடு. மலாய் மக்களை தவிர சீனரும், தமிழரும் உழைக்கவே வந்தவர்கள். கூலிகளாகவே வந்தவர்கள்

அவர்கள் வந்து உழைத்து நாடு உருவாகி நன்றாகத்தான் இருக்கின்றது, பார்ப்பன அட்டகாசமில்லை, ஜாதி வெறியில்லை, பின் ஏன் இங்கு திராவிட கழகம் உருவான அவசியம் என்ன? புரியவே இல்லை.

பிராமண உச்ச அதிகாரம் இருந்த காலங்களில் தமிழகத்தில் அது உருவாகியிருக்கலாம், மலாய்காரன் மிகுதியான நாட்டில் திராவிட உரிமைகள் என கொடிபிடிப்பது, அதுவும் குடியேறிய நாட்டில் திராவிட கொடி பிடிப்பது ஏன் என்பது அவர்களுக்கே விளங்காத பொழுது நமக்கு எப்படி விளங்கும்?

சில வருடங்களுக்கு முன் ஒரு சுயமரியாதை திருமணம் மலேசியாவில் நடந்ததை கண்டேன், இங்கு பெரும்பாலும் காதல் திருமணம், ஜோடிகள் தங்கள் திருமணத்தை பதிவு செய்துவிட்டு, வாழ ஆரம்பித்த பின்புதான் திருமண விழாவே நடத்துவார்கள், விரும்பினால் அல்லது நினைவு இருந்தால் தந்தை தாயினை அழைப்பார்கள்

ஆக இங்கு நடக்கும் திருமணம் எல்லாமே சுயமரியாதை, சுய உணர்வு திருமணம்தாம், ஜாதி, மதம், இனம் மொழி என எதுவும் அவர்களை பிரிக்க முடியாத அளவு சுயமரியாதை திருமணம்

அதில் ஒரு திருமண விழாவில்தான் கருப்புசட்டை முழங்கிகொண்டிருந்தது, “இந்த பிராமணனை கொல்லவேண்டும், பூசாரியினை தூக்கி தண்டவாளத்தில் போடவேண்டும், இதோ பிராமணன் இன்றி நாம் திருமணம் நடத்துகின்றோம்

இவர்கள் வாழமாட்டார்களா, இந்த மணமகன் நாளையே கட்டையில் போக போகிறானா? இந்த பெண்தான் வாழாவெட்டி ஆவாளா?

ஏய் பிராமணா யாரை ஏமாற்ற பார்க்கின்றாய்”

எனக்கும் மயக்கமே வந்துவிட்டது, பெற்றோரையே அழைக்காத திருமணங்கள் நடக்கும் நாட்டில், பிராமணனை யார் தேட போகின்றார்கள்? என்ன அர்த்தமே இல்லாத கொடுமை இது

இப்பொழுதும் பாருங்கள், உண்மையில் பகுத்தறிவும், கடவுள் மறுப்பும் பேசிய ரஷ்யாவில் பெரியார் சென்ற 91ம் ஆண்டு நாள்தான் கொண்டாட வேண்டும்

ஆனால் செய்யவில்லை ஏன்? அதுவும் ரஷ்ய புரட்சியின் 100ம் ஆண்டு விழாவில் நிச்சயம் செய்யவேண்டும், ஆனால் செய்யவில்லை ஏன்?

காரணம் ரஷ்யா கம்யூனிசத்தை தலைமுழுகி சிலுவை முன் சரணடைந்துவிட்டது, அங்கு போய் பகுத்தறிவு பெரியார் என்றால் மண்டையில் போடுவார்கள்

இன்னொன்று அங்கு தமிழர் மகா குறைவு, 4 டிக்கெட் தேறாது

ஜெர்மன் அப்படி அல்ல, பெரும் எண்ணிக்கையில் ஈழதமிழர் உட்பட எல்லா தமிழரும் இருக்கின்றார்கள், சந்தடி சாக்கில் தமிழ் திராவிட நாடு உருவாகும் நேரம் வந்துவிட்டது தனிதமிழ்நாடு கிடைத்த மறுநொடி தமிழீழம் என அவர்களையும் உசுப்பலாம், கறந்துவிடலாம்

அங்குதான் பெரியாரிசம் பேசலாம், பிராமண எதிர்ப்பை பேசலாம், அப்படியே இந்தியா ஒழிக, மோடி ஒழிக, ஆரிய பிஜேபி ஒழிக என சொல்லலாம், கொஞ்சமாவது வசூலாகும்

ஆக கொண்டாடபடவேண்டிய பெரியாரின் ரஷ்ய பயணத்தை மறைத்து, சம்பந்தமே இல்லாத ஜெர்மன் பயணத்தை இவர்கள் தூக்கிபிடிப்பது இதற்குத்தான்

வைகோ வாழ்த்தும் ரகசியமும் இதுதான், மதிமாறன் போன்றவர்கள் சென்று இல்லாத பொய்களை அள்ளிவிடும் வாய்ப்பும் உண்டு

இதில் தனக்குமட்டும் மானம் மிகுந்திருப்பதாக நம்பும் “மானமிகு” வீரமணியும் செல்கின்றாராம்

கொஞ்சமும் பெரியாருக்கு சம்பந்தமே இல்லாத நாட்டில் சென்று, ஜெர்மனுக்கு அறவே சம்பந்தம் இல்லாத திராவிட கருத்துக்களை சொல்ல செல்லும் இவர்களை என்ன சொல்ல?

பெரியார் தென்னகத்தின் எத்தனையோ சிறைகளில் இருந்தார், அங்கெல்லாம் செல்ல விரும்பாத இந்த திராவிட போராளிகள் ஜெர்மனில் பெரியார் இருந்த இடத்தை பார்க்க கடல் கடந்து செல்வார்களாம்

சுயமரியாதை மாநாடு ஜெர்மனியிலா? அங்கு குடியுரிமை சோதனையில் நான் திராவிடன், எனக்கு மானம் முக்கியம், மரியாதை முக்கியம் என சீறட்டும் பார்க்கலாம்

நசுக்கி எடுத்துவிடுவார்கள்

அதனால் தலையினை சொறிந்துகொண்டு விசா வாங்கிவிட்டு இவர்கள் எந்த ஜெர்மானியனும் இல்லாத இடத்தில் சுயமரியாதை முழங்குவார்கள்

மாறாக நான் சுயமரியாதைக்காரன் என ஜெர்மானியனிடம் சொன்னால் நான் மட்டும் மானம்கெட்டவனா? டேமிட்.. எங்கு வந்து என்ன பேசுகின்றாய் என அடிக்கும் அடியில் கருப்பு சட்டையும் இருக்காது, மானமிகு அடையாளமும் இருக்காது.

இப்படி எல்லாம் விழா எடுக்கின்றார்களே, யாராவது “ஏம்பா வீரமணி , பெரியார் அன்று நிர்வாண சங்கத்தை காணத்தான் ஜெர்மன் சென்றாராம், அதற்கா விழா?” என கேட்டால் என்ன செய்வார் வீரமணி?

சரி அது அவர் பாடு, நாம் வைகோவிடம் கேட்கலாம், மிஸ்டர் வைகோ, ஜெர்மனிக்கு பெரியார் சென்று 91 வருடம் ஆனதை கொண்டாட நீங்கள் செல்கின்றீர்களா?

“பெரியார் நிர்வாண சங்கத்தை கண்ட 91ம் ஆண்டு விழாவிற்கு நீங்கள் எப்படி செல்வீர்கள்?? ” என நாங்கள் கேட்க மாட்டோம்


அடுத்த பொது தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வருவது கடினம் – திருநாவுக்கரசர்

ஏன் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது மட்டும் எளிதா?


Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s