அப்துல்கலாம் இந்தியனாக வாழ்ந்தார்

Image may contain: one or more people, people sitting and indoorபகவத் கீதை இந்துக்களுக்கான நூலாக இருக்கட்டும், ஆனால் எல்லோரும் படிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

அணுகுண்டை தயாரித்த ஓப்பன் ஹைமர் அதனை படித்திருக்கின்றார், தன் குறிப்புகளில் சொல்கின்றார்

அமெரிக்க அணுஆராய்ச்சி மையத்தில் நடராஜர் சிலை உண்டு, ஒரு தத்துவமாக அவர்கள் அதனை பார்க்கின்றார்கள், யாரும் இது கிறிஸ்தவநாடு அந்நிய தெய்வம் எதற்கு என சீறவில்லை, அவர்கள் அப்படித்தான்

அப்துல்கலாம் இந்தியனாக வாழ்ந்தார், தினமும் குரான் படித்தார், தொழுதார். குரானை தாண்டியும் நிரம்ப வாசித்தார், அது கீதையோ, திருக்குறளோ, புறநானூறோ எது கிடைத்தாலும் வாசித்தார்

இப்பொழுது அப்துல்கலாம் நினைவிடத்தில் அவர் வீணையோடு இருப்பது ஏன் என்ற சர்ச்சையும், அவர் கீதை படிப்பது ஏன்? என்ற சர்ச்சையும் வெடிக்கின்றது

ஐன்ஸ்டீன் பெரும் விஞ்ஞானி, ஆனால் வயலின் வாசிப்பார். அவர் வயலினோடு நிற்கும் போட்டோக்கள் ஏராளம், அவர் நினைவிடத்தில் கூட அது உண்டு

வீணை இந்திய அடையாளம், இன்னும் சொல்லபோனால் இந்திய கல்வி அடையாளமான கடவுள்
அதனோடுதான் வீற்றிருப்பார், இவர் இந்திய கல்வியின் அடையாளம் என அப்துல்கலாமின் சிலை வீணையோடு நிறுவபட்டதில் தவறேதும் இருக்கமுடியாது.

கலாமிற்கும் மிக மிக வீணையினை பிடிக்கும், அவர் அடிக்கடி வாசிக்கும் விஷயம் என்கின்றன குறிப்புகள்

ஆனால் கீதையினை வைத்தது ஏற்கமுடியாது என சர்சைகள் வெடிக்கின்றன‌ . அது ஞான நூல்தான் ஆனால் இந்துக்களின் அடையாளம் என குறிக்கபட்டுவிட்ட பின் சில சர்ச்சைகள் வெடிக்கின்றன.

அவர் எல்லா புத்தகமும் தான்படித்தார், விஞ்ஞான, ஞான நூல்கள் எல்லாமும் தான் வாசித்தார். ஆனால் கீதையினை மட்டும் வைத்தது ஏன் என கொதிக்கின்றார்கள், கொஞ்சம் பெருந்தன்மையாக விட்டுவிடவேண்டிய விஷயம்தான், பெரும்பான்மையான வெளிநாட்டு விஞ்ஞானிகள் படித்த கீதையினை அவரும் படித்திருக்கின்றார், இது இந்நாட்டு ஞான நூல் என சொல்லிவிட்டு சென்றுவிடலாம்

ஆனால் விடுவார்களா? விடவே மாட்டார்கள் சர்ச்சைக்காரர்கள்

என்ன செய்யலாம்? வைக்க வேண்டுமானால் அவர் நேசித்த‌ திருக்குறளை வைத்திருக்கலாம், அதற்கு மேல் மிக பொருத்தமான நூல் உண்டென்றால் அவர் எழுதிய “அக்னி சிறகுகளையே” வைத்திருக்கலாம்.

அதுதான் அவர் நினைவிடத்திற்கு மிக பொருத்தமானது.

(திருநீறு பூசி, பூனூல் போட்டு விட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ? என உற்றுபார்க்கின்றாரோ மோடி 🙂 )


Image may contain: 2 people, people standing“அய்யா, இந்த அஞ்சலிக்கு அப்புறம் அந்த ஜிஎஸ்டின்னா என்னண்ணு கொஞ்சம் விளக்கி சொல்லிட்டு போங்க, இந்த மாநிலத்து நிதிஅமைச்சர் நான், ஆனா யாராவது ஜிஎஸ்டி பற்றி கேட்டா 4 வரி சொல்ல தெரியலங்க, அவமானமா இருக்கு

புண்ணியமா போகும் , கொஞ்சம் புரியுர மாதிரி சொல்லிட்டு போங்க”


 

 
 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s