கைதியினை மீட்டு சென்ற சம்பவம் …

நாங்குனேரி அருகே கிராமமே திரண்டு வந்து காவலர்களை உதைத்து , கைதியினை மீட்டு சென்ற சம்பவம் உறுதியாக நடந்திருக்கின்றது

நீர் இல்லா தமிழகத்தில் இப்பொழுது மண்ணுக்கு சண்டை, மண் தகறாறில் ஒருவரை காவல்துறை கைது செய்து அழைத்து சென்றபொழுதுதான் இந்த அதிரடி தாக்குதல் நடைபெற்றிருக்கின்றது

அந்த கிராம பெண்கள் வந்து அடித்து உதைத்து இழுத்து சென்றதுதான் ஹைலைட். கோவில்பட்டி வீரலட்சுமி தெரியும் இந்த வீரலட்சுமிகள் குறித்து இனிதான் வரலாறு பேசும்.

காவல்துறை பெரும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை, இதுவே கூடங்குளம், நெடுவாசல் போன்ற உரிமை போராட்டம் என்றால் பின்னி எடுத்துவிடுவார்கள், அது தேசிய பிரச்சினை அல்லவா? மத்திய அரசு மாநில அரசை டிஸ்மிஸ் செய்துவிடும் என்ற பயம்

ஆனால் இந்த மணல் தகறாறை மத்திய அரசு கண்டு கொள்ளாது, அதனால் வோட்டு முதல் உள்ளூர் கவுன்சிலரின் முகம் வரை அரசு கண்ணுக்கு வந்து போகும்

மற்றபடி டாஸ்மாக் கடையினை பெண்கள் உடைத்தால் அரசு பாயும் அது வருமான பிரச்சினை, இதற்கெல்லாம் அரசு அசையாது.

ஆனாலும் இது மிக வன்மையாக கண்டிக்கதக்கது , மாநிலத்தின் பாதுகாவலையும் அமைதியினையும் உறுதிசெய்யும் கடப்பாடு கொண்ட , அர்பணிப்புமிக்க காவல்துறையினர் மீது தாக்குதல் நடந்திருப்பது பெரும் குற்றம்

காவல்துறைக்கு ஒரு அமைச்சர் உண்டல்லவா? அது யார்? சாட்சாத் பழனிச்சாமிதான், நிச்சயமாக அவர் பதில் சொல்லவேண்டும், அக்காவலர்களுக்கு ஆறுதல் சொல்லவேண்டும் ஆனால் சத்தமே இல்லை

ஆக, எடப்பாடி அரசை கண்டு தமிழக பெண்களுக்கே பயமில்லை, அசால்ட்டாக போட்டு காவலரையே அடிக்கின்றார்கள்

ஆனால் அதிமுகவினரிடம் கேளுங்கள், பள்ளிகுழந்தைகள் மனப்பாடம் ஒப்புவிப்பதுபோல சொல்வார்கள்

“புரட்சிதலைவியின் கனவினை நனவாக்கும் இந்த ஆட்சியில் பெண்களுக்கு அதீத தைரியம் வந்திருப்பது, எங்கள் ஆட்சியின் வெற்றி, மகளிருக்கு அவ்வளவு பாதுகாப்பும் உரிமையும் எங்கள் ஆட்சியில் இருக்கின்றது”

சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருப்பவர் யார் தெரியுமா?

சமீபத்தில் வந்த ஆஸ்கரை தவறவிட்ட படமான “முத்துராமலிங்கம்” படத்தின் இயக்குனர்தான், முன்னமே இச்சமபவம் நடந்திருந்தால், அப்படத்தில் இப்படி சில காட்சிகளை சேர்த்து அசத்தியிருக்கமாட்டாரா?

“வடை போச்சே” எனும் நிலையில் இருக்கின்றார் அவர்.

 
 
 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s