சிலந்திகள் பிக்பாஸ் பெண்கள்

முத்து படத்தில் வரும் வயதான ரஜினிபோல ஆகிவிட்டார் நண்பர் Omm Prakash

“அண்ணே எல்லாம் நாடகம், எல்லாமே நாடகம், பிக்பாஸே நாடகம். ஏதோ பாவபட்ட புள்ளன்னு வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு சப்போர்ட் பண்ணினோம், அங்க எல்லாம் நாடகம்ணே, இனி பிந்து மாதவி எல்லாம் வருமாம், ச்சே… நாடகம் எல்லாம் நாடகம் ஹ்ஹா ஹா ஹா ஹா” என சிரிப்பவரை பார்த்தால் பயமாக இருக்கின்றது

தாடியும் அழுக்கு போர்வையும் இல்லை, மற்றபடி அதே விரக்தி சிரிப்பு

விஷய என்னவென்றால், பிக்பாஸ் சுத்த நாடகமாம், இந்த சூலி, காயத்திரி , ஓவியா எல்லோர் ஆக்ரோஷமும் நடிப்பாம். அவருக்கு இது திடீரென அவருக்கு புரிந்துவிட்டதாம். இந்த நாடகத்தை இனி பார்க்கமாட்டாராம். இந்த பெரும் ஏமாற்றம் அவருக்கு பெரும் விரக்தியாம்

இனி ஷோரூமில் கூட டிவி பார்க்கமாட்டேன் எனும் அளவிற்கு ஞானமழை கொட்டினார்.

திடீரென ஆளவந்தான் கமலஹாசனாக மாறிவிட்டார், “சிலந்திகள் பிக்பாஸ் பெண்கள்” என உறுமினார். அண்ணே நான் மனிதவெடிகுண்டா மாறப்போறேன், நீங்க ஒரு உதவி செய்யணும் என்றார்

ஏன் குண்டு கட்டிவிடவேண்டுமா?

இல்லண்ணேன் , நான் பிக்பாஸ் வீட்டில் மனிதவெடிகுண்டாக வெடிக்க போகின்றேன், அதற்கு நீங்கள் 2 பேட்டரி பில் போட்டு வாங்க வேண்டும், ஜிஎஸ்டி எல்லாம் போட்டு கவனமா வாங்குங்க,

ஓஓ சரி ஏன்?

பில்லை என்னிடம் கொடுங்கள், பத்திரமாக என் வீட்டில் வைத்துவிட்டு வெடிக்க போகின்றேன்

அது ஏன் உங்கள் வீட்டில் ரசீதை வைப்பீர்கள்????

அப்போதாண்ணே விசாரணையில் சிக்கி ஆயுசுக்கும் உள்ளே இருப்பீங்க, சும்மா உங்கள விட்டுட்டு போக முடியுமாண்ணேன்”

 


 
கமல்ஹாசன் – காயத்ரி ரகுராமுக்கு ரூ.100 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ்: கிருஷ்ணசாமி அனுப்பினார்இவரால் தாமிரபரணியில் செத்த 17 பேருக்கும் என்ன நஷ்ட ஈடு இவர் வாங்கி கொடுத்துவிட்டார்? ஒன்றுமேயில்லை

இதில் கமலுக்கும், காயத்திர்க்கும் “சேரி பிஹேவியர்” எனும் வார்த்தைக்கு நோட்டீஸ் அனுப்புகின்றாராம்.

பிராமணயிசம் உயர்ந்தது என சிலர் சொல்லும் எனும் ஆபத்தைவிட மகா ஆபத்தானவர்கள் இந்த கிருஷ்சாமி போன்ற தலித் தலைவர்கள்.

மிஸ்டர் கிருஷ்ணசாமி, சேரி மக்களின் மானம் வெறும் 100 கோடியில்தான் இருக்கின்றதா? அதனை செலுத்திவிட்டு ஆளாளுக்கு சேரி பிஹேவியர் என சொல்லட்டுமா என கமலஹாசன் தரப்பு திருப்பி கேட்டால் என்ன செய்வார் கி.சாமி?


 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s