எங்கிருந்துதான் யோசிப்பார்களோ தெரியவில்லை

எங்கிருந்துதான் யோசிப்பார்களோ தெரியவில்லை, கற்பனை கதைகளை படைப்பதில் இவர்கள் கல்கியையும், வர்ணிப்பதில் கம்பனையும் நினைவுபடுத்திகொண்டே இருக்கின்றார்கள்.

அதாவது காமராஜர் குடிநீர்டேங்க் கட்ட சென்றாராம், இன்சினியர் இது டெக்கினிக்கலாக முடியாது என மல்லாக்க படுத்துவிட்டாரம், கோபமடைந்த காமராசர் “முடியாதுண்ணு சொல்லவா நீ படிச்ச” என சொல்லி நெஞ்சிலே மிதிச்சாராம், 4 மிதியாம்.

உடனே அந்த‌ இஞ்சினியர் அண்ணாமலை ரஜினியாக எழும்பி, லிங்கா ரஜினியாக கட்டி முடித்தாராம், உடனே பாகுபலி ரம்யாகிருஷ்ணனாக காமராஜர் வெற்றிபுன்னகை புரிந்தாராம்.

இதுவரை சிக்கல் இல்லை, இனிதான் சிக்கல், ஆம் அந்த இன்சினியர் அப்துல்கலாமாம்.

அட பதர்களா? 961களில் ராக்கெட் நுட்ப ஆராய்சிக்காக அதாவது அப்பொழுது ஏவுகனை ஆராய்ச்சி அல்ல, செயற்கைகோளினை மேல் அனுப்பும் ராக்கெட் ஆராய்சியில், டெல்லிக்கும் திருவனந்தபுரத்திற்கும் சில வெளிநாட்டு பயணங்களுக்கும் பறந்துகொண்டிருந்தவர் கலாம்.

எஸ்.எல்.வி எனப்படும் இந்தியாவின் முதல் ராக்கெட்டை உருவாக்கும் முயற்சியில் அக்காலத்தில் தன் வாழ்வை அர்பணித்த கலாம், காமராஜர் சொன்னபடி அஸ்திவாரம் வெட்டிகொண்டிருந்தாராம், இவர்களை எல்லாம் போட்டு சாத்தவேண்டும்

1960களில் ராக்கெட் நுட்பம் மகா புதிது, இரு நாடுகள் மட்டுமே முண்ணணி, அந்த பரபரபான காலத்து விமான பொறியியலாரான கலாம், காமராஜர் பின்னால் பொதுபணிதுறை இஞ்சினியராக குழிதோண்டிகொண்டு அலைந்தாரா? உங்கள் “கலாம் பக்திக்கும்” அளவே இல்லையா?

இம்மாதிரி அள்ளிவிடுவதும், அதனை முகநூலில் பதிவதும் எவ்வளவு ஆபத்து தெரியுமா? யூ டியூப்பில் முகில் டிவி என்றொரு டிவி இதனை பெரும் வீடியோவாக வேறு வெளியிட்டிருக்கின்றது

வருங்கால சந்ததிகளுக்கு பெரும் துரோகம் இது, அவர்கள் நம்பிவிடுவார்கள், இது மிக பெரும் கண்டனத்திற்கும் கட்டுபாட்டிற்கும் உரியது


பலர் நம்மை ரகசியமாக கண்காணித்து கொண்டே இருக்கின்றார்கள் என்பது இப்பொழுது நன்றாக‌ விளங்குகின்றது.

சில ஊடகங்கள் நம் பதிவுகளை ஆடியோக்களாக மாற்றி You Tube ல் பதிவேற்றியிருக்கின்றன,

அவற்றில் சில நம் பெயரையும் சொல்லிகொள்கின்றன, நன்றிகள்

இதனை எல்லாம் பார்க்கும் பொழுது மிக மிக பயமாக இருக்கின்றது, எல்லை தாண்டி செல்கின்றோம் என்ற அச்சம் மேலோங்குகின்றது

அதே நேரம் நம் வரிகளின் ஆடியோ வடிவத்தை கேட்கும்பொழுதும் ஒரு பூரிப்பும், பரவசமும் ஏற்படத்தான் செய்கின்றது

அந்த Urban Tv எனும் ஊடகத்திற்கு நன்றிகள் பல‌.

(எசமான், நீங்கள் யாரென்று தெரியவில்லை. ஆனால் இப்படி குஷ்பூ பதிவுகளையும் 4 பேரிடம் கொண்டு சேர்த்தால், ஓவியா தமிழக மக்களுக்கு கடமைபட்டிருப்பது போல, நானும் உங்களுக்கு நன்றிகடனோடு இருப்பேன்

செய்வீர்களா? செய்வீர்களா செய்வீர்களா?)


 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s