ஜூலியினை பிக்பாஸில் போட்டு அடியோ அடி என அடிக்கின்றார்களாம்

Image may contain: 2 people, people sitting and indoor
 ஒரு சம்பவம் உண்டென்பார்கள்

பாரதிராஜாவிற்கும், பெரியார் தாசனுக்கும் முன்பொருமுறை பிரச்சினை வெடித்தது. பாரதிராஜா நாயக்கர்களை விரட்டுவோம் எனும் தமிழ்தேசியவாதி, பெரியார்தாசன் இஸ்லாமை தமுவும் முன் தீவிர பெரியாரிஸ்ட், பெயரே அப்படி என்றால் பார்த்துகொள்ளுங்கள்

எங்கோ பாரதிராஜாவினை அவர் ஏதோ சொல்லபோக, பாரதிராஜாவின் அடிப்பொடிகள் வந்து சீறின, அப்பே உங்கள அவமானமா பேசிட்டாரு அப்பே, வந்து அவர நாலு அடி அடிங்க அப்பே” என்ற அளவு கண்ணை கசக்கினார்கள்

பாரதிராஜா சில நாட்களாக அமைதிகாத்தார், ஒரு நாள் நேராக கிளம்பி பெரியார்தாசன் வீட்டிற்கு சென்றார், இப்பொழுது கொலைவிழும், பச்சை தமிழனின் வீரம் என்ன? அதுவும் நம் ராஜா சும்மாவா என காத்திருந்தார்கள் அடிபொடிகள்

ஆனால் இருவரும் கைகுலுக்கி வெளியே வந்தனர், மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார் பாரதிராஜா, அடிப்பொடிகள் அப்செட், எ”ன்னடா? அண்ணன் சும்மா வந்துட்டேன்னு பாக்குறீங்களா? வெயிட் அன்ட் சி” என சொல்லிவிட்டு மறுநாள் சூட்டிங் சென்றார்

அங்கே அடிப்பொடிகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி, கருத்தம்மா படத்திற்காக பெரியார்தாசனை கோவணத்தோடு நிறுத்தியிருந்தார் பாரதிராஜா

“எப்படி பழிவாங்கிட்டேன் பாத்தீங்களா?” என பாரதிராஜா சொல்ல அடிப்பொடிகள் கட்டைவிரலை உயர்த்தி கண்கலங்கினார்களாம்

இப்படி ஒரு கதை உண்டு, இப்பொழுது சொல்ல காரணம் என்னவென்றால், இந்த ஜூலி

அதாவது அவர் ஜல்லிகட்டில் ஓவராக பேசினாராம், பெரும் சத்தமும் சீனும் போட்டாராம், அவருக்கு ரசிகர்களும் வந்தார்களாம்

இதனை கவனித்த அந்த தரப்பு, இவள மொத்த தமிழ்நாடும் திட்டணும், அவள மண்ணு அள்ள்ளிபோட்டு திட்டணும், திட்டம் தயாராகட்டும் என சொன்னதாம்

உடனே அந்த ஜூலியினை பிக்பாஸில் போட்டு அடியோ அடி என அடிக்கின்றார்களாம், அதுதான் உண்மையான காரணமாம்

ஜல்லிகட்டில் கூட்டத்தோடு கத்திய அனுபவத்தில், கொஞ்சமும் யோசனையின்றி வந்து பிக்பாஸில் மாட்டியது ஜூலி, அவர்கள் அழைத்தார்கள் என்றால் அம்மணி கழண்டிருக்க வேண்டாமா?

அங்கு இருப்பது எல்லாம் நடிகர் கூட்டம் , அம்மணிக்கும் அந்த ஆசை வந்திருப்பதால் சென்றிருக்கின்றர், இப்பொழுது கோவை சரளாவிற்கு வாரிசாக வரும் அளவு அம்மணி தேறிவிட்டார்

நடிப்பு ஆசையில் ஈஈஈஈஈ என பல்லை காட்டி ஓடிய ஒருவருக்கு, பழிவாங்கபடுகின்றார் ஜூலி இது ஜல்லிகட்டை நிறுத்த நினைத்த இலுமினாட்டி சதி என சில கம்முனாட்டிகள் சொல்லிகொண்டிருக்கின்றன‌

ஒரு கம்முனாட்டியினை இன்னொரு கம்முனாட்டி மதிக்கிறதுதாங்க மரியாதை…

 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s