தர்மயுத்தம் தொடங்கிவிட்டது

இந்த காட்சிகளை பார்க்க நன்றாகவே இருக்கின்றது

பல மாநிலங்கள் விவசாய கடனை ரத்து செய்தும் தமிழகம் செய்யவில்லை, ஆனால் அய்யாகண்ணு டெல்லியில்தான் கொடிபிடிக்கின்றார்

பழனிச்சாமி பிரதமரை சந்தித்த மறுநொடியில் பன்னீர்செல்வமும் சந்திக்கின்றார்

நீட்தேர்வு என பிரதமரை சந்திக்கும் விஜயபாஸ்கரின் கைது தவிர்க்கபடுகின்றது

இதனை எல்லாம் கவனித்த திவாகரனும் தினகரனும் ஒன்றாகி பன்னீர் எங்கள் பங்காளி என்கின்றனர்

பின் எதற்கோ அவசரமாக சென்னை வரும் அருண் ஜெட்லி ஜெயா நினைவிடம் செல்கின்றார், பின்னாலே ஜெயகுமாரும் ஓடுகின்றார்

இதனை கண்ட தினகரம் நாங்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு வியூகம் வகுக்கின்றோம் என்கின்றார்

இதனை கேட்ட ஜெயகுமார் கட்சியும் ஆட்சியும் பழனிச்சாமிக்கு என பகிரங்கமாக சொல்கின்றார் ஜெயகுமார்

இப்படியாக இங்கொரு மர்ம விளையாட்டு நடைபெற்றுகொண்டிருக்கின்றது, டென்னிஸ் விளையாட்டில் இருபக்கமும் மாறி மாறி பார்க்கவேண்டியது போல இவர்கள் இருவரையும் திரும்பி திரும்பி பார்த்து கழுத்து வலிக்கின்றது


சசிகலா கும்பல் ஜெயாவிடம் யாரும் பேசமுடியாமல் சிறை வைத்தது போல, குஷ்பூவினையும் ஒரு சிலர் சுற்றி இருப்பதாக ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்

ஜெயா பாலோவேர்ஸ் செய்த தவறை, குஷ்பூ ரசிகர்களும் செய்ய தயாராக இல்லை அல்லது ஜெயா செய்த தவறை குஷ்பூவும் செய்துவிட கூடாது

சசிகலா பல பாடங்களை தமிழகத்திற்கு கற்றுகொடுத்திருப்பதால், குஷ்பூவினை அப்படி எல்லாம் விட்டுவிடாமல் காப்பாற்றியே தீரவேண்டும் 
என ரசிகபடை வியூகம் வகுத்துகொண்டிருக்கின்றது.

தர்மயுத்தம் தொடங்கிவிட்டது

இதில் உயிர்தியாகம் செய்யவும் தயார் என்கின்றார் Venkatesh Mothilal, , இப்போதைக்கு காந்திவழி போதும் என்பதால் அவர் உயிருக்கு ஆபத்தில்லை.


 யாராவது “புரட்சி திலகம்” சரத்குமார் என்பவரை கண்டீர்களா?

ரேஷன் பொருள் இல்லாத இந்தியாவில் வாழமுடியாது என எங்காவது சென்றிருப்பாரோ?

அவரது மனைவி கூட “வாணி ராணி”யில் மட்டும்தான் தலைகாட்டுகின்றது


 

கூடுதல் போதைக்காக “டாஸ்மாக்” சரக்கில் கலப்படம்; இந்து முன்னணி செயலாளர் கைது

இதற்கு எதற்கு கலப்படம் செய்யவேண்டும், சரக்கடித்துவிட்டு எச்.ராசா அல்லது அர்ஜூன் சம்பத் பேச்சினை கேட்டால் வராத போதை மயக்கம் எல்லாம் வந்துவிடாதா?


 
 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s