இந்த பிக்பாஸ் எனும் பைத்தியகாரர்களின் வீடு

சந்தேகமே இல்லை, இது பிக்பாஸ் வீடு இல்லை மாறாக பாண்டிமடம் என்பதில் அவர்களே உறுதியாகிவிட்டார்கள். இல்லாவிட்டால் எல்லாம் மிக சரியாக சேது படத்து பச்சை ஆடை உடுத்தி காட்சியளிக்கின்றன, விலங்கு மட்டும் இல்லை.

சிநேகனுக்கும், காயத்திருக்கும் பச்சை ஆடை அட்டகாசமான பொருத்தம்ச

மசாஜ் பார்லரில் வேலை செய்த அனுபவம் ஜூலியின் மசாஜில் அழகாக தெரிகின்றது, சும்மா சொல்ல கூடாது தாய்லாந்து அழகிகளின் கைகூட அப்படி விளையாடாது

ஆக ஒரு மசாஜ் கேர்ளை போராளி என சமூகம் நம்பியிருக்கின்றது, நர்ஸ்கள் எல்லாம் மசாஜ் செய்யமாட்டார்கள்

ஒரே ஒரு நல்ல விஷயம் நடக்கின்றது, அதாகபட்டது இந்த ஓவியா ஒருமாதிரி முகம் சுழிக்கும் விஷயங்களில் இறங்கிவிட்டது, அதுவும் என்ன செய்யும்?

வெளியிருந்து எல்லோரும் கொடுப்பது வோட்டுத்தா, மற்றபடி சாப்பாடும், சம்பளமும் நீங்களா கொடுக்கின்றீர்கள்? பிக்பாஸ்தான் கொடுப்பார், அதனால் அதனை செய்கின்றார் ஓவியா

இதனால் ஓவியா மன்றம் வேகமாக சரிகின்றது, ரசிகர்கள் எழுந்துவிட்ட்டார்கள், ஓவியா ஆர்மி கத்தியினை தூக்கிபோடுவிட்டு கிளம்பிற்று

“டேய் காளான்ஸ் உங்களை பார்க்க பாவமாக இருக்கின்றது, ஒரே ஒரு வாய்ப்பு கொடுக்கின்றோம், ஒழுங்காக குஷ்பூ மன்றத்தில் இணைந்துவிடுங்கள் ஸ்கூல் பாய்ஸ்..”

இந்த பிக்பாஸ் பாண்டிமடத்தை விட கொடுமையான விஷயம் சீமானின் தும்பிகளின் விமர்சனம், இதனை பிக்பாஸ் என சொல்ல கூடாதாம், தமிழில் பெருந்தலைவர் வீடு என சொல்லவேண்டுமாம்

டேய் அது என்ன காமராஜ் நினைவகமா?, உங்கள் தமிழ் மொழிபெயர்பிற்கும் ஒரு அளவே இல்லையா?

நாளை குறைவாக மழைபெய்து கொஞ்சம் வெள்ளம் வந்தால், ஆற்றில் சிறுநீர் ஓடுகின்றது என இவர்கள் நிச்சயம் சொல்வார்கள், அங்கிள் சைமனின் பயிற்சி அப்படி.


ஏதும் காத்து கருப்பு பிடித்திருந்தால் கூட அந்தோணியார் கோவிலின் புனித நீர் தெளித்து விரட்டிவிடலாம்

ஆனால் பாகம்பிரியாள் உள்ளே இறங்கியிருப்பது ஓவியா அம்மன், இதனை எந்த தெய்வத்தாலும் இன்னும் 60 நாளைக்கு விரட்டவே முடியாது..

மேளம் அடித்து , சூடமேற்றி வணங்கி நிற்பதை தவிர 
வேறு வழியே இல்லை..


இந்த பிக்பாஸ் எனும் பைத்தியகாரர்களின் வீடு இப்பொழுதுதான் கலாச்சாரத்தை கெடுப்பது போல தெரிகின்றது

ஆனால் இப்பொழுது கிளப்பவேண்டிய சர்ச்சையினை முன் கூட்டியே கிளப்பிவிட்டதால் திகைத்து நிற்கின்றனர் கலாச்சார காவலர்கள்.

இந்த பிந்து மாதவியும், ஓவியாவும் தமிழரின் முன்னால் பிக்பாஸில் நடிக்கின்றார்கள், இருவர் தமிழையும் கேட்டால் அகத்தியனே இமயமலைக்கு ஓடிவிடுவார், அவ்வளவு கொடூரம்

கலாச்சாரங்களை விடுங்கள், அது சினிமா கலாச்ச்சாரம். ஆனால் தமிழையாவது காப்பாற்றாலம் அல்லவா?

இந்த சிறுக்கிகளை அடித்துவிரட்டிவிட்டு நல்ல தமிழ் தெரிந்த சிலரை வைத்து நடத்த கூடாதா?

 
 
 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s