ரஷ்யா 400 எனும் ஏவுகனை தடுப்பினை வைத்திருக்கின்றது

No automatic alt text available.மேல் நாடுகளில் காலபந்துதான் பிரபல விளையாட்டு, மிக பெரும் பணம் புரளும் இடம் அது, ஐரோப்பாவில் ஏகபட்ட கிளப்கள் உண்டு

நமது ஊர் ஐபில் போல எல்லா நாட்டு வீரர்களும் எல்லா கிளப்பிலும் இருப்பார்கள், இன்றைய பிரபல வீரர்களானா ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் என ஆளாளுக்கு ஒரு அணியில் அசத்துவார்கள்

இதில் சிக்கல் வருமானவரி வடிவில் வந்திருக்கின்றது, மெஸ்ஸியும், ரொனால்டோவும் வருமான வரியில் சிக்குகின்றார்கள், பில்லியன் டாலர் தொகை அது, நமது ஊர் கணக்கில் பல நூறு கோடிகள்

அவர்கள் மிக முக்கியமான ஆட்டக்காரர்கள் என்பதால் கிளப் அந்த பணத்தை கட்ட முன்வந்திருக்கின்றது, இவ்வளவு பெரும் தொகையினை கட்டினால் கட்சி வைகோ கட்சிபோல ஆகிவிடாதா? என பலர் சொன்னாலும், சமாளிக்கலாம் இந்த வீரர்கள் இருப்பதால் புது வீரர்கள் செலவு வராது என என்னமோ சொல்கின்றன கிளப்புகள்

அதாவது ஏராளமாக சம்பாத்துவிட்டார்கள், இமாலய தொகையினை தயக்கமின்றி வரியாக கட்டுகின்றார்கள் என்றால் எவ்வளவு குவிந்திருக்கும்?

டிக்கெட் , டிவி, விளம்பரம் என அள்ளிகுவிக்கும் தங்க சுரங்கம் அது.

ஆனால் அங்கு இருப்பது நல்ல வருமானவரிதுறையும் நீதிமன்றமும், கறந்துவிட்டார்கள்.

நமது ஊர் ஐபில் வருமானம் என்ன? வரி என்ன? ஒவ்வொரு வீரரும், அணியும் கட்டினார்களா? என நமக்கு தெரியுமா? தெரியாது

மாறாக ஏதாவது அரசியல் காரணங்களுக்காக வருமானவரிதுறை ஏவபடும், அமைச்சரும் சிக்குவார் அதோடு சரி, முடிவு வராது

இந்த சிஏஜி எனப்படும் தணிக்கை குழு இதனை எல்லாம் பேசுமா என்றால் பேசாது, மாறாக இப்படி கேட்டுவிடுவார்கள் என திட்டமிட்டு ராணுவத்தில் குண்டு இல்லை, ஆகாஷ் ஏவுகனையினை நம்பமுடியாது என குண்டை தூக்கிபோட்டுவிட்டு அந்தபரபரப்பில் தப்பிவிடுவார்கள்

உலகில் எந்த ஏவுகனையும் 100% துல்லியம் இல்லை, அதுவும் எதிர்ப்பு ஏவுகனைகள் சுத்தம். வளைகுடா யுத்தத்தில் அமெரிக்க பேட்ரியாட் ஏவுகனைகள் நிச்சயம் தோல்வி, ஆனால் சதாமிடம் ஸ்கர்ட் ஏவுகனைகள் தீர்ந்ததால் சிக்கல் இல்லை, இல்லாவிட்டால் அன்றே அமெரிக்க மானம் பறந்திருக்கும்

ரஷ்யா 400 எனும் ஏவுகனை தடுப்பினை வைத்திருக்கின்றது, இந்தியாவிற்கு தர பெரும் விலைபேசுகின்றது, ஆனால் எங்காவது சோதிக்கபட்டிருக்குமா என்றால் இல்லை

இஸ்ரேலின் அயன் டோம் சிஸ்டம் கூட 90%தான் வேலை செய்வதாக அவர்களே சொல்கின்றார்கள்

இதோ அமெரிக்கா இன்னும் வடகொரியாவினை அடிக்காமல் இருக்க, அமெரிக்காவின் தாட் ஏவுகனை தடுப்பு சாதனம் மீது அவர்களுக்கு நம்பிக்கை முழுமையாக இல்லை

இப்படிபட்ட நிலையில்தான் ஆகாஷ் ஏவுகனை சரியில்லை என செய்தியினை கிளப்பிவிட்டு இந்த சிஏஜி சொல்லிவிட்டு வேறு பல செய்திகளை மறைத்துகொண்டிருக்கின்றது

அதில் சினிமா, கிரிக்கெட், ஐபில் வருமானங்களும் இருக்கலாம்

 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s