இந்த போஸ்டரை பாருங்கள் பல விஷயம் இருக்கின்றது

Image may contain: one or more people

இந்த போஸ்டரை பாருங்கள் பல விஷயம் இருக்கின்றது

அதாவது இதுவரை புலி ஆதரவு, காஷ்மீரிய யாசின் மாலிக்கிற்கு ஆதரவு என சொல்லிகொண்டிருந்த அங்கிள் சைமன் இப்பொழுது தமிழக சிறையில் இருக்கும், குறிப்பாக அல் உம்மா போன்ற தீவிரவாதிகளுக்கும் ஆதரவு தெரிவிக்கின்றாராம்

நன்றாக பாருங்கள், கோவை குண்டுவெடிப்பு போன்ற படுபயங்கர குற்றசாட்டில் உள்ளே இருக்கும் தீவிரவாதிகளை விடுதலை செய் என இஸ்லாமிய அமைப்புகளோடு முஷ்டி தூக்குகின்றார்

இவருக்கு என்ன பிரச்சினை? கொலை கொள்ளை செய்தவன் எவன் சிறையிலிருந்தாலும் நான் விடமாட்டேன் வெளிகொண்டுவருவேன் என்பது எம்மாதிரி சிந்தனை

இப்பக்கம் பிரபாகரன் படம், அந்த பிரபாகரனுக்கும் இஸ்லாமியருக்கும் சுத்தமாக ஆகாது. காத்தன் குடியில் பிரபாகரன் செய்த இஸ்லாமிய படுகொலை கொஞ்சமல்ல, அதுபற்றி கொஞ்சமும் கவலைபடாதவர் பிரபாகரன்

இப்பக்கம் பிரபாகரன் அப்பக்கம் அவருக்கு பிடிக்கா இஸ்லாமியர் என கொடிபிடிக்க சீமானால் மட்டுமே முடியும்

இந்த போஸ்டர் மூலம் சீமான் ஒப்புகொள்ளும் விஷயம் சில‌

ஆம் நான் இஸ்லாமிய தீவிரவாதி, இந்தியாவில் குண்டு வைத்தவனை ஆதரிப்பேன், அப்படியே இந்திய எதிரி புலிகளையும் ஆதரிப்பேன். நான் ஒரு தேசதுரோகி என்னை வெளியில் விடாதீர்கள், அடித்து கொல்லுங்கள்

இன்னொரு மகா முக்கியமான விஷயம், எனக்கு 
பௌத்திர நோய்கள் எல்லாம் உண்டு, அதனால்தான் அப்படி கத்துகின்றேன்

 
 

நடிகர் அஜித்திற்கு தஞ்சையில் சிலை திறப்பு விழா

Image may contain: 1 person, standingநடிகர் அஜித்திற்கு தஞ்சையில் சிலை திறப்பு விழா, நெல்லையில் சிலை அமைக்கபடுகின்றது

அஜித் நடிக்க வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டதாம், அதனால் சிலையாம், தஞ்சையில் காவேரி காய்ந்து மக்கள் படாதபாடு படும்பொழுது இது மகா அவசியமா என யாரும் கேட்கவில்லை

நெல்லையிலும் சிலையாம், அது வெண்ணிற ஆடை மூர்த்திசிலைபோல் இருக்கின்றது என விஜய் ரசிகர்கள் சொல்லிகொள்கின்றார்கள்

(அப்படித்தான் இருக்கின்றது, ஷாலினி பார்த்துவிட்டாரா என்பது தெரியவில்லை, விஷயம் தெரிந்தால் அவர் விவாகரத்து வரை செல்ல வாய்பிருக்கின்றது)

இனி விஜய்,தனுஷ் எல்லோருக்கும் சிலை வைக்கபடும். சிம்புவிற்கு கூட நிறுவபடலாம்

Image may contain: 1 person, smiling, selfie and close-upஓவியா ரசிகர்கள் இப்பொழுது பல சிலைகளுக்கு ஆர்டர் கொடுத்திருக்கலாம்

நாங்கள் எப்பொழுதோ குஷ்பூவிற்கு கோவிலே கட்டிவிட்டோம், இவர்கள் இப்பொழுதுதான் சிலைக்கே வருகின்றார்கள்

சிறுபிள்ளைகள் என்பது இதுதான், சரியாகத்தான் இருக்கின்றது

இவர்களை போல இங்கு சிலை வைக்கும் திட்டம் சங்கத்திற்கு இல்லை, அது பறவைகளின் டாய்லெட் ஆக மாறினால் மனம் தாங்குமா?

அதனால் தலைவியின் மெழுகு சிலையினை லண்டன் மியூசியத்தில் அமைக்க சங்கம் திட்டமிடுகின்றது

அத்தோடும் விடமுடியாது, குஷ்பூவிற்கு இனி தேர் செய்யலாமா? என சங்கத்தின் சார்பில் தீவிரமாக விவாதிக்கபடுகின்றது

விரைவில் தங்க‌ தேர் செய்து திருவிழா நடத்தி விட வேண்டியதுதான்..

 
 

நீட் தேர்வு ஒரு வரப் பிரசாதம்: பொன்னார்

அதிமுகவின் இரு அணிகளும் இணையுமா? தினகரன் கெடு முடிவதால் பரபரப்பு : செய்தி

ஏதோ பழனிச்சாமி அணி அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் அடங்கிய அணிபோலவும், இந்த பன்னீர் அணி ரஷ்ய விண்வெளி விஞ்ஞானிகள் போலவும் இந்த இருவரும் இணையாமல் இருப்பதால் தூரத்து கிரகத்தில் மனித இனம் குடியேறாமல் இருப்பது போலவும் பேசிகொண்டிருக்கின்றார்கள்.

இதில் தினகரன் புட்டீன் போல , இணையாவிட்டால் வானத்து செயற்கைகோளை எல்லாம் அழித்துவிடுவேன் என கெடு போட்டது போல செய்தி சொல்லிகொண்டிருக்கின்றார்கள்.

இந்த இரு அணிகளும் இணைந்திருந்த காலத்தில் என்ன நன்மை கிடைத்தது? அல்லது இருவரும் பிரிந்துவிட்டதால் என்ன கெடுதல் நடந்துவிட்டது?

இவை இணைந்தால் என்ன? இணையாவிட்டால்தான் என்ன?

மொத்தமாக கலைத்து விரட்டினால்தான் தமிழகத்திற்கு நல்லது

 

நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம்: பொன்.ராதாகிருஷ்ணன்

அவர்கள் புத்தி பிரசாதம்,லட்டு என போவதில் ஆச்சரியமில்லை அப்படித்தான் போகும்

ஆனால் தமிழக‌ மாணவர்களுக்கு பெரும் அநீதி நடக்கும் நேரத்தில், இது வரப்பிரசாதம் என சொல்ல ஒரு குருட்டு தைரியமும், மயங்கிய முட்டாள்தனமும் வேண்டும்

அது தனக்கு இருக்கின்றது என ஒப்புகொள்கின்றார் பொன்னார்.

மிஸ்டர் பொன்னார், இது வரபிரசாதம் என இந்த ஆண்டு மருத்துவகல்லூரியினை தவறவிட்ட மாணவர்கள் முன்போ இல்லை நாகர்கோவில் பள்ளிகளிலோ சொல்ல முடியுமா?


தேடப்படும் நபராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது உள்துறை அமைச்சகம்

ஏதோ முடிவோடுதான் மத்திய அரசு செயல்படுகின்றது, வா என சொன்னால் வந்து நிற்கபோகின்றார் கார்த்தி, இதற்கு ஏன் இப்படி சர்வதேச குற்றவாளி போல சித்தரிக்கவேண்டும்?

கார்த்தி சிதம்பரத்திற்கே இப்படி இறங்குபவர்கள், கனிமொழியினையும் ஆண்டிமுத்து ராசாவினையும் என்ன செய்ய போகின்றார்களோ?

அந்த இயேசுநாதர் வசனம் தான் , “பச்சை மரத்திற்கே இந்த பாடு என்றால், பட்ட மரத்திற்கு என்ன பாடோ?”


மசாஜ் செய்வதில் பெரும் நிபுணராகிவிட்டாராம் ஜூலி

download-1.jpgமசாஜ் செய்வதில் பெரும் நிபுணராகிவிட்டாராம் ஜூலி, தமிழகம் முழுக்க பேசி கொள்கின்றார்கள்.

ஒருவேளை சசிகலாவிற்கு பரோல் கிடைத்து, மசாஜ் செய்ய ஜூலிக்கு அழைப்பு விடுத்தால் என்னாகும்?

இப்போதைய நிலையில் ஆரவினை விட சசிகலா ஒன்றும் மோசமில்லை என தமிழகம் நிச்சயம் தீர்ப்பிடும் என்பது கூடுதல் விஷயம்..

அதனால் “சின்னம்ம்மா சின்னம்மா.. ஆயாம்மா ஆயாம்மா” என சத்தம்போட்ட ஜூலி, சின்னம்மாவிற்கு மசாஜ் செய்யும் காலம் நிச்சயம் வரலாம்.

பிக்பாஸ் சொன்னால் கேட்டுகொள்ளும் ஜூலி, பிக் லேடிபாஸ் சொன்னால் மட்டும் மறுக்கமுடியுமா?


இந்த பிக்பாஸ் ஓடிகொண்டிருக்கின்றது, பிந்து மாதவி பொன்மொழிகளை உதிர்த்துகொண்டிருக்கின்றார், கிழே சப் டைட்டிலில் தமிழில் மொழிபெயர்ப்பு ஓடிகொண்டிருக்கின்றது

இதனை விட தமிழகத்தில் தமிழுக்கு பெரும் தோல்வி என்ன இருக்கின்றது.

மொழிப்போர் என நடத்தி பலரை கொன்று ஆட்சிக்கு வந்த கட்சிகள்தான் இந்த 50 வருடமாக தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கின்றன, 67 பேர் மொழிக்காக இறந்து கிடைத்த வெற்றி அது.

அந்த 67 பேரின் ஆன்மா இக்காட்சியினை எல்லாம் நிச்சயம் மன்னிக்காது

தமிழ் தமிழ் என முழங்கிய திராவிட கட்சிகள் காக்காத தமிழை இனி தேசிய கட்சிகள்தான் காக்குமோ என்னமோ?


திசை காட்டும் தேவாங்கு…

download.jpg

திசைமானி எனப்படும் காந்த ஊசிபெட்டி கண்டுபிடிக்கும் முன்பே தமிழர் கடலில் மிக சரியாக திசைபார்த்து சென்றார்களாம்

எப்படி?

இந்த தேவாங்கு என்றொரு விலங்கு உண்டு, அதன் இயல்பு என்னவென்றால் எப்பொழுதும் மேற்கு நோக்கியே அமருமாம். என்ன நடந்தாலும் சரி, எப்படி சுற்றிவிட்டாலும் சரி, எங்கு குழப்பி விட்டாலும் , வாலில் சூடு போட்டாலும் அது மேற்கு நோக்கியே அமருமாம்

No automatic alt text available.Image may contain: text

அந்த தேவாங்கினை பெட்டியில் அடைத்து கப்பலில் போட்டு கொண்டு செல்வார்களாம், திசை தெரியாவிட்டால் தேவாங்கினை எழுப்பிவிட்டால் முடிந்த்து விஷயம், அது சரியாக மேற்கு நோக்கி அமரும் திசைககளை கணிக்கலாம்

அப்படி மேற்கு நோக்கியே அமர்வது தேவாங்கு இயல்பு, மோடி நோக்கியே அமர்வது மனுஷ்யபுத்திரன் இயல்பு

தேவாங்காவது அமரும்பொழுதுதான் மேற்கு நோக்கி அமரும், இவரோ 24 மணிநேரமும் மோடி நோக்கியே இருப்பார்

ஆனால் அந்த தேவாங்கால் கடற்பயணம் சாத்தியமாயின, இந்த மண்டையனால் ஒரு புண்ணாக்கும் ஆகபோவதில்லை


No automatic alt text available.
Image may contain: 2 people

 

இதோ இன்னொரு தேவாங்கு, எழுப்பி விட்டால் இலங்கை நோக்கியே நின்று கொண்டிருக்கும்


சென்னையில் ஒரு புரட்சி ஆரம்பித்துவிட்டார்களாம் !

Image may contain: 1 person, close-upசென்னையில் ஒரு புரட்சி ஆரம்பித்துவிட்டார்களாம், அதாவது ஆங்கிலேயர் பெயரில் இருக்கும் தெருக்களை எல்லாம் வேறு பெயரில் அழைக்க பெயர் சூட்டும் விழா நடத்த போகின்றார்களாம்

தமிழக சென்னையில் வெள்ளையன் பெயர் இருப்பது பெரும் குற்றமாம் கண்டுபிடித்துவிட்டார்கள்.

வரலாறுகள் என்பது காலத்தால் உருவாகுபவை, அந்த தடங்கள் முக்கியமானவை. எல்லாவற்றையும் அழித்துவிட்டால் வந்த பாதையே நமக்கு தெரியாது, பின் நாம் அடிமையான வரலாறும் தெரியாது,

அடிமை வரலாறு தெரியாதவனுக்கு சுதந்திரவிழா எதற்கு?

இவர்கள் ஆள்வார்களாம், அதனால் எல்லா பண்டைய அடையாளத்தை மறைத்து பெயர் வைப்பார்களாம்

எகிப்தினை பிடித்த அலெக்ஸாண்டர் உருவாக்கிய அலெக்ஸாண்டிரியா இன்னும் எகிப்தில் உண்டு யாரும் அழிக்கவில்லை, ரோமையர் உருவாக்கிய எத்தனையோ அடையாளம் உலகெல்லாம் உண்டு எல்லோரும் பாதுகாக்கின்றார்கள்

டெல்லியில் அந்நிய நாட்டு சுல்தான்கள் வைத்த இரும்பு தூண் உண்டு, குதிப்மினார் உண்டு. இது அந்நிய அடையாளம் என யாரும் இடிக்க கிளம்பவில்லை

தாஜ்மஹால் எனும் கலைக்கோவில் உண்டு, இது அந்நிய பாணி என யாரும் கிளம்பவில்லை, சில அல்லக்கைகள் கத்துவதை யாரும் காதுகொடுத்து கேட்பதில்லை

குதுப்மினாருக்கு மோடி தூண் என்றும், தாஜ்மஹாலுக்கு அத்வானி மஹால் என்றும் பெயரிட்டால் எப்படி இருக்கும்?

அதேதான் மும்பை விக்டோரியா டெர்மினலை சிவாஜி ரயில்நிலையம் என மாற்றிய காமெடி..

புImage may contain: 1 personதிதாக பெயரிட நினைப்பவர்கள், ஒன்றை உருவாக்கி அதற்கு பெயரிடவேண்டுமே தவிர, எவனோ கட்டிவைத்த வரலாற்று சின்னத்திற்கு இவர்கள் பெயர் சூட்டுவது சரியல்ல‌

இந்த இம்சைகளை தொடங்கிவைத்தது சாட்சாத் கருணாநிதி எனும் கலைஞர். பழம் பெருமை மிக்கதும், சென்னையின் மிக முக்கிய சாலையான மவுண்ட் ரோட்டினை “அண்ணா சாலை” என மாற்றி அவர்தான் தொடங்கி வைத்தார்.

வரலாறு தெரிந்தவர்கள் எல்லாம் முறையிட்டார்கள், ராஜாஜி கூட, கண்ணதாசன் கூட பழம் அடையாளம் மீது கை வைக்காதீர்கள் என்றேல்லாம் சொன்னார்கள்.

ஏன் புதிதாக ஒரு சாலை அமைத்து அவர் பெயரை சூட்டகூடாது என கேட்டால் “ஆரிய அடிவருடி”, “அடிமை புத்தி” என அவரிடம் இருந்து பதில் வந்தது.

தமிழ்நாட்டு அரசு கழிப்பறைகளை தவிர எல்லா இடத்திலும் அண்ணா பெயரை கலைஞரும், ராமசந்திரனும் சூட்டினார்கள்

ஆனால் கலைஞர் பவள விழா, ராமசந்திரனின் நூற்றாண்டு விழாவில் அண்ணா குடும்பத்தார் யாரையாவது யாராவது கண்டோமா?

முரசொலி பவள விழாவிலே முரசொலி பத்திரிகைக்காக வாழ்வை அர்பணித்த முரசொலி செல்வம், அமிர்தம் பெயர்களை காணவில்லை, முரசொலி மாறன் குடும்ப பெயர்களே இல்லை

மாறாக திமுகவின் கணல் கக்கும் எழுத்தாள‌ உதயநிதி ஸ்டாலின் பெயர்தான் இருக்கின்றது

சரி அது அவர்கள் பாடு நாம் சென்னை தெருக்களுக்கு வரலாம்

இந்நாட்டை 200 வருடம் ஆண்ட வெள்ளையன் கூட பழம் அடையாளம் மீது தன் பெயரை சூட்டவில்லை, அவன் புதிதாக கட்டித்தான் தன் பெயரிட்டான்

அவன் நினைத்திருந்தால் செங்கோட்டையினை ஜார்ஜ் கோட்டை என்றும், ஜெய்பூர் அரண்மனையினை பங்கிங்க்ஹாம் பாலஸ் என்றும், தஞ்சாவூர் கோவிலை செயின்ட் பால் சர்ச் என மாற்ற எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்?

பழமையின் மகத்துவம் அவனுக்கு தெரிந்திருக்கின்றது

அட வெள்ளையன் என்ன? கம்போடியா நாட்டு அரசு கூட அங்கோர்வாட் கோவிலை நந்தி வர்ம‌ பல்லவன் கட்டினான், இது அவன் கோவில் என்றுதான் சொல்கின்றது

உலகிற்கெல்லாம் ஒரு நீதி, தமிழருக்கு தனி நீதி

இனி சென்னையில் மாண்டியத் சாலை, ஸ்டெர்லிங் ரோடு, டெய்லர்ஸ் சாலை, எல்லீஸன் சாலை எல்லாம் இருக்காதாம். இதில் ஒருவிஷயம் உறுத்துகின்றது

அந்த எல்லீஸ் என்பவர் மறக்க கூடியவர் அல்ல, 1600களில் இங்கு வந்த ஆங்கிலேய அதிகாரிகளில் அவர்தான் முதலில் தமிழ்படித்து தமிழே தென்னக மொழிகளின் அடிப்படை என கால்டுவெல்லுக்கு முன்பே நூல் எழுதியவர்.

அன்று இந்தியா உருவாகவில்லை, ஆனால் இது தமிழர் நாடு என இம்மாநிலத்தை அடித்து சொன்னவர், ஆங்கிலேய அதிகாரிகள் இம்மாநில மொழி அடிப்படையினை அறியவேண்டும் என சட்டம் இயற்றியவர்.

சென்னை ஜார்ஜ் கோட்டையில், செயின்ட் ஜார்ஜ கல்லூரி தொடங்கியவர், தென்னிந்தியாவின் முதல் கல்லூரி அதுவே

குடிநீர் பஞ்சத்தில் சிக்கிய சென்னைக்கு 7 கிணறுகளை வெட்டி, அதிலெல்லாம் திருக்குறளை செதுக்கி வைத்த திருகுறள் நேசன் அவர்.

திருவள்ளுவருக்கு தங்க காசு அடித்த முதல் ஆட்சியாளன் இன்றுவரை அவர்தான்.

சென்னை கோட்டையில் முதன் முதலாக தமிழுக்கு அச்சகம் நிறுவியர் அவர்தான், சீசன்பால்க் எல்லாம் பின்பு பைபிள் அச்சடித்தவர். ஆனால் தமிழ் ஆட்சிமொழியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் முதன் முதலில் அதனை அச்சுக்கு கொண்டுவந்தது எல்லீசன்

எங்கிருந்தோ வந்து, தமிழராக மாறி, தமிழராக வாழ்ந்து, தமிழராய் செத்தவர் எல்லீசன்

அவர் பெயர் எல்லீஸ், ஆனால் தன்னை எல்லீசன் என தமிழில் அழைக்கவே கேட்டுகொண்டார். அந்த அளவு தமிழனாய் மாறியிருந்தார்.

தமிழையும், திருகுறளையும் அவன் நேசித்த அளவு இன்னொரு தமிழன் இன்றுவரை நேசிக்கவில்லை. அவன் உயர்த்திய அளவு உயர்த்த யாரும் எண்ணவில்லை

பின்னளைய வள்ளுவர் கோட்டம் எல்லாம் அவன் சிந்தனையின் தொடர்ச்சி, அவன் தான் வழிகாட்டி

அப்படி எல்லீசனாக மாறிய அந்த எல்லீஸ் கலெக்டர் தன் 42ம் வயதிலே இறந்துவிட்டான், அவன் புகழ் அழிய கூடாது என்பதால்தான் எல்லீஸ் ரோடு உருவாக்கபட்டது

இம்மாதிரி எத்தனையோ அடையாளம் உண்டு, முல்லைபெரியாறு அணைக்கு பென்னிகுயிக் அணை என்றுதான் பெயரிட்டிருக்கவேண்டும், செய்யவில்லை

வேலூர் மருத்துவமனைக்கு ஐடா ஸ்கேடர் பெயர்தான் சூட்டபட்டிருக்கவேண்டும், செய்யவில்லை.

இந்த தெருக்கள் பெயரில் வாழும் ஒவ்வொரு ஆங்கிலேய அதிகாரியின் பின்னாலும் பெரும் வரலாறு இருக்கின்றது, அதனை மறைப்பது நல்லது அல்ல‌

இப்படித்தான் மதுரை மங்கம்மாள் அரண்மனை காந்தி மியூசியமாக மாறி தன் அடையாளத்தை இழந்தது, தென்னக மக்களின் நலன்களுக்கு எல்லாம் தீர்ப்பும் திட்டமும் தந்த அந்த அரிய மண்டபம் இன்று காந்தியின் கோவணத்துடன் நிற்கின்றது.

இப்படியே மாற்ற தொடங்கினால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை ராமசந்திரன் ஜெயலலிதா கோட்டையாகும், ரிப்பன் மாளிகை கலைஞர் கருணாநிதி மாளிகையாகும்

அக்கோட்டை எப்படிபட்ட வரலாறு, எப்படியான பெரும் திருப்பங்களை தமிழகத்திற்கு கொடுத்தது, அதன் வரலாறு என்ன என்பதெல்லாம் யாருக்கு வேண்டும் என்கின்றார்கள்

அப்படி மாறிவிட்டால் சென்னை ஏன் இருக்கவேண்டும்? செயற்கை சுனாமி கிளப்பிவிட்டாவது அழித்துவிடலாம்

(எல்லீசனும் அவர் கொடுத்த வள்ளுவர் காசும், இதனை எல்லாம் மறக்க சொல்கின்றார்கள்.

அவ்வளவு நன்றிகெட்ட இனமாகிவிட்டோம்..)

கோவை அந்த கருப்பு நாட்களை ரத்த கண்ணீரோடு கடந்தது

Image may contain: 1 person, smiling, text

கோவைவாசிகளின் ஆதங்கத்திலும் சில உண்மைகள் இருக்கலாம், செய்திகள் அதனைத்தான் சொல்கின்றன‌

செல்வராஜ் என்ற காவலர் கொல்லபட்டு பின் கலவரம் வெடித்து அதன் பின் நடந்த குண்டுவெடிப்புகளின் ரணங்கள் எல்லாம் கொஞ்சம் அல்ல‌

மிக அமைதியான கோவை அந்த கருப்பு நாட்களை ரத்த கண்ணீரோடு கடந்தது.

மீண்டும் அந்த நாட்கள் இனி வேண்டாவே வேண்டாம், மிக கடுமையான பாதுகாப்பினை எடுத்து அமைதியினை கொண்டு வரவேண்டியது அரசின் கடமை..