நீட் தேர்வு ஒரு வரப் பிரசாதம்: பொன்னார்

அதிமுகவின் இரு அணிகளும் இணையுமா? தினகரன் கெடு முடிவதால் பரபரப்பு : செய்தி

ஏதோ பழனிச்சாமி அணி அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் அடங்கிய அணிபோலவும், இந்த பன்னீர் அணி ரஷ்ய விண்வெளி விஞ்ஞானிகள் போலவும் இந்த இருவரும் இணையாமல் இருப்பதால் தூரத்து கிரகத்தில் மனித இனம் குடியேறாமல் இருப்பது போலவும் பேசிகொண்டிருக்கின்றார்கள்.

இதில் தினகரன் புட்டீன் போல , இணையாவிட்டால் வானத்து செயற்கைகோளை எல்லாம் அழித்துவிடுவேன் என கெடு போட்டது போல செய்தி சொல்லிகொண்டிருக்கின்றார்கள்.

இந்த இரு அணிகளும் இணைந்திருந்த காலத்தில் என்ன நன்மை கிடைத்தது? அல்லது இருவரும் பிரிந்துவிட்டதால் என்ன கெடுதல் நடந்துவிட்டது?

இவை இணைந்தால் என்ன? இணையாவிட்டால்தான் என்ன?

மொத்தமாக கலைத்து விரட்டினால்தான் தமிழகத்திற்கு நல்லது

 

நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம்: பொன்.ராதாகிருஷ்ணன்

அவர்கள் புத்தி பிரசாதம்,லட்டு என போவதில் ஆச்சரியமில்லை அப்படித்தான் போகும்

ஆனால் தமிழக‌ மாணவர்களுக்கு பெரும் அநீதி நடக்கும் நேரத்தில், இது வரப்பிரசாதம் என சொல்ல ஒரு குருட்டு தைரியமும், மயங்கிய முட்டாள்தனமும் வேண்டும்

அது தனக்கு இருக்கின்றது என ஒப்புகொள்கின்றார் பொன்னார்.

மிஸ்டர் பொன்னார், இது வரபிரசாதம் என இந்த ஆண்டு மருத்துவகல்லூரியினை தவறவிட்ட மாணவர்கள் முன்போ இல்லை நாகர்கோவில் பள்ளிகளிலோ சொல்ல முடியுமா?


தேடப்படும் நபராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது உள்துறை அமைச்சகம்

ஏதோ முடிவோடுதான் மத்திய அரசு செயல்படுகின்றது, வா என சொன்னால் வந்து நிற்கபோகின்றார் கார்த்தி, இதற்கு ஏன் இப்படி சர்வதேச குற்றவாளி போல சித்தரிக்கவேண்டும்?

கார்த்தி சிதம்பரத்திற்கே இப்படி இறங்குபவர்கள், கனிமொழியினையும் ஆண்டிமுத்து ராசாவினையும் என்ன செய்ய போகின்றார்களோ?

அந்த இயேசுநாதர் வசனம் தான் , “பச்சை மரத்திற்கே இந்த பாடு என்றால், பட்ட மரத்திற்கு என்ன பாடோ?”


பின்னூட்டமொன்றை இடுக