சென்னையில் ஒரு புரட்சி ஆரம்பித்துவிட்டார்களாம் !

Image may contain: 1 person, close-upசென்னையில் ஒரு புரட்சி ஆரம்பித்துவிட்டார்களாம், அதாவது ஆங்கிலேயர் பெயரில் இருக்கும் தெருக்களை எல்லாம் வேறு பெயரில் அழைக்க பெயர் சூட்டும் விழா நடத்த போகின்றார்களாம்

தமிழக சென்னையில் வெள்ளையன் பெயர் இருப்பது பெரும் குற்றமாம் கண்டுபிடித்துவிட்டார்கள்.

வரலாறுகள் என்பது காலத்தால் உருவாகுபவை, அந்த தடங்கள் முக்கியமானவை. எல்லாவற்றையும் அழித்துவிட்டால் வந்த பாதையே நமக்கு தெரியாது, பின் நாம் அடிமையான வரலாறும் தெரியாது,

அடிமை வரலாறு தெரியாதவனுக்கு சுதந்திரவிழா எதற்கு?

இவர்கள் ஆள்வார்களாம், அதனால் எல்லா பண்டைய அடையாளத்தை மறைத்து பெயர் வைப்பார்களாம்

எகிப்தினை பிடித்த அலெக்ஸாண்டர் உருவாக்கிய அலெக்ஸாண்டிரியா இன்னும் எகிப்தில் உண்டு யாரும் அழிக்கவில்லை, ரோமையர் உருவாக்கிய எத்தனையோ அடையாளம் உலகெல்லாம் உண்டு எல்லோரும் பாதுகாக்கின்றார்கள்

டெல்லியில் அந்நிய நாட்டு சுல்தான்கள் வைத்த இரும்பு தூண் உண்டு, குதிப்மினார் உண்டு. இது அந்நிய அடையாளம் என யாரும் இடிக்க கிளம்பவில்லை

தாஜ்மஹால் எனும் கலைக்கோவில் உண்டு, இது அந்நிய பாணி என யாரும் கிளம்பவில்லை, சில அல்லக்கைகள் கத்துவதை யாரும் காதுகொடுத்து கேட்பதில்லை

குதுப்மினாருக்கு மோடி தூண் என்றும், தாஜ்மஹாலுக்கு அத்வானி மஹால் என்றும் பெயரிட்டால் எப்படி இருக்கும்?

அதேதான் மும்பை விக்டோரியா டெர்மினலை சிவாஜி ரயில்நிலையம் என மாற்றிய காமெடி..

புImage may contain: 1 personதிதாக பெயரிட நினைப்பவர்கள், ஒன்றை உருவாக்கி அதற்கு பெயரிடவேண்டுமே தவிர, எவனோ கட்டிவைத்த வரலாற்று சின்னத்திற்கு இவர்கள் பெயர் சூட்டுவது சரியல்ல‌

இந்த இம்சைகளை தொடங்கிவைத்தது சாட்சாத் கருணாநிதி எனும் கலைஞர். பழம் பெருமை மிக்கதும், சென்னையின் மிக முக்கிய சாலையான மவுண்ட் ரோட்டினை “அண்ணா சாலை” என மாற்றி அவர்தான் தொடங்கி வைத்தார்.

வரலாறு தெரிந்தவர்கள் எல்லாம் முறையிட்டார்கள், ராஜாஜி கூட, கண்ணதாசன் கூட பழம் அடையாளம் மீது கை வைக்காதீர்கள் என்றேல்லாம் சொன்னார்கள்.

ஏன் புதிதாக ஒரு சாலை அமைத்து அவர் பெயரை சூட்டகூடாது என கேட்டால் “ஆரிய அடிவருடி”, “அடிமை புத்தி” என அவரிடம் இருந்து பதில் வந்தது.

தமிழ்நாட்டு அரசு கழிப்பறைகளை தவிர எல்லா இடத்திலும் அண்ணா பெயரை கலைஞரும், ராமசந்திரனும் சூட்டினார்கள்

ஆனால் கலைஞர் பவள விழா, ராமசந்திரனின் நூற்றாண்டு விழாவில் அண்ணா குடும்பத்தார் யாரையாவது யாராவது கண்டோமா?

முரசொலி பவள விழாவிலே முரசொலி பத்திரிகைக்காக வாழ்வை அர்பணித்த முரசொலி செல்வம், அமிர்தம் பெயர்களை காணவில்லை, முரசொலி மாறன் குடும்ப பெயர்களே இல்லை

மாறாக திமுகவின் கணல் கக்கும் எழுத்தாள‌ உதயநிதி ஸ்டாலின் பெயர்தான் இருக்கின்றது

சரி அது அவர்கள் பாடு நாம் சென்னை தெருக்களுக்கு வரலாம்

இந்நாட்டை 200 வருடம் ஆண்ட வெள்ளையன் கூட பழம் அடையாளம் மீது தன் பெயரை சூட்டவில்லை, அவன் புதிதாக கட்டித்தான் தன் பெயரிட்டான்

அவன் நினைத்திருந்தால் செங்கோட்டையினை ஜார்ஜ் கோட்டை என்றும், ஜெய்பூர் அரண்மனையினை பங்கிங்க்ஹாம் பாலஸ் என்றும், தஞ்சாவூர் கோவிலை செயின்ட் பால் சர்ச் என மாற்ற எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்?

பழமையின் மகத்துவம் அவனுக்கு தெரிந்திருக்கின்றது

அட வெள்ளையன் என்ன? கம்போடியா நாட்டு அரசு கூட அங்கோர்வாட் கோவிலை நந்தி வர்ம‌ பல்லவன் கட்டினான், இது அவன் கோவில் என்றுதான் சொல்கின்றது

உலகிற்கெல்லாம் ஒரு நீதி, தமிழருக்கு தனி நீதி

இனி சென்னையில் மாண்டியத் சாலை, ஸ்டெர்லிங் ரோடு, டெய்லர்ஸ் சாலை, எல்லீஸன் சாலை எல்லாம் இருக்காதாம். இதில் ஒருவிஷயம் உறுத்துகின்றது

அந்த எல்லீஸ் என்பவர் மறக்க கூடியவர் அல்ல, 1600களில் இங்கு வந்த ஆங்கிலேய அதிகாரிகளில் அவர்தான் முதலில் தமிழ்படித்து தமிழே தென்னக மொழிகளின் அடிப்படை என கால்டுவெல்லுக்கு முன்பே நூல் எழுதியவர்.

அன்று இந்தியா உருவாகவில்லை, ஆனால் இது தமிழர் நாடு என இம்மாநிலத்தை அடித்து சொன்னவர், ஆங்கிலேய அதிகாரிகள் இம்மாநில மொழி அடிப்படையினை அறியவேண்டும் என சட்டம் இயற்றியவர்.

சென்னை ஜார்ஜ் கோட்டையில், செயின்ட் ஜார்ஜ கல்லூரி தொடங்கியவர், தென்னிந்தியாவின் முதல் கல்லூரி அதுவே

குடிநீர் பஞ்சத்தில் சிக்கிய சென்னைக்கு 7 கிணறுகளை வெட்டி, அதிலெல்லாம் திருக்குறளை செதுக்கி வைத்த திருகுறள் நேசன் அவர்.

திருவள்ளுவருக்கு தங்க காசு அடித்த முதல் ஆட்சியாளன் இன்றுவரை அவர்தான்.

சென்னை கோட்டையில் முதன் முதலாக தமிழுக்கு அச்சகம் நிறுவியர் அவர்தான், சீசன்பால்க் எல்லாம் பின்பு பைபிள் அச்சடித்தவர். ஆனால் தமிழ் ஆட்சிமொழியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் முதன் முதலில் அதனை அச்சுக்கு கொண்டுவந்தது எல்லீசன்

எங்கிருந்தோ வந்து, தமிழராக மாறி, தமிழராக வாழ்ந்து, தமிழராய் செத்தவர் எல்லீசன்

அவர் பெயர் எல்லீஸ், ஆனால் தன்னை எல்லீசன் என தமிழில் அழைக்கவே கேட்டுகொண்டார். அந்த அளவு தமிழனாய் மாறியிருந்தார்.

தமிழையும், திருகுறளையும் அவன் நேசித்த அளவு இன்னொரு தமிழன் இன்றுவரை நேசிக்கவில்லை. அவன் உயர்த்திய அளவு உயர்த்த யாரும் எண்ணவில்லை

பின்னளைய வள்ளுவர் கோட்டம் எல்லாம் அவன் சிந்தனையின் தொடர்ச்சி, அவன் தான் வழிகாட்டி

அப்படி எல்லீசனாக மாறிய அந்த எல்லீஸ் கலெக்டர் தன் 42ம் வயதிலே இறந்துவிட்டான், அவன் புகழ் அழிய கூடாது என்பதால்தான் எல்லீஸ் ரோடு உருவாக்கபட்டது

இம்மாதிரி எத்தனையோ அடையாளம் உண்டு, முல்லைபெரியாறு அணைக்கு பென்னிகுயிக் அணை என்றுதான் பெயரிட்டிருக்கவேண்டும், செய்யவில்லை

வேலூர் மருத்துவமனைக்கு ஐடா ஸ்கேடர் பெயர்தான் சூட்டபட்டிருக்கவேண்டும், செய்யவில்லை.

இந்த தெருக்கள் பெயரில் வாழும் ஒவ்வொரு ஆங்கிலேய அதிகாரியின் பின்னாலும் பெரும் வரலாறு இருக்கின்றது, அதனை மறைப்பது நல்லது அல்ல‌

இப்படித்தான் மதுரை மங்கம்மாள் அரண்மனை காந்தி மியூசியமாக மாறி தன் அடையாளத்தை இழந்தது, தென்னக மக்களின் நலன்களுக்கு எல்லாம் தீர்ப்பும் திட்டமும் தந்த அந்த அரிய மண்டபம் இன்று காந்தியின் கோவணத்துடன் நிற்கின்றது.

இப்படியே மாற்ற தொடங்கினால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை ராமசந்திரன் ஜெயலலிதா கோட்டையாகும், ரிப்பன் மாளிகை கலைஞர் கருணாநிதி மாளிகையாகும்

அக்கோட்டை எப்படிபட்ட வரலாறு, எப்படியான பெரும் திருப்பங்களை தமிழகத்திற்கு கொடுத்தது, அதன் வரலாறு என்ன என்பதெல்லாம் யாருக்கு வேண்டும் என்கின்றார்கள்

அப்படி மாறிவிட்டால் சென்னை ஏன் இருக்கவேண்டும்? செயற்கை சுனாமி கிளப்பிவிட்டாவது அழித்துவிடலாம்

(எல்லீசனும் அவர் கொடுத்த வள்ளுவர் காசும், இதனை எல்லாம் மறக்க சொல்கின்றார்கள்.

அவ்வளவு நன்றிகெட்ட இனமாகிவிட்டோம்..)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s