பெரும் சர்ச்சைகுரிய நபர் இந்த நடராசன் !

Image may contain: 1 person, standing“இந்திய ஈழ நட்புறவு மையம்” என ஈழ கோஷ்டிகள் ஒன்றை தொடங்கியிருக்கின்றன, இதன் மையமாக இருப்பவர் யார் தெரியுமா? மா.நடராசன்

அதாவது எம்ஜிஆருக்கு பின் ஜெயாவின் ஒவ்வொரு முடிவினையும் எடுத்த நடராசன். இலங்கையில் அமைதிபடை சண்டையிடும் பொழுது ராஜீவிற்கு ஆதரவளித்து, திமுக ஆட்சியினை கலைக்க சொல்லி அழுத்தம் கொடுத்த அந்த நடராசன்

ஆம் அன்று திமுக அமைதிபடையினை கண்டித்து அதனை வெளியேற்ற சொல்லிகொண்டிருந்தது, ஆனால் நடராசனின் அதிமுக கொஞ்சமும் அக்கவலையின்றி ராஜிவிடம் உங்களுக்கு ஆதரவு, கலைஞரை விரட்டுங்கள் என சொல்லிகொண்டே இருந்தது

புலிகளை கலைஞர் வளர்க்கின்றார், அது பத்மநாபா கொலைவரை சென்றது என சொல்லி அவர் ஆட்சியினை கலைக்க சொன்னதே இந்த நடராசன் தான், அந்த ஆதாரங்களை இவர்கள் தான் கொடுத்தார்கள்

அவ்வளவிற்கு ராஜிவிற்கும் இவர்களுக்கும் உறவு இருந்தது

அதில் ஈழமக்களுக்கு நன்மை எதுவும் இவர்கள் செய்யவில்லை, மாறாக புலிகளுக்கும் நன்மை செய்யவில்லை எல்லாம் சுயநலம்.

அமைதிபடை நடவடிக்கையினை எம்ஜிஆர் கண்டிக்க முடியாமலே இறந்தார். நடராஜனும் ஜெயாவும் ராஜிவிடம் காவல் கிடந்தார்கள், புலிகளும் இந்திய ராணுவமும் செத்துகொண்டே இருக்க ஈழ மக்கள் பாதிக்கபட்டுகொண்டே இருக்க கலைஞரின் குரல் மட்டுமே ஓங்கி ஒலித்தது

அந்த குரலை நிறுத்துங்கள் , அவர் ஆட்சியினை கலையுங்கள் என ராஜ்விடம் குனிந்து நின்றவர்கள்தான் ஜெயலலிதாவும் நடராசனும்.

இங்கு நான் மொழிப்போர் தியாகி என நடித்துகொண்டே, ராஜிவிடம் வேறு ஆட்டம் ஆடினார் நடராசன், அதாவது எல்லோருக்கும் நல்லவராக தன்னை காட்டிகொண்டார்

பின் ராஜிவின் ரத்தத்தில் ஜெயாவினை நடராசன் அமரவைத்த காலமும் நடந்தது

அந்த நடராசன் இன்று ஈழ மக்களுக்காக கண்ணீர் வடிக்கின்றார், அவரின் அல்லக்கைகள் கலைஞரை திட்டிகொண்டிருக்கின்றன‌

பின் இதே நடராசன் தான் கலைஞர் ஈழதமிழரை காங்கிரசோடு சேர்ந்து கொன்றார் என சொன்ன சீமான் கும்பலோடு கைகோர்த்தார், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் எல்லாம் அமைத்தார்

அதாவது இவர்களுக்கு வேண்டுமென்றால் காங்கிரசோடு கைகொர்த்து, அமைதிபடை மோதலை கண்டுகொள்ளாமல் கலைஞரை விரட்டுவார்கள், ஆனால் 2009ல் கலைஞர் செய்ததெல்லாம் துரோகம் என சொல்வார்கள்

எப்படிபட்ட தந்திரக்காரன் இந்த நடராசன்.

இதோ இன்று அதிமுக ஆட்சி நடக்கின்றது, பிஜேபி அனுசரனையுடன் நடக்கின்றது. யாராவது போர்குற்றம் பற்றியோ, இலங்கையில் இந்தியா தலையிட்டு 13ம் சட்ட திருத்தம் தரவேண்டும் என்றோ அல்லது ஈழம் அமைத்து கொடுக்கவேண்டும் என்றோ சொல்கின்றார்களா இல்லை

அன்று அமைதிபடையினை அனுப்பிய ராஜிவுடன் தயக்கமின்றி இருந்த நடராசன் பின் இந்த கும்பலோடும் கைகோர்த்துகொண்டும் இருக்கின்றார், ஆட்சியும் இவரிடம் தான் இருக்கின்றது

அந்த கும்பலும் இவரை ஏற்றுகொண்டிருக்கின்றது ஒரு வார்த்தையும் கேட்கவில்லை, இவருக்கும் வெட்கமில்லை

ஏன்?

நோக்கம் ஒன்றுதான் கலைஞரையும் திமுகவினையும் வீழ்த்தவேண்டும், நெருக்கடி கொடுத்துகொண்டே இருக்கவேண்டும்

மற்றபடி ஈழத்தில் எவன் செத்தால் இவர்களுக்கென்ன?

நடராசன் சட்டையினை பிடித்து, “டேய் நான் தோணியில் ஈழம் சென்றபொழுது , ராஜிவிடம் குலவிகொண்டிருந்தவன் நீதானே..” என கேட்கும் தகுதி வை.கோவிற்கு உண்டு, கேட்கலாம்

ஆனால் கண்டெய்னர் கணக்குகள் வந்தபின் எப்படி கேட்பார்?

“எங்க அண்ணன் பிரபாகரன் உயிரை பறிக்க அமைதிபடை தேடிய பொழுது டெல்லியில் இருந்து ஆதரவளித்த துரோகி நீதானே…” என சீமானும் கேட்கலாம், ஆனால் அவர் அதனையெல்லாம் எப்படி ஹிஹிஹீஹிஹிஹிஹிஹ்..

உண்மை எல்லாம் தெரிந்த பழ.நெடுமாறனும் தேவாங்கு ஸ்டைல், கலைஞர் என்றால் மட்டும் சீறுவார். இந்த துரோகிகள் எல்லாம் பிரச்சினையே இல்லை

சு.சாமி, சீமான், வைகோ வரிசையில் வரும் பெரும் சர்ச்சைகுரிய நபர் இந்த நடராசன், ஆனால் அவரை பற்றி எல்லாம் யாரும் பேசமாட்டார்கள்.

காரணம் அவர் சசிகலாவின் கணவர், சசிகலா பெரும் அரசியல் அதிகார புள்ளி.

மாறாக கலைஞர் ஒழிக, காங்கிரஸ் ஒழிக என சொல்லிகொண்டே இருப்பார்கள்.

 
 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s