நண்பர்களுக்கு ஒரு நாளாம்…

நண்பர்களுக்கு ஒரு நாளாம்,

இந்த தேதியில்தான் உலகில் நட்பு வந்தது போலவும் அதற்கு முன்பு நண்பர்களே உலகில் இல்லை என்றும், எனவே அதனை கொண்டாட, அட்டைகள், கயிறுகள்,டாஸ்மாக் இன்னும் என்ன கருமங்களுக்கெல்லாம் செலவழித்தால்தான் அது நண்பர்கள் தினமாம்.

இந்திய உலகிற்கு கொடுத்த காவியங்களையும், அக்காவியம் குறிக்கும் பாத்திரங்களையும் பாருங்கள், ஏதாவது ஒன்று நட்பு இல்லாமல் இருக்கின்றது என காட்டுங்கள், அப்படி ஒரு காவியமும், வரலாறும் இல்லை, அலெக்ஸாண்டர் வாழ்வினை தவிர‌

ஆம் தனக்கு பின் சாம்ராஜ்யத்தை தன் நண்பர்களுக்கே அவன் விட்டு சென்றான், நட்பில் அவன் அப்படி உயர்ந்து நின்றான்

நட்பிற்காக ஒரு அதிகாரத்தினையே அமைத்து அதனை வாழ்வின் தவிர்க்க இயலா அங்கமாக்கினார் வள்ளுவர்.

நட்பிற்கு பாரத பூமியும், தமிழ் கலாச்சாரமும் கொடுத்த பெருமைகள் அப்படி,

ராமனும் குகனும், கண்ணனும் குலேசனும், என இந்தியர் கொண்டாடும் ஆண்டவனின் அவதாரங்களே நட்பின் வலிமையை உணர்த்தும்.

இந்திய புராணங்கள் என்றல்ல, இயேசு கிறிஸ்துவிற்கும் புனித பீட்டருக்கும் இருந்த நட்பு உலகறிந்தது.

தமிழில் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு, முகம் கூட பார்க்காமல் மலர்ந்து , இறுதியில் ஒன்றாய் உயிர்விடும் அளவுக்கு சென்றது.

பாரதத்தில் கொடுமையான துரியோதனுக்கு பலமே அவனுக்கும், மாசு இல்லாத கர்ணனுக்கும் இருந்த உயர்வான நட்பு,

அசோகவனத்தில் சீதைக்கும் கூட திரிசடையின் நட்பே ஆறுதல்.

இன்னும் எத்தனையோ விதமான நட்புகளை உலகிற்கு சொன்னது தமிழினம்,

அவதாரங்களுக்கும், மன்னருக்கும், பெரும் பொல்லாதவர்களும் கூட நண்பர்கள் இன்றி வாழ்ந்ததில்லை என்பதை சொல்லும் கலாச்சாரம் நம்முடையது.

அந்த கால தமிழனை விடுங்கள், இன்றைய தமிழகம் ஆளும் தலைவர்களை பாருங்கள், அது 65 ஆண்டு கால வரலாறு கொண்ட நட்போ அல்லது 30 ஆண்டுகால நட்போ, தனது நண்பரை சற்றும் விட்டுகொடுக்காத நட்பினை சர்வ உலகத்திற்கும் தெரிவிக்கும் மாநிலம் இது.

எத்தனை நெருக்கடிகள், எவ்வள்வு சிரமங்கள் அதையும் தாண்டி நட்பிற்கோர் இலக்கணமாய் இன்றும் தொடரும் நட்புக்கள் அவை.

கலைஞர் அண்ணா நட்பு தமிழகத்தை வாழவைத்தது, ஜெயா சசிகலா நட்பினை பற்றி நீங்களே முடிவு செய்யலாம். சில நட்புகள் அப்படி அமைந்திருக்க கூடாதவை

மாபெரும் ஞானிகளுக்கும் நட்பிருந்தது, தலைவர்களுக்கும் இருந்தது, ஒரு காலத்தில் 3 மாநிலத்தினை அச்சுறுத்திய வீரப்பனுக்கும் உயிர்கொடுக்கும் நண்பர்கள் இருந்தார்கள், ஆட்டோ சங்கருக்கும் பெரும் நட்பு வட்டம் இருந்தது.

காரணம் மானிட வாழ்வில் நட்பு ஒரு தவிர்க்க இயலாத அங்கம்.

தமிழர் நட்பிற்கு கொடுத்த கொளரவமும், இந்திய பாரம்பரியம் கொடுத்த பெரும் மரியாதையும், உலகில் எந்த நாடும், எந்த இனமும் கொடுத்தது இல்லை, கொடுக்கபோவதும் இல்லை.

நட்பிற்கு தனது இனம் கொடுத்த பெருமை தெரியாமல், வெள்ளையன் சொல்லிவிட்டான் “ஹேப்பி பிரண்ட்ஷிப் டே” என கத்தி கொண்டும், தேநீர் சட்டை அணிந்து, கையில் பட்டை கட்டி, நட்பினை சொல்லும் தமிழனை என்ன சொல்வது?

தீவிரவாதிகளில் பல பிரிவுகள் இருந்தாலும், சிரியாவிலும் ஈராக்கிலும் ஆடும் ஐ.எஸ் இயக்கத்திற்கும் இஸ்லாமிற்கும் ஏதும் தொடர்பு உண்டா?

புனிதமான இஸ்லாமிற்கும் அவர்கள் செய்யும் செயலுக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா?, இவர்களை எப்படி உலகம் பார்க்கின்றதோ, அதே தான் தனது பாரம்பரிய பெருமைகள் தெரியாமல் “பிரண்ஷிப் டே” கொண்டாடி பணத்தினை செலவழிக்கும் இவர்களை பார்க்கவேண்டி இருக்கின்றது.

மாபெரும் தமிழ் கவிஞன் கம்பனுக்கும், சடையப்ப வள்ளலுக்கும் இருந்த நட்பினை மட்டும் இவர்கள் படித்தாலே போதும் அது 10000 நண்பர்கள் தின கொண்டாத்திற்கு சமம்.

எனக்கு எத்தனை நண்பர்கள் வந்தாலும், ஒரு பெரும் நண்பன் உண்டு, அவன் நட்பை பெற்றதில் பெருமைபடுகின்றேன்

Vella Pandi அமெரிக்காவின் முண்ணணி பொறியாளர் அவர். அவர் முறைத்தாலே கணினி தானாக புரோகிராம் எழுதும் என சொல்கின்றார்கள்

கல்லூரி கால நட்பு அது, இன்று அவன் அமெரிக்காவில் குடியேறிவிட்டாலும், டிரம்ப் வந்து பொடரியில் போடும் வரை அவன் சீமான் கோஷ்டியாக இருந்தாலும் எம் நட்பு பாதிக்கபட்டதே இல்லை

மிக உயர்ந்த அன்புக்கும், பண்புக்கும் சொந்தகாரன் அவன், எனக்கு அவன் செய்யும் உதவிகள் எல்லாம் ஏராளம். நட்பு என்றால் என்ன எனக்கு சொல்லிகொடுத்ததே அவன்

நண்பர்கள் தினம் என்றால் அவன் முகமே முன்னால் நிற்கின்றது

சந்தேகமே இன்றி அவன் கிருஷ்ணன், எனக்கு அவ்வளவு உதவி செய்திருக்கின்றான், ஆனால் நான் குசேலன் என சொல்லகூட தகுதி இல்லாதவன்

குசேலனாவது அவல் கொடுத்தான் என்பார்கள், நான் அந்த அவலை கூட அவனுக்கு கொடுத்ததில்லை

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s