பெரும்போரின் களப்பலி : 01

No automatic alt text available.அணு என்பதற்கு அக்கால பாரதமே அனுமானம் சொல்லியிருந்தது, பெரும் அழிவு ஆயுதங்கள் சாத்தியம் என்பதனை மகாபாரதம் படிப்போரின் கண்முன்னே காட்டிற்று.

அணுவின் இயக்கமே சிவனின் இயக்கம் என கண்டவர்கள் தமிழர்கள், நடராஜரின் சிலை தத்துவம் அதனைத்தான் குறிக்கின்றது, திருமூலர் அப்படியே அணுவின் வடிவத்தையே சிவனாக சொன்னார், தமிழன் திருமூலர்தான் சொன்னார். இதில்லாம் பகுத்தறிவிவாதிகள் மறுப்பு சொல்ல முடியாது

அமெரிக்க அணுஆய்வுகூடங்களில் நடராஜர் சிலைக்கு கொடுக்கும் முக்கியத்துவமே தனி. அது அணுவின் இயக்க தத்துவம் என அடித்து சொல்கின்றனர் நிபுணர்கள்.

அப்படி உலகமே அணுவை என்ன செய்யலாம் என நோக்கியபொழுதுதான் ஜாண் டால்டன் அணுவினை பற்றி புதிய கருத்துக்களை சொன்னார், பின்னாளில் அது ஜெர்மானிய விஞ்ஞானிகளின் ஆராய்சி ஆயிற்று.

நீல்ஸ்போர், ஐன்ஸ்டீன் எல்லோரும் மண்டையை போட்டு உருட்ட, பெரும் சக்தியாய் உலகினை உருட்ட தொடங்கினான் ஹிட்லர். ஹிட்லரிடம் இருந்து தப்புவது யூதர்களுக்கு மகா சவாலானது. அதிமுகவிடம் இருந்து தப்ப தமிழகம் போராடுவதை போல எப்படியாவது உயிர்தப்பிவிட கடும் முயற்சிசெய்த காலம், நிரந்தரமாக தப்பிக்க ஒரே வழி ஹிட்லரை கொல்வது.

No automatic alt text available.அமெரிக்காவில் யூதரான ஐன்ஸ்டீனிடம் அணுஆராய்ச்சி செய்ய பணித்தனர், ஐன்ஸ்டீனும் அவருடன் இனொரு யூதரான‌ ஹைமரும் இணைந்தார், யூதர்களை காப்பாற்றும் ஒரே நம்பிக்கையாக அவர்கள் அமெரிக்காவை கண்டனர், இஸ்ரேல் கூட அன்று இல்லை. ஏதாவது செய்து ஹிட்லரை அடக்காவிட்டால் யூத இனம் பிரபஞ்சத்திலே இருக்காது.

அதுவரை ஐன்ஸ்டீனின் ஆற்றல் கொள்கை தாளில் மட்டும் இருந்தது, அது உண்மை என்றால் அணுகுண்டு வெடிக்கவேண்டும், இல்லாவிட்டால் ஐன்ஸ்டீனுக்கு “ராமர் பிள்ளை” நிலைதான். அவரும் பல்லை கடித்துகொண்டுதான் இருந்தார், ஹிட்லரிடம் உயிர்தப்பிய ஹைமரோ அணுகுண்டினை உருவாக்கி தீரவேண்டும் வெறியில் இருந்தார்.

ஆனால் அணுகுண்டு ஆராய்ச்சியின் தொடக்கத்தில் இருந்த ஹிட்லர், ரஷ்யாவில் அகலக்கால் வைத்து அகாலமரணமடைந்தார்.

ஹிட்லர் தான் இல்லையே, இனி ஏன் அணுகுண்டு என யாரும் கேட்கவில்லை காரணம் ஜப்பான். கிழக்காசியாவில் சாமியாட்டம் ஆடிகொண்டிருந்தது, இன்னும் கொஞ்சநாளில் இந்தியா, நேதாஜி “இந்தியாவின் தேசிய தலைவர்” என அறிவிக்கபட இருந்த நிலை.

ஒரு வழியாக 3 ஆண்டுகள் உழைத்து அணுகுண்டினை செய்து 100 அடி உயரகூண்டில் வைத்து சோதித்தார்கள். ஆயிரம் சூரியன் வெடித்த வெளிச்சம், பெரும் சக்தி. தான் உலகின் ஒப்பற்ற விஞ்ஞானி என்பதை ஐன்ஸ்டீன் நிரூபித்த தருணமது.

அப்பொழுது ஹைமரின் மேற்கோள் குறிப்பிடதக்கது, “ஓராயிரம் சூரியன்கள் ஒன்றாய் விரவி விண்ணில் தோன்றினால், அதுதான் பரம்பொருளின் பிரகாசமாக இருக்கும்” என்ற பகவத் கீதையின் சுலோகமே தனக்கு நினைவு வந்த்தாக சொன்னார். (ஒரு யூதன், அதுவும் தலை சிறந்த விஞ்ஞானி அவரே பகவத்கீதையை படித்திருக்கிறார், அப்துல் கலாமும் அப்படி பட்டவரே. இன்றோ வேற்றுமத நூல்களை படிப்பது பாவம், படித்தால் நரகத்திற்கு போவாய் என் போதிக்கபடுகின்றது)

பின்னர் அந்த நுட்பம் அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கபட்டது, அரசு ராணுவத்திற்கு அணுகுண்டு அனுமதி அளித்தது.
நினைத்தவுடன் செய்வதற்கு அணுகுண்டு ஒன்றும் உப்புமா அல்ல, மகா சிரமாமானது. 1 டன் யுரேனியத்தில் 1 கிலோதான் தேவைக்கு மிஞ்சும், அணுகுண்டின் மிக குறைந்த எடையே 50 டன், கணக்கிட்டுகொள்ளுங்கள்.

Image may contain: outdoorஆனால் குறுகிய காலத்தில் 10 குண்டுகள் செய்தார்கள், பெர்லினில் வேண்டாம் அது நமது கையில், இத்தாலியும் தோற்றாகிவிட்டது, அன்று அமெரிக்காவிற்கு வேறு பெரும் எதிரி ஜப்பான் மட்டுமே, ரஷ்யா மறைமுக எதிரி ஆனால் ஆபத்தில்லை.

தனது பலத்தினை உலகிற்கு காட்டவேண்டும், முதல் முறையாக பேர்ள் ஹார்பரில் தனது சொந்த மண்ணில் மரித்த ராணுவத்திற்கு பழிவாங்க வேண்டும், அதைவிட மகா முக்கியம் அமெரிக்க தரத்தில் பொருளும்,கார்களும் செய்து அடிமாட்டு விலைக்கு விற்ற ஜப்பானையும்,ஜப்பான் கம்பெனிகளையும் அலறவைக்க வேண்டும்.

செய்தார்கள்,பேர்ள் ஹார்பர் போல ஹிரோஷிமா ஒரு துறைமுக நகரம், இதே ஆகஸ்ட் 6ம் தேதி, 1945
ஒரு விமானத்தில் அணுகுண்டினை ஏற்றி பைலட்டுக்கும் சொல்லாமல் அனுப்பினார்கள், அவரும் கடமையை செவ்வனே முடித்தார், எதற்கும் என்ன நடக்கிறது என பார்க்க சற்று விமானத்தினை திருப்பினார், அதிர்ச்சியில் உறைந்தார், அவசரமாக அமெரிக்கா திரும்பினார்.

10 கி.மி உயரத்திற்கு குடைகாளான் தோன்றியிருந்தது, வெப்பநிலை 2500 டிகிரிக்கு மேல் சென்றது. இரும்பு கட்டங்கள் உருகும் போது மனிதர்கள் அப்படியே ஆவியானார்கள், ஆறுகள் கொதித்தன. 1 லட்சம் பேர் உடனடி மரணம் எல்லாம் நடந்தது 5 நிமிடத்தில்.

அதுதான் இன்றுவரை உலகில் வீசபட்ட மிக சிறிய அணுகுண்டு, இன்று அதனை விட 5ஆயிரம் மடங்கு வீரியமிக்க அணுகுண்டுகள் இருக்கிறதென்றால் , உலகின் ஆபத்தை நீங்களே உணரலாம்.

என்ன நடந்தது என சொல்லகூட யாருமில்லை, சகலமும் அழிவு. அடக்கம் செய்யகூட ஒன்றுமில்லை, சர்வமும் சாம்பல்.
அதிர்ந்த ஜப்ப்பான் போரை நிறுத்தவில்லை, எப்படியும் இந்த குண்டுகளை எதிர்கொள்வோம் என நெஞ்சு நிமிர்த்தினார்கள். விளைவு ஆகஸ்ட் 9ல் அடுத்த குண்டு இம்முறை நாகசாகி, குண்டு கொஞ்சம் நகருக்கு தள்ளிவிழுந்ததில் 50,000 பேர் பலி ஆனால் கடும் சேதம்.

ஜப்பான் போரை நிறுத்தி ராணுவத்தையே கலைத்தது,(ஆனால் அமெரிக்காவை பழிதீர்போம் என சொல்லும்ஒரு கும்பல் இப்போதும் உண்டு) நேதாஜியின் தலைவிதி மாறிபோனது. உலகமே ஆழ்ந்த அதிர்ச்சியில் இருந்தது. பழிவாங்கிய அமெரிக்கா சந்தடி சாக்கில் ரஷ்யாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தது “நான் யார் தெரியுமா? மவனே என்கிட்ட வச்சிகிட்ட அவ்வளவுதான்.”

பெர்லினில் ஹிட்லரின் ராணுவம் மீது விழவேண்டிய குண்டு, அரசியல்வாதிகளால் ஜப்பானின் மீது விழுந்து அப்பாவிகள் செத்ததில் கலங்கினார் ஐன்ஸ்டீன், அணுஆராய்ச்சியை கைகழுவிவிட்டு வான்கொள்கள் ஆராய்ச்சிக்கு தாவினார் (மேலே சென்ற ஜப்பானியார்களை தேடியிருக்கலாம்), பின்னாளில் இஸ்ரேல் அதிபர் பதவி தேடிவந்த போதும் மறுத்துவிட்டார். அரசியலும் விஞ்ஞானமும் கலப்பது பேரழிவு என்பது அவரின் இறுதிகால கொள்கை அது உண்மையும் கூட.

உலகெங்கும் அச்சமும்,பீதியும் ஆட்கொண்டன, வழக்கம்போல சில கிறிஸ்தவ ஊழியக்காரர்கள் இதுதான் கடைசிகாலம், மனம் திரும்புங்கள், அல்லேலூயா என போதனையை தீவிரபடுத்தின (அவர்களுக்கென்ன ஒரு குடிசை தீயில் எரிந்தாலும் கடைசிகாலம் என கத்துபவர்களுக்கு, நகரமே எரிந்தால் விடுவார்களா?)

ஆனால் ஒருவர் மனம் திரும்பினார் அவர் ஜப்பானை எதிர்த்து போரிட்டு ஜப்பானை விரட்டிய‌ அமெரிக்க தளபதி மெக் ஆர்தர்.

மனம் திரும்பிய அவர் பெண்டகனில் அமெரிக்க அதிபரை சந்திக்கும் பொழுது, வாயில் இருந்த சிகரெட் பைப்பினை எடுத்துவிட்டு ஒரு கோரிக்கையை சொன்னார், எளிதான கோரிக்கைதான்.

“மிஸ்டர் பிரசிடெண்ட், இது போன்று எனக்கு 15 குண்டுகள் தரமுடியுமா?, நான் சில நகரங்களை பட்டியலிட்டிருக்கின்றேன், ஒரு 50 வருடங்களுக்கு போர் இருக்காது”

(ஷாங்காய், சியோல், பிங்யாங் என பட்டியலிட்டார். உண்மையில் மெக் ஆர்தரின் கணிப்பு மகா சரியானது. அன்றே சூட்டோடு சூட்டாக கொரியாவினையும், சீனாவினையும் போட்டு சாத்தியிருந்தால் இன்று அமெரிக்காவிற்கு சிக்கல் வந்திருக்காது, யாரெல்லாம் அமெரிக்க எதிரி ஆவார்கள் என்பதை அழகாக கணித்திருக்கின்றான்)

மிக சீரியசாக அவர் சொன்னதை கேட்டு, வியர்த்து கொட்டியபடி எழுந்து அமர்ந்தார் அந்நாளைய அமெரிக்க அதிபர்.

அணுகுண்டின் முக்கியத்துவத்தை உலகநாடுகள் உணர்ந்து, அவற்றுக்காய் பகிரத தவமிருந்த மிக பரபரப்பான காலங்கள் அவை.

தொடரும்…

 
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s