ரஜினி அரசியலுக்கு வர சிறப்பு யாகம் இன்னும் பிற..

மதுரா கைம்பெண்களிடம் 1500 ராக்கி கயிறுகளை பெறுகிறார் மோடி

எல்லையில் சீனன் தூக்கு கயிரோடு வந்து நிற்கின்றான், இவர் இங்கே ராக்கி கட்டி விளையாடி கொண்டிருக்கின்றாரா?

மோடி எதனை செய்தாலும் வரவேற்கும் தமிழிசையினை காணவில்லை, யாருக்கு ராக்கி கட்டிகொண்டிருக்கின்றாரோ?

அநேகமாக முதல்வர் பழனிச்சாமிக்கு கட்டி கொண்டிருக்கலாம்.


ரஜினி அரசியலுக்கு வர சிறப்பு யாகம்

அந்த யாக‌ தீயில் அவரை தூக்கிபோட்டாலும் எரிவாரேயன்றி, அரசியலுக்கு எல்லாம் வரவே மாட்டார்.


வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையினை கண்டால் அவன் நீண்ட கத்தி வைத்திருப்பது என்னை கொல்லதான் என்றும், மகாத்மா காந்தி சிலையினை கண்டால் அவர் கையில் கம்பு வைத்திருப்பது என்னை அடிக்கத்தான் என்றும் சொலுமளவு பன்னீர் செல்வத்தின் நிலை மோசமாயிற்று.

ஓவியாவிற்கு மனநலம் பாதிக்கபட்டு விட்டது என சொல்லும் தமிழகத்தில் சிலரை மட்டும் விட்டுவிடுகின்றார்கள்.


திருமுருகன் காந்தியை புழல் சிறையில் சந்திக்கிறார் வைகோ : செய்தி

அப்படியே கதவினை திறந்து இவரையும் உள்ளே போட்டு அடைக்கலாம், நீண்ட நாட்கள் இருவரும் இருந்து பேசிவிட்டு வரட்டும்

இதே புழல் சிறையில் வைகோவினை ஜெயா அடைத்துவைத்தபொழுது, யாரும் சந்திக்காமல் ஒதுக்கிவைத்தபொழுது, ஓடி சென்று சந்தித்தார் கலைஞர். அந்த ஞாபகம் புழல் சிறைக்கு செல்லும் பொழுது வைகோவிற்கு வருமா என்றால் வராது.

காரணம் அவர் மனசாட்சி, மானம் எல்லாம் செத்து நெடுநாள் ஆயிற்று.


அதிமுகவின் மூன்று அணிகளையும் இணைக்க வேண்டும் : செல்லூர் ராஜூ

இதற்குதான் இவரை எல்லோரும் கலாய்க்கின்றார்கள், அந்த தீபா கணவன் மாதவன் அணியினை இவர் எப்படி மறக்கலாம்? அவரை இணைக்காவிட்டால் அது எவ்வளவு பெரும் இழப்பு?


தேவைபட்டால் முக்தார் உமர் போல மத்திய அரசை எதிர்த்து ஆயுதம் தூக்க தயங்கமாட்டேன் : வைகோ

தேவைபட்டால் அப்சல் குரு, யகூப் மேமன் போல இவரை தூக்கில் போடவும் இத்தேசம் தயங்காது.


இன்று சந்திர கிரகணமாம்

குஷ்பூ படம் பார்க்காத நாளெல்லாம் நமக்கு சந்திர கிரகணம்தான், இதில் என்ன புதிதாக ஒரு கிரகணம்?


 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s