முத்த பிரச்சினை ….

தமிழகம் கண்ட முத்தபிரச்சினையில் இந்த பிரச்சினைதான் பெரும் பிரச்சினையாக வரலாறு சொல்கின்றது.

ஆனால் ஓவியாவின் முத்த பிரச்சினை பரவிய அளவுக்கு இந்த முத்த பிரச்சினை பரவவில்லை என்பதுதான் விஷயம்..

 
Image may contain: 2 people, text

மரியாதைகுரிய தமிழனின் வணக்கம் …

Image may contain: 2 peopleவணக்கத்தில் கூட தமிழர் அடையாளமில்லாத இந்த சைமர் தமிழினத்தின் புது காவலராம், அவரே சொல்கின்றார்.

மரியாதைகுரிய தமிழனின் வணக்கம் இப்படி ஒரு கையில்லாதவனின் வணக்கம் போலவா இருக்கும்?

இந்த வணக்கத்தை எல்லாம் சபை அநாகரீகம் என சொல்லியிருந்தான் தமிழ் முப்பாட்டன்,

முதலில் தமிழர் பண்பாட்டு வணக்கத்தை படியும் அய்யா, அதன் பின் தமிழ்நாட்டை காப்பாற்றலாம்..

இன்னொரு கையில் என்ன குஷ்டமா?

இப்படிபட்ட செய்கை எல்லாம் விஜயலட்சுமியிடம் காட்ட வேண்டியது அய்யா, பொது இடத்தில் அதுவும் வணக்கம் தெரிவிக்க அல்ல..

பிக்பாஸ் ஆரவ்…

Image may contain: 1 person, beardஅரவம் என்றால் பாம்பு என்று பொருள், அரவான் என்றால் எல்லோருக்கும் தெரியும் கூத்தாண்டவர் கோவில் சாமி அவர்.

அரவத்தை சுருக்கினாலும், அரவானை சுருக்கினாலும் அது “அரவ்” அல்லது “ஆரவ்” என வந்துவிடும்

பெயருக்கேற்றபடி அவன் பாம்பாக இருக்கவேண்டும், இல்லையென்றால் ஓவியா மீதும் காதல் வரவில்லை எனில் அவன் கூத்தாண்டவர் கோவில் சாமியாக இருக்கவேண்டும்

ஆக இரண்டாவது வகை உண்மையாக இருக்கலாம் என்ற அளவு ஓவியாவின் நினைவால் பாதிக்கபட்ட விழுதுகள் ஆராய்ச்சி செய்து முடித்துவிட்டன‌

ஓவியா மீதும் காதல் வரவில்லை என்றால் நிச்சயம் அதுதான் என அவர்களே முடிவிற்கு வந்துவிட்டார்கள்..

“அரவாணி” ஆரவ் என்ற கோஷம் ஆங்காங்கு தொடங்கிவிட்டது..

விரைவில் கூத்தாண்டவர் கோவிலில் ஆரவ் படத்துடன் பிளக்ஸ், பேனர் எல்லாம் வைக்கபடும் போல் தெரிகின்றது.

அடுத்த மனநல பாதிப்பு நிச்சயம் அந்த “ஆரவ்” என்பவருக்குத்தான்

 
 

சசிகலா புஷ்பா என்ன ஆனார்?

Image may contain: 1 person, close-up“நேத்தைக்கு நான் முழு மப்புல இருந்தேன்…” என்ற ஒரே ஒரு போன் உரையாடல் மூலம் பிரபலமானவர் சசிகலா புஷ்பா

பின் அதனை மறைக்க திருச்சி சிவாவினை கும்மாங்குத்து குத்தியது, சசிகலாவுடன் மல்லுக்கு நின்றது என அவர் செய்த அதிரடிகள் ஏராளம்.

ஜெயா என்னை அடித்தார், என சொல்லி அவர் எற்படுத்திய சர்ச்சை கொஞ்சம் அல்ல, ஆனால் ஜெயா அடி எப்படி இருக்கும் என தெரியும் முன் அவர் போய் சேர்ந்தது சசிகலா புஷ்பாவிற்கு நல்ல நேரம்

ஜெயா மரணமும், மர்மமும் அவருக்கு இன்னும் வாய்ப்பாய் அமைந்தன, மப்பும் மறைந்தது.

அதன் பின் அம்மையாரை காணவில்லை, எங்கிருக்கின்றார் என்ன செய்கின்றார் என்பது தெரியவில்லை. அடுத்த முறை கவுன்சிலரானாலே பெரும் விஷயம்

என்னதான் செய்துகொண்டிருக்கின்றார் அம்மணி? அநேகமாக பாஜகவிற்கு தாவும் முடிவில் இருக்கலாம்,

எனினும் அடுத்த டெலிபோன் உரையாடல் வந்தால்தான் தெரியும்

யாழ் காலண்டர்….

ஜூலி என அழைப்பது தமிழாகாதாம், அது தமிழ் வார்த்தை இல்லையாம்

மாறாக “யூலி” என அழைக்கபடவேண்டும் என சீமானின் தும்பிகள் சொல்லிகொண்டிருக்கின்றன, ஜூன் ஜூலை எல்லாம் யூன் யூலை என்றுதான் தமிழாக்க வேண்டுமாம், அப்படி ஜூலி இல்லையாம் யூலியாம், ஜூலியஸ் சீசர் கூட இவர்களுக்கு யூலியஸ் தானாம்

அந்த யாழ்பாணத்தான் வெள்ளையன் அடிமை. அன்றே தமிழ் காலண்டரை பின்பற்றாமல் வெள்ளையன் காலண்டரை தமிழ்படுத்தியிருக்கின்றான்

அதுவும் அவனின் தை மாதம் நம்மை போல ஜனவரி 14ல் வராது, மாறாக ஜனவரி1க்கு சென்றுவிடும்

ஆனி, ஆடி இருக்க யூன், யூலை எதற்கு என இவர்களும் கேட்கமாட்டார்கள், யாழ்பாணத்தானை என்று இவர்கள் திருப்பி கேட்டார்கள்? கேட்டால் காசு வராது.

ஆங்கில அடிமைதனத்தை அப்படியே ஏற்று ஆனால் சனவரி, யூன், யூலை என வாழ்ந்தவன் யாழ்பாணத்துக்காரன், வெள்ளையனுக்கு அடிமை சாசனம் எழுதிகொடுத்திருந்த இனம் அது.

நாங்கள் தான் தமிழின காவலர்கள் நாங்கள் தான் தமிழுக்காய் வாழ்ந்து நாடு கேட்பவர்கள் என சொல்லும் அவர்களின் தமிழ் காவல் இப்படித்தான்.

அவனை பின்பற்றி இந்த சீமானும் அவன் தும்பிகளும் செய்வதுதான் தமிழ் புரட்சியாம், தமிழ் கலாச்சாரமாம், இதனை நாம் நம்ப வேண்டுமாம்.

சைமன் என்றால் என்ன அர்த்தம் என தெரியாமல் சீமான் என மாற்றிகொண்டவரின் தும்பிகள் இப்படித்தான் அழிச்சாட்டியம் செய்வார்கள்

இதற்கு அண்ணாவும் கலைஞரும் செய்த தமிழ் சீர்திருத்தம் எவ்வளவோ பரவாயில்லை என சொன்னால் நாம் துரோகி, மொழி உணர்வற்றவன்.

சரி, ஜெயலலிதா இருந்த பொழுது இவர்கள் எப்படி அழைத்தார்கள் என்றெல்லாம் கேட்டால் நாமெல்லாம் துரோகி

எதற்கும் ஜெரின், ஜூரின் போன்ற பெயர்கள் கொண்டவர்கள் எல்லாம் இந்த தும்பிகள் இருக்கும் பக்கம் செல்லாமல் இருப்பது நலல்து

காரணம் உங்களை “யூரின்” என அழைத்துவிடுவார்கள் ஜாக்கிரதை..

காவேரி என்பது என்ன?

No automatic alt text available.ஒரு சில அறிவாளிகள் கிளம்பிவிட்டார்களாம், அதாவது கபினி எனும் காவேரியின் துணையாரில் அணைகட்டினால் கன்னடடட்தை பழிவாங்கலாமாம்

சீப்பை எடுத்து ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் என்பது இதுதான், கூடவே மணமகன் முகத்தில் துப்பும் நிகழ்வும் நடக்கும்

காவேரி என்பது என்ன? அது ஆடுதாண்டும் காவேரிதான் சந்தேகமில்லை. மேகதாது அல்லது மேக்க தாட்டு என சொல்லபடுவது என்ன? கன்னடத்தில் ஆடு தாண்டுதல் என பொருள் வரும்

காவேரி என்பது பல ஆறுகளின் தொகுப்பு, கபினி ஹேமாவதி, ஹேரங்கி என பல ஆறுகள் சேர்ந்துதான் ஒக்கெனேக்கலில் காவேரியாக நுழையும், இதுவரை சிக்கல் இல்லை, கபினி ஊட்டிபக்கம் தொடங்கும் ஆறு அணை கட்டலாம், தப்பில்லை

ஆனால் சிக்கல் எங்கு தொடங்கும்

காவேரியுடன் பவானி, நொய்யல், அமராவதி என தமிழக ஆறுகளும் கலந்துதான் கல்லணை வரவேண்டும். நாம் என்ன செய்திருக்கின்றோம்? பவானி, நொய்யல், அமராவதியெல்லாம் அணைகட்டி வைத்திருக்கின்றோம்,

இன்னும் ஏகபட்ட துணையாறுகள் எல்லாம் உண்டு, அவற்றில் அணைகளும் உண்டு

ஆம் அவைகள் எல்லாம் ஒரு காலத்தில் கல்லணைக்கு சென்றுகொண்டிருந்த ஆறுகள், கன்னடம் போலவே அணைகட்டி தடுத்தாயிற்று.

தஞ்சைக்கு வரும் காவேரிக்கு இந்த ஆறுகளிலும் பங்கு உண்டு, இன்றுவரை கன்னடம் மல்லுகட்டுவது இதில்தான்

தமிழகத்து காவேரி துணையாரை அவர்கள் தடுக்கும்பொழுது, கன்னட துணையாறை நாங்கள் தடுக்க முடியாதா?

உண்மையில் இந்த அறுகளையும் கல்லணை நோக்கி திறந்துவிட்ட பின் தான், கன்னடன் சட்டையினை நாம் பிடிக்கவேண்டும், ஆனால் நாம் பெரும் அறிவாளிகள் என நம்மை நினைப்போம் அல்லவா?

தமிழன் காவேரியினை தடுத்தால் சத்தம் போடாமல் இருக்கவேண்டும், ஆனால் கன்னடன் தடுத்தால் பெரும் பிரச்சினை ஆக்கவேண்டும்

கபினியில் அணைகட்டினால் மொத்த காவேரியும் வறண்டு போவதில்லை

அந்த அணைகட்டினால் என்ன ஆகும்?

அதோ தமிழருக்கு கொடுக்கவேண்டிய தண்ணீரை அவர்களே எடுத்துகொண்டார்கள் என சொல்லி துண்டை உதறி தோளில் போடும் கன்னடம்

அந்த கபினி நீரும் தஞ்சைக்கு வருமா என்றால் எப்படி வரும்? அது கோவைபக்கம் எங்காவது பாயும்

சில விஷயங்களை மறைக்கவேண்டும், காமராஜர் அதனை தந்திரமாக செய்தார், இந்த பாசன பரப்புகளை அவர் கணக்கில் எடுக்காமல் மறைத்திருந்தார்

இவர்கள் கபினி என கிளம்பி உள்ள பிரச்சினையும் பெரிதாக்குவார்கள்

தஞ்சை விவசாயிக்கு துரோகம் செய்திருப்பது கன்னடன் மட்டுமல்ல, கோவை பகுதியும் சில உண்டு, இந்த சர்ச்சை எல்லாம் வெளி வரவேண்டும் என்றுதான் இவர்கள் ஆசைபடுகின்றார்கள்.

கன்னடனிடமிருந்து கபினியினை மீட்போம் என சொல்லுவதற்கு முன் அமராவதியினையும், பவானியினையும் , நொய்யலையும் கோவைவாசிகளிடம் இருந்து மீட்க முடியுமா?

நிச்சயம் அந்த ஆற்றில் தஞ்சைக்கு பங்கு உண்டு, மறுக்க முடியாது

இதனை மீட்க முடியுமா? முதல்வர் பழனிச்சாமி வேறு கொங்குமண்டலம், ஒரு சொட்டு வரும் என கருதுகின்றீர்கள்??

எப்படியோ எல்லோருமாய் சேர்ந்து கல்லணையினை காயபோட்டாயிற்று

அங்கு மணல் எல்லாம் போயிற்று, இனி கல்லணையின் கல் மட்டும் இருக்கின்றது, விரைவில் அங்கு கல்குவாரி தொடங்கினாலும் கேட்க யார் உண்டு?

 

ஈழம் இந்திய நட்பு நாடு என்கிறார்களே ?

இலங்கையில் சீனா காலூன்றிவிட்டதாம், ஈழம் இருந்திருந்தால் இந்தியாவிற்கு மிக பாதுகாப்பாக இருக்குமாம், ஈழம் இந்தியாவின் நட்புநாடாக இருக்குமாம், ஈழம் அமையாததுதான் தவறாம் சிலர் சொல்லி கொண்டிருகின்றான்

ஈழம் அமைந்தாலும் என்ன நடந்திருக்கும்? சிங்களன் வலிய கேட்டு சீனபடையினை நிறுத்தியிருப்பான் சரி அதனை விடுங்கள்

ஈழம் இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்குமாம்

1500 இந்திய வீரர்களை கொன்று, இந்திய நாய்களுக்கு இங்கு என்னவேலை என கேட்டு, பெரும் இந்திய‌ தலைவனையும் சிதறடித்து, இன்றுவரை இந்தியாவினை பகையாக சொல்லிகொண்டிருக்கும் ஈழம் இந்தியாவின் நட்பாக இருகுமாம், வேடிக்கையாக இல்லை

ஒருவேளை ஈழம் அமைந்திருந்தால் என்னாகும்? திரிகோணமலை அமெரிக்கா கைக்கு செல்லும்

அதன் பின் என்னாகும்? இந்தியாவிலிருந்து தமிழகத்தை பிரிக்கும் எல்லா வன்முறைகளும் தொடங்கும், தெற்கே ஒரு காஷ்மீர் உருவாகியிருக்கும்

இதுதான் இவர்கள் விரும்புவது…..

அதனைத்தான், ஈழம் இந்திய நட்பு நாடு என பலர் சொல்லிகொண்டிருகின்றான், சொல்வது யாரென கண்டால் அதே புலி ஆதரவு இம்சைகள்..

என்ற்த்தான் வேதம் ஓதுகின்றது, ஓநாய் அழுகின்றது, முதலை கண்ணீர் என்பதெல்லாம் இதுதான்.