காவேரி என்பது என்ன?

No automatic alt text available.ஒரு சில அறிவாளிகள் கிளம்பிவிட்டார்களாம், அதாவது கபினி எனும் காவேரியின் துணையாரில் அணைகட்டினால் கன்னடடட்தை பழிவாங்கலாமாம்

சீப்பை எடுத்து ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் என்பது இதுதான், கூடவே மணமகன் முகத்தில் துப்பும் நிகழ்வும் நடக்கும்

காவேரி என்பது என்ன? அது ஆடுதாண்டும் காவேரிதான் சந்தேகமில்லை. மேகதாது அல்லது மேக்க தாட்டு என சொல்லபடுவது என்ன? கன்னடத்தில் ஆடு தாண்டுதல் என பொருள் வரும்

காவேரி என்பது பல ஆறுகளின் தொகுப்பு, கபினி ஹேமாவதி, ஹேரங்கி என பல ஆறுகள் சேர்ந்துதான் ஒக்கெனேக்கலில் காவேரியாக நுழையும், இதுவரை சிக்கல் இல்லை, கபினி ஊட்டிபக்கம் தொடங்கும் ஆறு அணை கட்டலாம், தப்பில்லை

ஆனால் சிக்கல் எங்கு தொடங்கும்

காவேரியுடன் பவானி, நொய்யல், அமராவதி என தமிழக ஆறுகளும் கலந்துதான் கல்லணை வரவேண்டும். நாம் என்ன செய்திருக்கின்றோம்? பவானி, நொய்யல், அமராவதியெல்லாம் அணைகட்டி வைத்திருக்கின்றோம்,

இன்னும் ஏகபட்ட துணையாறுகள் எல்லாம் உண்டு, அவற்றில் அணைகளும் உண்டு

ஆம் அவைகள் எல்லாம் ஒரு காலத்தில் கல்லணைக்கு சென்றுகொண்டிருந்த ஆறுகள், கன்னடம் போலவே அணைகட்டி தடுத்தாயிற்று.

தஞ்சைக்கு வரும் காவேரிக்கு இந்த ஆறுகளிலும் பங்கு உண்டு, இன்றுவரை கன்னடம் மல்லுகட்டுவது இதில்தான்

தமிழகத்து காவேரி துணையாரை அவர்கள் தடுக்கும்பொழுது, கன்னட துணையாறை நாங்கள் தடுக்க முடியாதா?

உண்மையில் இந்த அறுகளையும் கல்லணை நோக்கி திறந்துவிட்ட பின் தான், கன்னடன் சட்டையினை நாம் பிடிக்கவேண்டும், ஆனால் நாம் பெரும் அறிவாளிகள் என நம்மை நினைப்போம் அல்லவா?

தமிழன் காவேரியினை தடுத்தால் சத்தம் போடாமல் இருக்கவேண்டும், ஆனால் கன்னடன் தடுத்தால் பெரும் பிரச்சினை ஆக்கவேண்டும்

கபினியில் அணைகட்டினால் மொத்த காவேரியும் வறண்டு போவதில்லை

அந்த அணைகட்டினால் என்ன ஆகும்?

அதோ தமிழருக்கு கொடுக்கவேண்டிய தண்ணீரை அவர்களே எடுத்துகொண்டார்கள் என சொல்லி துண்டை உதறி தோளில் போடும் கன்னடம்

அந்த கபினி நீரும் தஞ்சைக்கு வருமா என்றால் எப்படி வரும்? அது கோவைபக்கம் எங்காவது பாயும்

சில விஷயங்களை மறைக்கவேண்டும், காமராஜர் அதனை தந்திரமாக செய்தார், இந்த பாசன பரப்புகளை அவர் கணக்கில் எடுக்காமல் மறைத்திருந்தார்

இவர்கள் கபினி என கிளம்பி உள்ள பிரச்சினையும் பெரிதாக்குவார்கள்

தஞ்சை விவசாயிக்கு துரோகம் செய்திருப்பது கன்னடன் மட்டுமல்ல, கோவை பகுதியும் சில உண்டு, இந்த சர்ச்சை எல்லாம் வெளி வரவேண்டும் என்றுதான் இவர்கள் ஆசைபடுகின்றார்கள்.

கன்னடனிடமிருந்து கபினியினை மீட்போம் என சொல்லுவதற்கு முன் அமராவதியினையும், பவானியினையும் , நொய்யலையும் கோவைவாசிகளிடம் இருந்து மீட்க முடியுமா?

நிச்சயம் அந்த ஆற்றில் தஞ்சைக்கு பங்கு உண்டு, மறுக்க முடியாது

இதனை மீட்க முடியுமா? முதல்வர் பழனிச்சாமி வேறு கொங்குமண்டலம், ஒரு சொட்டு வரும் என கருதுகின்றீர்கள்??

எப்படியோ எல்லோருமாய் சேர்ந்து கல்லணையினை காயபோட்டாயிற்று

அங்கு மணல் எல்லாம் போயிற்று, இனி கல்லணையின் கல் மட்டும் இருக்கின்றது, விரைவில் அங்கு கல்குவாரி தொடங்கினாலும் கேட்க யார் உண்டு?

 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s