சொன்னார்கள் : இளங்கோவன், சீமான், கிருஷ்னசாமி, தமிழருவி, ஜெயகுமார், திருமா, தம்பி துரை ….

Image may contain: 1 person, textஅப்படியும் ஆதிச்சநல்லூரை அறவே மறந்துவிட்டு கீழடிக்கு வந்துவிட்டான் அல்லவா?

இதுதான் சினிமாக்காரன்


இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சர்வாதிகாரியாக மாறி வருகிறார் மோடி: இளங்கோவன்

இன்னும் இவர் இந்திரா காந்தி அளவுக்கு சர்வாதிகாரியாக‌ வரவில்லை என்பதை நினைத்து சந்தோஷபடுங்கள் மிஸ்டர் இளங்கோவன்.


சீனாவில் மாவோ செய்த புரட்சியினை நான் தமிழகத்தில் செய்து கொண்டிருக்கின்றேன் : சீமான்

இப்படி எல்லாம் அள்ளிவிட்டால் தானும் “புரட்சி தலைவர்” என ஆகிவிடலாம் என அங்கிள் கனவு காண்கின்றார்.

சீனா ஏன் இந்தியாவோடு போர் தொடுக்க கோபத்தில் அலைகின்றது என்பதன் அர்த்தம் இப்பொழுதுதான் விளங்கின்றது.

இதனை கேட்டபின்னும் அவர்கள் எப்படி சும்மா இருப்பார்கள்? இவரை அடித்து பிடித்து கொண்டுபோய் மாவோ உடலின் காலடியில் போடாவிட்டால் அவர்கள் ஆத்திரம் எப்படி அடங்கும்?


நீட் தேர்விற்கும் பாஜகவிற்கு எந்த தொடர்பும் இல்லை: கிருஷ்ணசாமி

இதற்கு பதிலாக எனக்கும், தலித் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை என இவர் சொல்லிவிட்டு போகலாம்.


மிஸ்டர் தமிழருவி மணியன், நீங்கள் இந்த ரஜினியினை தூக்கி சுமப்பதை விட்டுவிட்டு மகாத்மா காந்தி நினைவிடத்த்தில் இருந்து அவரை அழைக்கலாம் அல்லது காமராஜர் நினைவிடத்தில் இருந்து அவரை அழைக்கலாம்

ரஜினி அரசியலுக்கு வருவதை விட, அவர்கள் திரும்ப வருவது எளிது.


அதிமுக இயமமலை போன்றது, யாரும் அசைக்க முடியாது : ஜெயகுமார்

அதாவது இமயமலையினை சீனா வைத்திருப்பது போல, அதிமுகவினை பாஜக‌ பிடித்து வைத்திருக்கின்றது,

இதனை எவ்வளவு மறைமுகமாக‌ சொல்கின்றார் பார்த்தீர்களா? மாநில‌ நிதியமைச்சர் என்றால் சும்மாவா?


மாநில சுயாட்சி மாநாட்டிற்கு ஸ்டாலினை அழைப்போம்: திருமா

சுதந்திர இந்தியாவில் சுயாட்சி கோஷத்தை எழுப்பியதே திமுகதான், இவர் கூட்டம் நடத்தி அவர்களை அழைக்கின்றாராம்

ஸ்டாலினை எப்படி எல்லாம் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள்


தலித் கிறித்தவரின் அறப்போராட்டம் வெல்லட்டும்! திருமாவளவன்

நல்ல கிறிஸ்தவனில் பிராமணன் என்றும் தலித் என்றும் இல்லை. அப்படி ஒருவன் உணர்ந்தால் அவன் கிறிஸ்தவனே அல்ல.

அந்த போலிகளின் போராட்டம் உள்நோக்கம் கொண்டது, இதனைத்தான் திருமாவளவன் ஆதரிக்கின்றாராம்.

ஜாதி பெரியது என்றால் அவர்கள் கிறிஸ்துவத்தை விட்டு போகட்டும், யார் தடுத்தார்கள்?


மக்களவையில் தமிழில் பேசியதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு: தம்பிதுரை கண்டனம்

இதனை உங்கள் கட்சி மேலிடத்தில் சொல்லுங்கள், பழனிச்சாமியும் பன்னீரும் டெல்லி சென்று ஆளுக்கொரு காலை பிடித்து மோடியினை ஒரு வழி செய்துவிடமாட்டார்களா?

குனிந்து காலடியில் கிடந்தால் அவர்கள் சமஸ்கிருதத்தில் கூட பேசசொல்வார்கள், நீங்கள் பேசித்தான் ஆகவேண்டும்.

விரைவில் முதுகில் மிதித்து இந்தியில் பேசசொல்வார்கள், அப்பொழுது இன்னும் அழவேண்டும் மிஸ்டர் பிரதர்துரை.


Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s