சீன எல்லை விவகாரம்

சீNo automatic alt text available.ன எல்லை விவகாரம் விஸ்வரூபமாகின்றது, சாலை அமைப்பது இந்திய‌ பூடானையொட்டிய பகுதி. ஆனால் அது அமைந்துவிட்டால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகபெரும் ஆபத்து என இந்தியா பூடான் மூலம் நெருக்கடி கொடுக்கின்றது

அந்த இடம் கொஞ்சம் சிக்கலானது, கோழி கழுத்து என்பார்கள். வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவோடு இணைக்கும் சிக்கிம் பகுதி அது. யுத்தம் தொடங்கி சீனா அந்த பகுதியில் இறங்கிவிட்டால் வடகிழக்கு மாநிலங்கள் துண்டிக்கபடும்.

இந்தியா பூடான் மூலமாக நெருக்கடி கொடுக்க, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு நாங்கள் ஆதரளித்து காஷ்மீரில் நுழையட்டுமா என பகிரங்கமாக மிரட்டுகின்றது சீனா.

பதிலுக்கு தலாய்லாமாவினை இந்தியா பேசவைக்க, சீனாவிற்கு கோபம் பொங்குகின்றது. அவர்கள் காஷ்மீரை இழுத்தால் நாம் திபெத்தினை இழுக்கமாட்டோமா?

நிச்சயமாக இரு நாட்டிற்கும் போர் தொடங்கும் எண்ணமில்லை, யார் முதலில் விலகுவது என்ற ஒரு பிரஸ்டீஜ் பிரச்சினையில் இருவருமே மல்லுக்கு நிற்கின்றார்கள்

கார்கில் போல சிறியபோர் ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை என்ற அளவில் பிரச்சினை போய்கொண்டிருக்கின்றது.

யுத்தம் வெடிக்க கூடாது என்பதுதான் எல்லோரின் பிரார்த்தனையும், அதனையும் மீறி வெடித்தால் 1962ல் பட்ட அடியினை திருப்பி கொடுக்க இத்தேசம் தயாராகட்டும்.

அந்த போர் நமக்கு ராணுவ ரீதியாக தோல்விதான், ஆனால் அந்த காலகட்டத்தில் இத்தேசம் காட்டிய ஒற்றுமையும், அள்ளிகொடுத்த வரலாறும் மெய்சிலிர்க்க வைப்பவை

நடிகை சாவித்திரி எல்லாம் அவ்வளவு நகைகளை அள்ளி கொடுத்திருக்கின்றார், அவர் என்றல்ல தேசம் முழுக்கவே பெரும் எழுச்சி இருந்திருக்கின்றது.

அந்த எழுச்சி ஒருநாளும் அணையாது என்பதை வங்கப்போர், கார்கில் போரில் இத்தேசம் கண்டது.

துரதிருஷ்டவசமாக சில புல்லுருவிகளின் கோஷத்தில் ஈழத்தில் இந்தியா போரிடும் பொழுது அது திசைமாற்றபட்டது, ஒருவழிக்கும் வராத அடாவடி கும்பலை இந்தியா ராணுவம் அடக்க முயன்றதை கற்பழிப்பு, கொலை என திசைமாறி ஒப்பாரி வைத்தார்கள்.

இந்நாட்டு ராணுவத்தை, இந்நாட்டின் குடிமக்களான தமிழர்களில் சிலரே விமர்சித்ததும், அவர்கள் ஆயிரகணக்கில் செத்தபொழுதும் அமைதிகாத்ததும் கால கொடுமைகள்

இதில் தமிழக பத்திரிகைகள் செய்த தேசதுரோகமும் கொஞ்சமல்ல.

அந்த அந்நியநாட்டு தீவிரவாத இயக்கத்திடம் மோதிவிட்டு திரும்பி இந்நாட்டின் ராணுவத்தை வரவேற்கமாட்டேன் என ஒரு மாநில முதல்வரே (வேறு யார் கலைஞர்தான்) தவறான முன்னுதாரணத்தை கொடுத்த கொடுமையும் நடந்தது.

பின் அவர் ஏற்றுகொண்ட பழிகளே அதற்கு தண்டனை என்பது வேறு விஷயம்.

மற்றபடி இத்தேசம் என்றுமே மகா ஒற்றுமையானது, நாட்டிற்கு ஆபத்து என்றாலோ, ராணுவத்திற்கு தேவை என்றாலோ சிலிர்த்து எழும் என்பது வரலாறு காண்பித்த விஷயம்

அதனை மறுபடியும் நிரூபிக்க சீனா முயலாது என்றே நம்புவோம், மீறி வம்பிழுத்தால் இத்தேசம் எந்த சிக்கலையும் சமாளிக்க தயாராகட்டும்

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்நாட்டை காக்கும் கடமை உண்டு. அவ்வகையில் ஒவ்வொருவரும் சீருடை அணியாத ராணுவத்தார் என்பதை சீனாவிற்கு காட்டியே தீரவேண்டும்.

 
 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s