சம்பத், பொன்னார், தமிழிசை

Image may contain: 2 people, textமொழிவாரியாக மாநில பிரிக்கபட்டு பின் சில சர்ச்சைகளில் கன்னியாகுமரி, செங்கோட்டை பகுதிகளில் தமிழகத்தோடு இணைவோம் என அம்மக்கள் உயிரை கொடுத்து போராடிய காலமது

பெரும் கலவரம், எதிர்ப்பு, சட்ட சிக்கல் என 1950களில் கன்னியாகுமரி நெருப்பாய் எரிந்தது எல்லாம் கால கல்வெட்டுகள். வரலாறுகள்

மிகபெரும் அடக்குமுறையினை கேரளா எடுத்தது, துப்பாக்கி சூட்டில் 1954 இதே ஆகஸ்டு 11ல் கிட்டதட்ட 16 பேர் பலியாயினர். மொத்த இந்தியாவே அரண்டது

Image may contain: 1 personஇதற்குமேலும் பொறுப்பதில்லை என முடிவு செய்யபட்டு கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்தது.

அந்த 16 பேர் உயிரிழந்து கிடைத்த தியாகத்தின் தொடர்ச்சியாக‌ தமிழகத்தில் உருவாகியிருக்கும் தலைவர்கள் யார் தெரியுமா?

நாஞ்சில் சம்பத், பொன்னார், தமிழிசை

இதற்கா அந்த 16 பேரும் செத்தார்கள்? இதற்காகவா எண்ணற்றோர் வாழ்வினை தொலைத்தார்கள்?

இந்த கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவோடு இணைந்தே இருந்திருந்தால் இவர்கள் எல்லாம் இன்று சென்னையில் பேசிகொண்டிருக்க முடியும்? நிச்சயம் முடியாது.

கன்னியாகுமரி இங்கு இணைந்து இந்த தலைவலிகளைத்தான் உருவாக்கிற்று.

இப்பொழுது கேரளாவிடம் கேட்கலாம், மறுபடி கன்னியாகுமரியினை தருகின்றோம் ஆனால் இந்த மூன்றுபேரையும் சேர்த்து தருவோம் என சொன்னால் கேரளம் அலறி அடித்து ஓடிவிடாதா?

ஏதோ நல்ல கோவிலில் பிரசன்னம் பார்த்து கன்னியாகுமரியினை அன்றே இவர்களுக்காகவே தலைமுழுகியிருக்கின்றது அந்நாளைய கேரளா..

 
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s