குர்திஸ்தான் என்றொரு நாடு …

No automatic alt text available.குர்திஸ்தான் என்றொரு நாடு சைரஸ் மன்னன் காலத்தில் அரேபியாவில் இருந்தது, பின் ஆளாளுக்கு பிடித்து மகாணம் ஆக்கினார்கள், அப்படி ஆட்டோமன் துருக்கியரின் பிரதேசமானது

பின் பிரிட்டன் வசமானது. அன்றைய அரேபியாவில் பெட்ரோல் வளம் தெரியாததால், இந்த மாபெரும் பிரிட்டன் பேரிச்சம்பழம் பொறுக்காது என சொல்லி பல நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு கிளம்பிற்று.

பின் குர்திஸ்தான் 2 நாடுகளால் அமுக்கபட்டது இன்று அது சிரியா, ஈராக், துருக்கி என 2 நாடுகளில் பிராதனமாக பிரிந்து கிடக்கின்றது.

இந்த நாடுகளில் எல்லாம் அவர்கள் சிறுபான்மை என்பதால் கண்டுகொள்ள யாருமில்லை, பல போராட்டம் நடந்தாலும் உலகம் கண்டுகொள்ளவில்லை

ஈரான், ஈராக், துருக்கி, சிரியா என குர்துகள் வாழும் நாட்டில் அடக்கி ஒடுக்கபட்டனர், கல்வி முதல் சகலமும் சிக்கல்.

உண்மையில் அரேபியாவில் பாலஸ்தீனரை போலவே குர்துகள் நிலையும் மகா மோசம். ஆனால் யூதன் இஸ்லாமியரை அடித்தால்தான் அநீதி, இஸ்லாமியன் இஸ்லாமியனை அடித்தால் சிக்கல் இல்லை எனும் ரீதியில் அரேபிய அரசியல் இருந்தது.

சதாம் உசேன் மீதும் அவரோடு தூக்கில் இடபட்ட கெமிக்கல் அலி மீதும் குர்துகளை மோசமாக கொன்ற சில சர்ச்சை உண்டு.

இந்நிலையில்தான் ஐ.எஸ் இயக்கம் வெறிபிடித்து ஈராக்கையும், சிரியாவினையும் அலறவிட்டது. அந்த அரசுகளால் ஐஎஸ் இயக்கத்தை சமாளிக்க முடியவில்லை

அதனால் வல்லரசுகள் திட்டம் தீட்டி கொடுத்தன, சம்பளத்திற்கு சுடும் ராணுவத்தை விட, உரிமைக்கு சுடும் மக்களின் போரட்டம் வித்தியாசமாக இருக்க்கும், குர்துகளுக்கு ஆயுதம் கொடுத்தால் நிச்சயம் பலனளிக்கும்

அது அருமையான திட்டம், ஆயுதம் கிடைத்த உற்சாகத்தில் ஐஎஸ் இயக்கத்தை விரட்டியது குர்து மக்கள்தான். ஆண்கள் பெண்களுமாக அசத்தினார்கள். நாங்களே எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும் என்று இருந்தோம், இனி ஐஎஸ் வந்தால் என்ன ஆண்டவன் வந்தால் என்ன? என அவர்கள் அடித்த அடியில் உலகமே குர்துகளை வியப்பாக பார்த்தது.

இப்பொழுது ஐஎஸ் அடங்கிவிட்டது, ஆனால் குர்துகள் அடங்கவில்லை. பல நாட்டு உதவிகள் கிடைத்துவிட்டதால் இனி குர்திஸ்தான் சாத்தியம் என சொல்ல தொடங்கியாயிற்று, இப்பொழுது சுயாட்சிக்கு ஈராக் பக்கம் தேர்தலாம்

பலவீனமான சிரிய , ஈராக்கிய அரசுகள் இனி குர்துகளை அடக்கமுடியாது என்பது போல நிலை செல்கின்றது. சதமினை விரட்டியதிலிருந்தே ஈராக்கை பிரிக்கவேண்டும், சிரியாவினை பிளக்கவேண்டும் என்பது வல்லரசுகளின் ஆசை

அது நெருங்கிகொண்டிருக்கின்றது.

இப்பொழுது சிக்கல் துருக்கிக்கு, ஈராக்கிலும் சிரியாவிலும் குர்துகள் பலம் பெற்று அதிகாரத்திற்கு வந்துவிட்டால் அடுத்த அடி துருக்கிக்கே

இதனால் ஈராக்கிய அரசுக்கு துருக்கி பலத்த எச்சரிக்கை செய்கின்றது, இதனை எல்லாம் அனுமதித்தால் ஈராக் அழிந்துவிடும் என எச்சரிக்கின்றது.

பாஜக முன்னால் அதிமுக நிற்பது போல அமெரிக்கா முன்னால் ஈராக் நிற்கின்றது, இல்லை அதனை விடமோசம். பின் என்ன செய்ய முடியும்?

பல நூறு ஆண்டுகளாக நாடின்றி அலையும் இனங்களில் ஒன்றான குர்து மக்கள், மிக சரியான வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் இலக்கினை நெருங்குகின்றார்கள்.

சிலர் சொல்லிகொண்டிருப்பான் ஈழ தமிழன் மட்டுமே உலகில் நாடில்லாதவன் என்றும், மற்றவன் எல்லாம் சொந்தநாட்டோடு இருப்பவன் என்றும் அவனாக சொல்வான் அதனை சிலர் இங்கு கண்ணீர் சிந்தி சொல்வார்கள்.

அப்படி அல்ல இந்த உலகில் ஏராளமான இனம் அப்படி உண்டு

சில இனங்கள் நம் இந்தியா போல பாதுகாப்பான நாட்டில் வாழ்கின்றன. மலையாளி, குஜராத்தி, மராட்டியன், தெலுங்கன் எல்லாம் தனிநாட்டிலா இருக்கின்றான்? அல்ல. இந்நாட்டில் நம்மை போல அவனும் இருக்கின்றான். சுகமாக இருக்கின்றோம்

ஆனால் அந்த இனங்களின் சிக்கல் அப்படி அல்ல, அது கொடூரவாழ்வு.

குர்திஸ்தான் பிரச்சினை தெரிந்தவுடன், சிலர் இப்படி பொங்குவார்கள், நாமும் அப்படித்தான் இந்தியா இலங்கை என இரு நாடுகளிடம் சிக்கியிருக்கின்றோம், குர்திஸ்தான் போல அகண்ட தமிழகமும் இருநாடுகளிடமிருந்தும் விடுதலைபெற வேண்டும் என்றேல்லாம் பேசுவார்கள்.

நமக்கும் குர்தியர்களுக்கும் ஏகபட்ட வித்தியாசம் உண்டு. இந்தியா போன்ற பல இனம் வாழும் நாடுகளுக்கும், சிரியா, ஈராக் போன்ற நாடுகளுக்கும் பல வித்தியாசம் உண்டு.

அதனால் குர்திஸ்தான் போல தமிழகம் என எவனாவது கிளம்பினால் அவனை அப்படியே தூக்கி ஈராக் பக்கம் கொண்டுவிட்டுவிட வெண்டும்

அங்கு படும் அடியில் இந்தியா சொர்க்கம் என சொல்லிகொண்டே ஓடிவருவான்..

 
 

உறவினை அறுத்த கோடு

Image may contain: 1 personஇந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கலாம் என லண்டனின் அறிகுறிகள் தென்பட்ட உடனே, பிரிட்டிஷ் இந்தியா பெரும் கலவரத்திற்கு தயராயிற்று.

அதாவது இதே இந்தியவா? அல்லது துண்டாடபட்ட இந்தியாவா? என சர்ச்சைகள் ஒரு புறம், இருவரும் வேண்டாம் இது எமது பூமி என ஐதரபாத் நிஜாம், காஷ்மீர் அரசர் ஒருபுறம் என குழப்பங்கள் அதிகரித்தன.

“என் பிணத்தின் மீது இந்த தேசம் பிரியட்டும்” என அடம்பிடித்த காந்தியாலும் முடியவில்லை. ஜின்னா பாகிஸ்தான் வேண்டும் என பிடிவாதம் பிடித்தாலும் அவர் மட்டும் காரணமில்லை. ஏராளமான காரணங்கள் மிக முக்கியமாக பிள்ளையை கத்தியால் கீறிவிட்டு, தாலாட்டு பாடிய வெள்ளையர்கள்.

அதுவரை ஒற்றுமையாய் வெள்ளையனே வெளியேறு என ஒற்றுமையாய் கோஷமிட்டவர்கள், லாகூரில் ஒருவனுக்கு அடிபட்டால் சென்னையில் துடித்தவர்கள். மராட்டியன் தாக்கபட்டால் அன்றைய பெஷாவரில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் எல்லாம் தங்களுக்குள் அடித்துகொள்ள தயாராயினர்.

வெந்தபுண்ணில் வேல் அல்ல, பெட்ரோல் ஊற்றி கொழுத்தினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் அந்த காரியம் நடந்தது.

அதுவரை இம்மாநிலங்கள் எல்லாம் பாகிஸ்தான் என அறிவித்து சுதந்திரம் கொடுத்தாகிற்று, ஆனால் எல்லைக்கோடு?

வெள்ளையர்கள் மூட்டை முடிச்சினை கட்டிகொண்டிருந்த காலம், வேலை செய்ய ஒரு வெள்ளையனுக்கும் விருப்பமில்லை. ஆனால் செய்யவேண்டிய பணி மிகபெரிது, ஒரு வழக்கறிஞரை அழைத்துவந்தார்கள், அவர் பெயர் ராட்கிளிஃப், எல்லை பிரிக்கும் பணி அவரிடம் ஒப்படைக்கபட்டது.

“சம்சாரம் அது மின்சாரம்” விசு போலவோ அல்லது “இந்தகோட்டை தாண்டி…..” என வடிவேலு போலவோ செய்துவிடும் விஷயம் அல்ல, பெரும் பணி மக்களை எல்லாம் கலந்து மிக கவனமாக செய்திருக்கவேண்டிய பணி. பழைய பிர்ட்டிசாராக இருந்திருந்தால் இந்திய நிலங்களை அளந்து சுத்தமாக சாதித்தது போல செய்திருப்பார்கள்.

ஆனால் இப்பொழுது வெறுப்பின் உச்சத்தில் இருந்தார்கள், ஏதோ கடமைக்கு பணியாற்றினார்கள், அப்படித்தான் மனதளவில் இருந்தார்கள். அதனால்தான் சம்பந்தமே இல்லாதவரை காட்சிக்குள் கொண்டுவந்தார்கள்.

ராட்கிளிப் அதுவரை இந்தியாவினை கண்டதே இல்லை, இங்கு வந்தும் அவர் களமிறங்கி பார்க்கவில்லை,

வரைபடம் கண்டார், அட்சகோடு தீர்க்க கோடு கணக்கிட்டார், கோடு வரைய கிளம்பிவிட்டார். நிச்சயமாக அது அசுபநாளாகத்தான் இருந்திருக்கவேண்டும். கரிநாள் அல்லது வெறி நாள்.

ராட்கிளிப் என்னமோ மைகொண்டுதான் மேப்பில் பிரித்தார், ஆனால் இந்தியா ரத்தத்தால் பிரிந்தது.

குஜராத்திலிருந்து வரைந்தார், அப்படியே வடக்கு நோக்கி சென்றார், உச்சமாக பாதிக்கபட்டது பஞ்சாப் எல்லை. அதாவது ஒரே கிராமம் குறுக்காக கோடு செல்லும் அது பாகிஸ்தானுக்கு இது இந்தியாவிற்கு.

கடமையின் உச்சகட்டமாக ஒரு வீட்டின் உள்ளே கூட கோடு சென்றது, முன்வாசல் இந்தியா பின் வாசல் பாகிஸ்தான். பெரும் குழப்பான கோடு அது, வரைந்து அறிவித்ததுதான் தாமதம், தொடங்கி விட்டார்கள்.

அது உன்நாடு நீ அங்கு ஓடு என இரு நாட்டிலும் சிறுபான்மையினர் விரட்டபட்டார்கள். அரசு இல்லை,காவல் இல்லை, சட்டம் இல்லை, பிடித்தால் அடைக்க சிறையோ அல்லது தீர்ப்பிட நீதிமன்றமோ ஒன்றுமில்லை.

எல்லைகளில் ரத்த ஆறு ஓடிற்று, திப்பு சுல்தானை அடக்க வெள்ளையர் போட்ட பிரிவினையின் உச்சம், இரு மாதங்கள் நீடித்தது. ஏராளமான உயிர்ப்பலி, எண்ணற்ற அகதிகள், இன்றும் உண்மை கணக்கு தெரியாது.

சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த பேரலவங்களில் அது மகா முக்கியமானது.
அப்படியான அந்த கோடு பஞ்சாபின் வாகா கிராமம் வழியாக சென்றது, இன்றும் செல்கிறது

அந்த பக்கம் பாகிஸ்தான் இந்தபக்கம் இந்தியா, அந்த பக்கம் பெரியப்பா இந்த பக்கம் சித்தப்பா, அந்த பக்கம் மாமியார் வீடு, இந்த பக்கம் மருமகள் வீடு, சண்டை போட வேண்டுமென்றாலும் விசா வேண்டும்.

இன்றும் தினந்தோறும் அந்த எல்லை திறக்கும், காலை முதல் மாலை வரை உறவுகள் கொஞ்சும், பின் திரும்பிவிட வேண்டும், அங்கு செல்லவிரும்பினால் ஏகபட்ட விசா கெடுபிடிகள்,பாதுகாப்பு இன்னும் ஏராளம். சொல்லணா துயரில் வாடி நிற்கும் சொந்தங்கள் ஏராளம்.

இன்றும் பஞ்சாபிய எல்லைகள் அந்த கோட்டினால் உறவினை பிரிந்து நிற்கின்றன, இந்தியாவினை பற்றி அறியாத ஒரு வெளிநாட்டவனை கோடுபோட சொன்னால் அவர் எப்படி கொஞ்சமேனும் சிந்திக்காமல் செயல்படுவார் என்பதற்கு இது இன்றளவும் பெரும் உதாரணம்.

அப்படியே வங்கம் பக்கமும் சென்று இதனைபோலவே கோடு கிழித்து, பெரும் கலவரங்களை உண்டாக்கிவிட்டு விட்டு, அவர் சென்றுவிட்டார், கலவரத்தை அடக்க காந்தி நவகாளி யாத்திரை தொடங்கியது யாவரும் அறிந்தது.

பின்னாளில் பாதிக்கபட்ட பகுதிகளை காந்தி கண்டதும், பிரிவினை தொகையை கொடுக்க சொன்னதும், அதற்காக அவர் கொல்லபட்டதும் யாவரும் அறிந்தது.

அந்த பெரும் கலவரங்களை உருவாக்கி, தீரா பகையினை உருவாக்கி, கிட்டதட்ட காந்தி கொலைக்கே முதல் காரணமான அந்த கோடு, லட்சனக்கான பஞ்சாப்,வங்க,குஜராத் மக்களின் உறவுகளை அறுத்த அந்த கோடு உருவாக்கபட்ட ஆகஸ்ட் 17

சுதந்திரம் கொடுத்த மொத்த வன்மத்தையும், தன் கிரீடம் சர்வதேசத்தில் கவிழ்ந்த மொத்த அவமானத்தையும் இப்படி பழிதீர்த்துவிட்டுதான் கிளம்பினான் வெள்ளையன்.

அது இன்னும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது

பெரும் சர்ச்சைகளுக்கு காரணமான அந்த கோட்டின் பின்னால் நின்றுகொண்டுதான் பாகிஸ்தான் இன்னமும் சுட்டுகொண்டு இருக்கின்றது. அந்த ரத்தகோட்டின் பெயர் அந்த வழக்கறிஞரின் பெயரில் “ராக்கிளிப் கோடு” என்றுதான் இன்றுவரை அழைக்கபடுகின்றது.

ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினம் என மகிழ்ந்தாலும், ஆகஸ்ட் 17 இந்த ரத்தவெறி தினம் என்பதனை மறுக்கமுடியாது.
அதாவது இந்ததேசத்திற்கு மதவெறி எவ்வளவு ஆபத்தானது என்பதனை ஆழபதியவைத்த நாள் இது.

இந்த தேசத்தில் வளர்க்கவேண்டியது சகிப்புதன்மையும், மத‌ஒற்றுமையும், தேசாபிமானமும் என்பதனை ஆழ பதிய சொன்ன தினம் இது.

அந்த கோடுதான் இன்றுபோல் என்றுமே இந்த நாட்டின் கடைசி பிரிவினை கோடாக இருக்கவேண்டும் என்பதில்தான் தேசம் ஆறுதல் கொள்கின்றது, அதில்தான் நம்பிக்கையும் பிறக்கின்றது.

இன்னும் சற்றுநேரத்தில் பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடும் , ஆனால் சுதந்திரம் பெற்று தீவிரவாதத்தினை வளர்த்ததை தவிர என்ன சாதித்தார்கள்?

இந்த பாகிஸ்தான் சுதந்திரமும் அதனை தொடர்ந்த அந்த ரத்த கோடும் ஒருநாளும் மறக்க முடியாதவை

 
 

பிக் பாஸ் .. புதிய வரவுகள் ….

Image may contain: 2 people, people sittingசுஜா என்றொரு நடிகையினை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பிவிட்டாயிற்று.

உடனே அவர் “அயிட்டம் டான்சர்” என முகம் சுழிப்பது யாரென்றால் காயூ ஆண்டி& கோ

பிரபுதேவா மீது காயூ ஆண்டி கால் போட்டு ஆடியதெல்லாம் என்ன யோகா நிகழ்ச்சியா?

பிந்துமாதவி ஆடாத ஆட்டமா? ஓடாத ஓட்டமா?

Image may contain: one or more people and outdoorசரி நமீதா என்றொருவர் முன்பு காயூ ஆண்டியிடம் கொஞ்சி கொண்டிருந்தாரே? அவர் என்ன ஸிரிவித்யா போல தளைய தளைய பட்டுபுடவையில் மட்டும் வந்தவரா?

நமீதா போன்றதொரு “டவுசர்” ஆட்டகாரியினை எங்காவது உலகில் காண முடியுமா?

இதில் இந்த சுஜா மட்டும்தான் ஐட்டம் டான்சராம்

அட பதர்களா? ” நீங்கள்எ ல்லாம் ஒரே இனம்” என்பது யாருக்கு தெரியாது???

அட அவ்வளவு ஏன்? அந்த கமலஹாசனே கோவணமும் சில நேரங்களில் அதுவும் இல்லாமல் கேமரா முன் நின்ற “ஐயிட்டம் பாய்” அல்லவா?

அது கூட மறந்துவிட்டதா?

 
 

அக்கட.. இக்கட.. எக்கட…

தெலுங்கில் திரைப்படமாகிறது பிரபாகரன் தலைமையிலான ஈழப்போர்

அங்கிள் சைமன், உங்களுக்கு ஒரு வேலை கிடைத்துவிட்டது ..

என்ன தைரியமிருந்தால் தமிழரை தமிழ்நாட்டில் ஒடுக்கிய தெலுங்கன், இலங்கையில் சிங்களனோடு சேர்ந்த தெலுங்கன் உங்கள் அண்ணன் கதையினை படமாக எடுப்பான்?

திருப்பதிக்கு சிங்கள அதிபரை வரவேற்கும் தெலுங்கனுக்கு இந்த தைரியத்தை கொடுத்தது யார்?

ம்ம். உங்கள் வீர தமிழ் எளிய பிள்ளைகளை கூட்டிகொண்டு கிளம்புங்கள்


தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதில் சிக்கல் இல்லையென்றால் கன்னடம் அணைகட்டலாம் : உச்ச நீதிமன்றம் யோசனை

சிக்கலே தண்ணீர் கொடுக்கவில்லை என்பதில்தான், இதில் எத்தனை அணையும் கட்டிகொள்ளுங்கள் என்றால் எப்படி?

கூடுதல் அணைகட்டினால் கன்னடம் நீரை தேக்குமா அல்லது கொடுக்குமா?

இதே நீதிமன்றத்தில்தான் பலமுறை தமிழகம் நீருக்காக வழக்காடியிருக்கின்றது, இன்னும் சிக்கல் தீரவில்லை

அதனை எல்லாம் மறந்துவிட்டு இப்படி யோசனை சொன்னால் அது நீதிமன்றம் அல்ல மாறாக உச்ச அநீதி மன்றம்.

எடப்பாடி அரசு இதில் என்ன செய்யபோகின்றது என பார்த்தால், அது “யார் காலில் யார் விழுந்தார்கள்?” எனும் பட்டிமன்றம் நடத்திகொண்டிருக்கின்றது.


ஆக. 20 ரஜினி அரசியல் வருகைக்கு அடித்தளம்,ஆட்சி கவிழ்வதற்கான தொடங்கம்: தமிழருவி மணியன்

ஏம்பா அமைச்சர்களா? இந்த கமலஹாசனை பார்த்தால் பொங்குகின்றீர்கள்? இவரை கண்டுகொள்ளமாட்டீர்களா?

ரஜினி மகா அமைதி, மணியன் சீறுவதை கண்டால் இவர் அந்த லதா ரஜினிகாந்தின் கைகூலியோ எனும் சந்தேகம் வலுக்கின்றது.

அந்த அம்மணி வாடகைபாக்கியில் சிக்கியிருக்கும் பொழுது ரஜினி ஆகஸ்டு 20ல் அரசியலுக்கு வருகின்றார் என இவர் கத்தினால் வேறு அர்த்தம் என்ன?


குஷ்பூ ரசிகர் மன்றத்தின் தூணும், சங்க‌ பொதுசெயலளராகவும் இருந்த Sadhu Sadhath என்பவரை காணவில்லை

Babu Rao , Chandran Kannan மீது சந்தேகம் வலுக்கின்றது, அவர்கள் இவரை கடத்திகொண்டு போய் நயந்தாரா சங்கத்தில் சேர்த்திருக்கலாம்

அல்லது “வேலைக்காரன்” படம் முதல் ஷோ டிக்கெட் என ஆசைகாட்டி கடத்தியிருக்கலாம்.

அன்னாரை விடுவிக்காவிட்டால் நாடு தாங்காது என அந்த எல்.கே,ஜி பாய்ஸை எச்சரிக்கின்றோம்


 

%d bloggers like this: