போயஸ் வீட்டை தரமாட்டேன் : தீபா மற்றும் சில

போயஸ் வீட்டை தரமாட்டேன் : தீபா.

கிணற்று நீரை கூட சொந்த ஊர் மக்களுக்கு கொடுக்கமாட்டேன் : பன்னீர்.

கட்சி, ஆட்சி, ஜெயா சொத்து, கட்சி, சிறை என எல்லாம் எங்களுக்கே, : மன்னார்குடி குடும்பம்,

எது எப்படி போனாலும் பதவி எனக்கே : பழனிச்சாமி

இவர்கள்தான் பொதுவாழ்க்கைக்கும், தமிழகத்திற்கும் தங்களை அர்பணித்திருக்கும் அதிமுக தலமைகள்,

இவர்களா பலன் எதிர்பாரா அரசியல் சேவை செய்வார்கள்? இவர்களிடம் சிக்கினால் தமிழகம் என்ன ஆகும்?

எதனையாவது விட்டு வைப்பார்களா?

ஆனாலும் இவர்களை விட்டுவிட்டு தன் சொந்த வீட்டையும் தனக்கு பின் தமிழகத்திற்காக எழுதிவைத்திருக்கும் கலைஞரைத்தான் அங்கிருந்து திட்டுவார்கள், அதற்கும் ஆமாம் என சொல்ல ஒரு கூட்டம்.


தமிழகத்தின் உரிமைகளுக்காக ஜெயலலிதாவை போல் எந்த முதல்-அமைச்சரும் போராடியதில்லை: வைகோ

என்னாச்சி…தேர்தல்ல தோற்றுட்டேன், விஜயகாந்த ஒழிச்சிட்டேன்..அப்புறம்..எங்கெல்லாமோ செருப்படி பட்டேன்…. ஓஓஓ தலையில அடிபட்டுட்டா..அங்கதான் மிடில் ஆப்ளிகேட்டா இருக்கு……இங்க அடிபட்டா ஷார்ட் டேம் மெம்மரிலாஸ் வரும்..

என்னாச்சி….


கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அதிக நன்கொடை பெறும் பாஜக : குற்றசாட்டும் செய்திகள்

இது என்ன அபத்தமான குற்றசாட்டு?

வேலைக்காரன் கூலிக்கு உரிமையுடவன் என்பது சொல்லியா தெரியவேண்டும்?


இலங்கை கடற்படை தளபதியாக ட்ரெவிஸ் சின்னையா எனும் தமிழர் நியமிக்கபட்டுள்ளார் : இலங்கை செய்தி

மு.க ஸ்டாலின் முதலமைச்சராகும் வாய்ப்பு உள்ளது : அங்கிள் சைமன்

இந்த இரு செய்திகளுக்கும் சம்பந்தமில்லை என நீங்கள் நினைத்துகொண்டால் நீங்கள் சீமானுக்கு கைதட்ட சரியான நபர் என அர்த்தம்…


கோவை ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைவராக தகுதி இல்லாதவர் நியமிக்கபட்டிருக்கின்றார். சட்டமன்ற உறுப்பினரின் மகள் என்பதை தவிர அவருக்கு என்ன தகுதி இருக்கின்றது? : லப்பெல்

மிஸ்டர் லவ்பெல், பாமகவின் அடுத்த தலைவராக வருவதற்கு ராமதாஸின் மகன் என்பதை தவிர உங்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என யாராவது கேட்டால் என்ன சொல்வீர்கள்?


 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s