வெல்ல பிறந்தவன் : முடிவுரை

அலெக்ஸாண்டரை பற்றி சொல்லும்பொழுது பல விஷயம் முரண்படுகின்றது என்கின்றார்கள சிலர், அவர்களுக்கு சில விஷயங்களை சொல்லவேண்டும்.

இந்திய வரலாற்றை நமக்கு கொடுத்தது யார் என நினைக்கின்றீர்கள்? வெள்ளையர்கள்

அவர்கள் தொகுத்ததுதான் வரலாறு, பல இடங்களில் தங்களுக்கு சாதகாகமாக வளைத்தார்கள்.

இன்று நாம்படிக்கும் வரலாறு பல மர்ம பக்கங்களை உள்ளடக்கியது, நிறைய விஷயங்களை மறைத்திருப்பார்கள் ஐரோப்பியர்கள்.

அவர்களின் பெருமை அப்படி. ஐரோப்பியர்தான் பெரியவர்கள் என்பது அவர்கள் நினைப்பு, வரலாற்றில் அலெக்ஸாண்டர், சீசர், நெப்போலியன் என்றுதான் வகைபடுத்துவார்கள்

இவர்களை விட பெரும் வீரனான செங்கிஸ்கான் பற்றி எல்லாம் பேசமாட்டார்கள், ஆட்டோமன் துருக்கியரை பற்றி மூச்சே இருக்காது

அப்படிபட்டவர்கள் தொகுத்த இந்திய வரலாறு எப்படி இருக்கும்? புருஷோத்தமனை அலெக்ஸாண்டர் வென்று மறுபடி நாட்டை அவனிடம் கொடுத்தான் என்றுதான் இருக்கும்

அலெக்ஸாண்டர் அப்படிபட்டவன் எல்லாம் அல்ல, அடிபணிய மறுத்தால் தலையினை எடுப்பதே அவன் முடிவு

அலெக்ஸாண்டர் காலத்திலே சந்திரகுப்தனுக்கும் அலெக்ஸாண்டருக்கும் உரசல் இருந்திருக்கின்றது, திரும்பி சென்ற அலெக்ஸாண்டர் இரு வருடங்களில் மரணமடைகின்றான், அதன்பின் அலெக்ஸாண்டரின் நண்பனான செலுகஸ் ஆப்கன் பகுதிக்கு மன்னராகின்றான்

அவன் அலெஸாண்டர் விட்ட போரை தொடங்குகின்றான், சந்திர‌ குப்தர் அவனை விரட்டுகின்றார், அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி செலுகஸின் தூதர் மெகஸ்தனிஸ் இந்தியா வருகின்றார்.

அவர் எழுதியதுதான் இண்டிகா, அதில் சந்ரோகோட்டஸ் என குப்தனை குறிப்பிடுகின்றார்

அந்த நூல் முழுமையாக வெளிவந்தது என்றா நினைக்கின்றீர்கள்? சில பகுதிகளை மட்டும் வெளியிட்டார்கள்

காரணம் முழு புத்தகமும் வெளிவந்தால் அலெக்ஸாண்டரின் சில விஷயங்கள் வெளிவரும், அப்புத்தகம் மறைக்கபட்டவிதம் அப்படித்தான்.

ஒரு ஐரோப்பிய வீரன் ஆசியாவில் தோற்றான் என்று இருக்கவே கூடாது என்பது அவர்களின் குணம், வரலாற்றை மாற்றிவிட்டார்கள்

மற்றபடி வெள்ளையன் சொன்ன வரலாறை நீங்கள் நம்புகின்றீர்கள் என்றால் நம்பிக்கொள்ளுங்கள்

ஆனால் செங்கிஸ்கான், தைமூர், ஆட்டோமன் துருக்கியர் எல்லாம் ஏன் வரலாற்றில் வரவேயில்லை என்பதையும் போட்டு குழப்பினால் உங்களுக்கு பல விஷயம் கிடைக்கும்.

அட அவ்வளவு ஏன்? சிந்துவெளியினை தோண்டிய வெள்ளையனுக்கு ஆதிச்சநல்லூரை தோண்ட மனமில்லாமல் போனது ஏன்?

இன்றுவரை ஐரோப்பாவினை வென்ற ஒரே ஆசியன் செங்கிஸ்கான் தான், அவனை தவிர எந்த ஆசியனும் ஐரோப்பியரை வென்றதில்லை

மங்கோலியாவில் அவன் கல்லறை இருந்தது, பின் ரஷ்யா பலம் பெற்ற காலத்தில் அந்த இடத்தையே அழித்து, அதை சுற்றி 20 ஏக்கரை அழித்து இன்று தடம் இல்லாமல் செய்துவிட்டார்கள்

காரணம் அக்கல்லறை இருந்தால் ஐரோப்பாவில் செங்கிஸ்கான் அடித்த அடி நினைவுக்கு வரும் எனும் கோபம்.

அவர்களா வரலாற்றை உள்ளபடி எழுதுவார்கள்?

இறுதியாக ஒன்று, நமக்கு தஞ்சை கோவில் வரலாறே தெரியாது, ஒரு ஜெர்மானியன் வந்து கல்வெட்டு படித்துதான் இது ராஜராஜன் கட்டியது என்றே சொல்லிகொடுத்தான், நமது வரலாறு இப்படித்தான்

இதில் வட இந்திய வரலாறு பற்றி என்ன பெரிய அறிவு இருந்துவிட போகின்றது?

ஆனால் அலெக்ஸாண்டரின் வாழ்வினை பாருங்கள், இவ்வளவு தூரம் வந்தவன், போரசிடம் நாட்டை கொடுக்கவும், கங்கை பக்கம் வராமலும் போயிருக்க என்ன காரணம்? நிச்சயம் அச்சமன்றி வேறல்ல.

 

ஊதாரி மைந்தனின் கதை நினைவுக்கு வருகின்றது

இயேசுநாதர் சொன்ன , சொல்பேச்சு கேளாத ஊதாரி மைந்தனின் கதை நினைவுக்கு வருகின்றது.

 

Image may contain: 6 people, people smiling, people standing

பா.ஜ.க. என்னும் பெரிய மீன், அ.தி.மு.க என்ற சின்ன மீனை விழுங்கும்: சீமான்

பின் இலை எப்படி மலரும்? இலை மலராமல் ஈழம் எப்படி மலரும்? உங்கள் புரட்சிபடையுடன் சென்று, எளிய தமிழ் பிள்ளைகளின் யுத்தம் நடத்தி அந்த சின்ன மீனை மீட்க கூடாதா?

இந்த சின்ன மீனை பெரிய மீன் விழுங்கிவிட்டால், திமுக எனும் சுறா, அதாவது உங்கள் பாணியில் தமிழர் விரோத திமுக அல்லவா ஆட்சிக்கு வரும்? அதனை அனுமதிக்கின்றீரா?

உடனே சென்று அந்த பெரிய மீனை காலிசெய்து சின்ன மீனை காப்பாற்றுங்கள் சைமன்.

கச்சதீவினை மீட்க பெரும் மீணவபடை திரட்டுவதாக சொன்னீர்கள் அல்லவா? அந்த படையுடன் கடலாடுங்கள், இல்லை களமாடுங்கள்.

அல்லாவிட்டால் திமுக ஆட்சிக்கு வந்துவிடும் அய்யா..

ஓஓஓ….. திமுக ஆட்சியில்தான் இஷ்டபடி திட்டலாம், பல்டி அடித்து அரசியல் செய்யலாம் எனும் திட்டம் இருக்கின்றதோ? ஆக நீரும் அதிமுக அழிவதை அனுமதிக்கின்றீர், அப்படித்தானே அங்கிள் சைமன்?


தமிழகத்திற்கு நீட் விலக்கு இல்லை, தமிழக கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை

மேகதாதுவில் அணைகட்டுகின்றது கர்நாடகா

இலங்கை கடற்படை தமிழக மீணவர்களை பிடித்து சென்றது, இலங்கை சட்டபடி விசாரணை நடத்த இந்தியா சம்மதம்.

இப்பொழுது முதல்வரும் தமிழன், துணை முதல்வரும் தமிழன்

தமிழகத்தை தமிழன் ஆளாததால்தான் சிக்கல், தமிழன் முதலமைச்சர் ஆனால் எல்லா சிக்கலும் ஒரே நாளில் தீரும் என சொல்லிகொண்டிருந்த பாரதிராஜாவினையும் , சீமானையும் காணவில்லை.

பிய்ந்த செருப்பு ஒன்று எம் கையில் இருக்கின்றது, இருவரையும் தேடிகொண்டிருக்கின்றேன்.


 

வெல்ல பிறந்தவன் : 11

Image may contain: one or more people and outdoor

பாபிலோன் திரும்பிய அலெக்ஸாண்டருக்கு எல்லாமே முரணாக நடந்தன‌

அவனின் மிக‌ பரந்த பேரரசில் ஆங்காங்கு எழும்பிய கலவரங்கள் இப்பொழுது தீவிரமாயின, காரணம் அந்த கடைசி யுத்தம்.

ஒருவன் வெற்றிமேல் வெற்றி பெரும்வரைதான் அடங்கியிருப்பார்கள், அவன் சறுக்க ஆரம்பித்தால் அவன் நிழல் கூட அவனுக்கு அடங்காது. அலெக்ஸாண்டருக்கும் இதே சிக்கல் வந்தது.

போராஸுக்கு மட்டும் நாட்டை திரும்ப கொடுப்பாராம், எங்களுக்கு கொடுக்கமாட்டாராம் என்பன போன்ற குரல்கள் எதிரொலித்தன, பார்மீனியோவினை கொன்றபின் அலெக்ஸாண்டரின் தளபதிகள் அலெக்ஸாண்டரை நம்பவில்லை, அலெக்ஸாண்டருக்கு அவர்களுக்கும் ஏதாவதுசெய்யவேண்டும் போலிருந்தது

உடலால் பலவீனமாக இருந்தாலும் , பிழைத்து எழுவோம் என நம்பிகொண்டிருந்தான் அலெக்ஸாண்டர், தன் நம்பிக்கைகுரிய 4 தளபதிகளை அழைத்தான்

தன் தேசத்தை 4 பங்காக பிரித்தான், 4 பேரையும் 4 பகுதியினை ஆண்டுகொள்ள அனுமதித்தான். ஆள்வது என்றால் கலவரங்களை அடக்குவது என பொருள். கிட்டதட்ட மன்னர்கள் போல அவர்களுக்கு முடி சூட்டினான்.

ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் தந்திரக்காரன் அலெக்ஸாண்டர், தளபதிகளை மன்னராக்கி அவர்கள் அதிருப்தியினை போக்கியாயிற்று, கலவரங்களை அடக்கியாயிற்று மொத்த பேரரசும் நிலைத்தும் ஆயிற்று.

இம்மாதிரி தந்திரம் தான் அலெக்ஸாண்டர்.

No automatic alt text available.அவன் மனம் முழுக்க இந்தியாவில் அடைந்த தோல்வியே இருந்தது, ஆப்கன் மண்டல அதிபதியாக தான் முடிசூட்டிய செலுகஸிடம் சொன்னான், “என்றாவது ஒரு நாள் கிரேக்கர்கள் இந்தியாவினை கைபற்றியே தீரவேண்டும், ஒரு முனையில் இருந்து அடித்தால் கைபற்றகூடிய தேசம் அல்ல அது, மாறாக பல முனையில் இருந்து அடிக்க வேண்டும்

நம்மிடம் தரையில் பலமான ராணுவம் உண்டே தவிர, கப்பல் படை இல்லை, நான் அதில் கவனம் செலுத்த போகின்றேன்

அப்படி செய்து கடல்மார்க்கமாக ஊடுருவி அவர்களை நாங்கள் அடிக்கும் பொழுது நீ தரைமார்க்கமாக நொறுக்கினால் இந்தியா நம் வசம்”

ஆம், கிரீசுக்கு திரும்பி பெரும் படை திரட்டி மறுபடியும் இந்தியாவினை பிடிக்கும் திட்டம் அவனுக்கு இருந்தது.

மாசிடோனியா நோக்கி பயணமாக ஆரம்பித்தான், வழியில் அலெக்ஸாண்டிரியா செல்லும் திட்டமும் இருந்தது.

எகிப்தில் அவன் உருவாக்கிய அற்புத நகரம் அது, அலெக்ஸாண்டர் உருவாக்கியதில் மகா அற்புதம் என நெப்போலியனே வாய்விட்டு பின்னாளில் சொன்னான். அதனை உருவாக்கிய அலெக்ஸாண்டர் அதன் பின் அங்கு திரும்பவில்லை, இப்பொழுது செல்கின்றான்

செல்லும் வழியில் அலெக்ஸாண்டருக்கு காய்ச்சல் அதிகமானது, எத்தனையோ இடர்களை நோய்களை சந்தித்து மீண்டவன் அவன், ஆனாலும் இம்முறை அவனுக்கு காய்ச்சல் நீங்கவில்லை

தன் முடிவு நெருங்குவதை அறிந்தான், இனி தப்ப முடியாது என அவனுக்கு தெரிந்தது. சாவு நெருங்கும் மனிதன் தன் கடைசி கட்ட விருப்பங்களை, கடமைகளை விரைவாக செய்வான் அல்லவா? அவனும் செய்தான்

மனைவி ரக்சனாவிடம் 4 வயது மகனை தன் தாய் ஒலிம்பியஸிடம் ஒப்படைக்க சொன்னான், ஒலிம்பியஸ் அவனை தன்னைபோல‌ பெரும் வீரனாக்குவாள் என மனதார நம்பினான்

தன் விசுவாசமிக்க நண்பர்கள் தன் மகன் உரிய காலம் வரும்பொழுது ஆட்சியினை அவனிடம் ஒப்படைப்பார்கள் என அவன் ரக்சனாவிடம் சொல்லிகொண்டான்

எந்த மாவீரன் ஆனாலும் , பெரும் மன்னன் ஆனாலும் விடைபெறும் காலம் உண்டு, காலம் யாருக்கும் அது அனுமதித்ததை தாண்டி ஒரு நொடி கூட கொடுக்காது, இரக்கமற்றது அது. கடவுளின் அவதாரங்களே காலத்திற்கு தப்பமுடியாதபொழுது அலெக்ஸாண்டர் எப்படி?

தன் நாடு, குடும்பம் அரசு என சிந்தித்து தன் கல்லறை பற்றியும் சிந்தித்தான். அக்காலத்தில் மன்னர்கள் புதைக்கபடும் பொழுது பெரும் வைரம், தங்கம், வைடூரியம் எல்லாம் சேர்த்து போட்டு புதைப்பார்கள்

கொஞ்ச நாள் காவல் இருக்கும், பின்பு காலம் மாறும்பொழுது யாராவது கொள்ளையிடுவார்கள், மன்னனின் எலும்பு எங்கோ எறியபடும்.

இது எகிப்து பிரமீடுகளில் நடந்தது, இன்னும் பல மன்னர் கல்லறையில் நடந்தது, இதனை சிந்தித்தான் அலெக்ஸாண்டர்

தன் உடலும் அப்படி தூக்கி எறியபட கூடாது என சிந்தித்தான், தான் செத்தால் இரு கை வெளியே நீண்டபடி பெட்டியில் இருக்கவேண்டும், அலெக்ஸாண்டர் எதுவும் கொண்டு செல்லவில்லை என உலகம் அறியவேண்டும் என சொல்லிகொண்டான்

அப்படிபட்ட துறவி எல்லாம் இல்லை அவன், மாறாக கல்லறை பற்றிய பயமே அது.

அந்த மாபெரும் அசாத்திய வீரன் பாபிலோனில் இருந்து மாசிடோனியா செல்லும் வழியில் இறந்தான்

போரசோடு யுத்தம் நடத்திய காயம், ஒரு கொசு கடித்த்தால் காய்ச்சல், மருந்தே விஷமானது, என பலவாறான செய்திகள் உண்டு.

உண்மையில் பார்மினியோ, புக்கிலேஸ் இல்லாத அலெக்ஸாண்டர் பாதி செத்தான், புருஷோத்தமன் கொடுத்த அடி அவனை கவலையில் ஆழ்த்தியது. அந்த கவலை நோயானது.

தானியேல் தீர்க்கதிரிசி கண்டபடி அந்த கிடாவின் விந்தையான கொம்பு நொறுங்கிற்று.

இம்மாதத்தில் கிரேக்கத்தை விட்டு மன்னன் வெளியேறினால் அவன் உயிரோடு திரும்பமாட்டான் எனும் கிரேக்க பூசாரிகளின் ஜோதிடம் பலித்தது.

பிரமீடையும், பாபிலோனையும் தொடுவது சாபம் . அதனை கொள்ளையிட்டவர் வாழ்வதில்லை எனும் நம்பிக்கையும் உண்மையாயிற்று.

No automatic alt text available.பெரும் அஞ்சலிக்கு பின் அலெக்ஸாண்டர் புதைக்கபட்டான், ஆனால் அவன் எங்கு புதைக்கபட்டான் என்பது இன்றுவரை தெரியாது.

அவன் கல்லறையினை இன்றுவரை உலகம் தேடுகின்றது, இன்னும் கிடைத்தபாடில்லை, ஆனால் அவன் சவபெட்டி இப்படி இருந்திருக்கலாம் எனும் வடிவம் துருக்கி மியூசியத்தில் உண்டு

அலெக்ஸாண்டர் வரலாற்றில் நிகழ்த்திய மாற்றம் பெரிது, அவன் நிர்வாகம் அசத்தலாய் இருந்திருக்கின்றது, அது இன்றைய மேலாண்மை படிப்பிற்கே அஸ்திவாரம்

ராணுவமும் அதன் வியூகமும் எப்படி இருக்கவேண்டும் என உலகிற்கு முதலில் சொன்னது அவனே

ஆசியாவில் கிரேக்க சாம்ராஜ்யத்தை அவனே பரப்பிவிட்டான், ஆப்கன் வரை அவன் சாம்ராஜ்யம் இருந்தது, இன்று தனி இனம் என அவர்களை, அரேபியர்களை சொல்லமுடியாது, கலிபாக்கள், செங்கிஸ்கான் ஆட்சி வரும் வரை அரேபிய பகுதியில் கிரேக்கர் ஆட்சியே இருந்தது.

அரேபியரில் கிரேக்க கலப்பு இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர் முடிவு.

கிரேக்க மொழி அவனால் உச்சம் பெற்றது, பைபிள் வரை அதனாலே கிரேக்கத்தில் எழுதபெற்றது. புதிய கட்டட கலைகள் எல்லாம் உலகில் உருவாயின.

கிரேக்கரை பின்பற்றியே ரோம சாம்ராஜ்யம் எழும்பியது. இன்று நாம் காணும் பல நடைமுறைகள் அதனாலே வந்தது.

தமிழக இலக்கியங்கள் யவணர் எனும் கிரேக்கன் பாண்டிய , சோழன் அரசவையில் இருந்ததாக சொல்லவும் அலெக்ஸாண்டரே காரணம்.

எகிப்து அரேபியாவில் கிரேக்கர் ஆட்சி வந்தபின் அவர்கள் தமிழகத்திற்கும் வந்தார்கள்.

இப்படி அவனால் பல மாறுதல்கள் உலகில் நடந்தன, அசாத்திய பிறவி அவன்.

மகா அசாத்திய திறமையும், மிக சிறந்த நிர்வாகியும், உலகின் ராணுவ திட்டங்களுக்கு பிதாமகனாகவும் , தந்திரத்தில் மிக சிறந்தவனாகவும் வாழ்ந்த மாமன்னரில் அவனுக்கு என்றுமே இடம் உண்டு

இவ்வளவு சிறப்பு வாய்ந்த அலெக்ஸாண்டரின் வாரிசு என்ன ஆனது?

துரோகங்களில் வீழ்வதே ராஜகுடும்பம். ஜெயா செத்தபின் அதிமுக என்னபாடு படுகின்றது என சொல்லி தெரியவேண்டியதில்லை, சிறிய தமிழகத்தின் முதல்வர் பதவிக்கே, அதுவும் தற்காலிக பதவிக்கே இவ்வளவு குத்து என்றால் அந்த பெரும் சாம்ராஜ்யத்திற்கு எவ்வளவு ரத்தபலி ஏற்பட்டிருக்கும்

அலெக்ஸாண்டருக்கு பின் அவன் மகன் பாலகன் என்பதால், அந்த 4 தளபதிகளும் நாட்டை பிரித்து மன்னர் ஆனார்கள். அலெக்ஸாண்டரின் மனைவியும் மகனும் ஒலிம்பியஸிடம் அடைக்கலம் ஆனார்கள்.

இனி அவன் வளர்ந்தால் ஆபத்து என்று கணித்த கூட்டம் மொத்தமாக ஒலிம்பியஸ், ரக்சனா, அலெக்ஸாண்டரின் மகன் என எல்லொரையும் ஒழித்து கட்டியது.

சிங்கம் இல்லா அரசு நரிகளின் வேட்டைகாடாகும் என்பது அங்கேயே நடந்தது. அலெக்ஸாண்டரின் வாரிசு இல்லாமல் போனது.

செலுகஸ் அலெக்ஸாண்டர் சொன்னபடி இந்தியாவில் நுழைந்து பார்த்தான் மவுரிய படை பந்தாடியது, ஆயினும் அசோகர் துறவியான பின் இந்தியா வலுவிழந்த நேரத்தில் இன்றைய பாகிஸ்தானில் கொஞ்சநாள் கிரேக்கர் ஆட்சி இருந்தது.

பின் ஓட விரட்டபட்டார்கள். ஆனாலும் ஆப்கானிலிருந்து வந்து அவர்கள் கொடுத்த தொல்லையின் வழியில்தான் பின்னர் கோரி, கஜினி, தைமூர், பாபர் என எல்லோரும் வந்தார்கள், தொடங்கி வைத்தது சாட்சாத் அலெக்ஸாண்டர்தான்

உலகை வெல்ல கிளம்பிய அலெக்ஸாண்டருக்கு இன்று 6 அடி நிலம் கூட இல்லை. அவன் என்றல்ல செங்கிஸ்கான் கல்லறை இன்றும் தெரியாது, ஹிட்லருக்கு கல்லறையே கிடையாது

உலகை மிரட்டியவர்கள் எல்லாம் இந்நிலையினைத்தான் எட்டியிருக்கின்றார்கள், இதில் யாரின் வாரிசுகளும் வாழ்வாங்கு வாழ்ந்ததுமில்லை, நின்று ஆண்டதுமில்லை

வரலாறு சொல்லும் பாடம் இதுதான். யாரும் எதுவும் நிரந்தரமாக இங்கு செய்யமுடியாது

ஆடும் வரை ஆடிவிட்டு கிளம்ப வேண்டியதுதான். அலெக்ஸாண்டரும் அப்படி ஆடினான், கிளம்பினான்.

காலம் அந்த மாவீரனை தன்னோடு அணைத்துகொண்டது.

முற்றும்

 
 

எங்கிட்டயே வந்து அழுது நடிப்பியா ரேஸ்கல்..

Image may contain: 1 person, sitting”கருணாநிதி சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள். பார்வையில் ஆயிரம் விளக்கங்கள்” – வைகோ

கலைஞர் சிரிப்பின் விளக்கம் இதுதான்

“இன்னும் இவன் சாகலையாண்ணுதான பார்க்க வந்த, உன்ன மாதிரி ஆயிரம் பேரை பார்த்தவன் இந்த கருணாநிதி.

உன் மொகரைய இங்க வந்து காட்டிட்ட, இனி விஜயகாந்த் எப்படிய்யா கூட்டணிக்கு வருவான்? . அத கெடுக்கதான வந்திருக்க நீ? ..உண்மைய சொல்லு கோவாலு..

இந்த அழுகை, டயலாக் எல்லாம் எங்கிருந்து நீ கத்துகிட்டண்ணு எனக்கு தெரியாதா?

எங்கிட்டயே வந்து அழுது நடிப்பியா ரேஸ்கல்…”


கலைஞரை இன்று  (22-08-2017) வைகோ சந்திக்கிறார்

கலைஞரால் பேசமுடியாது, அதனால் நீங்கள் கலைஞருக்கு எதிராக செய்த துரோகங்களை எல்லாம் எழுதிகொடுங்கள், கலைஞரிடம் படித்து பாட்டுகின்றோம் என எழுதி வாங்க வேண்டியது திமுகவினர் கடமை

பல இடங்களில் அது பயன்படும்.

(அப்படி என்ன பேச போகின்றார்? பழனிச்சாமியும் பன்னீருமே இணைந்தாயிற்று, என்னையும் திமுகவில் இணைத்தால் என்ன என கேட்க போகின்றாரோ?))

 


தமிழக தொல்லியல் அமைச்சராக மாபா பாண்டியராஜன் நியமணம்.

அவர் அப்படி என்ன அகழ்வாராய்ச்சி செய்வாரோ தெரியாது, வீட்டு முற்றத்தை வேண்டுமானால் தோண்டுவார் , அம்மா சமாதி எல்லாம் தோண்டுவாரா? நெவர்.

இப்பொழுது எவனாவது கீழடி என்னாயிற்று, மேலடி என்னாயிற்று என பேசுவானா என்றால் பேசமாட்டான்.

அமைச்சரும் கீழடி பற்றி கவலைபட மாட்டார், காரணம் அவருக்கு மேஜையடி சமாச்சாரங்கள் நிறைய இருக்கின்றது


டிடிவி தினகரனை சந்தித்து தங்கை திருமணத்திற்கு அழைத்தார் விஷால்

ஆக பழனிச்சாமியினையோ பன்னீரையோ விஷால் கூட மதிக்கவில்லை என்பது புரிகின்றது.

இதற்கு பழனிச்சாமி ராஜினாமா செய்துவிடுவது மானமுள்ள விஷயம்.


தலித் தனபாலை முதல்வராக்கும் திட்டத்தை விடுதலை சிறுத்தை வரவேற்கின்றது : திருமாவளவன்

ஆக தலித் ஒருவர் எங்கு தலைவன் ஆனாலும் திருமா வரவேற்பாராம், அது சசிகலா கும்பலுக்கு தலைவர் ஆனாலும் சரி, தாவூத் இப்ராஹிமுக்கு தளபதி ஆனாலும் சரி

இதன் பெயர்தால் தலித் முன்னேற்றம் என நாமெல்லாம் நம்பிகொள்ள வேண்டும்.

மிஸ்டர் திருமா? கலைஞரை விட ஒரு தலித் யார் உண்டு? பின் என்ன மண்ணாங்கட்டிக்கு கடந்த முறை விஜயகாந்த் எனும் நாயுடுவினை முதல்வராக்க உழைத்தீர்கள்?

தனபால் மட்டும்தான் தலித்தா, கலைஞர் இல்லையா?

மிஸ்டர் திருமா, தமிழிசை கூட தாழ்த்தபட்ட சாதிதான், முதல்வர் ஆக்கிவிடுவோமா? ஆதரிப்பீரா?


மிஸ்டர் தமிழருவி மணியன், என்ன செய்கின்றீர்? ஒரு பொறுப்பு வேண்டாமா?

ரஜினி நீட் தேர்விற்காக டெல்லியில் மத்திய அரசோடு வாதம் செய்துகொண்டிருக்கின்றார் என இன்னும் ஏன் நீங்கள் சொல்லவில்லை?

ரஜினி ரசிகர்கள் உங்களின் இன்றைய அறிக்கைக்காக காத்துகொண்டிருக்கின்றார்களாம்.


Image may contain: one or more people, horse and outdoor

 

ஒரு பாடலில் கருப்பு குதிரையில் குஷ்பூ கம்பீரமாக வருகின்றார்.

அலெக்ஸாண்டர் பெண்ணாக இருந்திருந்தால், இந்த காட்சி அப்படியே உண்மையாகும், அப்படி ஒரு கம்பீரம், அலெக்ஸாண்டரை அப்படியே கண்முன் நிறுத்துகின்றார் குஷ்பூ

“லேடி அலெக்ஸாண்டர்” குஷ்பூ என்றால் அது மிகையல்ல.


 

அடிமைகள் ஒழிப்பு தினம்

No automatic alt text available.மானிட குலம் எவ்வளவோ கொடும் காலங்களை, நினைத்தாலே குலை நடுங்கும் விஷயங்களை கடந்துதான் வந்திருக்கின்றது, அதிலொன்று அடிமை முறை.

சக மனிதனை அடக்கி நீ என் அடிமை என வைத்துகொள்வதும், அவனுக்கு பிறக்கும் சந்ததிகளையே தனக்கு அடிமை என வைத்துகொள்வதும் அந்நாளைய கொடும் வழக்கம். ஆச்சரியமாக அந்நாளைய மதங்களும் அதனை அங்கீகரித்திருக்கின்றன‌

அப்படி அடிமை மனிதன் என்பவன் ஆடுமாடுகளில் ஒன்று, கூடுதல் உரிமையாக வாய் மட்டும் பேசிகொள்ளலாம், அவனுக்கு குடும்பம் இருக்கலாம், ஆனால் எப்பொழுது வேண்டுமானாலும் எஜமான் அவன் குழந்தையினை, அவனை, மனைவியினை யாருக்கும் விற்கலாம் அல்லது கொல்லலாம்.

யாரும் கேட்கமாட்டார்கள் அடிமைகள் உழைக்கவும் சாகவும் பிறந்தவர்கள், பஞ்சாயத்தில் கூட பிராது கொடுக்க முடியாது

வேலை செய்யவேண்டும் , முதலாளி விற்றால் அடுத்த எஜமான். அடித்தால் பட்டுகொள்ளவேண்டும், சூடு போட்டால் பொறுத்துகொள்ளவேண்டும், உழைத்தால் உண்ணலாம், இல்லாவிட்டால் சாகலாம்

Image may contain: one or more people and outdoorஇந்த இரண்டினை தவிர அவர்களுக்கு வேறு வாய்ப்பு அக்காலத்தில் இல்லை, அவர்களுக்கு கடவுளோ மதமோ இல்லை.

அடிமைகளுக்கு போட்டிருக்கும் உடை தவிர ஏதும் சொந்தமில்லை, சில அடிமைகளுக்கு அதுவுமில்லை

அவனுக்கு வீடு வாசல் சொந்தமாக ஒரு குண்டூசி கூட கிடையாது, அவர்களுக்கென காதில் அல்லது முதுகில் ஒரு அடையாளம் இடுவார்களாம், பார்த்தவுடன் கண்டுகொள்ள‌

அதவாது கடனுக்கு வாங்கிய மாடுபோல ஒரு முத்திரை, எவ்வளவு கொடூரம்

இதில் பெண் அடிமைகளின் நிலை மகா மோசம், இயற்கையான இரட்டை ஆபத்து அவர்களுக்கு.

பைபிளின் ஆபிரகாம் முதல் அமெரிக்க ஆபிரகாம் லிங்கன் காலம் வரை அது உச்சத்தில் இருந்திருக்கின்றது, மன்னர்களின் சரித்திரம் எல்லாம் அதனைத்தான் சொல்கின்றது

வென்ற மன்னனுக்கு தோற்ற மன்னன் அடிமை, மன்னன் மட்டுமல்ல மக்களும் அடிமை. அலெக்ஸாண்டர், செங்கிஸ்கான் என வரலாறு அதனைத்தான் சொல்கிறது. அவ்வளவு ஏன் நமது கரிகால சோழன் அடிமைகளை கொண்டுதான் அணை கட்டினான், ஈழ அடிமைகளை கொண்டுதான் ராஜராஜ சோழன் பெரியகோவில் கட்டினான்

எகிப்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை கொண்டே பெரும் பிரமீடுகள் கட்டபட்டன, என்பதெல்லாம் அடிமைகளின் வரலாற்றினை சொல்கிறதது, இந்தியாவில் அடிமைகள் விசுவாசமான தளபதிகளாகவும் இருந்தார்கள், மாலிக்காபூர் அப்படிபட்டவனே, பாகுபலி கட்டப்பா அவன் சாயலே

இதில் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லபட்ட கருப்பினத்தவர்கள் பட்டபாடு கொஞ்சமல்ல, ஆப்ரிக்காவிற்கு வரும் வெள்ளையர் துப்பாக்கி முனையில் அவர்களை பிடிப்பர், விலங்கிடுவர் அவர்களை கப்பலேற்றி அமெரிக்கா கொண்டுசெல்வர், ஏலமிடுவர்

திடகாத்திரமான அடிமைகள் நல்ல விலைக்கு விற்கபடுவார்கள்

அவன் மனதால் எவ்வளவு பாதிக்கபடுவான், சட்டென உறவுகளை பிரிந்து குடும்பத்தை பிரிந்து அவன் மனம் என்ன பாடு படும்? அடிமை அவ்வளவுதான். கடவுளே அங்கீகரித்தபின் என்ன செய்ய?

வாங்கபடும் அடிமைகள் பண்ணைகளில் கொண்டு அடைக்கபடுவர், அவன் சக அடிமையுடன் உழைக்கவேண்டும், சில பெண் அடிமைகளை விடுவார்கள், அவள் சந்ததி பெருக்கிகொண்டே உழைக்கவேண்டும், அப்படி அடிமைகள் பெருகிவிட்டால் இன்னொரு பண்ணைக்கு விற்றுவிடுவார்கள்

நினைத்துபார்த்தாலே மனம் கதறுகின்றது, மானிட குலத்தின் இயல்புகளான குடும்பம், பந்தம், பாசம், நட்பு, மண்வாசனை, எல்லாம் அவர்களுக்கும் இருந்திருக்கும் அல்லவா? எப்படி தாங்கிகொண்டார்கள்? எப்படிபட்ட மகா துயரம் இது

எத்தனை தலைமுறைகளாக இதனை தாங்கி வந்தார்கள்? எவ்வளவு சபிக்கபட்ட வாழ்க்கை அவர்களுடையது.

இன்றைய அமெரிக்கா கனடா பிரேசில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் வளர்சிக்கு ஒரு பேச்சு கூட பேசாமல் மாடுகளை விட கேவலமாக அந்த அடிமைகள் உழைத்த உழைப்பில் எழும்பி நிற்பவைதான் அந்த தேசங்கள்

இன்றளவும் அவை உழைப்பில் உயர்ந்துநிற்க சொல்லிகொடுத்தது அந்த அடிமை இனமே

அந்த கொடுமைக்கு முதலில் சாவு மணி அடித்தவன் மானிட வரலாற்றின் பெரும் மானிட நேயரான ஆபிராகம் லிங்கனே எனினும் முதல் அடிமைகள் கிளர்ச்சி ரோமை வரலாற்றில் தொடங்கிற்று, அடிமைகள் “எல்லாம் நான் அடிமை இல்லை” என தோற்ற புரட்சி அது.

அதன் பின் 1791 ஆகஸ்டு 23ல் இன்றைய ஹைத்தி நாட்டில் அது கிளர்ச்சியாக வெடித்தது, வியாபார முறை அடிமைதனத்திற்கு நவீன காலத்தில் எழும்பிய முதல் குரல் அது என்பதால் அந்நாளௌயினையே வியாபார அடிமை ஒழிப்பு நாளாக அனுசரிக்கின்றார்கள்

அதன் பின் ஆபிராக்ம் லிங்கன் காலத்தில் விடிந்தது என்றாலும், முன்னறிவித்த சேவல்கள் கூவிய தினம் இது.

ஆபிரகாம் லிங்கன் இந்த அடிமை ஒழிப்பில் மகா உன்னமதமான மனிதன், இதற்கான சட்டமியற்றிய பாவத்திற்குதான் அவர் உயிரினையே பறித்தார்கள்.

அப்படி விடிந்தபின்புதான் அடிமைகளுக்கான பல உரிமைகள் ஒவ்வொன்றாக கிடைத்தன, முதலில் அவர்களை மனிதர்கள் என்ற வரையறைக்கு கொண்டுவந்தார்கள்

பின் 10 மணிநேர வேலை என பளு குறைக்கபட்டது, பின் திருமணஅனுமதி, சமூக அனுமதி என அவர்கள் போராடினார்கள், பின் வாக்குரிமைக்கு பெரும் போரே நடத்தினார்கள், அதன் பின் குடிமக்களாக அங்கீகரிக்கபட்டார்கள்

இந்த பரிதாபத்திற்குரிய அடிமை இனத்தின் வாரிசுதான் முன்னாள் அமெரிக்க அதிபர் ஓபாமா

அந்த அடிமைகளின் வாரிசுகள்தான் இன்று ஒலிம்பிக்கினை கலக்கி முதலிடத்தில் நிற்கின்றார்கள்

காலம் எவ்வளவு மாறுகின்றது?,

காலம் மாற மாற மனிதன் மட்டுமல்ல கடவுளும் மாறிகொண்டே வந்திருக்கும் வித்தியாசமான உலகமிது.

பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் வழிபடும் ஏக கடவுள் ஒருவர்தான் ஆனால் அடிமை முறையினை அங்கீகரிக்கும் பழைய ஏற்பாடும், அதனை எதிர்த்து உரிமைகுரல் எழுப்பும் புதிய ஏற்பாடும் ஒரே கிறிஸ்தவ நூலே

கடவுளின் கொள்கைகளும் காலத்திற்குட்பட்டு மாறுகின்றது, மாறட்டும்

இதனை மாற்றம் ஒன்றே மாறா தத்துவம் என சொல்லிவிட்டான் பகவான் கிருஷ்ணன்.

இன்றைய காலத்தில் எல்லாம் மாறிவிட்டன, மற்ற நாடுகள் எங்கோ சென்றுவிட்டன, அடிமைகள் அரசாளும் காலமிது, அமெரிக்காவில் ஆள்கின்றனர், லெனின் பெரும் சாம்ராஜ்யத்தினையே அமைத்து காட்டினான்

தமிழகமோ மறுபடி அதே அடிமைகள் காலம் நோக்கி செல்கின்றன‌

தமிழக சட்ட சபையினை பாருங்கள், ஒரு பக்கம் கொத்தடிமைகள், அய்யோ பாவம், வாய் திறந்தாலே பதட்டபடுகின்றார்கள்

இன்னொரு பக்கம் அடிமைகள், அவைகளுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இந்த கட்சி கொத்தடிமைகள் கட்சி என்றால் அந்த கட்சி அடிமை கட்சி அவ்வளவுதான் வித்தியாசம்.

ஆனால் கொத்தடிமைகளோ, அடிமைகளோ இருவரும் வியாபார அடிமைகள், அந்த தொழிலில் கருத்தாய் இருப்பார்கள்

இந்த அடிமைகள்தான் நாம் நம்மையே ஆள அனுப்பபட்டவர்கள் என்றால், நாம் எவ்வளவு பெரும் 5 அண்டு அடிமைகள்.

நாம் மகா விசித்திரமாக நம்மை நாமே விற்றுகொண்ட அடிமைகள்

ஆப்ரிக்க அடிமைகளுக்கு எல்லாம் விடிந்துவிட்டது,

நமக்கு என்று விடியபோகின்றதோ தெரியவில்லை. விடிவதாகவும் தெரியவில்லை,

நமது நிலை அவர்களை விட பரிதாபமாக சென்றுகொண்டிருக்கின்றது.

 

புதிய 200 ரூபாய் நோட்டு

Image may contain: one or more peopleபுதிய 200 ரூபாய் நோட்டு செப்டம்பரில் வருகின்றது மத்திய அரசு அறிவிப்பு

இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக மிக தாமதமாக வந்து பல குழப்பங்கள் ஏற்பட்டன, அதனால் இம்முறை 200 ரூபாய் நோட்டு முதலில் வந்து அடுத்து 100 ரூபாய் நோட்டு செல்லாதது ஆக்கபடலாம்

ஆயிரம் ரூபாய் நோட்டால் கருப்பு பண‌ பதுக்கல், தீவிரவாதம் என பிரச்சினைகள் இருந்தன, அதனை செல்லாதது ஆக்கியதால் அப்பிரச்சினைகள் முடிந்தன என மத்திய அரசு சொல்லிகொண்டிருக்கின்றது

இந்த 100 ரூபாய் நோட்டை ஏன் நிறுத்துகின்றார்கள்?

மாமூல் வசூலிக்கும் , கந்துவட்டி வசூலிக்கும் ரவுடிகளை முடக்குகின்றார்களோ? இருக்கலாம்

ஆனால் அது மாமூல் வாங்கும் சில போலிஸ்காரர்களையும் பாதிக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.

இனி ஜனவரி வாக்கில் பிள்ளைகளுக்கு கொடுக்கபடும் பாக்கெட் மணியினை மிச்சபடுத்த 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகளை செல்லாதது ஆக்க, அரசு இப்பொழுதே திட்டமிட்டுகொண்டிருக்கும்.