சட்டம் நிச்சயமாக ஒரு இருட்டறை

ஜெயாவிற்காக வழக்கு 18 ஆண்டுகாலம் இந்நாட்டில் இழுத்தடிக்கபட்டது , ஆனால் சசிகலாவிற்கு சில மாதங்களிலே முடிவு தெரிந்துவிடுகின்றது

முத்தலாக்கினை நிறுத்தும் நீதிமன்றங்கள், ஆகமவிதிப்படிதான் அர்ச்சகர் அமையவேண்டும் என்பதில் மட்டும் மகா உறுதியாய் உள்ளன.

பாபர் மசூதி இடித்தற்கு தண்டனை இல்லையா என்றால் அதனை விட்டுவிட்டு முஸ்லீம்களும் அனுசரனையாக செல்ல ஆலோசனையும் சொல்கின்றது உச்சநீதிமன்றம்.

காவேரி சிக்கலில் பல்லாண்டு காலம் சர்ச்சை தொடரும் நிலையிலும் கன்னடம் அணைகட்ட தடை இல்லை என்கின்றது நீதிமன்றம்

ஏன் என்றால் அப்படித்தான். காரணம் சட்டம் நிச்சயமாக இருட்டறை

அதில் இந்த நீதிபதிகள் தங்களுக்கு தேவையான இடத்தில் மட்டும் டார்ச் அடிக்கின்றார்கள்.

பாண்டியராஜன் சபதம்…

Image may contain: 1 personஉலக அளவில் தமிழ்மொழியினை முதல் 10 இடத்தில் 3 ஆண்டுக்குள் கொண்டுவருவேன் : அமைச்சர் பாண்டியராஜன்

அதாவது அன்னார் தமிழுக்கு அமைச்சராகிவிட்டாராம், தமிழுக்காக உழைக்கபோகின்றாராம்.

தமிழகத்தில் தமிழ் வழி கல்வி, ஆங்கில பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடம். கடைகளுக்கு தமிழ்பெயர், தமிழ் தெரியாதவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் போன்ற முழக்கங்கள் எல்லாம் அன்னாரிடம் இல்லை

மாறாக எப்படி முதல் 10 இடத்திற்கு கொண்டுவரபோகின்றாராம்?

அன்னாரின் கருத்துபடி சீனாவின் மாண்டரினை 111 கோடி பேர் பேசி முதலிடத்திலும் , ஆங்கிலத்தை 105 கோடி பேரும் பேசி இரண்டாம் இடத்திலும் இருக்கின்றார்களாம். தமிழ் பேசுவோர் எண்ணிக்கை 16ம் இடத்தில் இருக்கின்றதாம்

இந்த 16 இடத்தில் இருக்கும் தமிழ்பேசுவோர் எண்ணிக்கையில் நமீதா, ஓவியா தமிழும் உண்டு

இப்பொழுது அன்னார் தமிழை முதல் 10 இடத்திற்கு கொண்டுவரபோகின்றாராம்

எப்படி என தெரியவில்லை

சிங்கள படையெடுப்பு, சிங்கப்பூர் படையெடுப்பு, பாகிஸ்தான் படையெடுப்பு எல்லாம் எடுத்து அங்கெல்லாம் மொத்தமாக தமிழை பேசவைப்பது முடியாத காரியம்

அதனால் அன்னாரின் திட்டம் என்னவாக இருக்கலாம்,

தமிழக மக்கள் தொகையினை மூன்றுமடங்காக ஆக்கும் விபரீத திட்டம் இருக்கலாம், அது ஒன்றுதான் இவர் இலக்கிற்கு சாத்தியம்

இந்தி திணிக்கபடுகின்றது, அதனை எதிர்த்து கேட்காமல் மோடி காலில் விழுந்து கிடக்கும் கும்பலில் ஒருவர் தமிழை உலகெல்லாம் வாழவைக்க போகின்றாராம், நம்பிகொள்ள நாம் என்ன கவர்ணர் வித்யாசாகரா?

 

ஐ.எஸ் இயக்கத்திற்கு அணுகுண்டு கொடுக்க வடகொரியா ரெடி

Image may contain: 2 people, people smiling, people standing and textஐ.எஸ் இயக்கத்திற்கு அணுகுண்டு கொடுக்க வடகொரியா ரெடி : சர்வதேச பரபரப்பு

இப்படி ஒரு விஷயத்தை சி.ஐ.ஏ பரவவிட்டுள்ளது. இதன் மூலம் உலக நாடுகள் வடகொரியாவினை காரிதுப்பியோ அல்லது அஞ்சியோ தன் பக்கம் வரலாம் என அது திட்டமிடலாம்.

ஆனால் அதே நேரம் இதனை முழுக்க மறுக்கவும் முடியாது, அமெரிக்காவினை பழிவாங்க எந்த எல்லை வரையும் வடகொரியா செல்லும்

ஐ.எஸ் இயக்கதிடம் அணு ஆயுதம் கிடைத்தால் அதன் இலக்கு அமெரிக்கார், ஈரான் மற்றும் ரஷ்யா என்பதாகத்தான் இருக்க முடியும்.

இந்த உலகில் அமெரிக்காவினை சுத்தமாக நம்ப முடியாது, அதன் உளவாளிகளில் சிலருக்கு சிறிய ரக அணுஆயுதங்களை கொடுத்து பழியினை வடகொரியா மேல் போட்டால் முடிந்தது விஷயம்

வடகொரியாவும் நம்ப முடியாத நாடு, கொடுத்தாலும் கொடுப்பார்கள்

இதில் பாதி உண்மையும், பாதி பொய்யும் இருக்கலாம்

இது இருக்கட்டும்.

டிரம்ப் கொஞ்சநாளாக பாகிஸ்தானை வன்மையாக கண்டிக்கின்றார், தேவைபட்டால் வான் வழி தாக்குதல் தீவிரவாதிகள் மேல் நடத்தபடும் எனவும் எச்சரிக்கின்றார்.

உடனே இந்தியாவில் சிலர் டிரம்ப் இந்திய ஆதரவு , மோடி மாஜிக் என தொடங்கிவிட்டனர்.

விஷயம் அதுவல்ல, பாகிஸ்தான் அவர்களின் நட்பு நாடு அது மாறாது.

அப்படி கண்டிக்கும் டிரம்ப் பாகிஸ்தானுக்கு நவீன விமானம் கொடுக்கமாட்டோம் என்றோ, காஷ்மீர் இந்தியாவின் பகுதி என்றோ சொல்லுமா என்றால் சொல்லாது

பின் ஏன் பாகிஸ்தானை சீண்டுகின்றார் டிரம்ப்

அதாகபட்டது சோவியத்துடன் அடிவாங்கிவிட்டு மாவோ நிக்சனின் காலில் விழுந்ததில் இருந்து சீனா அமெரிக்க அடிமை

அந்த அடிமை இப்பொழுது முறுக்குகின்றது, வடகொரியாவினை சீனா நினைத்தால் முடக்கலாம், அதோடு எல்லையினை பகிரும் நாடு அது. ஆனால் செய்யாது மாறாக ரசிக்கின்றது

இந்நிலையில் இந்தியாவினை சீனாவிற்கு எதிராக கொம்பு சீவும் செயலை அமெரிக்கா செய்கின்றது

இப்படி எல்லாம் பேசி இந்திய ஆதரவு போல் காட்டி முடிந்தால் சீனாவோடு மோதவிட்டு விட்டு வேடிக்கை பார்ப்பார்கள்

இந்தியாவிற்கு இதெல்லாம் தெரியும், அது அமைதியாக டிரம்பினை நோக்கி புன்சிரிப்பு சிரிக்கின்றது.

அவ்வளவு எளிதில் அமெரிக்க தந்திரத்தில் சிக்காது இந்தியா

 

எம்ஜிஆர் மீதும் மது வியாபார ஊழல் புகார் …

எம்ஜிஆர் மீதும் மதுவியாபார ஊழல் புகார் தொடர்பாக ரே கமிஷன் என்ப அமைக்கபட்டது.

மது வியாபார டெண்டர், பார் அனுமதியில் பயங்கர ஊழல் என்ற பெரும் குற்றசாட்டு அது. பூதாகரமாகத்தான் கிளம்பியது.

அந்த நேரம் வசமாக பிரபாகரன் சிக்க, அவனை வைத்தே அரசியல் செய்து ஒருமாதிரி பரபரப்பினை ஏற்படுத்தி ரே கமிஷன் செய்திகள் வெளிவராமல் பார்த்துகொண்டார் ராமசந்திரன்.

“நான் சொன்னால் மட்டும் தான் பிரபாகரன் கேட்பான்.” என சொல்லியே டெல்லிக்கு செக் வைத்து ஒரு தேசதுரோக அரசியல் செய்து கொண்டிருந்தார் ராமசந்திரன். அதில் ரே கமிஷன் செய்திகள் மறைக்கபட்டன.

ரே கமிஷன் விசாரணை நடந்து கொண்டே இருந்தது, முடிவு இறுதிவரை வரவில்லை. ராமசந்திரன் இறந்த பின் அந்த கமிஷனுக்கு பால் ஊற்றபட்டது

இன்று அந்த ரே கமிஷன் அறிக்கையினை எக்ஸ்ரே எடுத்து தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.

ஜெயா மீது மிக சில மாதங்களிலே முடிந்துவிடும் ஆதார பூர்வமான வலுவான வழக்கு பதியபட்டது, ஆனால் தீர்ப்பு அவர் இறந்தபின்புதான் வந்திருக்கின்றது

ராமசந்திரனையும், ஜெயாவினையும் அவர்கள் இருக்கும்வரை அவர்கள் சிறைக்கு செல்லாமல் காப்பாற்றிய சக்தி எது? ஏன் காப்பாற்றிற்று என்று இன்றுவரை புரியவில்லை.

வல்லவன் சுற்றும் பம்பரம் மணலிலும் சுற்றும்

மருத்துவம் என்றல்ல அது போன்ற மகா முக்கியமான துறைகளில் தரம் மிக அவசியம்.

உதாரணம் ராணுவத்திற்கு தகுதியானவரை எடுக்கின்றோம் என சொல்லி, இட ஒதுக்கீடு என 150 கிலோவில் தொப்பையும் வயிறுமாக இருப்பவரையோ, அல்லது சதா இருமிகொண்டிருப்பவரையோ எடுப்பதில்லை. அது சாத்தியமுமில்லை.

அந்த அந்த துறைக்கு என சில கட்டுப்பாடுகளும் தரமும் வேண்டும், அந்த துறைக்குரிய தகுதி இருப்பவர்களை மட்டுமே எடுக்கவேண்டும்.

அப்படி நல்ல திறமையானவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கபட வேண்டும், துறையின் தரம் அப்பொழுதுதான் உயரும்.

திறமை இருப்பவர்களுக்கு அவர்களுக்கான அங்கீர்காரம் கிடைத்தே தீரும்

பெருகிவரும் மக்கள் தொகைக்கு அதிகபடியான மருத்துவர்கள் தேவைதான், அதற்காக உரிய தரம் இல்லாதவர்களுக்கு எப்படி இடம் கொடுக்க முடியும்?

ஏற்கனவே பொறியியல் துறைக்கு இப்படி இருந்த கட்டுபாடுகளை எல்லாம் நீக்கியதால்தான் பல பொறியாளர்கள் கோழி வெட்டுதல், பரோட்டோ போடுதல் என வேலை செய்துகொண்டிருக்கின்றனர்.

சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள், மரம் வெட்டுவோர், கட்டடம் கட்டுவோர் எல்லாம் பொறியியல் கல்லூரிக்குள் சென்று கேம்பஸ் இண்டர்வியூ நடத்தும் காலம் வந்துகொண்டிருக்கின்றது.

தரப்படுத்துவது ஒன்றும் பெரும் சிக்கல் இல்லை, சில விஷயங்களை தரப்படுத்தித்தான் தீரவேண்டும்.

இட ஒதுக்கீடு என கொடிபிடிக்கும் இந்த திராவிட, சீமானிய கும்பல்களுக்கு ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கலாம்

இலங்கையில் யாழ்பாணர்தான் படிப்பிற்கு பிரசித்தம், எல்லா தேர்விலும் அவர்கள்தான் முதலிடம், வேலையில் முதலிடம் என இருந்தனர்

சிங்களம் இட ஒதுக்கீடு முறை கொண்டுவந்துதான் அவர்களை பாடாய்படுத்தியது, அதிலிருந்து அது தனிநாடு ஆயுதம் என வளர்ந்து பின் பல்லாயிரம் பேரை பலிகொண்டது.

சிங்கள இனவாதம் என இதனைத்தான் சொல்கின்றீர்கள் , சிங்களம் தன் குடிமக்களை சமமாக நடத்தி, திறமைக்கு முன்னுரிமை கொடுத்தால் இப்பிரச்சினை வெடித்திருக்காது என்கின்றீர்கள்

அது உண்மையும் கூட‌

ஆக இலங்கையில் ஒரு நியாயம், இந்தியாவில் ஒரு நியாயம் பேசுகின்றீர்கள்.

யாழ்பாண தமிழனுக்கு ஒரு நீதி, இந்திய பிராமணனுக்கு ஒரு நீதியா?

அதுவும் , நல்ல திறமையான மாணவனுக்கு இத்தேசம் அவனின் உரிமைகளை சாதி, மதம், இனம் என சொல்லி அடக்கியதே இல்லை

கலாம் முதல் மயில்சாமி அண்ணாதுரை , டெய்சி தாமஸ் என ஏராளமான உதாரணங்களை காட்ட முடியும்

திறமையினை வளர்த்தால் கிடைக்க வேண்டியவை கிடைக்கும்.

சமீபத்தில் வந்த அந்த கொடூர காமெடி படமானாலும், நெப்போலியன் சொல்வது போலத்தான் விஷயம்

“வல்லவன் சுற்றும் பம்பரம் மணலிலும் சுற்றும்”

(மகா முக்கியமானது அரசியல், அதில் சேர ஒரு வரையறையுமில்லை, யார் வேண்டுமானாலும் கட்சி நடத்தலாம், எந்த ரவுடி வேண்டுமானாலும் ஆள வரலாம் எனும் பெரும் அபாயமுள்ள நாடு இது.

அதனை கட்டுபடுத்த ஒரு சட்டம் மகா அவசியமான தேசத்தில், நீட் அது இது என பொங்கி கொண்டிருக்கின்றார்கள்.

அரசியல்வாதிகளுக்கு ஒரு தேர்வு அவசியம் என சொல்லுங்கள், இந்த அழிச்சாட்டிய தமிழக அரசியல்வாதி எவனாவது நீட் பற்றி பேசுவான்? )

சின்னம்மா, நீங்கள் இனி விரைவில் வெளிவர வாய்பில்லை….

Image may contain: 2 people, textஅப்பொழுதே எழுந்த சந்தேகம் தான், அக்காலத்திலே வந்த முணகல்தான்.

அரசியலில் தன் எதிரிகளையும் அவர்களின் பிண்ணணி தூண்களையும் நொறுக்கிபோடுவதில் கைதேர்ந்தவர் கலைஞர், காமராஜருக்கு உதவிய சிலர் பின்னாளில் பட்டபாடு கொஞ்சமல்ல‌

அப்படிபட்ட துடிப்புமிக்க கலைஞர் நடராஜன் கும்பலை மட்டும் விட்டு வைத்திருப்பதேன்? அவர் நினைத்திருந்தால் என்றோ இவர்களை முடக்கியிருக்கலாமே என்ற கேள்விகள் எழுந்தன‌

கலைஞர் அரசியலில் ராஜதந்திரி, ஆனானபட்ட இந்திரா தஞ்சாவூருக்கு போட்டியிட வந்ததை, அதுவும் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபொழுது வந்ததையே எப்படியோ தடுத்துவிட்ட சாகசகாரர்.

அதாவது இன்னொரு தேசியகட்சி தமிழகத்தில் எழும்ப அவர் அனுமதிப்பதில்லை, நடராஜன் அதிமுகவினை இயக்குவதில் கலைஞருக்கு மறைமுக விருப்பம் நிரம்ப இருந்தது.

இருவருக்கும் வெளியே தெரியாத இணைப்பு இழை ஒன்று ஓடியது, தேசிய கட்சி எதிர்ப்பு எனும் வெளிதெரியாத இழை அது.

இன்று அதே பாடத்தை அதிமுகவும் தொடர்கின்றது, எப்படி வருகின்றார்கள் பார்த்தீர்களா?

“கழகத்தாரே, 1967க்கு பின் நீங்கள் இருவரும் தான் மாறி மாறி ஆண்டீர்கள்? என்ன சாதித்தீர்கள் என்றால் சில பல வழக்குகளை தவிர பெரிதாக‌ ஒன்றுமில்லை.

இன்னொரு கட்சி ஆண்டால்தான் உங்கள் சாதனை தெரியும் அதே நேரம் உங்கள் ஆட்சி லட்சணமும் தெரிந்துவிட வாய்ப்பு உண்டு

மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமேன்?”

கலைஞரின் தந்திரத்தை அதிமுக கையில் எடுக்கின்றது, இதற்கு நிச்சயம் திமுக தரப்பிலும் பச்சை கொடியே காட்டுவார்கள்

காரணம் இவர்கள் நிலைப்பாடு அப்படித்தான், “ஆள்வது ஒன்று நீ இல்லயென்றால் நான். இனி என் ஆதரவில் நீ அல்லது உன் ஆதரவில் நான்”

அதுதான் அவர்களே சொன்ன, இந்த‌ “திருக்குவளை தீய சக்தி ” நடத்தும் போராட்டத்திற்கு “தியாக தலைவி சின்னமாவின்” அதிமுக ஆதரவளிக்கும் மர்மம்

இது கலைஞர் இல்லாத நிலையில் எப்படி பலனளிக்கும் என தெரியவில்லை, இதெல்லாம் வேறுமாதிரி கையாள வேண்டிய விஷயம்

அதாவது எல்லோரும் மொத்தமாக கைகோர்த்தால் தெரியாது, தனியாக திவாகரனும் ஸ்டாலினும் கைகோர்த்தால் கி.வீரம்ணியே வாய்விட்டு சிரிப்பார்

அது இருக்கட்டும்

திமுக பன்னீரை இயக்குகின்றது, சட்டசபையில் ஸ்டாலினும் பன்னீரும் சுப்பிரமணியபுரம் ஜெய் மாதிரி சிரித்தார்கள் என்றெல்லாம் சொன்ன அதிமுகவா இப்படி?

சின்னம்மா, நீங்கள் இனி விரைவில் வெளிவரவாய்பில்லை என்றவுடன் உங்கள் தம்பியே ஸ்டாலினை பார்த்து சிரிக்கின்றார்

இனி சிவகுமாரோ , விவேக்கோ அழகிரியினை பார்த்து சிரிக்கு முன் ஏதாவது செய்யுங்கள்

இல்லையென்றால் தமிழகமே சிரிக்கும்., அதுவும் தமிழிசை எல்லாம் சிரிப்பார்

 
 

அஜித் ரசிகர்கள் இம்சை தாங்கவில்லை…

Image may contain: 1 person, glasses and close-upஅஜித்தை கலாய்த்தால் பல தமிழக‌ பஸ் நிலையங்களுக்கு வா என அழைப்பு வருகின்றது

ஒரு பயலாவது கனடா ஏர்போர்ட் வா, நியூயார்க் வா என்றோ, டோக்யோ வா என்றோ, ஆக்லாந்து வா என்றோ, லண்டன் வா என்றோ அழைக்கவே இல்லை

ஆக எல்லா அஜித் ரசிகர்களும் கள்ளிகாட்டிலும், பொட்ட காட்டிலும் தான் இருக்கின்றான்.

அழைக்கின்றதுதான் அழைக்கின்றீர்கள், பாரீஸ், லக்சம்பெர்க் , வெனிஸ் போன்ற நல்ல பெரு நகரமாக பார்த்து அழையுங்கள்

சுவிட்சர்லாந்திற்கு அழைத்தால் ஓடி வரலாம்

ஆனால் ஓணான் கூட வர தயங்கும் பொட்ட‌ காட்டில் இருந்து கொண்டு வா என அழைத்தால் எப்படி வருவேன், வரவே மாட்டேன் போங்கடா..


 Image may contain: 1 person, standing and textஇந்த அஜித் ரசிகர்கள் இம்சை தாங்கவில்லை. ஒழுங்காக வாய் திறந்து பேசதெரியாத அவருக்கே இப்படி என்றால், அவர் ஒழுங்காக பேசிவிட்டால் பூரா பயலும் கடலில் குதித்து செத்துவிடுவானோ?

இப்பொழுது நம்மிடம் வம்புக்கு வருகின்றார்கள், அஜித் இட்லியாம்

ஏதாவது குத்துகல், கடப்பாரை அல்லது அடி தொண்டையில் ஆப்பரேஷன் செய்த கழுதைக்கு “தல‌ குத்துகல்”, “தல கடப்பாரை”, “தல கழுதை” என பெயர் வைங்கடா

இட்லிக்கெல்லாம் தல இட்லி என்றால் நன்றாகவா இருக்கும்?

தென்றலுக்கு பொதிகை மலை போல, சந்தணத்திற்கு குடகு மலை போல இட்லிக்கு குஷ்பூ பெயர் வரலாற்றில் பதிந்த கல்வெட்டு

அதனை அஜித் என்ன ஆண்டவானாலும் மாற்றமுடியாது, ஆம் காஞ்சிபுரம் இட்லியினை விட குஷ்பூ இட்லியே உலக பிரசித்தி

போங்கடா ஏதும் “பழம்” இருந்தால் இருந்தால் அதற்கு “தல சக்கை பழம்”, “தல பப்பாளி பழம்” என‌ என பெயரிடுங்கள்

அல்லது தல தயிசாதம், தல வடை, தல எச்சிதட்டு என எதனையாவது சொல்லுங்கள்

சின்ன பயலுக என்பது சரியாகத்தான் இருக்கின்றது.

ஏம்பா சிவா, நீ சொந்தமா படம் எடுக்கமாட்டாய் என்பது தெரியும்? இட்லிக்கு பெயர் வைப்பதை கூடவா கடன் வாங்குவாய்?

குஷ்பூ சங்கம் சார்பாக இந்த சிவா என்பவரை வன்மையாக கண்டிக்கின்றோம்

இவர் மன்னிப்பு கேட்டு காட்சியினை நீக்காவிட்டால் அவரை கடத்திவந்து அவர் இயக்கிய கொடூரபடங்களை போட்டு காட்டி அவரை சித்திரவதை செய்ய சங்கம் தீர்மானித்திருக்கின்றது.

அந்த சிட்டிசன் படத்து கோர்ட்டு சீனும் காட்டபடும், அதனை தாங்கும் மன தைரியம் இந்த சிவாவிற்கு உண்டா?

இவர் இட்லி என்றால் விஜய் என்ன சாம்பாரா? இல்லை சட்னியா?


டேய் , தல இட்லிக்கு பதிலாக தல இடியாப்பம், தல சேமியா என வைங்கடா தறுதலைகளா….

பொருத்தமாக இருக்கும்,

அவர் மண்டையினை பாருங்கள், நீங்களே ஆமாம் என ஒப்புகொள்வீர்கள்


தமிழரின் பலவீனம் அறிந்து, பிராமணரில் ஒருவன் எப்படி திட்டமிட்டு உருவாக்கபடுவான் என்பதற்கு சிலரை தொடர்ந்து இப்போதைக்கு அஜித்குமாரே சாட்சி.

ஒரு தகுதியுமே இல்லாத, தமிழே பேசவராத அவரெல்லாம் ஏதோ பெரும் பிம்பமாக உருவாக்கபடும் விதம் இதுதான்.

ராமசந்திரனுக்கு பின் ரஜினி அப்படித்தான் உருவாக்கபட்டார், ஆனால் ஜெயா இருந்தவரை அவர் தேவை இல்லாமல் இருந்தது.

அஞ்சியதால் ரஜினி ஓடிவிட்டார், இன்னும் காமெடிக்கு மட்டும் குறைவில்லை. மற்றபடி இனி அவர் அரசியலுக்கு வரபோவதில்லை

அதன் பின் அவர்கள் குறி அஜித்பக்கம் சென்றிருக்கின்றது.

இது புரிந்தால் நீங்கள் தமிழர்கள்.

பொறுத்து பாருங்கள், நிச்சயம் ஒருநாள் அவர் மீது அரசியல் திணிக்கபடும்.


ஹாலிவுட் சண்டை இயக்குனரை அசர வைத்த அஜித்

இவர் ஹாலிவுட் சண்டை இயக்குநரை அசரவைத்தார் என்றால் இந்த புருஸ்லி, ஜாக்கிச்சான், ஜெட்லி எல்லாம் யாரடா?

அவர்களை எல்லாம் பார்க்காமல் அஜித்தை பார்த்து வியந்தால் அவர் ஹாலிவுட் சண்டைக்காரரா? இல்லை மதுரை பக்கம் கம்பு சுற்றிகொண்டிருந்தவரா?

இதை எல்லாம் செய்திகள் என சிரிக்காமல் சொல்லிகொண்டிருக்கின்றது ஊடகங்கள்.


122 இலாக்களுக்கு எங்கு செல்வார் மனிதர்?

122 அமைச்சர்கள் கொண்ட பெரும் மந்திரி சபையினை அமைக்காமல் இனி பழனிச்சாமி அரசு நீடிக்க வாய்ப்பில்லை

122 இலாக்களுக்கு எங்கு செல்வார் மனிதர்?

இனி ஏராளமான இலாக்காக்கள் உருவாக்கபடும், செய்தி துறை டிவிட்டர் இலாகா, பேஸ்புக் இலாக்க இலாகா என பிரியலாம்

நிதி துறை 50 ரூபாய் நோட்டு பரிவர்த்தனைக்கு ஒரு இலாக்கா, 100 ரூபாய் நோட்டுக்கு இன்னொரு இலாகா, சில்லறைக்கு ஒரு இலாக்கா என பிரியலாம்

பொதுபணிதுறை என்பது சிமெண்ட் இலாகா, செங்கல் இலாகா, கம்பி இலாகா என தனி தனியாக பிரியலாம்

போக்குவரத்து துறை சைக்கிள் இலாகா, பைக் இலாகா, பேருந்து இலாகா , லாரி இலாகா என பிரியலாம்

மீன் வளத்துறையில் ஒவ்வொரு மீனுக்கும் ஒரு அமைச்சர், சுகாதார துறையில் ஒவ்வொரு நோய்க்கும் ஒரு அமைச்சர்.

சலூன் இலாகா வரை பிரித்து அதில் கட்டிங் தனி இலாகா, ஷேவிங் தனி இலாகா என அமைத்து அமைச்சர்களை நியமித்தாலும் இனி ஆச்சரியபடுவதற்கில்லை

122 அமைச்சர்களை தமிழகம் விரைவில் காண போகின்றது.

காமராஜரின் மிக சிறந்த அமைச்சரவையில் 7 அமைச்சர்கள்தான் இருந்தார்களாம், அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கின்றது


நான் எப்போதும் அரசியல் கருத்துகளை சொல்வதில்லை -அமைச்சர் செங்கோட்டையன்

“அம்மா வாழ்க..” தவிர என்ன பேசியிருக்கின்றார்? அதுதான் அவருக்கு தெரிந்த அரசியல்

இப்பொழுது அம்மா இல்லாததால், யாரை பார்த்து வாழ்க என சொல்ல தெரியாமல் நான் அரசியல் பேசுவதில்லை என்கின்றார்.

உண்மையினை ஒப்புகொண்ட நல்ல மனிதர்.


Image may contain: one or more people and suitமுதல்வர் பழனிச்சாமியுடன் எச்.ராசா சந்திப்பு : செய்தி

விக்ரம் படத்தில் தன் உளவாளியான அந்த மதகுருவிடம் அசால்ட்டாக சொல்வார் சத்யராஜ்

“நல்ல டிரெயிங்டா உனக்கு. சொக்கலால் பீடி குடிச்சிட்டு இருந்த நீ. இங்க மதகுருவா? ஹே.. ஹே.. ஹே.. உன்ன கேக்காம எதுவும் இங்க நடக்காதாமே? .. மொட்ட..

என்ன அண்ணே இவங்க முன்னால அடிக்கிறீங்க? ….

ஓ.. உங்களுக்கு மான பிரச்சினையாயிட்டுங்களா?”

அந்த காட்சி நினைவுக்கு வருகின்றது.


Image may contain: 1 person, indoorசபாநாயகருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை : செய்தி

“சபாநாயகரே, காய்ச்சல் அடிக்கின்றதா? எனக்கும் அடிக்கின்றது.

நாம் யாருக்கு என்ன அநியாயம் செய்தோம், ஏன் நம்மையே குறிவைத்து சாத்துகின்றார்கள்”