பேரரிவாளன் பரோலில் வருகின்றாராம்….

Image may contain: 1 person, selfieஇன்றுவரை தான் யாழ்பாணம் சென்று புலிகளோடு பழகியது பற்றியோ, சிவராசனுக்கு வயர்லெஸ் பேட்டரி மற்றும் பைக் வாங்கி கொடுத்தது பற்றியோ பேரரிவாளனும் மூச் விடவில்லை அவன் தயார் அற்புதம்மாளும் சொல்லவில்லை.

சொன்னது எல்லாம் நாங்கள் நிரபராதி என்ற ஒரு சொல் மட்டுமே.

பேரரிவாளனின் நிலைக்கு முதல் காரணம் அவன் தந்தை, திராவிடம் என்பதை வெறியாக அவர் மகனுக்கு போதித்ததே மகன் இன்று வாழ்வு தொலைத்து நிற்பதற்கு காரணம்.

அந்த அதிதீவிர திராவிடரை சந்திக்கத்தான் பேரரிவாளன் பரோலில் வருகின்றாராம்.

அவர் தந்தை மீது அவருக்கு அவ்வளவு பாசமாம், கடமையாம்

அப்படியானால் திருப்பெரும் புதூரில் ராஜிவோடு செத்த அந்த 17 உறுப்பினர்களின் குடும்பத்தாரும் யாரை சந்திக்க முடியும்? யாரை தேடி ஆறுதல் அடைய முடியும்?

ராஜிவ் கொலைக்கு உடந்தையான பேரரிவாளனுக்கு போலிஸ் பாதுகாப்பு, அதே ராஜிவ் கொலையில் செத்த காவல்துறை அதிகாரிகளின் குடும்பம் இதனை பார்க்கும்பொழுது அவர்கள் மனம் என்ன பாடுபடும்?

தன் மீதான பெரும் நெருக்கடியினை சமாளிக்க பழனிச்சாமி அரசு விபரீத காரியங்களில் இறங்கியிருக்கின்றது.

ஏதோ பேரரிவாளன் என்பவன் இந்தியாவிற்காக 30 வருடம் சிறையில் இருந்துவிட்டு வருவதை போல ஆர்ப்பாட்டங்கள்

வருக ..வருக எனும் அவமான கோஷங்கள்..

பேரரிவாளனை தொடர்ந்து இனி எல்லோருக்கும் பரோல் வழங்கபடலாம், எல்லோரும் சிரித்து கொண்டே ஒலிம்பிக் மெடல் வென்றவர்கள் போல சாகச சிரிப்பு சிரித்துகொண்டே வரலாம்

இது தேசம் முழுக்க எதிரொலித்தால் எல்லா தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகள் எல்லாம் இதே கோலத்தில் வந்து கையசைப்பார்கள்

இதோ 26 ஆண்டுகாலம் சிறையில் இருந்தும் புலிகள் எம்மை வஞ்சித்தார்கள் என்றோ, சிவராசன் கழுத்தறுத்தான் என்றோ சொல்ல இன்னும் பேரரிவாளனுக்கும், நளினிக்கும் வார்த்தை வரவில்லை என்றால்..

புலிகளையும் பிரபாகரனையும் விமர்சித்து ஒரு வார்த்தை இன்னும் வரவில்லை என்றால்……

இதனால் இவர்கள் சொல்லவருவது என்ன? நாங்கள் புலிகள், ராஜிவினை கொல்ல‌ நாங்கள் தான் உதவினோம் என்பதே.

பேரரிவாளன் ஒன்றும் பெரும் உத்தமர் அல்ல, இன்றுவரை தான் எப்படி புலியானேன் என்று ஒருவார்த்தையும் சொல்லா மவுன குற்றவாளி அவர்.

தமிழக அரசு சில கட்டுபாடுகள் போட்டுத்தான் அனுப்பியிருக்கின்றது.

இந்த அங்கிள் சைமன், வைகோ, கொளத்தூர் மணி, வேல்முருகன் போன்ற தேசவிரோதிகள் எல்லாம் சந்திக்க போகின்றார்களா? இல்லையா என்பது இனிதான் தெரியவரும்.

அவர்களை போன்றோரால் இந்த குற்றவாளிக்கு பெரும் வரவேற்பும், ஊடக கொண்டாட்டமும் இருப்பதாக கருதினால் அரசு பரோலை ரத்து செய்யவேண்டும்.

முகநூல் முதல் முட்டுசந்துவரை நின்றுகொண்டு, “பேரரிவாளனே வருக..” எவனாது சொன்னால் அவர்களை தூக்கி போட வேண்டிய இடத்தில் போட வேண்டும்.

மீறி பழனிச்சாமி அரசு அரசியல் ஆதாயத்திற்காக அவர்களை ஊர்வலம் வரச்செய்தால், அன்று கலைஞருக்கு எதிராக பாய்ச்சிய 356ம் சட்ட பிரிவினை பழனிச்சாமிக்கு எதிராக வீசவும் மத்திய அரசு தயங்க கூடாது.

 
 

“சாலையோரத்தில் வேலையற்றதுகள்” என்பது இதுதான்.

ஒரு சிலர் கிளம்பியிருக்கின்றான், தமிழர் வரிபணத்தில் நடக்கும் தமிழக மருத்துவ கல்லூரியில் வடமாநிலத்துக்காரன் படிப்பதா என கடும் ஆர்ப்பாட்டம்.

பல்கலைகழக மானிய நிதி எல்லாம் தமிழக கல்லூரிகளுக்கு வருவதே இல்லையா?

அப்படியானால் தமிழர்கள் வட இந்திய நிறுவணங்களில் படிக்கவிலையா, வேலை செய்யவில்லையா?

வடக்கே ஐஏஸ் முதல் பொறியில் வரை, டெல்லி பல்கலைகழகம் வரை எத்தனை தமிழர்கள் படித்து கொண்டிருக்கின்றார்கள். அம்மாநில மக்கள் எல்லாம் இப்படி கிளம்பினால் என்னாகும்?

வட இந்தியாவில் தமிழர்களே வாழவில்லையா? மும்பை டெல்லி எல்லாம் தமிழர்களே இல்லையா?

ஏதோ தமிழன் தமிழகத்தில் மட்டும் இருப்பது போலவும், மற்ற எல்லா மாநிலத்துகாரனும் அடித்துபிடித்து இங்கு வருவது போலவும் பேசிகொண்டிருக்கின்றார்கள்.

இந்தியா முழுக்க வாழும் தமிழர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இவர்கள் உளறிகொண்டிருக்கின்றார்கள்..

இவை எல்லாம் அப்பட்டமான உளறல்கள், குதர்க்க பேச்சுக்கள், கோணலான கொடூர புத்திகள்.

இவ்வளவும் பேசிவிட்டு வடநாட்டு பாசுமதி அரிசி பிரியாணியும், பஞ்சாப் கோதுமையில் செய்யும் பரோட்டாவைனையும் நன்றாக விழுங்கிவிட்டு தூங்க போகின்றவே இந்த உளறல்காரர்கள்.

“சாலையோரத்தில் வேலையற்றதுகள்” என்பது இதுதான்.

இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் !

Image may contain: 1 personஇந்து சமயத்தில் முப்பது முக்கோடி தேவர்கள் உண்டு என்பது நம்பிக்கை, அந்த முப்பது முக்கோடிகளில் 30 பேருக்கு மேல்தான் வெகு பிரசித்தம் அந்த 30 பேரில் முதல் 5 இடங்களுக்குள் வருபவர்களில் ஒருவர்தான் வடமொழியில் விநாயகர் அல்லது கணேசன்.

நமது தமிழில் பிள்ளையார் என அழைக்கபடுகிறார் அந்த கணபதி ஐந்து கரங்களை கொண்டவர் என்பதால் ஐங்கரன் எனவும் அழைக்கபடுகிறார்.

இந்தியா மட்டுமல்ல ஒருகாலத்தில் ஆசியா முழுக்க (அரேபியா,மங்கோலியா,இந்தோனிசியா வரை) பரவியிருந்த இந்து மதத்தின் பிரதான கடவுளவர், ஒரு காலத்தில் பிள்ளையாரை தனிகடவுளாக கொண்ட கானாதிபத்தியம் என்ற சமயமே இருந்திருக்கின்றது,

பின்னாளில் அது அக்கால மோதல்களான சைவ,வைணவத்தோடு இணைந்தது.

கணங்கள் எனப்படும் இயக்கும் சக்திகளுக்கு., அதாவது ஒவ்வொரு கணமும் இயக்கும் சக்திக்கு அதிபதி அவர்தான். அதனால் அவர் கணங்களின் அதிபதி கணபதி ஆனார்,

பெரும் சக்திகொண்டவர், காக்கும் கடவுள் என புகழபடும் திருமாலை கூட இவரே காத்தவர் என பெரும் புகழ்கொண்டவர், மிக பெரும் சக்தியின் வடிவம். யாரும் எப்பொழுதும் வழிபடலாம், இது தீட்டு என்றோ அல்லது கட்டுபாடுகளோ அவருக்கு இல்லை, இதுதான் பிள்ளையாரின் பெரும் சிறப்பு, சனிக்கே சனிபிடிக்க வைத்தவர்.

ஆனால் மிக மிக எளிமையான தெய்வம், பணம் கொட்டும் பெரும் ஆலயங்களிலும் இருப்பார் , தெருமுனை ஆலயத்திலும் இருப்பார், பக்தர்களின் வேண்டுதல் என்றால் பசுஞ்சாணத்தில் கூட காட்சியளிக்கும் தெய்வம் அவர், வழிபடுவதற்கும் மிக மிக எளிமையானவர், சாதாரண வெள்ளெருக்கும், அரும்புல்லும் கூட போதும், கூடுதலாக தமிழர்கள் தேங்காயும் சேர்த்து கொண்டனர்.

16 வகை ஆசீர்வாதத்திற்கும் அவரே அதிபதி என்பதும் நம்பிக்கை, அவரை தொழுதுதான் செயலை தொடங்குவார்கள், வட இந்தியா முழுக்க பிள்ளையாருக்கு செல்வாக்கு அதிகம், முருகனை தெய்வமாக கொண்டாடும் தமிழர்கூட பிள்ளையாருக்கு தனி இடம் கொடுத்திருக்கின்றார்கள்.

முருகனை உருகி உருகி பாடிய அவ்வையும் (கே.பி சுந்தரம்பாள் வடிவில் நாமும் பார்த்திருப்போம் ) முருகனை பழனிக்கு அனுப்பிய 
விநாயகருக்கு, விநாயகர் அகவல் என ஒரு காவியம் பாட தவறவில்லை என்பதில்தான் விநாயகரின் கனமான இடம் தெரிகிறது.

அக்காலத்தில் வட இந்தியரின் (இந்துக்களின் அடித்தள பூர்வீகமான இமயமலை பகுதிகள்) ஆண்டுகணக்கு ஆவணிமாதத்திலே தொடக்கம், வருட தொடக்கத்திலே பிள்ளையாரை வணங்க அவர்கள் கொண்டு வந்த கொண்டாட்டமே விநாயகர் சதுர்த்தி.

பாம்பு புற்றிலிருந்து மண் எடுத்து பிள்ளையார் உருவம் செய்து அவருக்கு பிடித்தமான படையலிட்டு, விரத காலம் முடிந்து அதனை கிணறு மற்றும் ஆறுகள் போன்ற நீர் நிலைகளில் கரைப்பார்கள்.

வளமான களிமண்ணை மண்ணை கரைப்பதன் மூலம் அந்நீர் வயலுக்கு பாயும் பொழுது நிலம் இன்னமும் செழிப்படையும், இந்த பெரிய வேளான்மை தத்துவமும் அதில் அடங்கியிருந்தது, சாணப்பிள்ளையார் தத்துவமும் இதுவே,சிறிதும் ரசாயாண கலப்பற்ற அந்த நீர் நிச்சயம் வளம் கொடுக்கும், விளைச்சல் பெருகும்.

நவராத்திரி கொலு போன்றோ அல்லது கிருஷ்ண ஜெயந்தி போன்றோ மிக அமைதியாக நடந்து கொண்டிருந்த விழாதான் விநாயகர் சதுர்த்தி, அமைதியான தெய்வம் அமைதியான விழா.
ஆனால் இன்று நடைபெறும் பெரும் ஊர்வலங்களுக்கும், காவல்துறையினரின் தூக்கத்தினை கெடுக்கும் அளவிற்கு சில சர்ச்சைகளுக்கு இடமான முறையில் நடைபெறும் அளவிற்கு இதனை மாற்றிய பெருமை பால கங்காதார திலகரையே சேரும்.

மிகபெரும் சுதந்திர போராட்ட வீரர் திலகர், காந்திக்கு முன்பே “சுதந்திரம் எமது பிறப்புரிமை” என முழங்கியவர், ஆனால் அரசுக்கு எதிரான ஊர்வலங்களுக்கு பிரிட்டிஷ் அரசு தடைவிதித்த பொழுது, மிக சாதுர்யமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை நடத்தி “இது மத நம்பிக்கை” என வெளியே சொல்லி, விநாயகர் ஊர்வலத்திலே சுதந்திர வேட்கை ஊட்டியவர். (மிசா காலகட்டத்தில் அண்ணா சமாதி கூட்டத்திலே அரசியல் நடத்திய கலைஞரை போல )

வெள்ளையரால் தடுக்கவும் முடியவில்லை காரணம் மத சுதந்திரம் அளித்திருந்தது சட்டம், விளைவு இந்தியர்களுக்க் மிக பிடித்த பிள்ளையார் பெரும் இந்திய அடையளாமாக மாறினார்.

சதுர்த்தி ஊர்வலத்தில் சுதந்திர முழக்கங்களும் சேர்ந்தன,

ஆனால் பிள்ளையாரை பிடிக்க குரங்காய் முடிந்தது போல, சுதந்திரம் பெற்ற பின்னும் தொடர்ந்தது, குறிப்பாக மும்பை போன்ற நகரங்களில் அதன் கொண்டாட்டமே தனி, மக்கள் ஆதரவினை பெறவேண்டும் என்பதற்காக வரதராஜ முதலியார் (நாயகன் படத்தின் மூலகாப்பி) போன்றோர் பெரும் செலவுகள் செய்தனர், நாடெங்கும் அது மேலும் பரவியது. இன்று ஏராளமான ரசாயாண பிள்ளையார்கள் வருட வருடம் டன் கணக்கில் நீர் நிலைகளில் கரைக்கபடுகின்றன.

இது மத நம்பிக்கை, ஆனால் பொது அமைதிக்கும் யாருடைய மனதிற்கும் எள்நுனி அளவும் காயபடுத்தாத வகையில் கொண்டாடபடும் பண்டிகைகளே அதன் உண்மை பொருளை உணர்த்தும், மிக சில இடங்களில் இது சர்ச்சைகுள்ளாகும் பொழுது அமைதியின், எளிமையின் சின்னமான பிள்ளையாரை கலங்கிய கண்களோடுதான் பார்க்க தோன்றுகின்றது.

எல்லா இனத்தாருக்கும் இந்தியாவில் பிள்ளையாரை பிடிக்கும், தமிழர்கள் கூட பிள்ளையார் சுழி போட்டுத்தான் தொடங்குவார்கள், அவரை முன்னிறுத்துகின்றார்கள். அவரை தொடங்கி நினைத்த காரியங்கள் பெரும்பாலும் காலத்தை வென்று நிற்பவை.

உதாரணம் மகாபாரத கதையை வியாசர் சொல்ல சொல்ல பிள்ளையார் எழுதினார் என்பார்கள், அவர் ஒரு பக்க தந்தத்தினை உடைத்து எழுத்தாணியாக எழுதினார் என்பது மரபு நம்பிக்கை,
அவர் தந்தத்தை உடைத்தாரா அரச மரத்து கிளையினை உடைத்தாரா என்பது பிரச்சினை அல்ல

அவர் தொடங்கிவைத்திருக்கின்றார் அல்லது அவரை முன்னிறுத்தி தொடங்கியிருக்கின்றார்கள், பாரத கதை காலங்களையும் தாண்டி நிலைத்திருக்கின்றது.

தாயை போல பெண்ணை தேடுகிறேன் என சொல்லி மனிதர்களுக்கு பெரும் தத்துவம் தந்தவர், அரசமரம் மனிதருக்கு நல்ல அமைதியை கொடுக்கும் என அமர்ந்து, புத்தருக்கே வழிகாட்டியவர்.

இன்னும் ஏராளமான ஆண்மீக,அறிவியல் தத்துவங்களின் மொத்த வடிவம் பிள்ளையார், அவருக்கு பிடித்த அருகம்புல்லும், இன்றும் மருத்துவ உலகம் ஒத்துகொள்ளும் அருகம்புல் பெருமையும் போல ஏராளமான தத்துவங்களை தனது பெருவயிற்றில் ஒளித்து வைத்திருப்பவர்.

இந்தியாவில் எல்லா மக்களுக்கும் அவரை பிடிக்கும் என்றாலும், தமிழக செட்டியார்களின் இஷ்ட தெய்வம் அவர், பிள்ளையார் பட்டியில் அவரை கொண்டாடும் நாட்டுகோட்டை செட்டியார்களின் பெரும் நம்பிக்கை அவரே.

விநாயர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் உள்ள பெரும் ஆண்மீக தத்துவம் என்னவென்றால், மண்ணில் செய்யபடும் விநாயகர் சிலை குறிப்பிட்டகாலம் முடிந்து நீர் நிலைகளில் கரைந்து விடுகின்றது, அதாவது நிலையானது அல்ல இன்னும் ஆழமாக சொன்னால் மண்ணில் உண்டானது எல்லாம் மண்ணிற்கே திரும்பும்.

அதே தான், யூத மதமும்,இஸ்லாமும், கிறிஸ்தவமும் இன்னும் எல்லா மதங்களும் வலியுறுத்தும் தத்துவம்தான் “மண்ணில் உண்டான மனிதன் மண்ணிற்கே செல்லவேண்டும்”

இந்த உண்மையைதான் சொல்லாமல் சொல்கிறார்கள் விநாயர் சதுர்த்தியன்று இந்தியா முழுக்க வீற்றிருக்கும் கோடிக்கணக்கான பிள்ளையார்கள், இதனை உணர்ந்து கொள்பவர்கள் மிக அமைதியாக சாத்வீக பூஜைகளில் மனதினை செலுத்தி அமைதியை உணர்வார்கள்,அதனை மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள்.

அங்கே வீண் ஆரவாரமும், முழக்கங்களும், வெற்று கூச்சல்களும் இருக்காது, ஓங்கார பிரவண தத்து பிள்ளையார் போல பெரும் அமைதி மட்டுமே இருக்கும்.

காவல்துறையும் அமைதியாக ஆங்காங்கு இருக்கும் பிள்ளையாரை கையெடுத்து வணங்கிகொண்டிருக்கும்.

இந்த விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் எல்லோருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிக்கும் வேளையில் இருவரை நினைத்தால் சாணி பிள்ளையாரை எடுத்து அடிக்கவேண்டும் என தோன்றுகிறது

ஒன்று ஆயிரம் வழிகள் இருந்தும் மசூதி இருக்கும் தெரு வழியேதான் ஊர்வலத்தை நடத்துவேன் என அடம்பிடிப்பவன்

இன்னொன்று பெரும் தத்துவ பிம்பான பிள்ளையாரை “அழுக்கு மூட்டை” என பேசிவிட்டு, இன்று தமிழருக்கு சதுர்த்தி வாழ்த்து என பேனரில் கையினை தூக்கிகொண்டிருக்கும் சீமான்

இருவருமே ஒரு வகை மனக்கோளாறு பிடித்தவர்கள் என்பதால் பொறுப்பினை பிள்ளையாரிடமே ஒப்படைத்துவிடலாம், சனியினையே விரட்டியவர், இந்த தமிழக சனியன்களை விடுவாரா?

இந்த தமிழக சனிகளை அவர் விரட்டட்டும்..

எப்படியோ வினை தீர்ப்பான் விநாகயன் என்பார்கள், அவன் எல்லோர் வாழ்விலும் வினை தீர்க்கட்டும், அருள் பொழியட்டும்.

எல்லோருக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

 
 

மாநில கல்வி உரிமைகளை வைத்து நடந்த விஷயங்கள் என்ன?

மருத்துவ கல்வியில் மாநில உரிமை பறிக்கபட்டுவிட்டது, இது அநீதி , ஆரிய படையெடுப்பு என பல சத்தங்கள்

மாநில கல்வி உரிமைகளை வைத்து இங்கு நடந்த விஷயங்கள் என்ன?

சீனிவாச ராமானுஜம் பெயர் சூட்டபடவேண்டிய பல்கலைகழகம் விஞஞானம் தெரியாத அண்ணா பெயர் சூட்டபட்டு முதலில் மதிப்பிழந்தது.

ராமசந்திர உடையார் எனும் சாராய வியாபாரி கல்வி தந்தையானார்.

சாதாரண கான்ஸ்டபிளான பனிமயராஜ், ஜேபிஆர் எனும் கல்வி தந்தையானார், பச்சைமுத்து இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியானார்.

அது சரி என சொல்ல தெரியாமல் எம்ஜிஆர் பின்னால் நின்று ஐசரி, ஐசரி என தலையாட்டிய பொம்மையின் வாரிசுகள் இன்று கல்வி தந்தை

இப்படி சமூக விரோதிகள், அறவே சமூக பொறுப்பு இல்லாதவர்கள், கொஞ்சமும் கல்லாதவர்களை எல்லாம் கல்விக்கே தந்தையாக்கியதை தவிர மாநில உரிமைகள் என்ன செய்தது?

ஊருக்கொரு கல்விதந்தையினை உருவாக்குவதுதான் மாநில உரிமையா?

கூழை கும்பிடு ஒன்றே தகுதியாய் கொள்ளபட்டு கல்வி நிலையங்கள் அவர்களிடம் ஒப்படைக்க படலாமா? அது எவ்வளவு பெரும் சிக்கலை உருவாக்கும் என மாநில உரிமைகளை காப்பவர்கள் யோசித்தார்களா?

கல்விக்கே உண்டான தரத்தை சீரழித்து கெடுத்தார்கள், கொஞ்சமும் தரமே இல்லா குப்பை பட்டதாரிகளை உருவாக்கிவிட்டு அவர்கள் கல்லா நிரப்பிவிட்டு, அந்த கல்லாவிலிருந்து தமிழக கட்சிகளுக்கு தேர்தல் நிதி கொடுக்கும் எவ்வளவு பெரும் அயோக்கியதனம் நடக்கின்றது.

இதுதான் மாநில உரிமை காத்து நிற்கும் கல்வி.

மாநில கல்வி உரிமைகளை முறையாக பயன்படுத்தியிருந்தால் இம்மாநிலம் ஏன் இப்படி சிக்கலில் தவிக்க போகின்றது.

நீட் தேர்வு என மத்திய அரசு சொல்லிகொண்டேதான் இருந்தது, இங்கு ஜெயா மருத்துவமனை காட்சி , நிலையற்ற அரசு போன்ற காரணங்களால் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் விட்டது அல்லது யாரிடமும் அதிகாரமில்லை.

ஆக மாநில அரசு முன் தயாரிப்பு செய்யாத குற்றசாட்டும் பலமானதா? இல்லையா?

நீட் தேர்வு மட்டுமல்ல, எல்லா படிப்பிற்கும் இப்படி எல்லாம் தரம் நிர்ணயித்து இவர்கள் கொட்டத்தை அடக்க வெண்டும்.

பலர் கொள்ளையடிக்கவும், சிலர் ஆயிரம் கோடிகளில் புரளவும்தான் மாநில உரிமை வேண்டும் என்றால் அது இல்லாமலே போகட்டும்

பேரரிவாளனை பற்றி பேச தொடங்கினால்…

Image may contain: one or more peopleஇந்த பேரரிவாளனை பற்றி பேச தொடங்கினால் அவரை ஏன் விசாரிக்கவில்லை, இவரை ஏன் விசாரிக்கவில்லை என தொடங்கி சோனியாவினை ஏன் விசாரிக்கவில்லை என கேட்கின்றார்கள்.

ராஜிவ் கொலையினை வகுத்தது நிச்சயம் வெளிநாட்டு மூளை, பிரபாகரனுக்கு கொல்ல தெரியுமே தவிர வழக்குகளை எப்படி சிக்கலில் விடவேண்டும் எனும் மூளை எல்லாம் சுத்தமாக கிடையாது

காரணம் இலங்கையில் அவர் மீது அப்படிபட்ட விசாரணை எல்லாம் வரவே இல்லை, கொல்வது அவர் என தெரிவதால் எல்லோரும் அவன் அப்படித்தான் என சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள், இலங்கையின் சட்டம் ஒழுங்கும் அப்படித்தான் இருந்தது.

ஆனால் ராஜிவ் கொலை அப்படி அல்ல, தடயமில்லாமல் செய்யவேண்டும், செய்யலாம் ஆனால் அதனை மீறி சிக்கும் இடத்தில் குறைந்தது 50 ஆண்டுகாலம் விசாரணை நடக்குமாறு பல இழைகள் இருந்தன‌

அப்படி மகா திட்டமிட்டு செய்யபட்ட கொலை அது, விசாரணை செல்ல தொடங்கினால் காங்கிரசில் செத்துபோன நேரு, இந்திரா தவிர எல்லோரையும் விசாரிக்க வேண்டும்

எதிர்கட்சியில் மொரார்ஜி தேசாய் தவிர எல்லோரையும் விசாரிக்கவேண்டும் என்றளவில் செய்யபட்ட வலை அது.

அதாவது விசாரணை நடந்து, இந்த தேசமே ராஜிவினை புலிகளோடு சேர்ந்து கொன்றது என்ற முடிவு வருமாறு வெளிநாட்டு மூளை அமைத்து கொடுத்திருந்தது.

சந்திரா சாமி சர்ச்சைகுரிய குற்றவாளி, ஆனால் சு.சாமி அப்படி சிக்கவைக்கபட்டார்

மரகதம் சந்திரசேகர் ராஜிவினை தூக்கி வளர்த்தவர், அவர் வற்புறுத்தித்தான் ராஜிவ் திருபெரும்புதூர் வந்தார், அவரையும் சிலர் சந்தித்து சிக்க வைத்தார்கள்.

யாரென்றே தெரியாத சிவராசனிடம் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் நிதி வாங்கியிருந்தார், அவரையும் சிக்க வைத்தார்கள்.

விபிசிங் கூட்டத்தில் ஒத்திகை நடத்த பல விபிசிங் கட்சி ஆட்களையே சிவராசன் வளைத்திருந்தான், அப்படியானால் அவர்களும் விசாரிக்கபடவேண்டும்.

பல காங்கிரஸ் பிரமுகர்களை நான் பத்மநாபாவின் ஆள் என சொல்லி சிவராசன் நெருங்கி இருந்தான், இவை எல்லாம் விரிக்கபட்ட வலைகள்,

விபரீதம் தெரியாத காங்கிரசார் சிக்கியிருந்தனர்.

ஆம் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்களோடு படம் எடுத்துவைத்திருந்தான் சிவராசன், காங்கிர்ஸ்காரர்கள் அரசியல்வாதிகள் பன்றியோடு படமெடுக்கவும் அவர்கள் ரெடி, அந்த யுத்தியில்தான் படம் எடுத்து மிரட்ட வைத்திருந்தான் அவன்

அதனால் பலவற்றை மறைக்கவேண்டிய அவசியம் கமிஷனுக்கு இருந்தது, இல்லையென்றால் இன்றுவரை விசாரணை சென்றுகொண்டே இருக்கும், பெரும் குழப்பம் நீடிக்கும்.

விசாரித்த அதிகாரிகளுக்கு இது புரிந்தது, இது பெரும் திட்டம் , விசாரணை நீண்டுகொண்டே போக செய்த பெரும் சதி என தெரிந்து, புலிகள் கொன்றார்கள் என்பதோடு வழக்கை முடித்தார்கள்.

இதை தாண்டி செய்யவேண்டியது பலம்வாய்ந்த வெளிநாடுகளோடு மோதுவது, அதெல்லாம் சாத்தியமில்லை

ஆனானபட்ட கென்னடி கொலையே வெளிதெரியவில்லை, போப்பாண்டவரை சுட்டவன் பின்னால் இருந்தது யார் என தெரியவில்லை, பெரும் வல்லரசுகளின் நிலையே அப்படி.

ஆக ராஜிவினை கொன்றது சாட்சாத் புலிகளே, அதன் வழக்கினை நீட்ட பல சதிகளை செய்திருந்தார்கள். விசாரணை குழு அவற்றை எல்லாம் வெட்டி எறிந்து எது தேவையோ அதனை செய்தது

இதனை விட்டு விட்டு ராஜிவ் கொலையில் சோனியா, ராகுல் எல்லோரையும் விசாரிக்க வேண்டும் என சிலர் சொல்லிகொண்டே இருந்தால், சொல்லிகொண்டே இருக்கட்டும்

பொதுவான சந்தேகம் இரண்டுதான்

அன்று திருப்பெரும்புதூரில் நடக்க வேண்டிய திமுக கூட்டம் ரத்து செய்யபட்டது, தன் மனைவி இறந்த நேரத்திலும் தன் தந்தை இறந்த நேரத்திலும் மேடையில் முழங்கிய கருணாநிதி, தன் வாழ்வில் ரத்து செய்த முதல் கூட்டம் அது.

வைகோ அப்பொழுது திமுகவினை இயக்கிகொண்டிருந்தார் என்பதில் சந்தேகமில்லை, கொலைக்கு பின் வைகோ தூக்கி எறியபட்டார் என்பதும் உலகறிந்தது.

அடுத்த சந்தேகம், அன்று ராஜிவினை விழுந்து விழுந்து வணங்கியது ஜெயா நடராஜன் கோஷ்டி. தமிழகத்தில் எம்ஜிஆர் காலத்திற்கு பின்னால் ராஜிவ் வரும்பொழுதெல்லாம் , விமான நிலையம் முதல் ஏன், அவர் பாத்ரூம் முன்னால் வரை இவர்கள்தான் நின்றார்கள்

ஆனால் திருப்பெரும்புதூரில் மட்டும் இவர்கள் மிஸ்ஸிங், ஏன் என்றால் இன்றுவரை பதிலிருக்காது.

கலைஞரையாவது பிடித்து வைத்து 4 கேள்வி கேட்டார்கள், ஜெயாவிடம் அதனை கூட கேட்டதில்லை

அதுதான் மகா மர்மம்.

 

பேரரிவாளனுக்கு வரிந்து கட்டுகின்றார் ஸ்டாலின்

Image may contain: one or more people, sunglasses and close-upதேசவிரோத கட்சி என அறியபட்டு பின் பிரிவினைவாதத்தை கைவிட்ட பின்புதான் ஆட்சிக்கு வந்தது திமுக‌

அதன் பின் அது மாநில உரிமை பேசிற்றே தவிர, பிரிவினைபற்றி பேசவே இல்லை, மிசா காலத்தில் கூட அது மாநில சுயாட்சிதான் பேசிற்று

பின் புலிகளை ஆதரித்து தடமாறி சென்று, 1991ல் அது தடை செய்யபடும் அளவிற்கு சென்றது.

காந்தி கொலை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு கரும்புள்ளி என்றால் நிச்சயம் ராஜிவ் கொலை திமுகவிற்கு பெரும் கரும்புள்ளி

அதனை எல்லாம் 2009ல் தாண்டித்தான் திமுக தன் தேச அபிமான நிலையினை நிரூபித்தது, கலைஞர் அப்படித்தான் நெருப்பாற்றினை கடந்து கட்சியினை நடத்த்தினார்

இன்று அவரின் மகன் பேரரிவாளனுக்கு வரிந்து கட்டுகின்றார், விடுதலை வேண்டும் என்கின்றார்

பாஜகவிற்கு எதிராக தமிழ்நாட்டு அரசியல் செய்வதாக நினைத்து நெருப்பாற்றில் கப்பல் விடுகின்றார் ஸ்டாலின்

இது வன்மையாக கண்டிக்கதக்கது.

ஸ்டாலின் மாறாவிட்டால் திமுகவினை மக்கள் தூக்கி எறிய தயங்கமாட்டார்கள், பாஜகவிற்கு எதிராக வேறு போராட்டங்களை நடத்தலாம்

இம்மாதிரி விஷயங்களை செய்வது தன் கட்சியினை தானே அழிப்பது போலாகும்

ஸ்டாலின் அதனை செய்ய துணிந்தால் திமுக எனும் ஆலமரம் சாய்வதை காலம் விரைவில் காட்டும்,

தேசாபிமானம் இல்லா திமுக தமிழகத்தில் யாருக்கும் பிடிக்காது என்பது கூட தெரியாத இவரால் அக்கட்சி நிச்சயம் பெரும் சிக்கலில் சிக்கலாம்.


பேரறிவாளனுக்கு பரோல்: மு.க ஸ்டாலின் வரவேற்பு

அடையாளமற்று போயிருக்கவேண்டிய ஜெயாவினை முதல்வராக்கியது ராஜிவ் படுகொலை, அந்த கொலைக்கு உதவியர்தான் இந்த பேரரிவாளன்.

அக்கொலையினை தொடர்ந்து திமுக தடைசெய்யும் அளவிற்கு நெருக்கடியில் தள்ளபட்டது, நெருப்பாற்றினை நீந்தி கடந்த அந்த கட்சி, பின் 2009ல்தான் தன் தவறுக்கு பிராசித்தம் கண்டது.

அந்த பேரரிவாளன் பரோலுக்கு இவர் வரவேற்பு தெரிவிக்கான்றாராம், பாஜகவினை எதிர்க்கின்றேன் பேர்வழி என ஸ்டாலின் இம்மாதிரி காரியங்களில் இறங்கினால் அது மகா ஆபத்தானது.

மகா உறுதியாக சொல்லலாம் திமுகவின் எதிரி வேறு எங்கேயுமில்லை..


 

தனுஷ் சிகரெட் பிடிப்பதுதான் பிரச்சினையாம்

Image may contain: 1 personஇப்படி எதிர்ப்பு கிளம்புவது எங்கு தெரியுமா? ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் அல்ல, மாறாக யாழ்ப்பாணத்தில்


வழக்கமாக அங்கிருந்து இந்திய எதிர்ப்பு குரல்கள் வரும், இந்திய மீணவர் எதிர்ப்பு வரும்

இப்பொழுது தனுஷ் சிகரெட் பிடிப்பதுதான் அவர்கள் பிரச்சினையாம்

ஆசியாவின் மிக மோசமான பாதுகாப்பற்ற நகரமாக யாழ்பாணம் மாறிகொண்டிருக்கின்றது என்கின்றன செய்திகள்

போதைபொருள் தட்டுபாடின்றி கிடைக்கின்றது, வெத்து குத்து கொலை கொள்ளை வாடிக்கையாக நடக்கின்றது, போரினால் சீரழிந்த பகுதிகளில் நடக்கும் எல்லா அட்டூழியமும் அங்கு நடக்கின்றது

சமீபத்தில் நீதிபதி சுடபட்ட செய்தி கூட வந்தது

தமிழக மீணவன் இலங்கை சிறையில் இருக்கின்றான், அவன் படகு பிடித்துவைக்கபட்டிருக்கின்றது

இன்னும் ஏராளமான இலங்கை மக்கள் தமிழக முகாம்களில் அகதிவாழ்க்கை வாழ்கின்றார்கள், ஆனால் இவர்கள் கவலை தனுஷின் புகைமேல் இருக்கின்றது.

ஒரு காலத்தில் எப்படி இருந்த யாழ்பாணம்?

இந்த சீமான், வைகோ கால்பட்டபின் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்.


Image may contain: 1 person, close-up

 

 

“சே.. இந்த மனிதனை எவ்வளவு நம்பியிருந்தோம், கலைஞர் ஜெயா செய்யாததை இவரா செய்துவிடுவார் என நம்பியிருந்தது எவ்வளவு முட்டாள்தனம்.

தமிழன் முதல்வரானதில் தமிழனுக்கு விடுதலை என்றால் என் கட்சிக்கு வந்துவிடு என பழனிச்சாமி அழைத்துவிடுவாரே?

இனி என்ன பேசி அரசியல் செய்ய?

பழனிச்சாமி என் சாபம் உன்னை சும்மா விடாது”


 
 
%d bloggers like this: