இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா

No automatic alt text available.இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடித்தவன் வாஸ்கோடகாமா . கேரள கள்ளிகோட்டையில் வந்திறங்கினான். கோவா போன்ற பகுதிகளை பிடித்தபின் அவனை வைஸ்ராய் ஆக்கினார் போர்த்துகீசு மன்னர்.

வாஸ்கோடகாமா கள்ளிகோட்டை பகுதியில் பல பகுதிகளை ஆண்டிருக்கின்றான். இலட்சதீவுகள் எல்லாம் அவன் கட்டுபாட்டில் இருந்திருக்கின்றன , கப்பம் வசூலித்திருக்கின்றான்.

பல யுத்தங்கள் நடந்திருக்கின்றன, அதில் ஒரு யுத்தத்தில் இந்தியாவிலே கொல்லபட்டிருக்கின்றான், அது 1524ம் வருடம், அவன் கல்லறை இன்றுவரை கேரளாவில் உண்டு.

Image may contain: sky, cloud, tree, outdoor and natureஅவன் கொல்லபட்டபின்னரே போர்த்துகீசியர் அடக்கி வாசித்திருக்கின்றனர், அதன் பின் பெரும் யுத்தம் எல்லாம் அவர்கள் இந்தியாவில் நடத்தவில்லை, மாறாக இலங்கை , மலாக்கா என சென்றுவிட்டனர்.

அதன் பின் வந்த வெள்ளையர் மொத்த இந்தியாவினையும் கொஞ்சம் கொஞ்சமாக கைபற்றியிருக்கின்றனர். போர்த்துகிசீயரோ வாஸ்கோடகாமா அன்று கைபற்றி வைத்த பகுதிகளை விட ஒரு சென்ட் கூட பிடிக்கவில்லை.

அவன் யுத்ததில் கொல்லபட்டிருக்கின்றான் என்பதே உண்மை, ஆயினும் அதன் பின் போர்த்துகீசியர் அதிகாரம் ஆங்காங்கே இருந்திருக்கின்றது, பின் வெள்ளையர்கள் வந்து மொத்த இந்தியா

ஆக முதல் முதல் சுதந்திர போராட்டம் அன்றே தொடங்கியிருக்கின்றது, கொச்சியில் அவன் கல்லறை அதனைத்தான் சொல்கின்றது.

ஆனால் வரலாறு எப்படி எழுதபட்டிருக்கின்றது?

வாஸ்கோடகாமா மலேரியாவில் செத்தான் என்று வெள்ளையன் எழுதிவைத்து வரலாற்றை மாற்றியிருக்கின்றான்

சரி இந்தியர் எப்படி எழுதியிருக்கின்றனர்?

1857ல் மீரட்டில் நடந்ததே முதல் இந்திய விடுதலைப்போர், அதாவது வெள்ளையனை எதிர்த்து நடந்த வட இந்திய கலவரமே முதல் இந்திய விடுதலைப்போராம்

தமிழகத்து பூலித்தேவன் அல்லது வங்கத்து போர்களை கூட மறைத்துவிட்டார்கள், வடக்கத்தியர்கள் செய்ததுதான் முதல் விடுதலைபோராம்

உண்மையில் முதல் விடுதலைப்போர் வாஸ்கோடகாமா கால் வைத்த 1500களிலே தொடங்கியிருக்கின்றது.

வாஸ்கோடகாமா காலத்திலிருந்து காந்தி காலம் வரை 450 ஆண்டுகாலம் இத்தேசம் தன் எதிர்ப்பினை தெரிவித்துகொண்டேதான் இருந்திருக்கின்றது, ஒரு காலமும் முழுமையாக அது வெள்ளயரிடம் சரணடையவில்லை.

வெள்ளையர் ஒரு பக்கம் வரலாற்றை மாற்றி வைக்க, இந்தியர்களும் ஒரு பக்கம் மாற்றி வைத்திருக்கின்றார்கள். வாஸ்கோடகாமா கொல்லபட்டதை மறைப்பதில் அவ்வளவு அக்கறை

இந்த வரலாறுகளை மறைத்து குழப்பிய வரலாறுகளே பெரும் சுவாரஸ்யமாக இருக்கும் போலிருக்கின்றது.

இதனையே வெளிசொல்லாதவர்களா கீழடி, ஆதிச்சநல்லூற், பூம்புகார் என முடிவுகளை சொல்வார்கள்???

வரலாற்றை இடையில் வருபவர்கள் மாற்றிவிடலாம் போலிருக்கின்றது,

எல்லாம் சரியாக நடந்திருந்தால் அதிமுகவினை தொடங்கி நடத்தி ஆட்சியினை பிடித்து எம்ஜிஆரை முதல்வராக்கியது சசிகலா எனும் அளவிற்கு மாற்றியிருப்பார்களோ என்னமோ?

 
 

மாவீரன் நெப்போலியனை எழுத சொல்லி கேட்கிறார்கள்…

Image may contain: 1 person, sitting and indoorமாவீரன் நெப்போலியனை எழுத சொல்லி பலர் கேட்டுகொண்டிருக்கின்றார்கள்.

வரலாற்றில் மிக மிக அசாத்திய மனிதன் அவன். அலெக்ஸாண்டர் மன்னனாக பிறந்தான் பேரரசனாக மரித்தான்,ஜூலியஸ் சீசரும் அவ்வகை.

சமுத்திர குப்தனுக்கோ சாணக்கியன் எனும் ஆசான் இருந்தான்.

ஆனால் தன் வாழ்வில் ஒவ்வொரு நொடியினையும் தானே செதுக்கியவன் நெப்போலியன். கிடைத்த வாய்ப்பினில் எல்லாம் தன்னை தூக்கி நிறுத்தி எழும்பியவன்.

அபூர்வ சகோதரர்களில் நாகேஷ் அப்பு கமலை பார்த்து கேட்பார் அல்லவா, “பாதி இங்க இருக்கு மீதி எங்கே?”

அப்படிபட்ட குள்ள மனிதன் அவன், ஆனால் 6 அடி குதிரையில் அனாசயமாக தாவி ஏறும் வித்தைக்காரன். தன் அறிவாலும் தைரியத்தாலும் ஐரோப்பாவினை அலறவிட்ட அசாத்திய ஆற்றல்காரன்

அவன் தோல்வி நிச்சயம் மனிதனால் அல்ல, நேருக்கு நேர் அவனை தோற்கடிக்க யாருமில்லை, இயற்கையிடம் தான் தோற்றான்.

எப்படிபட்டவன் நெப்போலியன்?

படிக்கும் காலத்தில் அவன் அம்பி, ஜோஸப்பினை கண்டபின் அவன் ரெமோ, களத்தில் அவன் அந்நியன். அதுதான் நெப்போலியன். அந்நியன் சினிமாவின் மூன்று பாத்திரங்களுமே அவன் தான்.

மிக மிக சிலிர்க்க வைக்கும் ரசிக்க வைக்கும் வரலாறு அவனுடையது. விதி ஒத்துழைத்திருக்கமானால் உலக வரலாற்றையே மாற்றியிருப்பான்.

இந்திய அரசனாக கூட அவன் முடி சூட்டியிருக்க முடியும்

தானே எழும்பி, ஐரோப்பாவினை அலற வைத்து, போப் ஆண்டவரையே கதற வைத்து , பிரான்சிற்கு பெரும் உச்சம் அளித்துவிட்டுத்தான் அவன் விடைபெற்றான்

அவன் வரலாற்றை பார்க்கலாம்தான்

ஆனால் குஷ்பூ தொடருக்கு நீங்கள் ஆதரவளிக்காத காரணத்தால் நெப்போலியனை பற்றி சொல்ல மாட்டேன் என கோபத்தில் சொல்லிவிட்டு , இனி கொஞ்சநாள் அஞ்ஞான வாசம் செல்ல போகின்றேன்.

குஷ்பூ தொடரினை எல்லோரும் படித்து ஆதரவளித்தால்தான் இனி உங்களோடு சகவாசம், இல்லாவிட்டால் சந்நியாசம் தான்.

குஷ்புவே நமஹ ! : 8

குஷ்புவை சூழ்ந்த கருமேகங்கள்!

 எங்கள் வாழ்வும், எங்கள் மகிழ்வும் மங்கா குஷ்பூ என சங்கே முழங்கு..


தனக்கு திமுக மிக சரியான கட்சி என எண்ணி அதில் 2010ல் ஒரு மே மாதத்தில் இணைந்தார் குஷ்பூ, சூரிய கட்சியில் அந்த அழகு சூரியன் இணைந்தது. குஷ்பூ போன்ற வசீகர முகத்தின் தேவை திமுகவிற்கும் இருந்தது. திமுகவில் அவருக்கு பொறுப்புகள் கொடுக்கபட்டன. திமுக மேடை என்பது வெறும் முகத்தை காட்டிவிட்டு வரும் இடமல்ல, அங்கு நிறைய பேசவேண்டும், அதற்கு நிறைய வாசிக்க வேண்டும்

குஷ்பூ கடுமையாக வாசிக்க தொடங்கினார், எந்த கூட்டம் என்றாலும் அதற்கு அவரின் தயாரிப்பு மிக கடுமையானதாக இருந்தது. சில நேரம் நூலகங்களிலே அவரை காண முடிந்தது. அவரின் இயல்பான தைரியமான குணத்தினால் மேடையில் அவருக்கு சிக்கலே இல்லை, மிக அட்டகாசமாக அசத்தினார். அவரின் தைரியமான பேச்சுக்கு கூட்டம் கூடியது, நல்ல வரவேற்பும் இருந்தது.

“அம்மையார் ஜெயலலிதா” என ஜெயலலிதாவினை விமர்சித்தபொழுது தமிழகம் ஆர்ப்பரித்தது. இவ்வளவு தைரியமாக கலைஞரை தவிர யார் விமர்சிக்க முடியும்? என திமுகவினரே வியந்தார்கள்.

கட்சியில் தனக்கொரு இடத்தை பிடித்தார் குஷ்பூ, அவருக்கான வட்டம் பெரிதாகிகொண்டே சென்றது. திமுக தலமையும் அவரை ஊக்குவித்தது. சுதந்திரம் அடைந்து இந்நாள்வரை தமிழக அரசியல் அந்த கருணாநிதி எனும் ஒற்றைமனிதரை வைத்துதான் நடக்கும். ஒன்று அவரை ஆதரிக்கவேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும் , இரண்டுமல்லாமல் வேறு ஒன்றும் தமிழகத்தில் சாத்தியமே இல்லை.

தமிழக அரசியலில் வெற்றிகொடி நாட்டியவர்கள் எல்லாம் ஒன்று அவர்முன் பணிந்து நின்றிருப்பார்கள் அல்லது அவரால் ஒதுக்கிவைக்கபட்டிருப்பார்கள். அவ்வளவு பெரும் அரசியல் அடையாளம் கலைஞர்

அந்த கருணாநிதி குஷ்பூவினை கட்சியில் சேர்த்து பெரும் பொறுப்புகளை கொடுக்க ஆரம்பித்தார் என்றால் குஷ்பூவிற்கு இருந்த மக்கள் அபிமானத்தை அவர் உணர்ந்திருந்தார். 2011 தேர்தலில் திமுகவின் பெரும் வலுவான பிரச்சார பீரங்கியாக மாறியிருந்தார் குஷ்பூ, பெரும் கூட்டம் அவருக்காக திரண்டது. பெரும் மாநாடுகள் போல அவரின் கூட்டம் இருந்தது.

தேர்தலில் ஏராளமான காரணங்களால் திமுக தோற்றிருந்தாலும், குஷ்பூவின் பிரச்சாரமும் அவரின் உழைப்பும், அவருக்காக கூடிய கூட்டமும் பெரும் செய்திகளாயின‌

ஒரு கட்டத்தில் திமுகவின் மகா முக்கியமான உரையினை ஆற்ற அவர் குஷ்பூவிற்கு வாய்ப்பு கொடுத்தபொழுதுதான் திமுகவில் குஷ்பூ வந்திருக்கும் உயரம் அனைவருக்கும் புரிந்தது

கட்சிக்கு வந்து வெகு சில காலமாக இருந்த பலரை ஓரம்கட்டி அந்த வாய்ப்பினை பெற்றார் குஷ்பூ

அதாவது திமுகவின் மிக பெரும் கொண்டாட்டதில் ஒன்று முப்பெரும் விழா. அண்ணா, பெரியார் பிறந்தநாள் திமுக தொடக்கவிழா என்ற மூன்றையும் சிறப்பிப்பார்கள், பெரும் விழா அது.

அந்த உரையினை ஆற்றத்தான் குஷ்பூவிற்கு வாய்ப்பு கிடைத்தது, திமுகவில் மிகபெரும் கவுரவம் அது. மகா அனுபவம் வாய்ந்த கலைஞர் அந்த அளவிற்கு குஷ்பூ திமுகவிற்கு உறுதுணையாக இருப்பார் என கணித்திருந்தார்.

குஷ்பூவின் இந்த பெரும் உயரம்தான் அவருக்கு கட்சிக்குள் சிலரின் முணுமுணுப்பினையும் ஏற்படுத்தியது. ஆனாலும் எதிர்ப்பிலே எங்கும் வளர்ந்தவர் குஷ்பூ, அதனால் அனாசயமாக எதிர்ப்புகளை தாண்டி அரசியலில் நின்றார். ஒரு பக்கம் கட்சி என்றாலும் மறுபக்கம் சினிமா தயாரிப்பு , சீரியல் என மிக பிசியாகவே இருந்தார் குஷ்பூ. ஒரு நொடியும் அவர் சும்மா இருக்கவில்லை. குஷ்பூவால் திமுக புதுபலம் பெற்றுகொண்டிருந்தது, 2ஜி ஈழம் போன்ற பல பிரச்சினைகளைகளுடன் திமுக ஓடிகொண்டிருந்த அந்த நேரத்தில் மறுபடி அதே கண்கள் குஷ்பூவினை நோக்கின

எந்த கண்கள்?

முன்பு கற்பு பற்றி பேசியதாக சொல்லி எல்லா நீதிமன்றத்திலும் நிறுத்திய அதே கண்கள்.

அந்த அளவு குஷ்பூ மீது அவர்களுக்கு தீரா கோபம் இருந்தது, அவர் திமுகவிற்கு வந்தபின் அது அதிகமானது அதனால் இப்படி அவமானபடுத்தி மகிழ்ந்தது அக்கொடிய கூட்டம் இம்முறை மிக மிக குதர்க்கமாக, கோணல் புத்தியாக , சீழ்பிடித்த சிந்தையாக யோசித்தார்கள். அறிவினை சுத்தமாக இழந்து குஷ்பூவினை அவமானபடுத்தவேண்டும் என்பதற்காகவே எழுதினார்கள்.

ஒரு முன்னணி வாரப் பத்திரிகை அந்த கயமைக்கு துணை சென்றது. இரண்டாம் மணியம்மை என‌ குஷ்பூ மீது சேறு வீசி மகிழ்ந்தது. திமுக பாசறை சலசலத்தது, பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. கொஞ்சமும் ஏற்கமுடியாத இந்த செய்தியினை எதிர்த்து தமிழகமே கண்டித்தது. குஷ்பூ கண்ணீர் விட்ட நேரமதுதான், அவரின் ரசிகர்களுக்கு நெஞ்சில் ரத்தம் வந்த நேரமும் அதுதான்.

யாருக்கு குரு இல்லை? இந்திரா காந்திக்கு இருந்தார்கள், ஜெயலலிதாவிற்கு இருந்தார்கள் அப்படி கலைஞரும் குஷ்பூவிற்கு குருவாகத்தான் இருந்தார். ஆனால் இவரை மட்டும் குறிவைத்து அவதூறு பரப்பியவர்களின் கொடூரம் குறுக்கு புத்தி எப்படிபட்டதாக இருக்கவேண்டும். பின் ஒருவழியாக அவற்றை கடந்துவந்தார் குஷ்பூ. கட்சிக்குள் அவருக்கு பெரும் வரவேற்பு இருந்தது. கிட்டதட்ட பாஜகவில் சுஷ்மா சுவராஜ் போல திமுகவிற்கு பெரும் தூணாக மாறியிருந்தார் குஷ்பூ.

விரைவில் அவர் மேல்சபை எம்பி ஆகலாம் போன்றதொரு நிலை இருந்தது. திமுகவின் முண்ணணி தலைவராகவும் ஆகியிருந்தார். குஷ்பூ எந்த உள்நோக்கம் கொண்டோ, கட்சியில் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்றோ உழைக்கவில்லை. கட்சி தலமை சொன்னதை ஒரு தொண்டராகத்தான் செய்தார். ஆனால் அவரின் வளர்ச்சி பலரின் கண்களை உறுத்தின‌. அவரை குறித்துகொண்டார்கள், இவரின் மக்கள் அபிமானம் அதிகம், இப்படியே விட்டால் மிக விரைவாக திமுகவின் பெரும் தலைவராகிவிடுவார் எனும் அச்சம் உள்ளே உள்ளவர்களுக்கு ஏற்பட்டது.

அப்பொழுது திமுகவில் அடுத்த தலைவர் யார் என சர்ச்சை எழுந்த நேரம், பலவிதமான சர்ச்சை வந்தபொழுது குஷ்பூவும் அதுபற்றி பேசவேண்டியதாயிற்று. மனதிற்கு சரியென்றால் எதற்கும் அஞ்சாமல் உண்மையினை சொல்லும் துணிச்சல் கொண்டவர் குஷ்பூ

அவர் தனக்கே உரித்தான துணிச்சலில் சொன்னார், “திமுக ஒரு ஜனநாயக இயக்கம், அங்கு அடுத்த தலைவர் முறைப்படித்தான் தேர்ந்தெடுக்கபடுவார், யூகங்களுக்கு பதில் சொல்லமுடியாது” ஒரு அரசியல் கட்சியின் தலைவரில் ஒருவராக அவர் இப்படித்தான் சொல்ல முடியும், அதனைத்தான் சொன்னார். அதற்குள் திமுகவினர் பொங்கி எழுந்தார்கள், அவர் வீட்டு மேல் கல்வீசும் அளவிற்கு தரம் தாழ்ந்தார்கள்.

கலைஞரின் தொண்டர்கள் அப்படி செய்யகூடியவர்கள் அல்ல, இது வேறு ஏதோ தூண்டுதலில் திமுகவினர் என சொல்லபட்டவர் செய்த ரகளைகள். குஷ்பூ வீட்டு கண்ணாடி கற்களால் நொறுங்கியது, பெரும் கலவரம் நடந்த இடம் போல அவர் வீடு ஆனது. ஆனால் குஷ்பூ கொஞ்சமும் அசரவில்லை, தன் கருத்தில் உறுதியாக நின்றார். அந்த சம்பவம் அவருக்கு உணர்த்தியது ஒன்றே ஒன்றுதான்

கட்சி கலைஞர் கட்டுபாட்டில் இல்லை, அவர் கட்டுபாட்டில் இல்லாத கட்சியால் தன் உயிருக்கு கூட ஆபத்துநேரலாம்.

அவர் திமுக குறித்து முடிவெடுக்கும் நேரம் நெருங்கிற்று

பூ பூக்கும்…

இன்றைய தமிழகம்…

நான் நினைத்திருந்தால் சசிகலா என்னை முதல்வராக்கியிருப்பார், ஆனால் நான் தான் ஆகவில்லை : தினகரன்

அதாவது திண்ணையில் கிழவர்கள் அமர்ந்து கொண்டு, அந்த காலத்திலே நான் கட்ட வேண்டிய பெண் அது என எங்கோ இருக்கும் கிழவினையினை பார்த்து சொல்வது போல அன்னார் சொல்லிகொண்டிருக்கின்றார்.

சசிகலாவே முதல்வராக ஆசைபட்டு, விழா பந்தல் எல்லாம் போடபட்டு, பன்னீரை கழுத்தைபிடித்து விரட்டி, கூவத்தூரில் பாசறை அமைத்து என்னவெல்லாம் செய்தார், பின் வழக்கு வாள் வீசபட்டு அம்மையார் சிறைக்கு சென்றார்

பின் ஆர்.கே நகரில் வென்று முதல்வராகலாம் என திட்டமிட்ட தினகரன் திகாருக்குத்தான் செல்ல விதி இருந்தது.

நடந்த சம்பவம் அப்படி இருக்க, இவர் ஏதோ விட்டுகொடுத்தது போல பேசிகொண்டிருக்கின்றார்.

 

விவேகம் படத்தைக் கடுமையாக விமரிசித்தவர் மீது நடவடிக்கை எடுக்க ராகவா லாரன்ஸ் கோரிக்கை

அதாவது இந்த விவேகத்தை விட ஏதோ ஒரு மொக்கை படத்தை லாரன்ஸ் எடுத்திருப்பார் போல, அதனை பிரித்து மேய்ந்துவிடுவார்கள் எனும் அச்சம் வந்திருக்கலாம்

வரும் முன் காக்க நினைக்கின்றாராம்..


ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகர்: தமிழகக் காவல்துறையை புகழ்ந்த முதல்வர் பழனிசாமி

இந்த ராமஜெயம் கொலைவழக்கு என்னாயிற்று என முதல்வரிடம் கேட்டாலும் பதிலிருக்காது. ஒருவேளை அது ஸ்காட்லாந்து யார்டாலும் கண்டுபிடிக்க முடியாத மர்மமோ என்னமோ?

இப்பொழுது திடீரென தமிழக காவல்துறையினை பழனிச்சாமி கொண்டாடும் மர்மம் என்ன?

சசிகலாவினை கட்சியினை விட்டு நீக்கினால் கலவரம் வெடிக்கும் என சசிலலா ஆதரவாளர் மிரட்டும் நிலையில், எப்பொழுதும் அதிமுகவில் குத்துசண்டை நடக்கும் எனும் நிலையில் ஏன் பழனிச்சாமி இப்படி சொல்ல வேண்டும்?

ஆக ஏதோ நடக்க போகின்றது, எது நடந்தாலும் காவல்துறை கண்டுபிடித்து தடுத்துவிடும் என அவருக்கு முன் கூட்டியே தெரிந்திருக்குமோ??

 

பாஜகவில் இணைந்தார் நயினார் நாகேந்திரன்

இனி நாகர்கோவிலை தொடர்ந்து, நெல்லையும் பாஜகவிற்கு என்பது முடிவாயிற்று.

ஆனால் இப்பொழுது அதிமுகவில் இருந்தால் என்ன? பாஜகவில் இருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதானே?

பின்னர் ஏன் இவர் தனியாக இணைந்தார்?


எங்களை கடவுளை தவிர யாரும் மிரட்ட முடியாது, பணம் பாதாளம் வரை பாயாது : தினகரன்

அதாவது கடவுளை தவிர எல்லோரையும் மிரட்டுவோம் என்பது அதன் மறைமுக பொருள், அது பழனிச்சாமிக்கானது, நமக்கென்ன?

ஆனால் பணம் பாதாளம் வரை பாயாது என சொல்கின்றார் அல்லவா? ஆயிரம் இருந்தாலும் இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்தாலும் மீட்க முடியாத சோகத்திற்கு எடுத்துகாட்டாய் சிறை சென்றவர்.

அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.