கம்பீரமான காவல்துறை வேடம், குஷ்பூவினை தவிர யாருக்கு பொருந்தும்?

மணிரத்னம் மகனிடம் இத்தாலி வெனிஸ் நகரில் திருட்டு. டிவிட்டரில் சுகாசினி உதவி கோரியதால், இத்தாலியில் பலர் உதவினர் : செய்திImage may contain: 1 person, smiling, close-up

“திருடா திருடா” போன்ற மணிரத்தினத்தின் படங்களை மிக நன்றாக ரசித்த எவனோ, அவர் மகனிடமே கைவரிசையினை காட்டிவிட்டான். மணிரத்னம் மகன் காஷ்மீருக்கு போகாமல் இருப்பது இன்னும் நல்லது.

இத்தாலி, பிரான்ஸ் எல்லாம் இப்பொழுது கொள்ளைக்கு பெயர் பெற்றுவிட்டன, மிக சாதரணமாக கொள்ளைகள் நடக்கின்றன, பிரான்சில் பெரும் பாதுகாப்பு மிக்க்க ஹோட்டல்களில் பெரும் புள்ளிகளிடமே மிக அசால்டாக கொள்ளையடிகின்றனர். இதில் மணிரத்னம் மகன் ஜூஜூபி.

இதே வெனிசில் கொஞ்சநாளைக்கு முன்பு குஷ்பூவும் சென்றிருந்தார், அவர் கால் செருப்பை திருடி ஏலம் விட்டிருந்தால் கூட பல மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போயிருக்கும்,

ஆனால் ஒரு கொள்ளையனும் அவர் பக்கம் வரவில்லை, காரணம் தலைவியின் தங்கமுகத்தை பார்த்தால் கொல்லவரும் பாம்பும் புலியுமே மனம் மாறி பணிந்துவிடும் பொழுது இந்த அற்பமானிட கொள்ளையர்கள் மனம் மாறாதா?


சசிகலா மீது துணிந்து குற்றம் சாட்டிய ரூபாவின் கதை சினிமா படமாகிறது, நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு.

சசிகலா வேடத்தில் நடிக்க வேண்டியவரை, அந்த இளவரசி வேடத்திற்கு கூட பொருந்தா நயனை, இந்த ரூபா வேடத்தில் நடிக்க வைத்தால் படம் உருப்படுமா?

அது கம்பீரமான காவல்துறை வேடம், குஷ்பூவினை தவிர யாருக்கு பொருந்தும்?

ஆனாலும் இந்த செய்தி இந்த Babu RaoChandran Kannan ஆகியோர் கண்ணில் படாமலே போகட்டும், பார்த்துவிட்டால் அவ்வளவுதான், இம்சை தாளாது.


 
 

சீன இந்திய படைகள் வாபஸ் , சர்ச்சை ஓய்ந்தது : செய்தி

big_461556_1498751421.jpg

எல்லையில் சீன இந்திய படைகள் வாபஸ் , சர்ச்சை ஓய்ந்தது : செய்தி

எதற்காக சர்ச்சை வந்தது? சீனா சாலை அமைத்ததற்காக, ஆனால் அச்சாலை என்ன ஆனது என இரண்டு பயலுமே சொல்லவில்லை

சாலை அமைந்து இந்தியா பின்வாங்கினால் சீனாவின் வெற்றி, சாலையினை தடுத்துவிட்டு சீனாவினை விரட்டியிருந்தால் அது இந்தியாவின் வெற்றி

ஆனால் டெல்லியும் சத்தமில்லை, பீஜிங்கும் மகா அமைதி

இரு நாடுகளும் சும்மா அல்ல, இரண்டுமே சவுண்ட் பார்ட்டி. சீன அரசின் ஊடகமாகன ஷிங் வா சும்மாவே பீத்திகொண்டிருக்கும், ஒருவேளை இந்தியா பணிந்திருந்தால் இந்நேரம் அது “ஹோ சீ ட்ங் டிங் டெங் பிங்” என நிலா வரைக்கும் மணி அடித்து சொல்லியிருக்கும்

இங்கோ மோடி பக்தர்கள் பற்றி சொல்ல தேவையே இல்லை, டிரம்பே அலறும் அளவிற்கு ஆர்பரித்திருப்பார்கள்

உண்மையில் என்னதான் நடந்தது? புரியவே இல்லை, என்னதான் ஆனது சாலை?

ஒருவேளை நிலத்தில் இல்லாமல் பாலமாக கட்டிவிட்டார்களோ?

எடப்பாடி ‍பழனிச்சாமி டெல்லி பயணம்

Image may contain: 2 peopleஎடப்பாடி ‍பழனிச்சாமி டெல்லி பயணம்

புகழ்பெற்ற காமெடியர்கள் எல்லாம் இரட்டையர்களாகவே இருப்பது ஒன்றும் புதிதல்ல, பல தமிழக சினிமாக்களிலே பார்த்ததுதான்

இருவரும் டெல்லி சென்று என்ன சொல்வார்கள்??

“அய்யா, எசமான் வணக்கமுங்க, நீங்க சொல்றபடியெல்லாம் செஞ்சா 4 வருசம் கடத்தலாமுண்ணு நெனச்சோமுங்க, ஆனா அந்த கோஷ்டி விடாது போலிருக்குங்க‌

எங்க கிட்ட எத்தனை பேர் இருக்காங்கண்ணு எங்களுக்கே தெரியலங்க, சபாநாயாகர கூட நம்ப முடியலங்க‌

உங்கள நம்பித்தானுங்க இருக்கோம், ஏதாச்சும் பண்ணுங்க எசமான், தூங்க முடியல.

இன்னொரு விஷயமுங்க, நீங்க எவ்வளவு டீசண்டு. எங்களை எல்லாம் ஆட்டிவச்சிட்டு என்னைக்காவது சென்னை பக்கம் வந்திருக்கீங்களா?

ஆனா இந்த தமிழக பாஜக அப்படி இல்லீங்க, இந்த எச்.ராசா எல்லாம் வந்து உத்தரவு போடுறாங்க, முடியலீங்க அழுகையா வருதுங்க…

எஸ்வீ சேகர், கஸ்தூரி எல்லாம் இனி வரிசையா வருவாங்களோன்னு நினைச்சாலே நெஞ்சு வெடிக்குதுங்க….”


அதிமுகவை பிஜேபி தான் ஆட்டிப் படைக்கிறது: காடுவெட்டி குரு

அதனை பாமாகாவினை ஆட்டி படைப்பவர் சொல்வதுதான் காமெடி.


இலங்கை கடற்படை தளபதியாக தமிழர் சின்னையா

இலங்கை கடற்படை தளபதியாக தமிழர் சின்னையாவினை வைத்தாலும் வைத்தார்கள் , இலங்கையில் அவரை கொண்டாடுகின்றார்கள்

அவர் யார் தெரியுமா? இந்தோனேஷியா பக்கம் நின்றிருந்த புலிகள் கப்பலை அழித்த மாவீரன், திருகோணமலை பக்கம் நின்று புலிகளை ஒழித்த சூரன் என்றெல்லாம் கடும் கொண்டாட்டம்

ஆக புலிகளை ஒழித்ததில் ஒரு தமிழன் பெரும் பங்களிப்பினை செய்திருக்கின்றான்

இனிதான் இருக்கின்றது அடுத்த சிக்கல், எல்லை தாண்டும் தமிழக மீணவர்களை பிடிப்பதெல்லாம் இலங்கை கடற்படைதான். அதன் தலைவர் இனி தமிழர்

இனி இங்கிருது கொண்டு சிங்களன் அடிக்கின்றான், பிடிக்கின்றான் என சொல்ல முடியாது. தமிழன் தான் தமிழன் படகினை பிடிக்க போகின்றான்

அப்பொழுது இங்கிருக்கும் சைமன் கோஷ்டி எப்படி கொதிக்கும்?

“ஏ சிங்கள அரசே.. தமிழனுக்கு உயர் பதவி கொடுக்காதே, அவனுக்கு அரசு வேலையே கொடுக்காதே

இம்மாதிரி பதவியில் தமிழனை வைத்தால் நாங்கள் எப்படி திட்டுவது?

எல்லா அரசு வேலைகளிலும், உயர் பதவிகளிலும் சிங்களனையே வை, தமிழனை விரட்டு. அப்பொழுதுதான் எங்களுக்கு வசதி”

 
 
 

ஜெயலலிதா ஆவி பெரும் கோபத்தில் உள்ளது

ஜெயலலிதா ஆவி பெரும் கோபத்தில் உள்ளது, 30 பேரை பழி வாங்கும் : கேரள ஜோதிடர்

ஏன் ஜெயலலிதா ஆவியினையே தேடுகின்றார் இவர், அந்த ராமசந்திரன் ஆவி இப்பொழுது தன் கட்சி அழிவதை கண்டு ஆக்ரோஷபட்டு சுமார் 100 பேரை கொல்ல தேடாதா?

அந்த ஆவியினையும் அழைத்தால்தான் என்ன?

ஆவி இருப்பது உண்மை என்றால், இப்பொழுது ராமசந்திரனின் ஆவி ஜெயாவின் ஆவியினை தலைகீழாக தொங்கவிட்டு அடித்துகொண்டிருக்கும்…

“ஏண்டி, கட்சியினைத்தான் பிடுங்கினாய், என் கல்லறையினையினுமா பிடுங்க வந்தாய், .”

அட ராமசந்திரன் என்ன? அந்த சந்தண வீரப்பன் ஆவி ஜெயாவினை சும்மா விட்டுவிடுமா?

சசிகலாவுக்கு ஈபிஎஸ் நன்றியுடன் இருக்க வேண்டும்: சுப்பிரமணிய சுவாமி

Image may contain: 1 person, close-upசசிகலாவுக்கு ஈபிஎஸ் நன்றியுடன் இருக்க வேண்டும்: சுப்பிரமணியன் .

சசிகலாவினை ஜெயலலிதாவிற்கு அறிமுகபடுத்திய சந்திரலேகாவிற்கு, ஜெயாவோடு அவர் தங்கி இருந்து உதவ வாய்ப்பளித்த சந்திரலேகாவிற்கு சசிகலா நன்றியோடு இருந்தாரா சுவாமி?

அவர் முகத்திலே ஆசிட் அடித்தது என்ன நன்றி கடனா?

இதனை போல எத்தனைபேருக்கு நன்றிகடன் காட்டியவர் சசிகலா என்பது உங்களுக்கு தெரியாததா?

அந்த சசிகலா கும்பலுக்கு நன்றி இருக்க கூடாது, ஆனால் அவரோடு இருந்தவர்களுக்கு மட்டும் நன்றி இருக்க வேண்டுமா?

மிஸ்டர் சுவாமி, சரி பழனிச்சாமிக்கு சசி உதவினார் அவர் நன்றியோடு இருக்கட்டும் என்கின்றீர்கள்? ஆனால் உங்களையும், சந்திரலேகாவினையும் தொலைக்க தேடிய அந்த சசிகலாவிற்கு நீங்கள் இப்பொழுது நன்றியாய் இருக்கும் மர்மம் என்ன?

நிச்சயமாக பகைவனுக்கு அருளும் நன்னெஞ்சு உள்ளவரே அல்ல நீர் என்பதால் கேட்கின்றோம்

சசிகலாவிற்கு நீங்கள் திடீர் விசுவாசம் காட்டும் மர்மம் என்ன சுவாமி?

கட்சி அடையாளங்களா? தனியார் சொத்தா?

நமது எம்.ஜி.ஆர். நாளிதழ், ஜெயா டி.வி. தனியார் சொத்து, யாரும் கைப்பற்ற இயலாது – விவேக் ஜெயராமன்

நிதானம் இழப்பு என்பது இதுதான், அதிமுகவின் அடையாளமாக கருதபடுவது ஜெயா டிவியும், அந்த நாளிதழும், அது வெறும் காகித குப்பை என்றாலும் அவர்கள் கட்சிக்கு அது அடையாளம்

இப்பொழுது இது இரணடுமே தனியார் சொத்து என பகிரங்கமாக அறிவித்தால் அடிமட்ட தொண்டனிடம் இருக்கும் சசிகலா வெறுப்பு இன்னும் அதிகபடாதா?

சசிகலா குடும்பத்தார் பெரும் பதற்றத்தில் இருக்கின்றனர் என்பதற்கு இதுவே சாட்சி, கட்சி அடையாளங்களை தனியார் சொத்து என சொல்வது அரசியல் அறிவு ஆகாது.

பிக்பாஸ் : எங்க வோட்டுக்கு என்னடா மரியாதை?

Image may contain: 1 person, standingஇந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும் அவமானபடுவோம் என முன்பே கணித்துத்தான் அதனை திருப்ப கமலஹாசன் தமிழக அரசை அடிக்கடி சீண்டுகின்றாரோ என நினைக்க தோன்றுகின்றது.

காரணம் அவருக்கு அந்நிகழ்ச்சி பெரும் அவமானம், சந்தேகமே இன்றி சொல்லலாம்

ஒரு போட்டி என்றால், ஒருவர் வெளியே சென்றால் சென்றதாகத்தான் இருக்கவேண்டும், அதுதான் ஆட்டம். அல்லது புதிது புதிதாக இறக்காமலாவது இருக்கவேண்டும்

இங்கு இரண்டுமே இல்லை

புதிதாக வந்துகொண்டே இருக்கின்றார்கள், சென்றவர்களும் திரும்பிகொண்டே இருக்கின்றார்கள்

இந்த ஆர்த்தி, ஜூலி எல்லாம் ரசிகர்களால் வாக்களிக்கபட்டு வெளியேற்றபட்டவர்கள், இன்று மறுபடியும் அவர்களுக்கு கதவினை பிக்பாஸ் திறந்திருக்கின்றார்

ரசிகர்கள் வாக்களித்து வெளியேற்றியவர்களை , ரசிகர்களை கேட்காமலே உள் இழுத்துபோடுவது பார்வையாளர் முகத்த்தில் காரி துப்புவது போன்றது.

அங்கிள் சைமன் பாணியில் கேட்பதாக இருந்தால் ” ஏண்டா, அவ்வளவு கேணபயலுகளா நாங்க, வோட்டு போடுண்ணு சொல்லுவ, நாங்க போடனும் அப்புறம் உன் இஷ்டத்து அனுப்பி வைப்ப‌

அப்ப நங்க என்ன … க்கு பார்க்கணும்,

எங்க வோட்டுக்கு என்னடா மரியாதை?, கேட்க நாதி இல்லையே, இந்த அநீதியினை கேட்க நாதி இல்லையே, அந்த கமலஹாசனுக்கும் கொஞ்சமும் சிந்தனை இல்லையே”

தன்னால் வெளிஅனுப்பி வைத்தவர்களை மறுபடியும் அழைத்து பல்லை காட்டிகொண்டிருப்பதால் கமலஹாசன் என்பவருக்கு சுத்தமாக மானமில்லை

இனியும் பிக்பாஸ் பார்த்துகொண்டிருந்தால் பார்பவனுக்கு மானமில்லை,

இந்த பகிரங்க மோசடியினை கூட கண்டிக்க தயங்கும் கமலஹாசன், தமிழக அமைச்சர்களை கண்டிக்கும் உரிமையினை இழந்துவிட்டார்.

தமிழக அமைச்சர்களுக்கு மானமில்லை வெட்கமில்லை என்பது உலகிற்கு தெரிந்தது, அதே வரிசையில் தான் கமலஹாசனும் இருக்கின்றார்.

அவர்கள் செய்வது அரசியல் மோசடி என்றால் இவர் செய்வது இன்னொரு வகை மோசடி.

அவர்கள் அவர்களின் பிக்பாஸ் சொன்னதை செய்கின்றார்கள், இவர் இவரின் பிக்பாஸ் சொன்னதை செய்கின்றார், ஆக இருவருமே வாக்களித்தவர்களை ஏமாற்றிகொண்டிருக்கின்றார்கள்

இந்த பிக்பாஸின் அடிமை, அந்த பிக்பாஸின் அடிமைகளை கேள்வி கேட்க என்ன இருக்கின்றது?

இனி அவர் அமைச்சர்களை என்றாவது சீண்டட்டும், அன்று இருக்கின்றது அவருக்கு.

அவர்களை சீண்ட / கண்டிக்க‌ இவருக்கு எந்த தகுதியும் இனி இல்லை..

ஒரு அடிமை இன்னொரு அடிமையினை எப்படி கேள்வி கேட்க முடியும்? அல்லது ஒரு சந்தர்ப்பவாதி இன்னொரு சந்தர்ப பிழைப்புவாதியினை எப்படி கண்டிக்க முடியும்?