தமிழகத்து சார்லி சாப்ளின் என்.எஸ் கிருஷ்னனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

Image may contain: 1 personநெல்லையும் குமரியும் கலைகளுக்கு பெயர்பெற்றவை, நாகர்கோவில் அதில் பல முத்திரைகளை கொடுத்தது திரையிசை திலகம் கே.வி மகாதேவன் , பத்மினி சகோதரிகள், என பலர் வளைய வந்த ஊர் அது. இன்னும் பலர் வந்தார்கள் இன்னும் வருவார்கள்.

அங்கிருந்து பலர் வந்தாலும் தனித்து அடையாளிமிட்டவர் என்.எஸ். கிருஷ்ணன்.

நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன்.

வடசேரி பக்கம் மளிகை கடைகளில் பணியாற்றிவர், டென்னிஸ் கோர்ட்டில் எடுபிடி, பின் வில்லுபாட்டு கலைஞன் அதன் பின்புதான் நாடக கம்பெனி நடிகன்

 

தமிழ் திரையுலகம் பேசா படங்களிலிருந்து, பேசும் படங்கள் வந்த காலத்தில் அவர் நாடக கம்பெனியில் இருந்து சினிமாவிற்கு வந்தார். அக்காலத்தில் எம்ஜிஆர், கலைஞர் அறிமுகமான காலமது, அப்பொழுதுதான் அவரும் வந்தார். எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதிதான் என்.எஸ்.கேவிற்கும் முதல்படம்.

அதுவரை தமிழ்சினிமா சீரியஸ் பாடலாக செல்லும், சிரிப்பு என்று பெரிதாக இருக்காது, அந்த சிரிப்பு காட்சிகளை சிந்திக்கும் விதத்தில் சொல்லும் நுட்பத்தை முதன் முதலில் தொடங்கியவர்தான் என்.எஸ் கிருஷ்ணன்

இன்று காமெடிகள் என்பது குடிப்பது, இரட்டை அர்த்தம் , மகன் தாயினை மிரட்டுவது, புனிதமான ஆசிரியர்களை கேவலபடுத்துவது, கடவுளை கலாய்ப்பது என தலைகீழாக திரும்பிவிட்ட காலம், அப்படி ஆகியிருக்கும் காலத்தில் கலைவாணரின் சிந்தனைகள் சுகமான நினைவுகளை கிளறுகின்றன‌

அவரது காமெடி சிந்திக்க வைத்தது, யார் மனதினையும் புண்படுத்தாமல் அது சிரிக்க வைத்தது. எது மூடபழக்கம், எது சிந்தனைக்குரியது என்பதை மிக அழகாக எதார்த்த காட்சிகளில் கொண்டுவந்தவர் அவர்.

அவரது புன்னகைகான முகமும், துடுக்கான பேச்சும், கலகலப்ப்பான சுபாவமும் அவருக்கு தனி இடத்தை பெற்று கொடுத்தது, குறுகிய காலத்தில் ஏராளமான படங்களில் நடித்தார்.

இரண்டாம் மனைவியாக கட்டிகொண்ட மதுரம் வந்தபின் இன்னும் அவரது படங்களுக்கு தனி மவுசு இருந்தது, அவரது பாடல்களும், அவரின் குரலும் தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியா அடையாளமாயிற்று, புகழின் உச்சிக்கு சென்றார்.

அது தகுதியானதும் கூட, பலமுறை பார்த்தாலும் இன்றும் பொருந்தகூடிய அட்டகாசமான நடிப்பு நுட்பம் அது, கலகலப்பான முகத்துடன் அனாசயாமக கடந்தார் அவர்.
சில படங்களை இயக்கவும் செய்தார், ஏராளமான பாடல்களை சொந்தமாகவும் எழுதினார். அக்காலத்திலே சம்பாதித்து குவித்தவர் அவர். ஆனால் அள்ளிகொடுப்பதில் நிறைய அவருக்கு நிகர் அவரே.

அன்றைய காலத்தில் அவரிடம் உதவிபெறாதவர்கள் குறைவு, அள்ளி அள்ளி கொடுத்திருக்கின்றார். அது ஒரு கட்டத்தில் அவரை திவாலாக்கும் நிலைக்கும் சென்றபின்னும் அவர் மாறவில்லை, பின் சம்பாதித்துகொண்டார்.

திருட வந்தவனுக்கு சோறுபோட்டு அவர் வேலை கொடுத்த கதைதான் பின்னாளில் ஆனந்தம் படத்தில் வந்தது, அவர் வாழ்வில் நடந்த சம்பவம் அது.

அவர் தருமம் எனும் பெயரில் வருமான வரியினை மறைக்கின்றார் என சந்தேகபட்ட அதிகாரி, மாறுவேடத்தில் பொய் மகள் திருமணம் என கைஏந்தி நின்றதும், அப்போது அள்ளிகொடுத்த என்.எஸ்.கேவிடம் கண்கலங்கி, நீர் கர்ணன் அய்யா என கண்ணீர்விட்டு, இனியாவது ஒரு கணக்கு வையுங்கள் என சொன்னதும் அவரின் இளகிய மனதிற்கு எடுத்துகாட்டுகள், நடந்த உண்மை இது

இறுதிகாலத்தில் தன்னிடம் மருந்துவமனையில் பணகட்டுடன் சந்தித்த எம்ஜிஆரிடம் சில்லரையாக கொடு ராமச்சந்திரா, நிறைய பேருக்கு கொடுக்கலாம் என சொன்ன மனம் அவருடையது.

இப்படி ஏராளமான விஷயங்கள் அவரிடம் உண்டு, மதுரம் அவரிடம் மயங்கியதே அறிமுகம் இல்லா மதுரத்திற்கு அவர் அவசரத்தில் உதவியதால்தான், அந்த நன்றி காதலாயிற்று.
சீர்திருத்த கருத்துக்களை சொன்னாலும் காந்தி மீது அவருக்கு பெரும் மரியாதை இருந்தது, நாகர்கோவிலில் அன்றே காந்தி நினைவுதூண் நிறுவியது அவரே

ஒரு மனிதனுக்கு வாழ்வு வரும்பொழுது கூடவே சோதனைகளையும் அனுப்புவது இறைவனுக்கு பிடித்தமான ஒன்று, அதுவும் கலைஞர்கள் ஜாதகம் அப்படியானது.
அவருக்கு விதி லட்சுமிகாந்தன் உருவில் வந்தது, ல்ட்சுமி காந்தன் சினிமா பத்திரிகை நடத்தினார், அதாவது இன்றைய கிசுகிசு கசமுசா பத்திரிகை செய்திக்கெல்லாம் அவர்தான் முப்பாட்டன்.

பத்திரிகை செய்தி எனும்பெயரில் பலரை மிரட்டிகொண்டிருந்தார், பணம் வசூலித்துகொண்டிருந்தார் என அவர் மீது ஒரு சலசலப்பு இருந்தது
அக்காலத்தில் உள்ளவர்கள் கிசுகிசுவிற்கு அஞ்சியிருக்கின்றனர், சில சர்ச்சைகள் வெடித்திருக்கின்றன, அவருக்கு பல எதிரிகள் இருந்தார்கள்.

சர்ச்சை நடக்குபொழுது அந்த லட்சுமிகாந்தன் கொல்லபட்டார், பழி தியாகராஜ பாகவதர் மீதும் திட்டத்திற்கு உதவியதாக என்.எஸ் கே மீதும் விழுந்தது, அது பிரிட்டிசார் ஆண்ட காலம், யாரும் தப்பமுடியாது.

இன்று இருப்பது போல நடிகன் கார் ஏற்றி கொன்றுவிட்டு அசால்ட்டாக வெளிவருவது, பணத்தினை கொடுத்து காரியம் முடிப்பது எல்லாம் பிரிட்டிசார் காலத்தில் இல்லை.
வழக்கு நடக்கும்பொழுது சிறைவைக்கபட்டார் கிட்டதட்ட 3 ஆண்டு கால சிறைவாசம், திறமையான அக்காலத்து ராம்ஜெத்மலானியான வழக்கறிஞர் எத்திராஜின் வாதத்தில் குற்றமற்றவர் என விடுதலையானார் என்.எஸ் கிருஷ்ணன்
அந்த இடைவெளிக்கு பின் தியாகராஜபாகவதர் சரிந்தார்,

ஆனால் என் எஸ்கே பழைய இடத்தினை பிடித்தார், கலைவாணர் பட்டமும் அதன் பின்புதான் வழங்கபட்டது,நல்ல தம்பி போன்ற படங்களை அதன் பின்புதான் கொடுத்தார்.

திடீரென நோயில் விழுந்தார், அது கன்னத்து புற்றுநோயாக இருக்கலாம் என்கிறார்கள், பல் பிடுங்கிய இடத்தில் நிற்காமல் வந்த ரத்தம் அவர் உயிரை பிடுங்கிற்று
சாகும் பொழுது அவருக்கு வயது 49.

தமிழ் சினிமா உலகம் கோஷ்டி சண்டைக்கு பெயர்பெற்றது, அவ்வுலகத்தில் எல்லோருக்கும் பிடித்தமான, எல்லோரும் பழககூடிய ஒரு நடிகன் இருந்திருக்கின்றான் என்றால் அது நிச்சயம் என்.எஸ்.கே ஒருவர்தான்

சென்னையில் அவருக்கு சிலையும் உண்டு, அவர் பெயரில் அரங்கமும் உண்டு

மதுரத்துடன் அவர் செய்த காமெடிகள் காலத்தை கடந்தவை, அவரின் பாடல்கள் இன்றளவும் நினைவுக்கு வருபவை காரணம் எதார்த்த வாழ்வின் பாடல் அது
“எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்”
“ஒண்ணில இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்” போன்ற பாடல்கள் மாத சம்பளம் வாங்குவோரின் நிரந்தர கானம்.

எத்தனையோ விஷயங்களை ரசிக்கதக்க விஷயத்தில் சொன்னவர், சிரிப்பாக சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தவர்.
இயல்பாக வரும் பிறவி ஞானம் என ஒன்று உண்டு, அது அவருக்கு, எம் ஆர் ராதா, பாலையா , நாகேஷ் போன்ற நடிகர்களுக்கு வாய்த்திருந்தது, அதுதான் அவர்களை உயர்த்தி காட்டியது.

தமிழ் சினிமாவில் சிரிப்பு காட்சிகள் இருக்கும் வரை, சிந்தனை கருத்துக்கள் வரும்வரை என்.எஸ் கிருஷ்ணனும் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

நாகர்கோவில் செல்லும்பொழுதெல்லாம் அந்த தெரு, அந்த டென்னிஸ் கோர்ட், அந்த வடசேரி சந்தை என அந்த இடங்களை பார்க்கும்பொழுதெல்லாம் அவர் நினைவே வரும்.

வடசேரி சந்தையில் அக்கால மாட்டுவண்டி வியாபாரிகளிடம் துண்டு கருப்பெட்டி வாங்க வந்து சிரிக்க வைப்பார் என்பது அக்காலத்தவர்கள் சொல்ல கேட்டது, அப்பொழுதே அவருக்கு ரசிகர்கள் இருந்திருக்கின்றார்கள்.
இன்று அவரின் நினைவுநாள், அந்த தமிழகத்து சார்லி சாப்ளின் நினைவுக்கு வருகின்றார்

மறக்கமுடியா நினைவுகள் உண்டு
அண்ணாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார் என்.எஸ்.கே, எதிர் வேட்பாளர் ஒரு காங்கிரஸ்காரர் மருத்துவர். பிரச்சாரத்தில் கடுமையாக டாக்டரை புகழ்கின்றார், அவர் படிப்பென்ன, அவர் கைராசி என்ன? அவர் காப்பாற்றிய உயிர்கள் எத்தனை என பெரும் பாராட்டு

சொல்லிவிட்டு கேட்கின்றார், “சொல்லுங்க டாக்டர் எப்படி?” எல்லோரும் சொல்கின்றார்கள், “சொக்க தங்கம், எங்களுக்கு கிடைத்த வரம்”

“புரிகிறதல்லவா, அவரை சட்டசபைக்கு அனுப்பாமல் இங்கேயே வைத்து கொள்ளுங்கள், உங்களை நன்றாக கவனித்து கொள்வார். அண்ணாவிற்கு மருத்துவம் தெரியாது அவரை சட்டசபைக்கு அனுப்பி விடுங்கள்..”
இதுதான் என்.எஸ.கே,

யார் மனதனையும் புண்படுத்தாமல், புன்னகை பூத்த முகமாய் வாழ்வினை கடந்து சென்ற, எல்லோரையும் சிரிக்க வைத்த பெரும் கலைஞன்,

கலைவாணரின் வாழ்வு சொல்வது ஒன்றுதான்

தமிழகம் மகா வித்தியாசமானது, இங்கு மக்கள் அபிமானம் பெற்றோர்கள் சீர்திருத்த கருத்து பேசினால் எப்படியாவது தொலைத்துவிடுவார்கள், வசமாக வழக்கில் சிக்க வைத்து முடித்துவிடுவார்கள்

அதுவும் சூத்திரன் பேசிவிட்டால் தொலைத்தே விடுவார்கள்

அப்படி வஞ்சக வழக்கில் சிக்கவைக்கபட்ட முதல் நடிகன் என்.எஸ் கிருஷ்ணன் அடுத்து எம்.ஆர் ராதா

இருவரையும் இப்படித்தான் சரித்தார்கள்

இறுதிவரை அக்கும்பலால் தொடமுடியாமல் போனவர்கள் பெரியாரும் , கலைஞருமே. இருவரையும் அவர்களால் நெருங்க கூட முடியவில்லை

உண்மையில் தான் பேசிய மூட நம்பிக்கை ஒழிப்பிற்காகவும், புராணங்களை கிழ்த்து கிண்டல் செய்ததற்காகவுமே வழக்கில் சிக்கவைக்கபட்டு ஒழிக்கபட்டார் கலைவாணர்

மறக்கமுடியாத கலைஞன். அந்த தமிழகத்து சார்லி சாப்ளின். அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

 
  

நாளை மலேசிய சுதந்திர தினம்

Image may contain: sky, skyscraper and outdoorநாளை மலேசிய சுதந்திர தினம்,வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட நாடு தயாராகி விட்டது.

அக்காலத்தில் இருந்தே எல்லா கிழக்காசிய நாடுபோல இங்கும் தமிழர் தொடர்பு இருந்திருக்கது, மலைநாடு என்ற பெயர் மலேயா ஆனது என்பார்கள், ஆனால் பின்னாளில் பர்மா போல மிக நெருக்கமான தொடர்பு இல்லை. காரணம் பர்மீய நிலம் நெல்லுக்கு உகந்தது, ஆறுகள் அதற்கு பெரும் உதவி. அதனால் செட்டியார்கள் கவனம் அங்கேதான் குவிந்தது.

இந்தியா போலவே மலேயாவிற்கு போர்த்துகீசியர் முதலில் வந்தனர், தொடர்ந்து டச்சுக்காரன் அதன் பின் பிரிட்டிசார் வந்து ஆட்சியினை பிடித்தனர். வெள்ளையன் எதனையும் வியாபார கண்ணோட்டத்தோட பார்ப்பவன், அதுவும் மக்கள் ஒத்துழைத்துவிட்டால் அத்தேசத்தையே மாற்றிவிடுவான்

மலேசியா மலை+மழை வளம் மிகுந்த நாடு,அரிசி, கரும்பு, பருத்தி சரிவராது, இம்மாதிரி இடங்களில் தேயிலைதான் உகந்தது. ஆனால அதற்கு அதிகாலை பனிவேண்டும். அதற்காக பனியினை இறக்குமதி செய்யவோ உருவாக்கவோ முடியாது. அம்மண்ணிற்கு ஏற்ற பொருத்தமான பணபயிர் ரப்பர் மரம்.

அதனை ஆரம்பித்தான் குறைவான மக்கள் தொகை கொண்ட மலேய மக்களை கொண்டு பெரும் ரப்பர் தோட்டத்தை பராமரிக்கமுடியவில்லை, தமிழகத்திலிருந்து தொழிலாளர்களை கப்பல் கப்பலாக ஏற்றிவந்தான்.

மலேசியாவின் இன்னொரு வளம் தாதுமணல் போன்றது, சீனத்திலிருந்து ஏராளமான சீனர்கள் வந்து குவிந்தனர், அப்படியாக வளர்ந்த மலேயா ஜப்பானியரிடம் சில காலம் சிக்கி இருந்தனர், பின் மறுபடியும் பிரிட்டன் பிடித்துகொண்டது.

ஆசிய காலணிகள் எல்லாம் விடுதலைபெற்றபோது அவர்களும் பெற்றார்கள், அதாவது இரண்டாம் உலகப்போர் முடிந்து இந்தியா போன்ற யானைகளை அவிழ்த்துவிட்ட வெள்ளையன் , மலேசியா போன்ற கன்றுகுட்டிகளையும் சுதந்திரமாக விட்டான்

மலேசியா வெள்ளையன் காலத்தில் தன்னை உருமாற்றிகொண்ட நாடு, வளர்ந்துகொண்டே இருந்தார்கள், இந்தியா அளவு பெரும் சுதந்திர போராட்டம் நடந்ததாக சொல்லமுடியாது, ஆனால் மலேசிய நலன்களை பெற அவர்கள் தவறியதே இல்லை, அதற்காக கட்சிகளும் சங்கங்களும் இருந்தன.

இந்தியா அவ்வகையில் சுதந்திரத்திற்கு பெரும் போராட்டம் நடத்தியது, ஆனால் ஆனந்த சுதந்திரம் கிடைத்ததும் நாம் தூங்கிவிட்டோம், இன்னும் எழவில்லை.

அதாவது சுதந்திரம் மட்டும் போராட்டமல்ல, கிடைத்த சுதந்திரத்தில் நாட்டை நாடாக வைத்திருக்க தினமும் போராட்டம் தேவை, விழிப்பு தேவை

மலேசியர்கள் அப்படி சுதந்திரத்திற்கு பின்பே கடுமையாக போராடி அந்நாட்டின் நற்பெயரினை நிலைக்க செய்துகொண்டிருக்கின்றார்கள். வெள்ளையன் காலத்தில் உச்சத்தில் இருந்து இன்று தரித்திர தேசமாக மாறிவிட்ட எத்தனையோ நாடுகள் உண்டு.

ஆனால் மலேசியா அவ்வகையில் தொடர்ந்து தன் நிலையினை தக்க வைத்தே வருகின்றது.

இந்நாடு எதிர்கொண்ட சவால்கள் கொஞ்சமல்ல, ஆனால் மக்கள் ஒற்றுமையாக தேசம் எதிர்கொண்ட சவாலை எல்லாம் முறியடித்தார்கள்.

சுதந்திர தொடக்கத்தில் கம்யூனிச போராளிகள் பெரும் சவால், தைரியமாக எதிர்கொண்டார்கள், அதில் முழுவெற்றி பெற்றார்கள். சிங்கப்பூருடன் சர்ச்சைகள் வந்தபொழுது தனியாக பிரித்துகொடுத்து அமைதி காத்தார்கள்.

விட்டுகொடுத்தார்கள், இதோ இருவருமே வாழ்கின்றார்கள். இலங்கை போல யுத்தம் நடத்தி பின் தங்கவில்லை அல்லது இந்தியா பாகிஸ்தான் போல பெரும் ராணுவம் திரட்டி வன்மம் வளர்க்கவில்லை, அமைதி அவர்களை வாழவைக்கின்றது

அதன் பின் செயற்கை ரப்பர் வந்து அவர்கள் பொருளாதரமான ரப்பரை அடித்தது, அதனை பாமாயிலுக்கு மாறி தாக்கு பிடித்தார்கள்.

தாதுமணல் சுரங்கங்களால் சுற்றுசூழல் பிரச்சினை வந்தபொழுது அதனை மூடிவிட்டு தொழில்துறையால் ஈடுகட்டினார்கள். எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொண்டு, போராடிவென்று நிற்கின்றார்கள் என்றால் அதன் முதல்காரணம் மக்களும், அவர்களை காத்து நிற்கும் அரசாங்கமும்.

அரசும் மக்கள் மேல் வைத்திருக்கும் அக்கறை கொஞ்சமல்ல, மக்களின் வாழ்க்கையினையும் அவர்கள் பாதுகாப்பினையும் அரசாங்கம் உறுதிசெய்துகொண்டே இருக்கும், எல்லா வகைகளிலும்.

உதாரணம் ஒருவனுக்கு டெங்கு என வந்து அது மருத்துவமனையில் உறுதிசெய்யபட்டால் சுகாதாரதுறைக்கு தெரிவிக்கபடும், அவர்கள் வீட்டிற்கே வந்து அதன் சுத்தம், நீர் வடிகால் என எல்லாம் சோதிப்பார்கள், அப்படி அவ்வீடு நோய்களின் கூடாரம் என்றால் வீட்டுக்காரருக்கு கடும் அபராதம்.

ரெஸ்டாரண்டுகளின் சமையல் கூடம் கூட அடிக்கடி சோதனைகு உட்படுத்தபடும்.

இதுபோன்ற ஏராளமான விஷயங்களை சொல்லலாம், இரவில் மட்டும் செய்யபடும் சாலை பராமரிப்பு, மின் தடங்கல் என்றால் ஜெனரேட்டர் கொடுத்து மக்கள் வாழ்க்கை பாதிக்கபடாத வசதி கொடுப்பது, குடிநீர் பாதுகாப்பு என விழுந்து விழுந்து பராமரிக்கின்றது அரசு.

அதனால்தான் எல்லாம் முறையாக இயங்குகின்றன, முடுக்கு தகறாறு, வரப்பு தகறாறு , வம்புகளுக்கு எல்லாம் மக்களுக்கு வாய்பில்லை

மக்களும் அரசினை கண்காணித்துகொண்டே இருக்கின்றார்கள், எல்லோர் வீட்டிலும் காலை 5.30 மணிக்கெல்லாம் செய்திதாள் விழுகிறது. எல்லோரும் அரசினை பற்றிய விழிப்புடனே இருக்கின்றார்கள். அரசும் ஒரு சலசலப்பு ஏற்பட்டாலும் மக்கள் குரலுக்கு செவிசாய்க்க தயங்குவதில்லை.

மூவினங்களுக்கும் எல்லா பிரதிநிதித்துவமும் கிடைப்பதில் கவனமாக இருப்பார்கள், அரசு முதல் எல்லா இடங்களிலும் எல்லா சர்விகிதமும் சரியாக இருக்குமாறு பார்த்துகொள்வார்கள், மத கொண்டாட்டமும் அப்படியே

உலகிலே தைபூசத்திற்கு விடுமுறை அளித்திருக்கும் நாடு இது ஒன்றே, அந்த அளவு மன உணர்வுகளை மதிக்கின்றார்கள்.

எல்லா மக்களும் கல்வி பெறவும், எல்லா மக்களுக்கும் வேலை கொடுப்பதிலும் அரசு கருத்தாக இருக்கின்றது, காலியிடங்களை வெளிநாட்டு பணியாளர்களை கொண்டு நிரப்புவதிலும் அது உதவுகின்றது.

நாம் பாகிஸ்தானை பார்த்து ஒப்பீட்டுகொள்வது போல அல்ல இவர்கள், மக்களுக்கு மேல்நாட்டு அரசுகள் எப்படி வசதி செய்துகொடுக்கின்றன என்பதில் கருத்தாக இருப்பார்கள். அது நவீன ரயிலோ, பேருந்தோ இன்ன பிற வசதிகளோ

அங்கு அறிமுகமான கொஞ்ச்நாளில் இங்குள்ள மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுவார்கள், எது எப்படி போனாலும் நாடு நவீன மயத்தில் தன்னை மேம்படுத்தி கொள்ளவேண்டும், மேல்நாட்டு மக்களுக்கு தங்கள் மக்கள் பின் தங்கிவிட கூடாது எனும் அசாத்திய கவனம், அக்கறை.

ஒரு ஐரோப்பிய வெளிநாட்டவன் வந்தால் அவன் சொந்த நாட்டிற்கும் இந்த ஊருக்கும் எந்த வித்தியாசமும் கண்டுவிட கூடாது என கவனமாக அமைக்கபட்டிருக்கும் நகரம் இது.

நான் பார்த்து சிலாகிப்பது ஒரே ஒரு விஷயம், மக்கள் மகா சுதந்திரமான வாழ்வு வாழ்கின்றனர். தனிபட்ட சுதந்திரத்தினை கொண்டாடி தீர்க்கின்றனர், ஆனால் எது அதன் எல்லை என்பது தெரிகின்றது. சமூக அமைதி என்பதை பெரிதும் விரும்புகின்றனர். அது பொதுஇடங்கள் முதல் எல்லா இடங்களிலும் தெரிகின்றது. நெரிசலில் ஒரு ஹாரன் சத்தம் கூட கேட்காது.

அழகான நாடு, அழகான சாலைகள். போக்குவரத்து நெரிசலில் கூட அழகு தெரிவது அங்கேதான். நூல் பிடித்தது போல அழகான நேர்த்தியான வரிசையில் வாகனம் நிற்கும்.

மக்களுக்கு தங்கள் பொறுப்பு தெரிகின்றது. எந்த இனமானாலும் புன்னகை பூத்த முகத்துடன் தாங்கள் மலேசியர் என்றே பெருமை கொள்கின்றனர். புன்னகை பூத்த மக்கள், காவலர்கள் கூட புன்னகைத்தபடியேதான் பணிபுரிவர், ஆனால் குற்றவாளிகளை வேறாகவும், பொதுமக்களை வேறாகவும் அவர்கள் கையாள்கின்றனர். பொது இடங்களில் முகவரி தெரியாதவர்களை மிக கனிவாக உதவுவார்கள்.

வஞ்சமிலா புன்னகை மலேசிய மக்களின் பெரும் அடையாளம், பெரும் பேராசை பொதுவான மக்களிடம் இல்லை. ஒரு வீடு ஒரு வாகனம் ஓரளவு வருமானம் போதும், குழந்தைகளை வளர்க்கலாம் பெரியவர்களானதும் அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில், அவர்களும் அரசு கடனோ சொந்த உழைப்பிலோ படிப்பார்கள், வரதட்சனை இல்லை, பேராசை இல்லை பின் என்ன?

பணம் இருக்கின்றதா உலகம் சுற்றுவார்கள், ஜப்பான் முதல் கனடா வரை சுற்றி கொண்டாடுவார்கள், கடைசி காலத்தில் அமைதியாக கண்மூடுவார்கள்

எனக்கு தெரிந்த ஒரு வடைசுடும் பாட்டி உலகெல்லாம் சுற்றி இருக்கின்றார், கிழக்காசிய நாடு எல்லாம் சுற்றியாகிவிட்டதாம், சமீபத்தில் ஐரோப்பா பார்த்துவிட்டாராம், இனி கனடா செல்லவேண்டுமாம். அவரது பணியாள் ஒரு இந்தோணேஷிய பெண். அவரையும் கூட்டிகொண்டே செல்வாராம்.

அவருக்கு மாவாட்டிகொடுத்திருந்தால் கூட நானும் உலகம் சுற்றி இருக்கலாம், என்னசெய்ய அதற்கும் விதிவேண்டும்.

நாட்டு பொறுப்பு நிறைந்த மக்களும், மக்கள் பொறுப்பு கொண்ட நிர்வாகமும் அமையும் பட்சத்தில் ஒரு நாடு எப்படி உயரமுடியும் என்பதற்கு இந்நாடே சாட்சி. அதுவும் பல இன மக்கள், பல சமய மக்கள் எப்படி மகா ஒற்றுமையாக வாழமுடியும் என்பதற்கும் இந்நாடே சாட்சி.

இங்கு எல்லா நாட்டு மனிதர்களும் உண்டு, எல்லா நாட்டு உணவுகளும் உண்டு. ரசித்து பார்க்க அவ்வளவு விஷயங்கள் உண்டு.

எல்லாவற்றையும் புன்னகையால் கடந்து செல்லும் மலேசிய மக்கள் மனதிற்கு மழை அப்படி கொட்டுகின்றது.

அலுவலகம் தோறும், இல்லங்கள் தோறும் அவர்களின் தேசியகொடி கம்பீரமாக பறக்கின்றது, வானொலி பத்திரிகை எல்லாம் அவர்கள் கடந்துவந்த பாதைகளை, மக்கள் பொறுப்பினை சொல்லிகொண்டே இருக்கின்றார்கள், அப்படி ஆவணபடுத்தி இருக்கின்றார்கள்.

நிச்சயமாக சொல்லலாம் பல இனம் கலந்து வாழும் நாடு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அவர்களே சாட்சிகள், எடுத்துகாட்டுகள்.

இரண்டாம் உலகபோரின்பொழுது மலேயா கடுமையாக பாதிக்கபட்டது, அதன் பின் எழும்பியது. பொதுவாக பிரிட்டிசார் அடிப்படை அமைப்புக்களை அழகாக அமைப்பார்கள், மலேசியா அதனை தொடர்ந்து புதுப்பித்துகொண்டது, இந்தியா அதனை செய்ய தவறிவிட்டது, இங்கு ஆயிரம் சிக்கல்கள், வேறுமாதிரியான பிரச்சினைகள்,

சமூக அமைதியும் விட்டுகொடுத்தலும் மகா அவசியம், சிங்கப்பூர் மலேயா அப்படித்தான் அமைதியாக் வாழ்கின்றன, இரண்டும் பகை நாடுகள் அல்ல, இருவரும் ராணுவத்திற்கு செலவழிப்பவர்கள் அல்ல‌

ஆனால் பாகிஸ்தானும் இந்தியாவும் அதில்தான் தங்கள் பணத்தினை செலவளிக்கின்றன, அதுவும் 10 வருடம் முன்பு வாங்கிய ஆயுதம் இன்று பழையதாகிவிடும், வாங்கிகொண்டே இருக்கவேண்டும், பின் எப்படி தேசம் வளரும்.

ஆயுதம் விற்கும் தேசம்தான் வளரும்.

பிரிட்டிசார் எங்கும் பிரிவினை வைத்தே ஆண்டனர், இந்தியாவில் இந்து முஸ்லீம், இலங்கையில் தமிழர் சிங்களர், பர்மாவில் தமிழர் பர்மீயர் என அவர்கள் அரசியல் அப்படி இருந்தது, பின்னாளில் மலேசியாவும் அப்படியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தது

பர்மா சீரழிந்துவிட்டது, இலங்கை விவகாரம் உலகறிந்தது, இந்தியா பாகிஸ்தான் மகா பிரசித்தம்.

ஆனால் அசால்ட்டாக தாண்டி இன்று பலநாட்டு மக்களை விட‌ முண்ணணியில் தன் மக்களை வாழ்வாங்கு வாழ வைக்கின்றது மலேயாவும் சிங்கப்பூரும்

வன்மத்தாலும் விரோதத்தாலும் வீழ்ந்தவர்கள் அவர்கள். அன்பாலும் சகோதரத்துவத்தாலும் வாழ்வாங்கு வாழ்பவர்கள் இவர்கள், அன்பும், நம்பிக்கையும், சகோதரத்துவமே அமைதியாக வாழ வழி என சொல்லிசாதித்திருப்பவர்கள் இவர்கள்.

அதனைத்தான் நினைத்தாலே இனிக்கும் படத்தில் பாடலாக வைத்தார் கவியரசர்,” நண்பர் உண்டு , பகைவர் இல்லை. நன்மை உண்டு தீமை இல்லை” என அந்நாடுகளை அழகாக பாடலில் வைத்தார்

சுதந்திர தினத்தினை கொண்டாடும் அவர்கள் பெருமிதத்தோடு கொண்டாடுகின்றார்கள், இன்னும் போராடி அவர்கள் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் காத்துகொண்டிருக்கும் பெருமையான அவர்கள் கொடி எல்லா இடங்களிலும் பறக்கின்றது.

அவர்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

தெய்வீக கவிஞர் கண்ணதாசனின் “யாதும் ஊரே யாவரும் கேளிர், அன்பே எங்கள் உலக தத்துவம்” பாடல் மனதோரம் ஒலிக்கின்றது, அவ்வளவு அர்த்தமுள்ளதாக அவர் எழுதியிருப்பார்

மலேய மக்களின் மனமும் நாட்டின் செழுமையும் அப்படி சொல்லியிருப்பார் அவர்.

அந்த பாடல் எல்லா காலமும் பொருந்திவருகின்றது என்பதுதான் மகிழ்ச்சிகுரியது, அவர்கள் நாட்டிற்காக அவர் எழுதிய அற்புதமான பாடல்.

எனக்கு மிக பிடித்தபாடலும் அதுவே, குஷ்பூ நடித்திருந்தால் அது இன்னும் மிகசிறந்தபாடலாக இருந்திருக்கும்.

 

உண்மையான திமுக என ஒரு பயலும் இல்லை

சசிகலா மீதான வழக்குகளை காட்டி, தினகரன் மீதான வழக்குகளில் மிரட்டி, பன்னீரையும் பழனிச்சாமியினையும் பார்வையிலே கதறவைத்து பாஜக மிரட்டலாம் அதன் மூலம் அதிமுகவினை விரல் நுனியில் ஆட்டலாம்

ஆனால் ஸ்பெக்ட்ரம் வழக்கினை, தயாநிதி மாறன் வழக்கினனை காட்டி கலைஞர் குடும்பத்தையும் மிரட்டி திமுகவினை ஆட்ட நினைத்தால் அக்குடும்பத்தை ஒதுக்கிவிட்டு திமுகவினை காக்க உண்மையான திமுகவினர் முன்வருவார்கள் எனறொரு குரல் எங்காவது கேட்கின்றதா என்றால் இல்லை

உண்மையான திமுக என்றால் அக்குரல் நிச்சயம் கேட்கும், ஆனால் தளபதி ஜால்ரா, கனிமொழி ஜால்ரா திமுக என்றால் அக்குரல் நிச்சயம் கேட்காது.

“ஏ ஆரிய பாஜகவே அக்குடும்பத்தை மட்டும் வேண்டுமானால் மிரட்டலாம், ஆனால் அவர்களின்றியும் திமுக இயங்கும். இது பகுத்தறிவு இயக்கம், பெரியார் ஏற்றிய நெருப்பு

அண்ணா இன்றி அவர் குடும்பம் இன்றி இயங்கிய இந்த மாபெரும் நெருப்பு இயக்கம் கலைஞர் இன்றியும் அவர் குடும்பம் இன்றியும் இயங்கும், முடிந்தால் தொட்டுபார்” என்றொரு குரல் எங்காவது இருந்து வருமா என எதிர்பார்த்தால் வரவே இல்லை

அதாவது உண்மையான திமுக என ஒரு பயலும் இல்லை

அதிமுகவில் இன்று தெரியும் பலகீனம், திமுகவில் கொஞ்சநாள் கழித்து தெரியும் அவ்வளவுதான் விஷயம்

அதிமுக அழிந்துவிட கூடாதாம் : திமுக

இப்பொழுதெல்லாம் சில திமுகவினருக்கு அதிமுக மீது பாசம் பொத்துகொண்டு வருகின்றது, அதிமுக அழிந்துவிட கூடாதாம். அது அழிந்தால் பாஜக வளருமாம்

திமுக தீயாய் தன் பகுத்தறிவு கொள்கைகளை பரப்பினால் பாஜக‌ எப்படி வளரும்?

ஏன் பயம்? பகுத்தறிவினை பரப்ப உழைக்க வேண்டும் எனும் பயமா?

இவ்வளவுதானா உங்கள் நம்பிக்கை?

பாஜகவினை எதிர்க்க முடியாத அளவிற்கா திமுக பலம் கெட்டு போயிற்று? அப்படியா அஞ்சுகின்றீர்கள்? அப்படியானால் இது வீழ்ச்சி அல்லவா?

கலைஞர் அதிமுக அழியவேண்டும் என விருப்படவே இல்லையாம், அவர் ரகசியமாக ஆதரித்தாராம்.

பின் என்ன மண்ணாங்கட்டிக்கு அவர்களை எதிர்த்து அரசியல் செய்தார்? தமிழக மக்களை கலைஞர் ஏமாற்றினார் என சொல்லவருகின்றீர்களா?

ரகசிய ஆதரவென்றால் ஏன் மல்லுகட்டி அந்த சொத்துகுவிப்பு வழக்கினை திமுக நடத்தியது என்றால் பதில் இல்லை.

விட்டால் சசிகலா சிறையில் இருப்பதால் தன் தவறை எண்ணி கலைஞர் அழுது புலம்பி மவுனவிரதம் இருக்கின்றார் என சொல்லிவிடுவார்கள் போல..


அதிமுக அணிகள் இணையாவிட்டால் பல ரகசியங்களை வெளியிடுவேன் : கோவை எம்பி நாகராஜன்

அய்யா, வெளியிடுவதே வெளியிடுகின்றீர்கள். அந்த எம்ஜிஆர் காலத்து ரகசியங்களயும் வெளியிடுங்கள். உங்களுக்கு புண்ணியமாக போகும்.


 

“ரொகிங்கியா” ஒழிக்கபடும் ஓர் இனம்.

Image may contain: 2 people, people standing and outdoor“ரொகிங்கியா” ஒழிக்கபடும் ஓர் இனம்.

அன்பிற்கும் அறத்திற்கும் உலகின் அடையாளமாய் ஜொலித்தது புத்தமதம், அசோகர் போன்ற பெரும் அரசர்களையே அது உள்வாங்கிற்று, இந்தியாவின் அம்பேத்கார் போன்ற மேதைகள் கூட விரும்பி ஏற்ற கொள்கை அல்லது மார்க்கம் அது.

எந்தபுனிதமான மதமும் அரசியல் எனும் ஆதிக்கசக்திக்கு அடித்தளமானால் என்னென்ன விபரீத, மனிதகுல அழிவுகள் தோன்றும் என்பதற்கு வரலாறுமுழுக்க சுவடுகள் கிடக்கின்றன, இன்றளவும் மேற்காசியா அப்படித்தான் எரிந்துகொண்டிருக்கின்றது.

மற்ற மதங்களை விட பொறுமையின் அடையாளமான புத்தமத நாடுகள் என தம்மை அறிவித்துகொண்ட நாடுகளான தெற்காசியாவின் வளமான பர்மாவும், சிலோனும் இன்று தரித்திர மியன்மாரும், லங்காவும் ஆகிவிட்ட பின்னரும், இன்னும் அம்மதத்தின் பிடியில் அரசியலில் சிக்கி, இன்னும் சீரழிய தயார் என பகீரங்கமாக அடம்பிடிப்பதுதான் புத்தருக்கே அத்தேசம் திருந்தாதா? என ஆசை வரும் முரண்.

புத்தசங்கங்களால் சீரழிக்கபட்ட இலங்கையும், அவர்களை எதிர்த்து கிளம்பிய ஈழபோராட்டம் திசைமாறி சென்றதும், அதனால் ஏற்பட்ட தமிழர் அழிவும் கடும் துயரமிக்கவை. லட்சகணக்கான மக்களின் வாழ்வை நிர்மூலமாக்கிவிட்டு இன்னும் புத்தம் சரணம், தமிழரை கொல்ல எந்த நாட்டோடும் சரணம் என சொல்லிகோண்டிருப்பது ரகசியம் அல்ல.

அன்றைய பர்மா ஒரு சொர்க்கபுரி, தமிழக செட்டியார்களின் அபார நிர்வாகத்தில் அது வெள்ளையர் காலம் முன்பே வளத்தால் நிரம்பியிருந்தது. வற்றாத நதி அருமையான மண்வளம், அரிசி மற்றும் விவசாய உற்பத்தியில் ஆசியாவில் பெரும் அடையாளமாக விளங்கிற்று.

அந்த வளத்தின் பெரும் அடையாளமாய் எழும்பி நிற்பவைதான் செட்டிநாட்டு அரண்மனைகள் இன்னொன்று இன்றும் யாங்கூன் (ரங்கூன்) நகரிலிருக்கும் பொன்னால் ஆன புத்தவிகாரையின் “பகோடா” எனும் கோபுரங்கள் (பல நூறு டன் தங்கம் அதிலுள்ளது என்பது கணிப்பு).

வெள்ளையனிடம் சுதந்திரம் பெற்றதும் நாசமாகி தீருவது என்றே முடிவெடுத்தார்கள், காரணம் அது புத்தநாடு என அறிவிக்கபட்டு முதல்குறி தமிழர்மேல் வைக்கபட்டது. ஆன்று அந்தநாட்டில் உழைத்த தமிழர்தான் உயர்வர்க்கம் அது போதாதா?

விரட்டினார்கள், தமிழர்கள் ஓடிவந்தார்கள், வழக்கம்போல அதனை பிண்ணனியாக கொண்டு தமிழ்திரைப்படங்கள் வந்தன, அற்புதமான வசனங்களால் ஒரு படம் சினிமா வரலாற்றை மாற்றியது. அகதி தமிழர் வாழ்வு மாறவே இல்லை.

இந்திய அரசோ பிரிவினை,காந்திபடுகொலை என கன்னத்தில் கைவைத்து கிடந்தது, பர்மாவை கண்டிப்பது பற்றி சிந்திக்கவே இல்லை.

பின்னர் பர்மா மக்களாட்சியை தூக்கி எறிந்து ராணுவ ஆட்சிமாறிய பின் நிலமை மகா மோசம், சொந்த நாட்டு மக்களை மத அடிப்படையில் விரட்ட ஆரம்பித்தது.

இந்தியாவின் வங்கதேச போருக்கு பின் கொஞ்சம் அடக்கிவாசித்த அந்த நாடு 1990க்கு பின் கொடூரமாக மாறிற்று, முஸ்லீம்களை ஓட ஓட விரட்டுகின்றது.

Image may contain: 6 people, people smiling, people sitting, child and close-upஅங்கு ரொகிங்கியா என ஒரு தேசிய இனம் உண்டு, அதாவது ரொகிங்கியா எனும் மொழிபேசும் முஸ்லீம்கள். அவர்களை குறிவைத்து அடிக்கின்றது. இஸ்ரேல் கூட செய்யா பெரும் கொடுமையை செய்கிறது மியன்மார் அரசு.

அதாவது அவர்களின் குடியுரிமையை பறித்து கிட்டதட்ட 10 லட்சம் மக்களை உள்நாட்டு அகதிகளாக்கிவிட்டது, அவர்கள் அங்கும் வாழமுடியாது, அடுத்தநாட்டிற்கும் செல்லமுடியாது, சாகவேண்டும். புத்தமத ஆளுகையில் மற்ற மதமானால் சாகத்தான் வேண்டும், இது மியன்மார் சட்டம்.

வேறுவழி இல்லா மக்கள் அகதிகளாய் திரிகின்றனர், அசாமில் குடியேறுவோரும் உண்டு, ஆனால் வங்கதேச அகதிகளை பெருமளவில் கட்டுபடுத்த தொடங்கியிருக்கும் இந்தியா இவர்களை பிரித்துபார்ப்பதில்லை, விரட்டலதான்.

கடந்த வருடம் நடந்த கொலைவெறி தாக்குதலின் தொடர்ச்சி இன்னமும் நடக்கின்றது, அகதிகளாய் அந்த அபலைகள் தெரித்து ஓடுகின்றார்கள்.

ஈழ தமிழர் வரிசையில் இப்பொழுது மியன்மாரின் ரொகிங்கியர்.

இருவரின் வரலாற்று துன்பத்திற்கும் காரணம் புத்தமதம் என்பதுதான் மகா விசித்திரம்

ரொகிங்கியா எனும் மொழியும் அந்த இனமும் அழியும் காலம் தொலைவில் இல்லை.

இலங்கையும், மியன்மாரும் எவ்வளவு செழிப்பான நாடுகள், அதுவும் மியன்மார் ஒழுங்காக விவசாயம் செய்தால் உலகிற்கே சோறுபோடும் அளவிற்கு நீரும் மண் வளமும் கொண்ட நாடு, அற்புதமான ஆறுகள் அங்கே ஓடுகின்றன‌

இலங்கையின் இயற்கை வளம் பற்றி சொல்லவேண்டாம், அற்புதமான தீவு.

இந்த இருநாட்டு மக்களும்தான் வாழ் வழியின்றி ஓடுகின்றார்கள் என்பது மானிட இனத்திற்கே பெரும் அவமானம்.

இந்த இரு அற்புத நாடுகளும் அமைதியும் அகிம்சையும் போதிக்கும் புத்தமதத்தை பின்பற்றுவதாக சொல்லி, இப்படி படு கொடூரத்தில் இறங்கியிருப்பதுதான் பெரும் முரண், இது பவுத்தமே அல்ல பயங்கரவாதம்.

பெரும் பணக்கார நாடுகளாக இருக்கவேண்டிய மியன்மாரும், இலங்கையும் படுபாதாளத்தில் கிடக்க இந்த மதவாதமே காரணம், வறுமையில் சிக்கினாலும் அம்மதத்தை எறிய அவர்கள் தயாராக இல்லை

காரணம் மதம் இல்லையென்றால் அங்கொரு கூட்டத்திற்கு அதிகாரமில்லை, வாக்கு வராது இன்ன்னும் நிறைய வராது.

புனிதமான புத்தமதம் இவர்கள் கையில் சிக்கி கொலை கருவியாய் ஆகிவிட்டது.

உலகில் இஸ்லாமியருக்காக குரல்கொடுக்கும் எந்த அமைப்பும் இந்த ரொகிங்க்ய முஸ்லீம்களுக்காக ஒரு குரலும் எழுப்பவில்லை. இந்தியாவில் சுத்தமாக இல்லை

அதுவும் தமிழகம் இதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் பிஜே எனும் மனிதர் யாருக்கு மன்மத லீலையின் கடைசிபாடம் எடுத்துகொண்டிருந்தார் என ஆராய்ந்துகொண்டிருக்கின்றதது.

பாலஸ்தீனருக்கு குரல்கொடுக்கும் இஸ்லாமிய அமைப்புகளாலும், உலக மனித உரிமையை பெட்ரோல் தேசங்களில் மட்டும் தேடும் அமெரிக்காவாலும் கைவிடபட்ட இனம் இது, பரிதாபத்திற்குரிய இனம் இது.

இறைவன் அம்மக்களுக்கு நிம்மதியும் பாதுகாப்பும் அருளட்டும்.

 
 

அதிமுகவினர் நூதன போராட்டம்

தினகரன் படத்தினை பார்த்து சிரிக்கும் போரட்டம் : காட்டுமன்னார் கோவில் அதிமுகவினர் நூதன போராட்டம்

அதாவது இப்படி சிரித்து அவரை அவமானபடுத்துகின்றார்களாம்

ராமசந்திரனின் படங்களை பார்த்தால், அவரின் நடனத்தையும், உதடு சுழிப்பினையும் பார்த்தால் வராத சிரிப்பா?

ஜெயலலிதா நடிப்பு என கொல்வாரே, அதனை கண்டால் வராத சிரிப்பா?

ராமசந்திரனின் அண்ணாயிச விளக்கத்தை பார்த்து வராத சிரிப்பா?

ஜெயாவும் சசிகலாவும் ஆண்ட ஆட்சிபார்த்து வராத சிரிப்பா? அல்லது இப்பொழுது பன்னீர், பழனிச்சாமி, தீபா, மாதவன் எல்லாம் அடிக்கும் கூத்துக்களை வராத சிரிப்பா?

அந்த கட்சியினை நினைத்தாலே தூங்கும் பொழுதும் சிரிப்பு வரும், அவர்களின் அட்டகாசத்தை கண்டாலே கவலை மறந்து சிரிக்கலாம்

இதில் இவர்கள் தினகரன் படத்தை பார்த்து 30 நிமிடம் சிரிக்கின்றார்களாம், ஆனால் உலகமே இவர்களை பார்த்து 24 மணிநேரமும் சிரிப்பதை மறந்துவிட்டார்கள் போல…

 
 
 
%d bloggers like this: