மு.க ஸ்டாலினே போதும்

காலத்தின் கடுமையினை பொறுத்துதான்  தலைவர்கள் தமிழகத்தில் உருவாகுவார்கள் போல..

கடும் பிராமண அதிகார காலத்தில் பெரியார் உருவானார். குமாரசாமி ராஜா, ராஜாஜி காலத்தில் அண்ணா, கலைஞர், ஜீவா எல்லோரும் உருவானார்கள்.

இந்திரா காலத்தில் கலைஞர் மிக பெரும் எதிர்ப்பு சக்தியாக நின்றார்.

இப்படி இருந்த தமிழகத்தில் இந்த மோடி, அமித்ஷா, தமிழிசை, எடப்பாடி காலங்களுக்கு மு.க ஸ்டாலினே போதும் என காலம் முடிவு செய்திருக்கலாம்

உண்மைபேசும் ஒரே ஊடகம் ஜெயா டிவி !

அகில உலகிலே இந்த நொடியில் உண்மைபேசும் ஒரே ஊடகம் இந்த ஜெயாடிவிதான்.

யார் என்ன சொன்னாலும் இதனை என்னால் உறுதியாக சொல்லமுடியும், இப்பொழுது அதுதான் மகா உண்மையினை சொல்கின்றது

அதாவது இந்தியாவில் மத்திய அரசும் சரியில்லையாம் , மாநில அரசு மகா மோசமாம். தமிழகத்தில் எங்கும் ஊழல் எதிலும் ஊழலாம். மாநில முதல்வருக்கு பொறுப்பே இல்லையாம், சுயநலத்தில் மாநில நலனை விட்டுவிட்டாராம். தமிழநலன் இந்த அரசால் மிக கடுமையாக பாதிக்கபட்டிருக்கின்றதாம்.

இப்படி மிக துணிவாக சொல்கின்றது ஜெயாடிவி

தமிழகம் மகா மோசமான நிலையில் இருக்கின்றது என்பதை ஒப்புகொள்ளும் டிவி இன்று அதுதான்.

மக்களும் வந்து இது உருப்படாத ஆட்சி, உழல் ஆட்சி என ஒப்பாரி வைக்கின்றார்கள்.

இனி காட்சிகள் மாறினால் நிச்சயம் ஜெயா டிவி மாறும். ஆனால் இந்நொடியில் மகா உண்மையினை சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

அதனால் பழனிச்சாமி முதல்வராக நீடிக்கும்வரை ஜெயா டிவி உண்மையினை சொல்லும் என்பதால் , ஆளுநர் வாழ்க என சொல்லிவிட்டு ஜெயா டிவி செய்திகளை கொஞ்ச நேரம் பார்க்கலாம்.

பழனிச்சாமி அகற்றபட்டால் அதன் பின் ஜெயா டிவி தன் பழைய பொய்களுக்கு திரும்பிவிடும்.


ஜெயா செய்தியினால் சாலையோரத்தில் தூங்கிகொண்டிருப்பர்களுக்கு எல்லாம் டிவியில் வரும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

ஆளாளுக்கு வந்து சின்னம்மா என சொன்னாலும், கேமரா முன்னால் வந்த அந்த பூரிப்பே அவர்கள் முகத்தில் தெரிகின்றது.

அதில் சிலர் சின்னமா , தினகரன் என சொல்லிவிட்டு ஒரு மாதிரி சிரிப்பதுதான் ஜெயா செய்திக்கு சோதனை. ஒரு ரிகர்சல் பார்த்துவிட்டு கேமரா முன் கொண்டுவந்தால் பரவாயில்லாமல் இருக்கும்.

கேமரா முன் நின்று சிலர் சின்னமா வாழ்க என சொல்லும்பொழுது அக்கூட்டத்தின் பின்னால் நின்று சிலர் ஒரு மாதிரி வாயினை பொத்தி சிரிப்பதையும் காண முடிகின்றது.

ஏன் சிரிக்கின்றார்கள்?

ஒருவேளை கேமராமேனும், கேள்வி கேட்பவருமே நம்மைபோல சிரித்து கொன்டிருப்பார்களோ?


 

 
 

மிக மிக தடுமாறுகின்றார்

download-1.jpg

வருகின்ற பல செய்திகள்படி சொல்வதென்றால், நாடு மோசமான நிலையினை எட்டிகொண்டிருக்கின்றது.

ரூபாய் நோட்டு ஒழிப்பு இன்னபிற நடவடிக்கை எல்லாம் ஒரு விளைவினையும் ஏற்படுத்தவில்லை, மாறாக பல முன் தயாரிப்பில்லா பல திட்டங்கள் நாட்டை பல சிக்கல்களில் ஆழ்த்தியிருக்கின்றது

தொழில் முடக்கம் ஏற்படுகின்றது, வேலை வாய்பில்லா சிக்கல் பெருகுகின்றது, பொருளாதாரம் சரிகின்றது.

இது முன்பே சொல்லபட்ட விஷயங்கள்தான். இந்தியா மிகபெரிய நாடு, பெரும் மக்கள் தொகை உள்ள நாடு.

எல்லா மாற்றங்களும் தேவைதான், ஆனால் அவையெல்லாம் ஒரே நாளில் மாறிவிடும் விஷயம் அல்ல. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவைகளை மாற்றமுடியும்

மாறாக மிக அவசரமாக மாற்றினால் அதன் பின் விளைவுகள் இப்படித்தான் இருக்கும், இதன் கூட மாட்டுகறி இன்னபிற மதவாத கொடுமைகள் சேர்ந்தால் தேசம் நாசமாகத்தான் போகும்.

வருகின்ற தகவல்கள் அதனை உண்மையாக்குகின்றன.

சோவியத் யூனியனை சீர்திருத்துவேன் என கார்பசேவ் செய்த சில அதிரடி நடவடிக்கைகள்தான் அந்த நாடே சிதற காரணமானது, சில கசப்பு மருந்துகளை ஓவராக கொடுத்தால் அப்படித்தான்

உலகநாடுகள் இங்கு வந்து தொழில் தொடங்கவும், பல விஷயங்கள் கொண்டுவரவும் இங்கு அமைதியான சூழல் மகா முக்கியம்

அங்கே ரூபாய் நோட்டை ஒளித்துவைத்து விளையாடுவார்களாம், மாட்டுகறிக்காக அடிப்பார்களாம். ஒரு வித பதற்ற சூழல் எங்கும் நிலவுமாம். அரசு எப்பொழுது என்ன செய்யும் என யாருக்கும் தெரியாதாம் என்றெல்லாம் உலகில் செய்திகள் வந்தால் யார் இங்கு வருவார்கள்?

பெட்ரோல் விலை அதிகரிக்கின்றது, முன்பே சொன்னதுதான் இஸ்ரேலோடு நெருங்கினால் மறைமுகமாக இப்படி பல சிக்கல்கள் வரத்தான் செய்யும்

மோடி அரசு மிகபெரும் தோல்வியினை சந்தித்திருக்கின்றது என்பதே உண்மை.

இனியாவது இந்நாட்டின் யதார்த்திற்கு எது பொருந்துமோ அதனை செய்வது நல்லது.

சுருக்கமாக சொன்னால் இப்படி சொல்லலாம்.

மோடி இந்நாட்டிற்கு ஏதாவது செய்ய விரும்புகின்றார் என்பது உண்மை, ஆனால் எதனை செய்யவேண்டும் எதனை செய்ய கூடாது என்பதில் அவர் மிக மிக தடுமாறுகின்றார்.

மலேசிய தினம், பக்ரீத் என நீண்ட விடுமுறை

மலேசிய தினம், பக்ரீத் என நீண்ட விடுமுறையாகிவிட்டது.

என்ன செய்ய முடியும்?

எல்லா உணவையும் மாயா பஜார் ரங்கராவ் போல “ஹாஹ.. ஹாஹ.. ஹா” என ஒரு ரவுண்ட் வரவேண்டியதுதான்.

அப்படியே டிவியில் குஷ்பூ படத்தை ஓடவிட்டால் விடுமுறை சட்டென்று முடிந்துவிடும்.

குஷ்பூ நடித்த “ஜாதி மல்லி” படத்தில் இருந்து தொடங்குகின்றது விடுமுறை…


ஆமாம்டா, அந்த விவேகம் படம் பாகுபலி வசூல் மட்டுமல்ல, டைட்டானிக் மற்றும் அவதார் படத்து வசூலை விட பல மடங்கு வசூலித்துவிட்டது என நம்பிக்கொள்கின்றோம்

விட்டுறங்கடா.. இதே செய்தியினை எங்கு திரும்பினாலும் சொல்வதை தாங்க‌ முடியவில்லை.


எல்லா நாட்டிலும் எல்லோரும் ஒரிஜினல் லைசென்ஸோடுதான் வாகனம் செலுத்துகின்றார்கள்.

அதனை கொண்டு சென்றால்தான் என்ன? கையடக்க பொருள்தானே அது?

ஏடிஎம் கார்டு, பணம் இன்னபிற பொருட்களை கையில் எப்போதும் வைத்திருப்பவர்களுக்கு ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருக்க முடியாதா?

எதுவுமே முறைபடுத்த பட கூடாது என்பதில் இவ்வளவு அக்கறையா?


ஏராளமானோர் லைசென்ஸ் இல்லாமல்தான் இதுகாலம் வண்டி ஒட்டி கொண்டிருந்திருக்கின்றான்
என்பது இப்பொழுதுதான் புரிகின்றது


மன கோட்டை கட்டுகின்றார் கமல் : தமிழிசை

அதை மண்கோட்டை கூட கட்ட வழியின்றி இருக்கும் தமிழிசை சொல்வதுதான் காமெடி