அது நிச்சயம் மோடியின் வெற்றி, உறுதியாக சொல்ல முடியும்.

மோடியின் திட்டம் தோல்வி, கள்ள‌ பண ஒழிப்பு தோல்வி, ஜிஎஸ்டி கொண்டுவந்ததில் அதிருப்தி என பல குரல்கள் எழுகின்றன‌

ஜிஎஸ்டி என்பது காங்கிரசால்தான் வரையறுக்கபட்டது, இன்று காங்கிரஸ் அரசு தொடர்ந்திருந்தாலும் அது வந்திருக்கத்தான் செய்யும்.

அதே நேரம் ஜிஎஸ்டியால் பல பொருட்கள் விலை குறைந்திருப்பதை பற்றி யாரும் பேசவே இல்லை. அது கவனிக்க வேண்டியது.

ரூபாய் நோட்டுகளை செல்லாமல் ஆக்கியதில் இந்திய பொருளாதாரம் படுத்துவிட்டது என்கின்றார்கள். உண்மையில் எந்த தொழில் படுத்திருக்கின்றது என்றால் எதெல்லாம் கள்ள கருப்பு பணத்தில் நடந்ததோ அதெல்லாம் படுத்திருக்கின்றது

கவனித்துபார்த்தால் அவர்கள்தான் கத்துகின்றார்கள், பொருளாதாரம் போயிற்றேன்று ஒப்பாரி வைக்கின்றார்கள்.

ஆக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் கருப்பு பணம் அந்த அளவு விளையாடி, ஒரு ஊதிபெருக்கபட்ட பிம்பம் இருந்திருப்பது தெரிகின்றது.

அந்த பிம்பம் உடைந்து, உண்மை உருவம் தெரியும்பொழுது மோடி கெடுத்துவிட்டார் எனும் கூக்குரல் பெரும் கருப்பு சக்திகளிடம் இருந்து கேட்கின்றன.

நிச்சயம் நாட்டுக்கு தேவையானதைத்தான் மோடி செய்தார், அதில் பல ஊதிபெருக்கபட்ட பலூன்கள் உடைந்து கொண்டிருக்கின்றன.

இந்திய பொருளாதார உண்மை முகம் வெளிதெரிகின்றது, அதுதான் உண்மை.

அது நிச்சயம் மோடியின் வெற்றி, உறுதியாக சொல்ல முடியும்.

பவர் பாண்டி : திரை விமர்சனம்

பவர் பாண்டி என்றொரு புத்தம் புது படத்தை இப்பொழுதுதான் பார்க்கின்றேன், குஷ்பூ படங்களையே எப்பொழுதும் பார்ப்பதால இம்மாதிரி படங்கள் சில நேரம்தான் பார்க்க முடிகின்றது.

தனுஷ் நடிகர் என ஒப்புகொள்ளமுடியாவிட்டாலும், நல்ல இயக்குநர் என இப்படம் ஒப்புகொள்ள வைக்கின்றது.

சில நாடக தன்மை இருந்தாலும், அருமையான படமாக கொடுத்திருக்கின்றார் தனுஷ்.

எல்லோரும் ரசிக்க கூடிய படமிது.

ஆனால் ராஜ்கிரண் அந்த பைக்கிலே லாங் டிரிப் செல்லும் காட்சியினை சிம்பு மட்டும் கோபத்தில் பல்லை கடித்த படிதான் பார்த்திருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.

அது அப்படியே சிம்பு தன் சமீப படத்தில் மஞ்சுமா மோகனுடன் சென்ற பைக் காட்சி போலவே அப்பட்டமாக இருக்கின்றது.

அது சிம்பு பிரச்சினை, படம் நமக்கு சொன்னது ஒன்றே ஒன்றுதான்

நம் காலம் முடிவதற்குள் எப்படியாவது அந்த முன்னாள் காதலியினை கண்டுபிடித்து அவள் தலையில் தட்டி அன்றொரு நாள் அவளுக்காக செலவழித்த 350 ரூபாய் மற்றும் 60 பைசாவினை வட்டியோடு வாங்கிவிட்டு வந்துவிட வேண்டும்

தன்மான சிங்கம் டி.ஆர்

ஒருவன் வீட்டில் ஏதும் பேசமுடியா நிலையில், பேசினால் அடிவிழுமோ எனும் நிலையில் வெளியிடத்தில் பொங்கி தீர்ப்பான் என்பது உளவியல்.

அதற்கும் கீழே சொல்லபடும் விஷயத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக நினைத்துவிட கூடாது. மேல் சொல்லபட்டது ஒரு தத்துவம்.

சம்பவம் என்னவென்றால், டி.ஆர் ஒரு சினிமா விழாவிற்கு சென்றிருகின்றார், மேடையில் அமர்ந்திருக்கின்றார். அங்கு ஆளாளுக்கு பேசியிருக்கின்றார்கள். படத்தின் நாயகி தன்ஷிகாவும் பேசியின்றார்.

பலர் பேசும்பொழுது தன்ஷிகாவினை கபாலி நாயகி என சொல்லிகொண்டே இருந்திருக்கின்றார்கள், டி.ஆருக்கு அதிலே கடுப்பு போல‌

அடுத்து பேசவந்த தன்ஷிகா பேசியிருக்கின்றார், ஆனால் மேடை நாகரிகபடி தமிழ் வணக்கம், அவை வணக்கம், மொழி வணக்கம், எக்ஸ்ராவாக டி.ஆர் வணக்கம் எல்லாம் வைக்காமல் பொதுவாக பேசி முடித்துவிட்டாராம்.

தன்மான சிங்கமான டிஆருக்கு கடுப்பு கூடிற்று. மைக் கிடைத்தவுடன் தலையினை சிலுப்பி கொண்டு கிழித்தெறிந்திருக்கின்றார். தன்னை தன்ஷிகா பெயர் குறிப்பிட்டு மரியாதை செய்ததில்லை, ,மேடை நாகரிகம் தெரியவில்லை என எடுத்த எடுப்பிலே எட்டு கட்டையில் டண்டனக்கா ஆடியிருக்கின்றார்

மேடையில் இருந்தவர்கள் அவரை சமாதானபடுத்தியிருக்கின்றார்கள், டி.ஆர் என்றால் அமைதியாவார்,

ஆனால் மைக் கிடைத்தவுடன் புகுந்துவிடும் சுடமை சாமி விடுமா? ஆடி தீர்த்திருக்கின்றது.

நடிகை தன்ஷிகா பிளீஸ் சார் என சொல்லி ஒரு கட்டத்தில் மேடையிலே அழுதுவிட்டார். ஆனாலும் ஆடு கத்தினாலும் சாமி விடுமா? அது தன்ஷிகா துடிக்க துடிக்க மைக்கால் அறுத்திருக்கின்றது.

விஷயம் பற்றி எரிகின்றது. டி.ஆருக்கு எதிராக கண்டனங்கள் வலுக்கின்றன.

டி.ஆர் எத்தனையோ மேடைகளை கண்டவர். இப்பொழுது மட்டும் என்ன அவமானம் கண்டாரோ தெரியவில்லை. தன்ஷிகா மீது அப்படி என்ன கோபம்?

ஏதும் சிம்புவுடன் நடிக்கமாட்டேன் என சொல்லிவிட்டாரா என்றால் அதுவுமில்லை, ஒரு வேளை டி.ஆரே கால்ஷீட் கேட்ட கதையுமில்லை

மேடையில் தன்ஷிகா அழுது ஓய்ந்திருக்கின்றார், கடைசியில் டி.ஆர் சொன்ன ஒரு வார்த்தைக்காக மறுபடியும் அழுது அழுது புரண்டிருக்கின்றார்.

அதாவது அறுத்து முடிக்கும்பொழுது டி.ஆர் சொன்னாராம் , “நான் தன்ஷிகாவிற்கு அண்ணன் மாதிரி”

எப்படியோ டி.ஆருக்கு கண்டனங்கள் பறக்கின்றன.

உண்மையில் உலகில் பரிதாபத்திற்குரிய பெண்மணி யாரென்றால் அந்த உஷா ராஜேந்தர் தான். பெற்ற பிள்ளையும் கொண்ட கணவனும் ஒரே நேரத்தில் பித்தானால் என் செய்வார்?

தன்ஷிகா எப்படி இந்த விஷயத்தை எதிகொள்ள போகின்றாரோ தெரியாது.

ஒருவேளை இப்படி அடுத்த கூட்டத்தில் சொல்லலாம்.

“வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம், வராத டி.ராஜேந்தர் அவர்களுக்கும் வணக்கம்”

ஏம்மா தமிழிசை, நீர் ஒரு மருத்துவர் அல்லவா?

ஒருவழியாக தமிழகத்திற்கு கவர்ணரை நியமித்துவிட்டார்கள், அந்த அதிமுக அரசினை நீட்டிக்கவா, இல்லை சனியனை விரட்டிவிட்டு கவர்ணர் ஆட்சியினை நிறுத்தவா என்பது இனிதான் தெரியும்.

இரண்டாவது விஷயத்திற்கு வாய்ப்புகள் அதிகம்..


ஏம்மா தமிழிசை, நீர் ஒரு மருத்துவர் அல்லவா?

எங்கே? ஜெயலலிதா பற்றி ஸ்டாலின் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

இந்த கேள்விகளை எல்லாம் தேசிய கட்சியான பாஜக கேட்டு சிபிஐக்கு விசாரணையிட்டால் எப்படி இருக்கும்? பாஜக மீது எவ்வளவு மரியாதை வந்திருக்கும்?

அப்படி செய்ய்யாமல் சும்மா மோடி, தாடி என சொல்லிகொண்டிருந்தால் தாமரை கடலடியில் கூட மலராது, காவி கொடி விவேகானந்தர் பாறை தவிர எங்கும் பறக்காது.

அரசியல் எப்படி செய்யவேண்டும் என திமுகவில் வந்து படித்துவிட்டு செல்லுங்கள், அனுமதி இலவசம்தான்

கொஞ்சநாள் அங்கு படித்துவிட்டு பின் அங்கு கட்சிபணி ஆற்ற செல்லுங்கள்.


ஐ.நா அலுவலகம் முன்னால் சிலம்பு கம்பு சுற்றி காட்டினார் வை.கோ

அந்த சிங்களர்கள் அடிக்க பாய்ந்ததிலிருந்து மனிதர் ஒரு மாதிரி ஆகிவிட்டார், அவர்களை மிரட்ட கம்பு சுற்றுகின்றாராம்

நாளை பிச்சுவா கத்தி, மான் கொம்பு என அடுத்த வித்தை இருக்கும்

சைக்கிள் செயின் சுற்றுதல், சோடா பாட்டில் எறிதல், நாட்டு வெடிகுண்டு வீசுதல் என அடுத்த ரவுண்டு நடந்தாலும் ஆச்சரியம் ஏதுமில்லை


குஷ்பு என்னும் துணிச்சல் நாயகி!

ஆனந்த விகடன் கட்டுரையை படிக்க படத்தில் சொடுக்கவும் 


மிக பெரும் சொதப்பல்களை செய்து வந்த விகடன் பத்திரிகை, தலைவி குஷ்பூ பற்றி பிறந்தநாள் வாழ்த்து கட்டுரை எழுதி தன் களங்கத்தை தீர்த்துகொண்டது.

சங்கத்தின் சார்பாக விகடனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்

அந்த கட்டுரையாளர் சுகுணா திவாகரன் என்பவர், நாம் குஷ்பூ நமஹ தொடரில் சொல்லிபடி உண்மையினை எழுதியிருக்கின்றார், மறுபடியும் வாழ்த்துக்கள்

ஆனால் குஷ்பூ சிறந்த நடிகையல்ல என்றொரு வரியினை சேர்த்திருக்கின்றார், இதற்கு சங்கம் மென்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றது.

அவரை கடத்தி கொண்டு வந்து கதற கதற நாட்டாமை, பெரியார் , கோலங்கள் போன்ற குஷ்பூவின் நடிப்பு திறமை ஒளிரும் படங்களை போட்டு காட்ட சங்கம் முடிவெடுத்திருக்கின்றது.

அந்த சுகுணா திவாகர். குஷ்பூ சிறந்த நடிகை என ஒப்புகொண்டால் நல்லது, தான் எழுதிய வரிகளை அவர் திரும்ப பெறவேண்டும்

மற்றபடி தலைவியின் ஆளுமை, அவரின் துணிச்சல் பற்றி அவர் பிறந்தநாளில் சிறப்பு செய்தி வெளியிட்ட விகடனுக்கு சங்கத்தின் சார்பாக கோட்டான கோடி நன்றிகள்.


ரஜினியும் கமலும் பாஜகவுக்கு பாதை போடுகிறார்களா? : கி.வீரமணி

ரஜினியும் கமலும் பாஜகவுக்கு பாதை போடுகிறார்களா? கி.வீரமணி அறிக்கை

நாளையே பெரியார் சொத்துக்கள் அரசுடமை என்றால் அதனை தடுக்க‌ இவர் ஐ.எஸ் இயக்கத்தையும் ஆதரிக்க தயார். ஆனால் இவர்தான் ரஜினியினை கமலை விமர்சிக்கின்றாராம்.

பெரியார் நூல்களை கூட அரசுடமை ஆக்க மனமில்லாத இவர் பெரியாரின் வாரிசான கொடுமைதான் ரஜினி கமல் எல்லாம் பாதை போடுவது

அதனை மறைத்துவிட்டு என்னவெல்லாமோ பேசுகின்றார்.

ஜெயாவிற்கான நியாயத்தினை திமுகத்தான் பெற்றுகொடுக்க போகின்றது

“ஒரு சபதம் செய்கின்றேன், என் வாழ்நாளில் திமுகவினை பூண்டோடு அழிப்பேன்..” என அருகிருந்த சசிகலா மீது சத்தியம் செய்யாத குறையாக முழங்கினார் ஜெயலலிதா

இன்று அவர் இல்லை, அதனை விட பரிதாபம் அவர் மரணம் மீதான ரகசியம் அவர் கட்சிகாரர்களாலே மறைக்கபடுகின்றது

அந்த பரிதாபத்திற்குரிய ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை திமுகவின் மு.க ஸ்டாலின் பட்டியல் இட்டு கேள்விகள் கேட்கின்றார்.

சாதரணமாக கடந்துபோக கூடிய கேள்விகள் இல்லை அவை, எந்த நீதிபதியும் தயக்கமின்றி ஏற்றுகொள்ள கூடிய கேள்விகள்.

அட்டகாசமான கேள்விகள் அவை, அந்த கேள்விகளுக்காக மு.க ஸ்டாலினை பாராட்டலாம்.

அம்மா, அம்மா என குனிந்து நின்ற அதிமுகவினர் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் எதிர்கட்சி ஸ்டாலின் கேட்பது மகா விசித்திரம்.

ஜெயா இருந்தவரை அவர் சிறைசென்றால் கூட அழிச்சாட்டியம் செய்த கட்சிகாரர்கள் யாரையும், அவர் மரணத்தில் சில நியாயமான கேள்விகளை கேட்க வேண்டிய நேரத்தில் காணவே இல்லை, அவ்வளவும் வேஷம்.

ஆக ஜெயாவிற்கான நியாயத்தினை திமுகத்தான் பெற்றுகொடுக்க போகின்றது.

தன் வாழ்நாள் முழுக்க திமுகவுன் நடத்திய யுத்தத்தில் தன் மரணத்திற்கு பின் தோற்றிருக்கின்றார் ஜெயலலிதா

அவரின் ஆன்மா இப்பொழுது முன்பு அவர் திமுகவிற்கு செய்த சகல அநியாயங்களுக்கும் மன்னிப்பு கேட்டு நிச்சயம் கதறிகொண்டிருக்கும்.


சிறப்பாக ஆட்சி நடத்துகிறோம்: செல்லூர் ராஜு

திருத்தி கொள்ளும் அமைச்சரே, அது ஆட்சி அல்ல நகைச்சுவை காட்சி.